Saturday, April 19, 2008

சவுதி அரேபிய இந்திய தூதரகமும் தூதர் ஃபரூக்கும் உரங்குகின்றார்களா?



திரு. M.O.H. ஃபரூக் அவர்கள்



வாழ்வதற்காகவும், வாழ்வின் மேம்பாட்டுக்காவும் தாயகத்தை விட்டு அன்னிய நாட்டில் உழைத்துப் பிழைப்பதற்காக வரும் அயல் நாட்டினர் பலரின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாக ஆகிவிடுகின்றது.

இது போன்ற துன்பங்களில் சிக்கித் தவிக்கும் மக்களின் நிலையறிந்து மற்ற நாட்டின் தூதரகங்கள் ஓரளவுத் தட்டிக்கேட்கும். ஆனால், உழைக்க வரும் இந்தியர்களை நீ என்ன கொடுமையும் படுத்திக்கொள், சம்பளம் கொடுக்காமல் கஷ்டப்படுத்து, அவர்களுக்கு தங்கும் விடுதிகள் வழங்காதே என்றெல்லாம் ஏற்கெனவே இந்திய அரசு ரகசிய ஒப்பந்தம் ஏதேனும் செய்துள்ளதோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு இந்தியத் தூதரகம் மக்கள் குறைகளைக் கண்டுக்கொள்வதில்லை!

இந்தியர்களுக்கு என்ன அநீதிகள் இழைக்கப்பட்டும் அது பற்றியச் சான்றுகளுடன் புகார் கொடுத்தாலும் இந்தியத் தூதரகம் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஏனிந்த முதுகெலும்பற்ற நிலை?

தூதரகம் என்பது அந்நாட்டின் அரசுக்கு ஒப்பானது. உழைத்துப் பிழைக்க வரும் மக்கள் அநியாயமாக நசுக்கப்படுகிறார்கள் என்று நன்கு தெரிந்திருந்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டாத அயல் நாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தியத் தூதரகம் தேவைதானா?

(துன்பப்படுத்தும் மின்னஞ்சல் செய்தி, பகிர்ந்து கொள்கிறேன்)

அன்புடன்,
அபூ முஹை

அனுப்புனர்:
சவூதி அரேபியாவில் பணிபுரியும் இந்திய பணியாளர்கள்.
ரியாத் சவூதி அரேபியா

பெறுநர்:
மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள்
தலைமைச் செயலகம்
சென்னை

மாண்புமிகு முதல்வர் ஐயா அவர்களுக்கு!
உங்கள் மீது கடவுளின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!!

நாங்கள் சவூதி அரேபியா ரியாத்தில் தனியார் நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறோம். இந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள் குறிப்பாக பல நூறு இந்தியர்கள் அதில் 100க்கும் மேற்பட்ட தமிழர்கள். AL-Wagaiah co, Ltd., AL-Omerini co, and AL-Faiq என்ற மூன்று பெயர்களில் செயல்படும் இந்த நிறுவனம் ஒவ்வொரு நிறுவனத்தின் பெயரில் மோசடிகளை செய்து விட்டு வெவ்வேறு பெயர்களில் உருவாக்கிக்கொண்டதுதான் இந்த 3 நிறுவனங்களும்.

நாங்கள் பணியாற்றிய நிறுவனத்தில் கடந்த 8 மாதங்களாக வேலை செய்யும் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை. நிறுவனம் மூடப்படும் மற்றும் சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் எங்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கிகளை கொடுத்து எங்களது தாய் நாடடிற்கு அனுப்பி வையுங்கள் என்று பல முறை கேட்டு வந்தோம் நிர்வாகம் எங்களது எந்த கோரிக்கையையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

பல மாதங்களாக உண்ண உணவின்றி இருக்க இடமின்றி சொல்லிலடங்கா துயரங்களை சந்தித்து வருகிறோம். இந் நிலையில் பாதிக்கப்பபட்டுள்ள இந்தியாவைச் சேர்ந்த 28 பேர் கொண்ட குழுவாக கடந்த 24/01/2008 அன்று இந்திய தூதரகத்தில் எங்களது நிலைமையை விளக்கி மனுக் கொடுத்தோம் அதன் கோப்பு எண்: File No: riy/cw/235/6/2007(18)

