Saturday, May 31, 2008

இஸ்லாமிய சகோதரத்துவமும், சமூக ஒற்றுமையும்

"இஸ்லாமிய சகோதரத்துவமும், சமூக ஒற்றுமையும்"

அஷ்ஷேய்க். ஜமால் முகம்மது மதனி அவர்கள்

Al-Sheikh. Jamal Mohamed Madhani.


CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



அஷ்ஷேய்க். ஜமால் முகம்மது மதனி அவர்கள்

Friday, May 30, 2008

மனித நீதிப் பாசறை அணிவகுப்பு - தினமலர் மறுப்பு செய்தி

கடந்த 25.05.2008 அன்று தினமலரில் ""தமிழகத்தில் இளைஞர்களுக்கு அணிவகுப்பு பயிற்சி பின்னனி குறித்து போலிஸார் விசாரனை" என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது அதில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தறித்து எழுதியிருந்த அந்த செய்திக்கு மனித நீதிப் பாசறை தனது கண்டனங்களை பதிவு செய்திருந்தது அது குறித்து 27.05.2008 அன்றைய தினமலர் கீழக்கண்டவாறு மறுப்பு வெளியிட்டுள்ளது.


மனித நீதிப் பாசறை எதிர்ப்பு

சென்னை, மே 27- மனித நீதிப் பாசறை சார்பில் சுதந்திர தினத்தன்று அணிவகுப்பு நிகழச்சி நடக்கவுள்ளதாக அந்த அமைப்பு தெறிவித்துள்ளது.

மனித நீதிப் பாசறை மாநிலத் தலைவர் முகமது அலி ஜின்னா வெளியிட்டுள்ள அறிக்கை :

மனித நீதிப் பாசறை அங்கம் வகிக்கும் தேசிய இயக்கமான "பாப்புலர் பிண்ட் ஆப் இந்தியா" சார்பாக ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின அணிவகுப்பு நடத்த திட்மிட்டுள்ளோம். தமிழகம் கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களிலும் இந்த அணிவகுப்பு நடக்கிறது. அதற்கான அணிவகுப்பு பயிற்சி மற்றும் ஒத்திகைகளை தமிழகம் முழுவதும் நடததி வருகின்றோம்.

இது குறித்து மாநிலம் முழுவதும் சுவர் விளம்பரமும் செய்துள்ளோம். காவல் துறை அதிகாரிகளிடம் இது குறித்து அதிகாரப்பூர்வமாக தெறிவித்துள்ளோம். இந்துக்களுடன் இணைந்து போராடிப்பெற்ற சுதந்திரத்தில் ஒற்றுமையை நிலை நிறுத்தும் முகமாகவும் இந்த சுதந்திர தின அணிவகுப்பு நடக்கவிருக்கின்றது. நாங்கள் எப்போதும் வெளிப்படையான அமைப்பாகத்தான் செயல்பட்டு வருகின்றோம். பயங்கரவாதத்தை நாங்கள் ஆதரிப்பதில்லை. இவ்வாறு முகம்மது அலி ஜின்னா தெறிவித்துள்ளார்.

தினமலர், சென்னை பதிப்பு
செவ்வாய்கிழமை, 27.05.2008
பக்கம் 14

Thursday, May 29, 2008

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு எழுத இலவசப் பயிற்சி


ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் சென்னையில் இலவச பயிற்சிக்காக விண்ணப்பிக்கலாம் என்று மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.

சென்னையில் சைதை துரைசாமி நிறுவியுள்ள மனிதநேய அறக்கட்டளை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு எழுதும் மாணவர்களுக்காக இலவச பயிற்சி அ‌ளி‌த்து வருகிறது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு உணவு, உறைவிடம், பாட நூல்கள், யோகா பயிற்சி வகுப்புகள், சீருடைகள், போக்குவரத்து வசதிகள் என அனை‌த்து‌ம் இலவசமாக வழங்கப்படுகின்றன.

கட‌ந்த ஆ‌ண்டு இ‌ந்த அமை‌ப்‌பி‌ல் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கு 100 மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் 12 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு தேர்வாணையக்குழு நடத்தும் துணை மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர், காவ‌ல்துறை துணை சூப்பிரண்டு போன்ற குரூப்-1 பணிகளுக்கான முதல்நிலை தேர்விலும் 22 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

கடந்த மே மாதம் இந்த மையத்தின் சார்பில் 90 மாணவர்கள் முதல் நிலை தேர்வு எழுதியுள்ளனர். இந்த தேர்வு முடிவுகள் ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் வெளியாகிறது. இவர்களுக்கான முதன்மை
தேர்வு பயிற்சி வகுப்புகள் ஜூலை முதல் வாரத்தில் தொடங்கப்படுகிறது.

2009-ம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., முதல்நிலை தேர்வுக்காக புதிய மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இந்த மையம் சார்பில் இலவச பயிற்சி தொடங்கப்பட உள்ளது. இதற்காக 8 மாதம் தொடர்ந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த இலவச பயிற்சியில் சேருவதற்கு குறைந்தபட்ச வயது 21 ஆகும். ஏதாவது ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் சிறந்து விளங்கிய கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்த பயிற்சியில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு சென்னை, மதுரை, நாகர்கோவில், வேலூர், கரூர், ஈரோடு, திருச்சி ஆகிய இடங்களில் நடத்தப்படும். நேர்முகத்தேர்வு சென்னையில் நடைபெறும். இந்த நுழைவுத்தேர்வு ஜூலை மாதமும், பயிற்சியின் தொடக்கம் ஆகஸ்டு மாதமும் நடைபெறும்.

நுழைவுத்தேர்வு 2 தாள்கள் கொண்டதாக இருக்கும். முதல்தாளில் தேர்ந்தெடுத்து குறிக்கும் வினாக்களும், 2-வது தாளில் கட்டுரை வடிவிலான வினாக்களும் இடம்பெறும். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு வினா கொடுக்கப்படும். இதில் பொதுஅறிவு, இந்திய வரலாறு, புவியியல், அரசியல், பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், பொருளாதாரம், பொது ஆங்கிலம், தமிழ் இலக்கிய வரலாறு ஆகிய பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.

இதற்கான விண்ணப்பங்களை மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பயிற்சி மையம், 28, ஒன்றாவது முதன்மைச் சாலை, சி.ஐ.டி.நகர், சென்னை-600035 என்கிற முகவரியில் நேரடியாகவோ அல்லது இ‌ந்த அற‌க்க‌ட்டளை‌யி‌ன் இணையதள முகவரியிலோ பிரதியெடுத்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை மாதம் 4-ந்தேதிக்குள்ளாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், சாதிச்சான்றிதழ் நகல், பட்டச்சான்றிதழ் நகல், சுய முகவரி எழுதப்பட்ட 3 தபால் உறைகள் ஆகியவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.இந்த தகவலை மனித நேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.

source:
http://tamil.webdunia.com/newsworld/career/opportunities/0805/29/1080529023_1.htm

Wednesday, May 28, 2008

வேர்கிளம்பி மாநாடு - மே 31-ந்தேதி


Tuesday, May 27, 2008

இந்து முண்ணனி அலுவலக குண்டு வெடிப்பு : முஸ்தபா ரஷாதி அவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்டது1

.
இந்து முன்னனி அலுவலக் குண்டு வெடிப்பு வழக்கு
தற்கொலைப்படை தீவிரவாதி அடையாளம் தெரிந்தது
உடல் அரசு சார்பில் புதைப்பு


சென்னை மே 27,

இந்து முன்னனி அலுவலகத்தை குண்டு வைத்து தகர்த்த வழக்கில் தற்கொலைப்படை தீவிரவாதியின் உடல் 12 ஆண்டுகளுக்கு பிறகு அரசு சார்பில் புதைக்கப்பட்டது.

சென்னை சிந்தாகிரிபுட்டையில் இந்து முன்னனி அலுவலக்ம் உள்ளது அந்த அலுவலகத்தி்ல் 1995ம் ஆன்டு ஏப்ரல் 14ம் தேதி தற்கொலைப்படையாக வந்த ஒருவர் குண்டு வைத்து தகர்த்தார். அதில் இந்து முண்ணி பிரமுகர் பைபிள் சன்முகம் சம்பவ இடத்திலேயே இறந்தார். தற்கொலைப்படையாக வந்தவர் உடல் சிதறி இறந்தார்.

தற்கொலைப் படையாக வந்தவரின் கை, கால், மற்றும் முகத்தின் ஒரு பகுதி மட்டுமே அடையாளம் தெரியுமு் வகையில் இருந்தது. உடல் முழுவதும் கருகி விட்டது. அதை வைத்து இறந்தவர் யார் என்று விசாரித்தனர்.

அப்போது மேலப்பாளையத்தை சோந்த குட்டியப்பா (எ) காஜா நிஜாமுத்தீன் என்பவர்தான் தற்கொலைப்படையாக வந்தவர் என்று முடிவு செய்து அவரின் பெற்றோரிடம் விசாரித்தனர் ஆனால் அவாக்ளோ இது என் மகன் இல்லை என்று கூறி விட்டனர். ஆனால் போலிசார் இறந்தவரின் ரத்தம், சதை ஆகியவற்றை ஐதராபாத்தில் உள்ள பரிசோதனை கூடத்துக்கு டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க அனுப்பினர். அவரது பெற்றோரின் உடலிலும் இருந்து ரத்தத்தை எடுத்து அனுப்பினர் பின் பரிசோதனையில் இறந்தது காஜா நிஜாமுத்தீன்தான் என்று அறிக்கை அளிக்கப்பட்டது ஆனால் அந்த உடலை வாங்க பெற்றோர் மறுத்து விட்டனர். அதனால் அந்த உடல் அரசு பொது மருத்துவமனையிலேயே இருந்து வந்தது. இந்த நிலையில் இறந்ததாக கூறப்பட்ட நிஜாமுத்தீன் சேத்துப்பட்டு ஆர்.எஸ்எஸ் வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டார். இது பெரும் பரபரபபை ஏற்படுத்தியது. இந்நிலையில் இறந்தது கன்னியாகுமரியை சோந்த முஸ்தபா ரஷாதி என்று தெரியவந்தது. மீண்டும் டி.என்.ஏ பரிசோதனைக்கு ஐதராபாத்தில் உள்ள பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் இறந்தது முஸ்தபா ரஷாதி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அவரது உடலை பெற்றோர் வாங்கவில்லை அதனால் அரசு சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

நன்றி : தமிழ் முரசு 27-05-2008


இந்து முன்னணி குண்டு வெடிப்பு :பலியான நபரின் உடல் அடக்கம்

சென்னை :பதிமூன்று ஆண்டுகளுக்கு முன் இந்து முன்னணி அலுவலகத்தில் நடந்த குண்டு வெடிப்பில் பலியான நபரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இந்து முன்னணி தலைமை அலுவலகம் உள்ளது. கடந்த 95ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்து முன்னணி அலுவலகத்தில் குண்டு வெடித்தது. இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் அலுவலகத்தில் இல்லாததால் தப்பினார்.


கிறிஸ்தவ மதத்தில் இருந்து, இந்து மதத்திற்கு மாறியவர் "பைபிள்' பாண்டியன். இந்து முன்னணி அமைப்பின் பேச்சாளராக இருந்து வந்தார். அலுவலகத்தில் இருந்த பாண்டியன் பலியானார். அவருடன் பலியான மற்றொருவர் உடல் அடையாளம் தெரியாத நிலையில் உருக்குலைந்து காணப்பட்டது. அந்த நபர் உடலில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தவர் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது.சென்னை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். புலன் விசாரணைக்காக அவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.,யில் உள்ள சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு(எஸ்.ஐ.டி.,) மாற்றப்பட்டது. உருக்குலைந்த நபர் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், அந்த உடல் அரசு பொது மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்டு வந்தது.குண்டு வெடிப்பு வழக்கை எஸ்.பி., மகேஸ்வரி, கூடுதல் எஸ்.பி., ராமகிருஷ்ணன் விசாரித்து வருகின்றனர். அழுகிய நிலையில் அரசு மருத்துவமனை சவக் கிடங்கில் இருந்த உடலை நேற்று முன்தினம் இரவு வழக்கின் விசாரணை அதிகாரிகள், முறைப்படி கடிதம் கொடுத்து மருத்துவத்துறை அதிகாரிகளிடம் இருந்து பெற்றனர்.கேட்பாரற்ற நிலையில் 13 ஆண்டுகளாக சவக் கிடங்கில் இருந்த உடல், வழக்கு விசாரணைக்கு தேவையில்லை என்ற நிலையில் அதனை போலீசார் நேற்று முன்தினம் அடக்கம் செய்தனர்.

நன்றி : தினமலர்

Monday, May 26, 2008

இணையத்தில் வளர்தமிழ் - கருத்தரங்கு


இணையத்தில் வளர்தமிழ் - திருநெல்வேலி (ஜூன் 7, 2008



வரும் ஜீன் மாதம் ஏழாம் தேதியன்று, நெல்லையில் மாவட்டக் கலெக்டர் திரு.கோ. பிரகாஷ், I.A.S தலைமை வகிக்க, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்துணைவேந்தர் முனைவர் இரா. சபாபதிமோகன் "இணையத்தில் வளர்தமிழ்" என்னும்கருத்தரங்கைத் தொடங்கிவைக்கிறார். முனைவர்கள் நா. கணேசன், சொ.சங்கரபாண்டி, காசி ஆறுமுகம் அவர்களும் உரையாற்ற உள்ளனர். பேராசிரியர் தொ.பரமசிவன், எழுத்தாளர் பொன்னீலன், வழக்கறிஞர்கள் தீன், பிரபாகர் இன்னும்பலர் சொற்பொழிவாற்றுகிறார்கள். பல தமிழ் அறிஞர்களும், புரவலர்களும்பங்கேற்க உள்ளனர். தமிழ்மணம் போன்ற திரட்டிகளைப் பயன்படுத்தித் தமிழாய்வைமேலும் செழுமையாக்கும் வழிமுறைகளும் கணி சாராத பெருவாரித் தமிழ்மக்களுக்கு இணையத்தின் பயன்களைக் கொண்டு செல்தலும் பற்றிக் கலந்துஆலோசிப்பது கருத்தரங்க நோக்கங்களாம்.


இணையத்தில் வளர்தமிழ்வலைப்பதிவின் வளர்ச்சியும் தமிழாய்வில் பயன்பாடும் கருத்தரங்க நிகழிடம்: விஜயா கார்டன்ஸ், தெற்கு புறவழிச் சாலை, திருநெல்வேலி - 5நேரம்: மாலை 5 மணி, சனிக்கிழமை, ஜூன் 7 (07/06/2008)

வலைப்பதிவர்களும், ஆசிரியர்களும், எழுத்தாளர்களும், கணிஞர்களும், தமிழ்க்கணிமை ஆர்வலர்களும் வருகைதந்து ஆதரவளிக்க அன்புடன் அழைக்கிறோம். வருவோர்எண்ணிக்கை அறிய உதவியாக, தாங்கள் வருவதாக முடிவு செய்தால்naa.ganesan@gmail.com என்னும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். நன்றி.