அதற்கிடையில் நாங்கள் பல முறை நிறுவன நிர்வாகத்திடம் எங்களுக்கு சேரவேண்டிய எங்களது சம்பளத்தை கொடுத்து எங்களை தாயக்திற்கு அனுப்பி வைக்கும்படி கெஞ்சி மன்றாடி வந்தோம் கடந்த வாரம் 27ம் தேதி நிர்வாகத்தின் பதிலை கேட்கச் சென்றோம். எங்கள் குழுவில் நிறுவன நிர்வாகத்திடம் நீதி கேட்டு எங்களை வழி நடத்தி வந்த 5 பேரை சவுதி குடியுரிமை காவலாளிகளை வைத்து கைது செய்து சிறைக் கொட்டடியில் அடைத்து விட்டார்கள்.

மீதி உள்ள எங்களை மிரட்டி உங்களுக்கும் இதே கதி தான் என்று உங்களது பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சவுதி குடியுரிமை அமைச்சகத்தில் ஒப்படைத்து விட்டோம் என்று மிரட்டி அனுப்பி விட்டார்கள் வேறு வழியின்றி மீண்டும் நேற்று 30 03 2008 அன்று இந்தியத் தூதரகம் சென்று எங்களுக்கு உதவிட கையேந்தினோம். தூதரகத்தில் எங்களுக்கு 6மாதம் செல்லத்தக்க அனுமதி பேப்பர் மட்டும் வழங்கி இதை வைத்து நீங்கள் நடமாடிக் கொள்ளுங்கள் என்று அனுப்பி விட்டார்கள்.

எந்தக் குற்றமும் செய்யாத நீதி கேட்ட ஒரே காரணத்திற்காக சிறைவாசம் அனுபவித்து வரும் எங்கள் நண்பர்களை விடுவிக்கவும் உண்ண உணவின்றி வேறு வழி தெரியாமல் பரிதவிக்கும் எங்களுக்கு உதவிடவும் மாண்புமிகு முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தலையிட்டு எங்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கிகள் கிடைத்து தாயகம் திரும்பி வர இந்தியத் தூதரகக்தின் மூலம் துரித ஏற்பாடு செய்ய ஆவண செய்யும் படி உங்களை பணிவன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

Company Name & Address
AL-WAGAIAH CO, LTD.,
Sponsor Name: Osman Abdul Aziz Al-Omairini
CR No: - 66210, Post Box 91681, Riyadh 11643
Phone : +966 1 2415202, Fax +966 1 2422201
Sponsor Cell no: Mr. Ali Abdul Aziz 00966 504429661, Mr. Ashraf al jindi 00966 505848277

சிறைச்சாலையில் உள்ள நண்பர்களின் விபரம்.

காதர் மைதீன் பாஸ்போர்ட் நம்பர்: A 7844359
முஹம்மது ரைஸ் பாஸ்போர்ட் நம்பர்: E 5084212
அப்துல் ரஹ்மான் பாஸ்போர்ட் நம்பர்: B 3105343
சதீஸ் மலையில் பாஸ்போர்ட் நம்பர்: B 6853774
இக்பால் அஹ்மத் பாஸ்போர்ட் நம்பர்: F 2044105

எங்களை தொடர்பு கொள்ள:
கந்தசாமி +966 556282148, முகைதீன் +966 508623067, முஹம்மது மீரா 00966 557048978

இப்படிக்கு
உங்கள் உதவியை நாடி நிற்கும் பாதிக்கப்பட்ட இந்தியர்கள்.

Copy to: TMMK Head Quarters and all political parties' offices.
Kalainger Tv, Sun tv, Makkal tv, Wintv, and All Printed and Internet medias.
*Enclosed some of Prof Documents

குறிப்பு: இந்த நகல் பெறும் செய்தி ஊடகங்கள் தயவு செய்து பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண உதவிடும்படி கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி : விமர்சனம் - விளக்கம்

7 மறுமொழிகள்:

said...