இவண்,

சேகர் பொன்னையா,
குளோபல் சாப்ட்வேர் சொல்யூசன்ஸ், திருநெல்வேலி
முனைவர் முல்லை ச. முருகன்,
நெல்லைத் தமிழ்ப் பண்பாட்டுப் பேரவை

இயற்கை வைத்தியம்

அஸ்ஸலாமு அலைக்கும்.

Sunday, May 25, 2008

குர்ஆனை சங்கைப் படுத்துவோம் - மெளலவி முகம்மது அஸ்ஹர் ஸீலானி

"குர்ஆனை சங்கைப் படுத்துவோம்"

அஷ்ஷேய்க். முகம்மது அஸ்ஹர் ஸீலானி அவர்கள்.

Al-Sheikh. Mohamed Azhar Seelani


CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



அஷ்ஷேய்க். முகம்மது அஸ்ஹர் ஸீலானி அவர்கள்

"நாங்கள் பயங்கரவாத்தை ஆதரிப்பதில்லை" - MNP தலைவர் ஜின்னா அறிக்கை

தமிழகத்தில் முஸ்லிம்கள் சுதந்திர தின அணிவகுப்பு நடத்துவது குற்றமா?
மனித நீதிப் பாசறை மாநிலத் தலைவர் கேள்வி


இன்றைய (25.05.2008) தினமலர் நாளிதழில் 2ம் பக்கம் ""தமிழகத்தில் இளைஞர்களுக்கு அணிவகுப்பு பயிற்சி'' பின்னணி குறித்து போலீசார் விசாரனை'' என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டுள்ள செய்தி குறித்தும், தொடர்நது தினமலர் நாளிதழ் முஸ்லிம்களுக்கு எதிரான பொய்ச் செய்திகளை பரப்பி மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்கி வருவது குறித்தும் கண்டனம் தெறிவித்து மனித நீதிப் பாசறையின் மாநிலத் தலைவர் திரு முகம்மது அலி ஜின்னா அவர்கள் அறிக்கை ஒன்ற வெளியிட்டுள்ளார்கள் அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:


திரு. முகம்மது அலி ஜின்னா அவர்கள்

25.05.2008 அன்று தங்கள் தினமலர் நாளிதழில் 2ம் பக்கம் ""தமிழகத்தில் இளைஞர்களுக்கு அணிவகுப்பு பயிற்சி'' பின்னணி குறித்து போலீசார் விசாரனை'' என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டுள்ள செய்தி முழுக்க முழுக்க உள்நோக்கம் கொண்டதாகவும் முஸ்லிம் விரோதப் போக்குடனும் அமைந்துள்ளது மனித நீதிப் பாசறைக்கு மிகுந்த வேதனை அளிக்கின்றது.மனித நீதிப் பாசறை அங்கம் வகிக்கும் தேசிய இயக்கமான ""பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா'' சார்பாக எதிர்வரும் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின அணிவகுப்பு நடத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

தமிழகத்தில் மட்டுமல்ல; பாப்புலர் ஃபிμண்ட் ஆஃப் இந்தியா செயல்பட்டுக் கொண்டிருக்கும் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் இந்த சுதந்திμதின அணிவகுப்பு நடக்கவிருக்கின்றது.தமிழகத்தில் அதற்கான அணிவகுப்பு பயிற்சி மற்றும் ஒத்திகைகளை தமிழகம் முழுவதும் நடத்தி வருகின்றோம். ஆனால் அது போலீஸுக்கு இணையான அணிவகுப்பு பயிற்சி அல்ல.மேலும் தமிழக வீதிகள் முழுவதும் இந்த சுதந்திμதிக் அணிவகுப்பு சுவர் விளம்பμம் செய்து வருகின்றோம். காவல்துறை உயர் அதிகாரிகளிடம் இது குறித்து அதிகாரப் பூர்வமாக தெரிவித்துள்ளோம்.இந்நிலையில் தங்கள் நாளிதழில் எங்கள் அமைப்பின் சுதந்திμதின அணிவகுப்பு பயிற்சி குறித்தும் எங்கள் அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் தவறாகவும், அவதூறாகவும் உண்øமக்குப் புறம்பாகவும் எழுதியிருப்பது பத்திரிகை தர்மத்திற்கு எதிரானதாகும். அதுமட்டுமின்றி முஸ்லிம்களின் சுதந்திர உணர்வை களங்கப்படுத்தும் செயலாகும்.


நமது தேசத்தின் சுதந்திரம் என்பது இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து போராடிப் பெற்ற சுதந்திμம். 1757ம் ஆண்டு வங்காளத்தில் சிராஜ் உத் தவ்லா முதல் 1947ம் ஆண்டு வரை இந்த தேசத்தின் சுதந்திரத்திற்காக இரத்தம் சிந்தி இருக்கிறார்கள் முஸ்லிம்கள். 1947ம் ஆண்டு நமது தேசம் விடுதலையடைந்தபோது இருந்த முஸ்லிம்களின் ஜனத் தொகையைவிட 2 மடங்கு முஸ்லிம்கள் இந்த சுதந்திர போரில் தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்திருக்கின்றார்கள்.

சுதந்திரமடைந்த 60 ஆண்டுகள் கழிந்தும் விடுதலை வரலாற்றின் வீர வடுக்களிலிருந்து முஸ்லிம்கள் அந்நியப்படுத்தப்பட்டே வந்திருக்கின்றார்கள். போராடிப்பெற்ற சுதந்திμத்தில் முஸ்லிம்களின் உரிமையைப் பறைசாற்றும் விதமாகவும், இந்துக்களுடன் இணைந்து போராடிய ஒற்றுமையை நிலைநிறுத்தும் முகமாகவும் இந்த சுதந்திர தின அணிவகுப்பு நடக்கவிருக்கின்றது. நாங்கள் எப்பொழுதும் வெளிப்படையான அமைப்பு தான். எங்களிடம் எந்த திரைமறைவுமில்லை. பயங்கரவாதத்தை நாங்கள் ஆதரிப்பதும் இல்லை. மேலும் ஆள்கடத்தல், ஆயுதம் பதுக்கல் தொடர்பான குற்றத்தில் ஈடுபட்டதாக எங்கள் இயக்கத்தினர் மீது கடலூர் போலீசில் சில ஆண்டுகளுக்கு முன் வழக்குப் பதிவாகியுள்ளதாக தாங்கள் குறிப்பிட்டுள்ளது முற்றிலும் பொய்யானதாகும்.

நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் நடத்தும் அணிவகுப்பை பயங்கμவாதக் கண்கொண்டு பார்க்காத உளவுத்துறையினர், மனித நீதிப் பாசறையின் அணிவகுப்பு ஒத்திகையை சீர்குலைக்க இதுபோன்ற தவறான செய்திகளை பத்திரிகைகளுக்கு வழங்குவது அவர்களுடைய துவேஷ சிந்தனையைத் தெளிவாகக் காட்டுகின்றது. இதுபோன்று சட்ட ஒழுங்கையும், சமூக நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் விதமாகவும், பாரபட்சமாக துவேஷ சிந்தனையுடனும் செயல்பட்டு வரும் காவல்துறை மற்றும் உளவுத்துறையில் உள்ள கருப்பு ஆடுகளை இனங்கண்டு அவர்களைக் களையெடுக்க வேண்டுமென தமிழக அμணிச மனித நீதிப் பாசறை கேட்டுக் கொள்கின்றது. ""இந்தியாவில் முஸ்லிமாக வாழ்வது தண்டனைக்குரிய குற்றமா? என்று கம்யூனிஸ்டு கட்சியின் எம்.பி. பிருந்தா கரத் அவர்கள் பாராளுமன்றத்தில் கேட்ட கேள்வியை மனித நீதிப்பாசறை இன்று மக்கள் மன்றத்தில் கேட்கின்றது. என்று மனித நீதிப் பாசறை சார்பாக அதன் தலைவர் திரு. முகம்மது அலி ஜின்னா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெறிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, May 24, 2008

உலக நாடுகளை கவரும் "அல் ஜஸீரா" தொலைக்காட்சி

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

உலக நாடுகளை கவரும் "அல் ஜஸீரா" தொலைக்காட்சி
நிறுவன சேவைகள்


ஆதிக்கசக்திகள் ஊடகத்துறைக்குள் புகுந்து எந்தெந்த அளவில் பொய்களை புகுத்த வேண்டுமோ அந்தெந்த அளவில் பொய் செய்திகளை புகுத்தி மக்களிடம் உண்மைகளை மறைத்துக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இஸ்லாத்திற்கு ஏதிராக ஆதிக்கச்சக்திகள் பரப்பி விடும் பல பொய் செய்திகள் உலக மக்களிடம் எடுபடவில்லை. பொய்ப்பிரச்சாரங்கள், பொய் செய்திகள், நேர் ஏதிரான கருத்துக்களை மட்டுமே பரப்பி வரும் பல தொலைக்காட்சி நிறுவனங்கள் பல ஆதிக்கச்சக்திகள் சொல்லும் செய்திகளை மட்டுமே ஒளி ஒலிப்பரப்பி வருகின்றன.

சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பாக, டோஹா கத்தார் நாட்டில் துவங்கப்பட்ட “அல்ஜஸீரா” தொலைக்காட்சி நிறுவனமானது மற்ற தொலைக்காட்சி நிறுவனத்திற்கு முன்னோடியாக விளக்குகிறது என்றால் மிகையாகாது. ஆரம்பத்தில் அரேபிய மொழியில் மட்டுமே துவங்கப்பட்ட இதன் செய்தி நிகழ்ச்சிகளானது அதிகமான மக்களை கவர்ந்து விட்டது.

ஈராக் ஆக்கிரப்புக்குப்பின் அந்நாட்டில் ஆதிக்கக்சக்திகள் என்ன கொடுமைகளை நடத்தின, ஆப்கானிஸ்தான் நாட்டில் எத்தகைய இன்னல்களை அங்குள்ள பொது மக்கள் அனுபவித்தனர். பாலஸ்தீன நாட்டின் உண்மை நிலை என்ன போன்ற தகவல்களை உடனுக்குடன் படம் பிடித்து உண்மையான தகவல்களை மக்களிடம் தரும் பணியினை செம்மையாக செய்து வருகிறது. ஆகையால் உலக மக்களின் நன் மதிப்பினை அல்ஜஸீரா தொலைக்காட்சியானது பெற்றுக்கொண்டு வருகிறது. அதனை பிடிக்காத ஆதிக்கச்சக்திகள் இந்நிறுவனத்திற்கு ஏதிராக பல எதிர்ப்புகளை காட்டியது. அந்த எதிர்ப்புக்கிடையே அல்ஜஸீராவின் வளாச்சியானது, மேன்மேலும் பரவி தற்போது ஆங்கில மொழியில் தன்னுடைய ஒலி ஒளிப்பரப்பினை அமெரிக்கா நாட்டில் துவங்கி விட்டது. BBC – British Broad Casting நிறுவனம் மற்றும் CNN – Net work போன்ற ஆதிக்கச்சக்திகளின் தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்திகளை விட அல் ஜஸீராவின் செய்திகளை மக்கள் ஆர்வத்துடன் பார்க்கிறார்கள் என்றால் மிகையாகாது.

மே 14.5.2008 புதன் கிழமையன்று, அமெரிக்க நாட்டில் அல் ஜஸீரா தொலைக்காட்சியின் சேவையானது துவங்கபட்டது. அதனுடைய ஆங்கில சேவையின் பொது இயக்குனர் டோனி புர்மன் (Tony Burman – Managing Director of Al Jazeera’s English languages service) அவர்கள் குறிப்பிடுகையில் (இவர் இதற்கு முன்பாக கனடா தகவல் மையத்தின் இயக்குராக பணி புரிந்து ஜீலை 2007 வேலையிலிருந்து நீக்கினார்) அமெரிக்காவில் DISH Net work மூலமாக , இந்நிகழ்ச்சிகளை காணலாம். மற்றும் 160 மில்லியன் இல்லங்களை தேடி அல் ஜஸீரா நிகழ்ச்சியானது செல்ல வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டார். அமெரிக்காவின் பல பகுதிகளிலும் மற்றும் வடக்கு அமெரிக்கா நாடுகளிலும் இதனுடைய ஒலி ஒளிப்பரப்பானது துவங்க பட உள்ளது. அத்துடன் பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரான்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து போர்ச்சுகல் மற்றும் ஹங்கெரி நாடுகளிலும் சேவைகள் துவங்கப்பட உள்ளது.

ஆசிய நாடுகளில் ஒன்றான வியாட்நாம் நாட்டில் VTC என்ற நிறுவனத்துடன் இணைந்து தன்னுடைய ஆங்கில சேவையினை அங்கு செய்து வருகிறது. சிஙகப்பூர் நாட்டில் SINGTEL என்ற நிறுவனத்துடன் இணைந்து அங்கு சேவையினை செய்து வருகிறது. மற்றும் ஹாங்காங் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டிலும் அல் ஜஸீரா ஆங்கில சேவையானது துவங்கப்பட்டு விட்டது. அல் ஜஸீராவின் அலை வரிசையின் சேவையானது, பிஜி, மாலத்தீவு, மால்டா, நெதர்லாந்து போன்ற நாடுகளிலும் சேவையானது உள்ளது.

இணையத்தளம் வாயிலாக மக்களுக்கு உண்மையான செய்திகளை You Tube Video Clip – Sharing site மூலமாக வழங்குகிறது. முதல் ஆண்டு துவங்கத்திலேயே, 21 மில்லியன் மக்கள் இந்த இணையத்தளம் மூலமாக செய்திகளை பார்த்து இருக்கிறார்கள் என்ற தகவலை அல் ஜஸீரா செய்திக்குறிப்பானது கூறுகிறது.

தகவல் : முத்துப்பேட்டை அபூ ஆஃப்ரின்

மேலப்பாளையத்தில் தமுமுக வின் திட்டத்தால் கைதான மாநகராட்சி ஊழியர்


மாட்டிக் கொண்ட மாநகராட்சி ஊழியர்

நெல்லை, மேலப்பாளையம், சாயன் தரகன் தெருவைச் சார்ந்தவர் மௌலவி காசிம் பிர்தௌசி, இவர் ஹாமீம்புரம் தவ்பா பள்ளியில் இமாமாகவும் உள்ள இவர் த.மு.மு.க.வின் தலைமைக் கழக பேச்சாளரும் ஆவார். இவரது மாமியார் ஜெய்லானி தனது பழைய வீட்டைப் புதுப்பித்து மாடியுடன் கட்டியுள்ளார். இந்த வீட்டிற்கு புதிதாக தீர்வை செலுத்த வேண்டி மாநகராட்சிக்கு மனு செய்திருந்தார்.






இதனை அறிந்த நெல்லை மாநகராட்சி ஊழியர் 34வது வார்டு பில் கலெக்டர் பரமசிவம் (47) ஜெய்லானி அவர்களிடம் 'உங்கள் வீட்டின் மதிப்பை குறைத்து மதிப்பீடு செய்து தீர்வையும் விரைவில் பெற்று தருகிறேன். அதற்கு நீங்கள் எனக்கு ரூ.5000ஃ- தர வேண்டும்' என்று கூறியுள்ளார். இத்தகவல் காசிம் அறிந்தவுடன் மேலப்பாளையம் நகர நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்பு அவர் நகர நிர்வாகிகளுடன் நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் திட்டத்தின்படி ரூ.5000ஃ-த்திற்கான நோட்டுகளில் இராசயன பவுடர் பூசப்பட்டது. பின்பு பரமசிவத்திடம் காசிம் இன்று மாலை 5.00 மணிக்கு என்னுடைய வீட்டில் வந்து பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று தகவல் தெரிவித்தார்.

மாலை 5 மணிக்கு முன்பாகவே லஞ்ச ஒழிப்பு போலீசார் காசிம் பிர்தௌசி வீட்டில் மறைந்திருந்தனர். சரியாக 5 மணிக்கு அங்கு வந்த பரமசிவத்திடம் காசிம் பிர்தௌசி ரூ.5,000ஃ- த்தை வழங்கினார். பரமசிவம் அதனை பெறும்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். அதனை தொடர்ந்து அவருடைய வீட்டிலும் சோதனை நடத்தி சில ஆவணங்களை கைப்பற்றினர். த.மு.மு.க வினரின் இச்செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாரட்டினர்.

செய்தி: நெல்லை உஸ்மான்.

Friday, May 23, 2008

ஊடக வலையில் முஸ்லிம்கள்

இஸ்லாமிய இணையப் பேரவையில் வெளிவந்துள்ள கட்டுரை. மேலும் பல கட்டுரைகள் படிப்பதற்கு இஸ்லாமிய இணையப் பேரவையின் இணையத் தளத்திற்கு (http://www.iiponline.org/) சென்று படியுங்கள்.
ஊடக வலையில் முஸ்லிம்கள்

பெரும்பாலான மக்களை ஒரே நேரத்தில் சென்றடைவதிலும் மேலும் அதன் தாக்கத்தை உடன் ஏற்படுத்துவதிலும் ஊடகங்கள் இன்று பெரும் பங்கை வகிக்கிறது. இன்று உலகம் அறிவியலில் வெற்றி இலக்கை நோக்கி வெகுவாக முன்னேறிகொண்டுருக்கிறது. செய்தி ஊடகங்கள் என்பது இணையத்தில் மட்டுமில்லை. வானொலி, தொலைக்காட்சி, தினசரி, வாரம், மாதப்பத்திரிகைகளாகவும், பல துறைகளைப் பற்றிய செய்தித் தொகுப்பாகவும் மற்றும் தனி மனிதர்களின் புத்தக வெளியீடாகவும் விரிவடைந்து ஆழமாக தன் வேர்களைப் பாய்ச்சியுள்ளது. தகவல் தொழில் நுட்ப முன்னேற்றம், அச்சு ஊடகத்துறை மற்றும் மின்னணு ஊடகத்துறை என்று எல்லாத் துறைகளிலும் விஞ்ஞானம் கொடிகட்டிப் பறக்கும் சாதனை உலகில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகத்தையே சுற்றி வளைத்து உங்கள் விரல் நுனியில் தந்துள்ளது ஊடகத்தின் உச்சானி கொம்பாக இருக்கின்ற இணையதளம். கல்வி, வியாபாரம், வர்த்தகம், விளம்பரம், தகவல் தொடர்பு, வேலைவாய்ப்பு, மருத்துவம், இராணுவம் மற்றும் ஆராய்சி என பல்வேறு துறைகளில் தனது ஆதிக்கத்தை முழுவீச்சுடன் செலுத்தியுள்ளது.

இன்று ஊடகத்தின் வளர்ச்சி எல்லோருக்கும் கிடைக்கும்படியும் அமைந்துவிட்டது, சிறிது தொழில்நுட்பம் தெரிந்தால் கூட நமது கருத்துக்களை உலகத்தின் பலபாகங்களுக்கும் கொண்டுபோய் சேர்க்க முடியும். ஆனால் இஸ்லாமிய சமுதாயம் ஊடகவலையில் இன்னும் உறங்கி கொண்டுதான் இருக்கிறது. இதனால இஸ்லாம் பல கோணங்களில் தவறாக பரப்பப் படுகிறது, மேலும் கலங்கப்படுத்தபடுகிறது, காரணம் இன்று ஊடகம் ஆதிக்க சக்திகளாலும் பாசிசத்தாலும் ஆக்கிரகிக்கப்பட்டுள்ளது.

ஊடகத் துறையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறித்து இதுவரை வெளியிடப்பட்ட அறிக்கையில் ஊடகத் துறையின் முக்கியப் பொறுப்புகளில் வெறும் 3 சதவிகிதம் முஸ்லிம்களே உள்ளனர். ஆனால், மக்கள் தொகையில் 3 சதவிகிதம் இருக்கும் பார்ப்பனர்களோ இத்துறையில் 49 சதவிகிதம் இருக்கின்றனர். ஆதிக்கவாதிகள் நிரம்பி வழியும் ஊடகங்கள் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான செய்திகளை வெளியிடுவதை ஒரு பிரச்சாரமாகவே மேற்கொண்டு வருகின்றன. ‘முஸ்லிம்கள் அழித்தொழிக்கப்பட வேண்டிய தீவிரவாதிகள்' என்ற மதவெறிக் கருத்தை இவை வெளிப்படையாக மக்களிடையே பரப்புகின்றன. உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பங்கு மக்கள் தொகையாக முஸ்லிம்கள் இருந்தும் சொல்லிக் கொள்கிற மாதிரி செய்தி ஊடகங்களில் முஸ்லிம்கள் முன்னேற முடியாமல் மூலையில் முடங்கிக்கிடக்கிறார்கள். கல்வியில் முன்னேறாத சமுதாய மக்களாக முஸ்லிம்கள் இருக்கும் போது, ஊடகங்களில் எப்படி முன்னேற முடியும்? மாற்றார்களால் முஸ்லிம்கள் தவறாக சித்தரிக்கப்படும் போது அதே மீடியாவைக்கொண்டு பதில் தாக்குதல் எப்படிக் கொடுக்கமுடியும்.

இஸ்லாத்திற்கு எதிரான பனிப்போர் மிகவும் உச்சக்கட்டத்தில் நடந்து கொண்டிருக்கிறது, குறிப்பாக மேற்கத்தியர்களும் மற்றும் அறிவுஜீவியாக தன்னைக் காட்டிக் கொள்பவர்களும் இஸ்லாத்திற்கெதிரான கருத்துப்போரில் முழுவீச்சுடன் செயல்படுகின்றனர். அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பவர்களையும் செய்தி படிப்பவர்களையும் இந்த மீடியா முஸ்லிம்கள் தீவிரவாதிகள்தான் என நம்ப வைத்திருக்கிறது. நாளொரு வண்ணமும் பொழுதொரு செய்தியுமாக முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் தொலைகாட்சி பார்ப்பவர்களையும் செய்திப்படிப்பவர்களையும் இவ்வலைக்குள் சுலபமாக விழ வைத்திருக்கிறார்கள்.