மீள் பதிவுக்கு நன்றி!

தூதர் ஃபாருக்கை உறக்கத்திலிருந்துத் தட்டியெழுப்பி பதவி விலகல் செய்துவிட்டு, எங்காவது முறுக்கு விற்றுப் பிழைக்கச் சொல்லுங்கள். அது மிகக் கண்ணியமாக இருக்கும்.

said...

tell farook to learn from other embassies like british,us,even philipino,the way of work and protect their citizens.

Anonymous said...

What is the Saudi government doing.Why is that you are not finding fault with them.Is it not
their duty to protect the workers from such exploitation.

said...

even sleeping the government of india.

said...

அனானியின் வாதம் திசை திருப்புவதாக உள்ளது.

வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினையென்றால் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகமும், இந்திய தொழிளாளர்களின் நலன் காக்க-துயர் துடைக்க தூதரகத்தின் அங்கமாக செயல்படும் ஒரு பிரிவும் தான்.

பிழைக்கப்போன இடத்தில் இழைக்கப்படும் அநியாயம் பற்றி அங்கிருக்கும் இந்திய தூதரகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டால் - சவுதி அரசின் - சம்பந்தப்பட்ட துறையின் பிடரியில் தட்டி தக்க நடவடிக்கை எடுக்கவேண்டியது அவர்களின் கடமை.

இந்திய தூதரகம் என்று பெயர் வைத்துக்கொண்டு - சவுதியில் இந்தி வளர்ப்பதோ - அல்லது ஹஜ் பயனிகளுக்கான தேவைகளை நிறைவேற்றுவது மட்டுமல்ல அவர்களின் பணி.

பதிவுக்கு சம்பந்தமில்லாமல் இந்தியாவை விட - நீ சவுதியை நேசிக்கிறாய் என்றெல்லாம் காவி(லி)த்தனமாக பேசுவது..அனானி யார் அவன் எண்ணம் என்ன என்று விளக்குகிறது..

Anonymous said...

அன்புடையீர்:
இப்படி இந்த சகோதரர் எழுதி தம் எண்ணங்களை வெளிப்படுத்தியதில் என்ன தப்பு? இந்த நமது இந்திய தூதரகம் என்ன தான் இதுவரை செய்துள்ளது? இது சம்பந்தமாக எதாவது செய்து இருந்தால் இவர்கள் தூங்கவில்லை எனலாம். அவர்களின் அலட்சியபோக்கிற்கு அளவேயில்லை எனலாம்.
சரியான வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கப்படவேண்டும். இவர்களின் குதர்க்கமான இப்படிப்பட்ட பதிலுக்கு அவர்களின் தகுதிதான் என்ன? என்ன இதுவரை செய்துள்ளார்கள்? எப்போது செய்வார்கள்? யார் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது? எப்படி எடுப்பது? ஏன் இவர்கள் சவூதி அரசின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை? அல்லது சவூதி அரசின் கவனத்திற்காவது கொண்டு சென்றார்களா என்பதும் தெரியவில்லை.
ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர் நலம் என்று ஒன்று உள்ளதே அது சவூதியில் உள்ளதா? அப்படியிருப்பின் குறிப்பிட்ட அந்த நிறுவனத்தார் மீது பகிரங்கமாக வழக்கு போடலாமே? அப்படி போடுவது சட்டபடி குற்றமா? இதனை யார் செய்வது? சாட்சாத்...நமது இந்திய தூதரகத்தின் தலையாய கடமையல்லவா.
அல்லது பெட்டி வாங்கினார்களா? என்பதும் தெரியவில்லை. எதற்கும் நமது சி.பி.ஐ. விசாரிப்புக்கு உத்தரவு இடவேண்டும். இவர்கள் மட்டும் அல்ல இன்று வரை இங்கு பணியில் இருந்து சென்றவர்களின் வீடுகளிலும் செய்ய வேண்டும். கண்காணிக்கப்படவும் வேண்டும்.
இதனை மத்திய, மாநில அரசுகள் செய்யுமா?
நன்றி

Anonymous said...

Everyone forget the main job of the Ambassador, attend the parties, attend the parties and so on.

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template