ஒரு புள்ளிவிபரத்தின் படி ஒரு அமெரிக்கக் குடிமகன் ஒவ்வொரு நாளும் சராசரியாக மூன்றே முக்கால் மணி நேரம் தொலைக்காட்சியைப் பார்க்கிறான். 65 ஆண்டு கால உலக வாழ்க்கையில் ஒரு மனிதன் ஒன்பது ஆண்டுகாலம் தன் வாழ்க்கையை தொலைக்காட்சியை பார்ப்பதில் கழிக்கிறான். அமெரிக்காவில் கணிசமான குழந்தைகள் சராசரியாக வாரம் ஒன்றிற்கு 25 மணிநேரம் தொலைக்காட்சி பார்ப்பதாக சி.என்.என் ஹெல்த் நியூஸ் குறிப்பிடுகிறது.

ஒரு பக்கம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கின்ற ஊடகம், இன்னொரு பக்கம் தீவிரவாதிகளை சமூக சேவகர்களாக அங்கீகாரம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் முஸ்லிம்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்றும், தீவிரவாதிகள், பிற்போக்கு வாதிகள் என்றும் பாசிசவாதிகளால் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இதனையே உலக அளவில் அமெரிக்காவும், பிரிட்டனும் சி.என்.என், பி.பி.சி போன்றவற்றின் உதவியுடன் முன்வைக்கிறது.

மாற்றான் தவறு செய்தால் அத்தவறுகளை அவனளவிலும், ஒரு முஸ்லிம் தவறு செய்துவிட்டால் இஸ்லாம் அவ்வாறு பயிற்சிவிக்கிறது போன்ற பிம்பத்தை உண்டாக்க "முஸ்லிம் தீவிரவாதிகள்", "இஸ்லாமிய அடிப்படைவாதிகள்" என்று போற்றுவது இவர்களுக்கு கைவந்த கலை. ஆங்கில ஏகாதிபத்தியத்தைத் திணற அடித்து, 'சரணடைய மாட்டேன்' சாவை சலனமின்றி ஏற்றுக் கொள்வேன்' என்று நெஞ்சுயர்த்தி நின்று தன் உயிரைத் தந்த உண்மை வீரன் தியாகி திப்பு சுல்தானின் பெயர் இந்திய இளைய தலைமுறையினருக்குத் தெரியாமல் போய்விடும்படி செய்கிறார்கள்.ஆங்கிலேயனுக்கு அடிமை சேவகம் செய்து இந்தியர்களைக் காட்டிக்கொடுத்த துரோகிகள் தியாகிகள் எனப்போற்றப் படுகிறார்கள் ஊடகங்களால்.

திரைப்படங்கள் என்று எடுத்துக்கொள்ளுங்கள் முஸ்லிமா.. எல்லா இடத்திலேயும் கலவரங்களைத் தூண்டுபவன், பாகிஸ்தானுக்கு உளவாளி, தீவிரவாதி என்று இரண்டரை மணிநேரத்தில் எப்படியெல்லாம் முஸ்லிம் சமுதாயத்தின் மேல்அவதூறான களங்கத்தைச் சுமத்திச் சென்றுவிடுகிறார்கள். இதையெல்லாம் கண்டிக்க மாற்று வழியைத் தேர்ந்தெடுத்திருக்கின்றோமா?

பர்தா பாதுகாப்பு என்கிறது இஸ்லாம். இல்லை பழமைவாதம் என்கிறார்கள் எதிரிகள். நாம் உண்டு நமது வேலை உண்டு என்றிருந்தால் ஊடகத்துறையில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துப்போரில் வாள் வீசுவது யார்? சற்று சிந்தனை செய்யவேண்டாமா? இன்று ஊடகத்துறையில் முஸ்லிம்களுக்கெதிரான அவர்கள் செய்யும் பனிப்போரில் உச்சகட்டத்தை அடைந்துயிருக்கின்றார்கள் என்றால் யார் காரணம்? நாமல்லவா சகோதரர்களே! இப்போதெல்லாம் இஸ்லாமிய தீவிரவாதம், முஸ்லீம் பயங்கரவாதம் தொடர்பான செய்திகள் அடிக்கடி வந்துகொண்டு இருக்கின்றன. 9/11 நிகழ்வுகளுக்கு பின்பு இஸ்லாம் பயங்கரவாதம் என்கின்ற ஒரு தவறுதலான கருத்தாக்கம் ஊடகங்கள் மூலமாகப் பரப்பப்பட்டு வருகின்றது. இந்த விஷமத்தனமான பிரச்சாரத்தைப் பரப்புவதில் யூத, அமெரிக்க அமைப்புகளும் இந்தியாவில் மதவெறியர்களின் கைப்பாவையாகச் செயல்படும் சில ஊடகங்களும் முழு மூச்சாக இயங்குகின்றன. தற்கொலைத் தாக்குதல்கள், குண்டு வெடிப்புகள், பணயக் கைதிகள் கொல்லப்படுவது போன்ற வெறிச்செயல்களை மத அடிப்படையிலும், மனிதாபிமானத்தின் அடிப்படையிலும் எந்த முஸ்லீமும் ஏற்றுக்கொள்வதில்லை. உலக வர்த்தகமையக் கட்டடத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களாகட்டும், இஸ்ரேலின் இயந்திரத் துப்பாக்கிக்கு பலியாகும் பாலஸ்தீனர்களாகட்டும், பாதுகாப்புப் படைகளால் கொல்லப்படும் காஷ்மீரியாகட்டும், வான் தாக்குதல்களில் கொல்லப்படும் ஈராக் முஸ்லிம் ஆகட்டும், வேதனையும் மரணமும் எல்லோருக்கும் ஒன்றுதான். ஊடகங்களும் இது போன்ற செய்திகளை பெரிய அளவில் பிரபலப் படுத்துவதும் இந்த வழக்குகளில் ஊடகங்கள் இருட்டடிப்பு செய்வதும் நாம் கண்கூடாகக் காணக்கூடிய நிகழ்வுகளாக உள்ளன.

இன்று நம் நாட்டில் மட்டுமல்ல, உலகளாவிய நாடுகளில் நடக்கும் வன்செயல்கள், அராஜகங்கள், தீவிரவாத செயல்கள், மனித நேயத்திற்கு முரணான செயல்கள் இவை அனைத்தையும் உன்னிப்பாகக் கவனியுங்கள். முஸ்லிம்கள் மட்டும்தான் அச்செயல்களில் ஈடுபடுகிறார்களா? இல்லையே! ஜாதி, மத வேறுபாடின்றி அனைத்து இன, மத மக்களிலும் இப்படியொரு அராஜாக - மிருகவெறி கொண்ட கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. இஸ்லாமிய மார்க்கத்தை அறிந்த, ஒரு உண்மை முஸ்லிம் இப்படிப்பட்ட அராஜக செயல்களில் ஒரு போதும் ஈடுபடமாட்டார். தற்கொலை செய்து கொண்டு தன்னை மீளா நரகில் கொண்டு சேர்க்க ஒரு போதும் முற்படமாட்டார். தீமையை தீமையைக் கொண்டு தடுக்க முடியும் என்று அல்குர்ஆன் சொல்லவில்லை. தீமைகளை நன்மைகளைக் கொண்டே முறியடியுங்கள் என்றே குர்ஆன் போதிக்கிறது.

சோவியத் கம்யூனிஸத்தின் வீழ்ச்சிக்குப்பிறகு, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு இஸ்லாமே பெரிய எதிரியாகத் தெரிகிறது. காரணம் அங்கெல்லாம் இஸ்லாம் மிக வேகமாக பரவி வருகிறது. இஸ்லாம் தங்கள் நாடுகளை ஆட்கொண்டு விடுமோ என அஞ்சுகிறார்கள். எனவே இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டைப் போட வேண்டும் என்ற தீய நோக்கோடு, அனைத்து ஊடகங்களும் அமெரிக்க, யூத பணத்திற்கு அடிமையாகி அவர்கள் கொடுக்கும் செய்திகளை அப்படியே மாறி மாறி ஊடகத்தின் மூலமாக பரப்பி வருகின்றன.

ஆனால் என்ன செய்வது, அறிவின் பிறப்பிடமான இஸ்லாமிய மக்களுக்கு கல்வியே இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது. அதற்கு வறுமையும் மிகப்பெரிய எதிரியாக உள்ளது, இந்த வறுமையை போக்கக்கூடிய இடஒதுக்கீடும் பாசிசத்திற்கு எதிராக உள்ளது. நகர்ப்புறங்களில் வசிக்கும் முஸ்லிம்களில் 44 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கின்றனர். மற்ற சமூகங்களை சார்ந்தவர்களில் 28 விழுக்காட்டினர் மட்டுமே இந்த நிலையில் உள்ளனர்.

மனித சமூகத்தை நாகரிகப்படுத்துவதும் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு இட்டுச் செல்வதுமான கல்வித் தகுதியில், முஸ்லிம்கள் மிக மிகப் பின் தங்கியுள்ளனர். 1965 இல் 72 சதவிகிதமாக இருந்த நகர்ப்புற முஸ்லிம் மாணவர் சேர்க்கை 2001 இல் 80 சதவிகிதமாகியிருக்கிறது. ஆனால், நகர்ப்புற தலித் மாணவர்களின் எண்ணிக்கையோ 90 சதமாக உயர்ந்திருக்கிறது. 36 ஆண்டுகளில், கிராமப்புற, நகர்ப்புற, ஆண்-பெண் என எந்தப் பிரிவை எடுத்துப் பார்த்தாலும் முஸ்லிம்களிடையே கல்விப் புரட்சி என எதுவும் ஏற்படவில்லை. கல்வி மறுக்கப்பட்ட ஒரு சமூகம், மற்ற துறைகளில் எப்படி வளர்ச்சி அடையும்? பள்ளிகளில் முஸ்லிம் மாணவர்களுக்கெதிரான பாரபட்சங்கள் ஒருபுறமும், வறுமையில் உழலும் குடும்பச் சூழல் மறுபுறமும் சேர்ந்து பள்ளிக் கல்வியைக்கூட முடிக்க முடியாத அவல நிலைக்கு முஸ்லிம்களைத் தள்ளிவிட்டது. பள்ளியில் எழுபது சதவிகிதம் மாணவர் சேர்க்கையில், 11.6 சதவிகிதம்பேர் பாதியிலேயே படிப்பைக் கைவிடுகின்றனர். 3 சதவிகித பட்டதாரிகளையும், 1.2 சதவிகிதம் மட்டுமே பட்ட மேற்படிப்பை முடித்தவர்களையும் கொண்டிருக்கிறது, இந்தியாவின் மிகப் பெரிய சிறுபான்மைச் சமூகம் அடிப்படைக் கல்வியில் இத்தகைய சரிவு ஏற்படுவதாலேயே அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் உள்ள 50 சதவிகிதம் இடஒதுக்கீட்டைக் கூட நிரப்ப முடியவில்லை. 94.9 சதவிகித முஸ்லிம்கள் அன்றாடம் உணவுக்கே அல்லல்படுகின்றனர். படிப்புதான் இல்லை, சுயதொழில் செய்யலாம் என வங்கிகளில் கடன் கேட்டால், முஸ்லிம்களுக்கு கடன் கொடுக்க அவை முன் வருவதில்லை. இதுவரை வெறும் 3.2 சதவிகிதம் பேருக்குதான் வங்கிக் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. கிராமப்புறங்களில் 60.2 சதவிகிதம் பேருக்கு நிலங்கள் இல்லை. நிலமற்றவர்கள் கூலிகளாக இருப்பதும், கூலிகள் வறுமையில் உழல்வதும், வறுமை கல்வியைத் தடுப்பதும், கல்வித் தடை மற்ற எல்லா வளர்ச்சிகளையும் முடக்கிப் போடுவதும்தானே இயற்கை! எமக்கும் அதுவே நேர்ந்திருக்கிறது.

மற்ற மாநிலங்களைவிட மிகக் குறைந்த சதவிகிதமே அரசுப் பணிகளில் முஸ்லிம்கள் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். அதாவது, வெறும் 4.2 சதவிகிதம்தான். பீகாரிலும் உத்திரப்பிரதேசத்திலும் முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப மூன்றில் ஒரு பங்குகூட, அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு அளிக்கப்படவில்லை. கர்நாடகத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 12.2 சதவிகிதமாக இருப்பினும், அரசு வேலைகளில் அவர்களுக்கான பிரதிநிதித்துவம் 8.5 சதவிகிதம்தான் உள்ளது. குஜராத்தில் 9.1 சதவிகிதம் மக்கள் தொகைக்கு அளிக்கப்பட்டுள்ள பங்கு 5.4 சதவிகிதம் மட்டுமே. சிறுபான்மையினச் சகோதரர்கள் என வாயாற அழைத்தே ஆட்சியை மாறி மாறிப் பிடிக்கும் தமிழகத்திலோ 5.6 சதவிகிதம் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். ஆனால் வெறும் 3.2 சதவிகிதம் பிரதிநிதித்துவமே உள்ளது. எல்லா மாநிலங்களிலும் நிலைமை இதேதான்.

முஸ்லிம்கள் உயர் பதவிகளில், மேற்கு வங்கத்தில் பூஜ்யம். மற்ற மாநிலங்களில் பாதிக்குப் பாதி என்ற அடிப்படையில்கூட முஸ்லிம்களின் பங்களிப்பில்லை முஸ்லிம்கள் அதிகமுள்ள 12 மாநிலங்களில் நீதித்துறையில் வெறும் 7.8 சதவிகிதம்தான் உள்ளனர். மக்கள் தொகையில் 66.97 சதவிகித முஸ்லிம்களைக் கொண்ட ஜம்மு காஷ்மீரில்கூட, 48.3 சதவிகித பிரதிநிதித்துவமே நீதித்துறையில் அளிக்கப்பட்டிருக்கிறது. ஒரு முஸ்லிம் நீதிபதியையோ, வழக்கறிஞரையோ அவர்களின் பதவியைக் கொண்டு பார்க்காமல் முஸ்லிமாகப் பார்க்கவே இச்சமூகம் தலைபடுகிறது. மதக்கலவரங்களை விசாரிக்க இதுவரை ஒரு முஸ்லிம் நீதிபதிகூட நியமிக்கப்பட்டதில்லை. காரணம், ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமைத்தான் ஆதரிப்பார் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கை. இதுதான் பாரபட்சத்தின் ஆணிவேர். வகுப்புவாதிகள் எல்லோரும் நீதிமான்கள் என்பது போலவும், முஸ்லிம்கள் மட்டும் மதவெறியர்கள் என்பது போலவும் ஒரு மோசமான கருத்து இங்கு விதைத்து வளர்க்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் அதிகளவில் முஸ்லிம்கள் ‘குற்றவாளி'களாகவும், பாசிசவாதிகள் ‘நீதிமான்'களாகவும் உள்ளனர்.

இவ்வாறு இஸ்லாமிய மக்கள் வறுமையிலும் கல்வியிலும் மிகவும் தாழ்வு நிலைமையில் இருக்க இதற்கு மருந்தாக இருக்கக்கூடிய இடஒதுக்கீட்டையும் கிடைக்கவிடாமல் எதிர்க்கிறது மனித வடிவில் மிருகமாக இருக்கிற பாசிசம். அவ்வாறுயிருக்கையில் எவ்வாறு இஸ்லாமிய சமூகம் ஊடகத்துறையிலும், மற்ற ஏனய துறையிலும் முன்னேற முடியும். ஆனால் முஸ்லிம்கள் அனைவரும் பணக்காரர்களாக இருக்கிறார்கள் என்கின்ற மாயத்தோற்றத்தை பாசிச சக்திகள் மக்கள் மத்தியில் பரப்பிவருகிறார்கள்.

ஒரு நாட்டின் இறையாண்மை நிலைநாட்டப்பட வேண்டும் என்றால், அந்த நாட்டின் அரசு, அரசு அதிகாரிகள், நீதித்துறை, ஊடகங்கள் இந்த நான்கும் நீதியாகவும் நேர்மையாகவும் நடுநிலையோடும் செயல்பட வேண்டும். இந்த நான்கும் நிலைகுழைந்தால் நாட்டில் கற்பழிப்பு, திருட்டு, கொள்ளை, கொலை, வன்முறை, தீவிரவாதம் என அனைத்து அராஜகங்களும், பஞ்சமா பாவங்களும் தலைதூக்கும் என்பதில் ஐயமில்லை. இன்று இந்த நான்கு தூண்களும் லஞ்சத்திற்கும், ஊழலுக்கும் அடிமையாகிக் கிடக்கின்றன.

இல்லாததைத் திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தால் அதை இருப்பதாக மக்கள் நம்பி விடுவார்கள். இஸ்லாம் ஒரு தீவிரவாத மதம், முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் என திரும்பத் திரும்ப எதிரிகள் செய்தி ஊடகங்கள் வழியாக மக்கள் முன் வைக்கிறார்கள். துரதிஷ்டம், இதை எதிர்த்து தக்கப் பதிலடி கொடுப்பதற்கு சொல்லிக் கொள்கிற மாதிரி பிரபல்யமான மீடியா என்று முஸ்லிம்களிடம் எதுவுமில்லை. யானைப்பசிக்கு சோளப்பொறி மாதிரி அங்கொன்று, இங்கொன்றாக பத்திரிகை மீடியா, அதுவும் முஸ்லிம்களுக்குள்ளேயே தான் செய்தி ஊடுருகிறதே தவிர, மீடியா வழியாக இஸ்லாத்தின் மீது எதிரிகள் விதைக்கும் விஷக் கருத்துக்குத் தக்க பதிலாக, இஸ்லாத்தைப் பற்றிய அவதூறைத் துடைக்கும் நோக்கில் முஸ்லிம் அல்லாத மக்களுக்கு செய்திகளைச் சேர்க்கும் பரந்த, வலுவான மீடியா என்பது இல்லை. இஸ்லாத்தை படித்தவர்கள் மீடியாவுக்கு வருவதில்லை. இஸ்லாத்தைப்பற்றி வாய்வழியாக பிறருக்கு சொன்னால் போதும் என்கின்ற மனநிலையில் பெரும்பான்மையினர் ஒதுங்கிவிடுகின்றனர்.

இப்படியிருக்கையில் இன்னும் நாம் உறங்கி கொண்டிருந்தால் நம் சமூகத்தை இந்த அழிவு பாதையிலிருந்து பாதுகாப்பது மிகவும் கஷ்டமாகவே இருக்கும். ஆகவே நாம் இதிலிருந்து விரைவில் விழித்துக்கொண்டு விழிப்புணர்வுடன் செயல்படக்கூடிய மிகக் கட்டாய காலகட்டத்தில் இருக்கிறோம்.இதற்கு எல்லாம் வல்ல இறைவன் உதவி புரிவனாக!



ஏனெனில், எந்த ஒரு சமுதாயமும் தன் உள்ளத்திலுள்ள(போக்குகளை) மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை மாற்றிவிடுவதில்லை.குர்ஆன் (8:53)

யூத, கிருஸ்த்துவர்கள் - ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம் (VIDEO)

"இஸ்லாத்தின் பார்வையில் யூத, கிருஸ்த்தவர்கள்"

அஷ்ஷேய்க். ஜமால் முகம்மது மதனி அவர்கள்

Al-Sheikh. Jamal Mohamed Madhani.


CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



அஷ்ஷேய்க். ஜமால் முகம்மது மதனி அவர்கள்
.
குறிப்பு : ஏற்கனவே கடந்த 28-04-2008 அன்று இந்த வீடியோவை பதிந்தோம் ஆனால் சில காரனஙக்களால் சரியாக இயங்கவில்லை அதை சில சகோரர்கள் சுட்டிக்காட்டியதால் பிழை சரி செய்யப்பட்டு மீண்டும் பதியப்படுகின்றது. நமது தளங்களில் பதியப்படும் வீடியோக்களில் ஏதாவது பிழை இருந்து சரியாக இயங்கவில்லை என்றால் எமது raisudeen@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அறியத் தரவும். ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

Thursday, May 22, 2008

கல்வி உதவித்தொகை அறிவிப்பு (B.S. ABDUR RAHMAN ZAKAAT FUND FOUNDATION )

கல்வி உதவித்தொகை அறிவிப்பு

பி.எஸ். அப்துல் ரஹ்மான் ஜக்காத் ஃபண்ட் பவுண்டேஷன்

நோக்கம் : சிறந்த மதிப்பெண் பெற்று, ஜகாத் பெறக்கூடிய குடும்ப சூழலில் படிப்பைத் தொடர முடியாத மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல்

தகுதி : நடந்து முடிந்துள்ள இறுதித் தேர்வில் குறைந்தது முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

பெற்றோர்களின் குறைந்த வருமானம் காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாதவர்களாய் இருத்தல் வேண்டும்.

விதிமுறைகள் :

ஜகாத் தொகை பெறுவதற்கு தகுதியுடைவர்களாக இருத்தல்

படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். தேர்வில் தவறினால் உதவித் தொகை நிறுத்தப்படும்.

படிப்பு முடியும் வரை ஒவ்வொரு வருடமும் மதிப்பெண் பட்டியலை சமர்பித்தல் வேண்டும்.

படிக்கின்ற போதும், படிப்பிற்கு பிறகும் ஒழுக்க நடைமுறைகளை / இஸ்லாமிய நடைமுறைகளை பின்பற்றுதல் வேண்டும்.

விண்ணப்பங்கள் பெற மதிப்பெண் விவரத்துடன் கோரிக்கை மனு அனுப்பவும்.

அல்லது
விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட இணையத்தளத்தில் இருந்தும் பெறலாம்

www.bsazakaat.org


பூர்த்தி செய்யப்பட்ட விண்ண்ப்பங்கள் வந்து சேர கடைசி நாள்

செப்டம்பர் 30, 2008 ( முதலாம் ஆண்டு தொழில்நுட்ப படிப்புகள் )

ஜுலை 31,2008 ( முதலாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் படிப்புகள் )

ஜூலை 15,2008 ( முதல் ஆண்டு தவிர )

CONTACT

B.S. ABDUR RAHMAN ZAKAAT FUND FOUNDATION
BUHARI BUILDING
NO 4 MOORES ROAD
CHENNAI 600 006
PHONE : 044 4226 1100
FAX : 044 2823 1950
www.bsazakaat.org
E mail : admin@bsazakaat.org
bsazakaat@gmail.com



தகவல் உதவி : விடியல் வெள்ளி - மே 2008
நன்றி: முதுவை ஹிதாயத்

இன்று இரவு WIN TV "நீதிக்காக" நிகழ்ச்சியில் IDMK தலைவர் கலந்து கொள்கின்றார்

திரு. குத்புதீன் ஐபக்

அன்புள்ள சகோதரர்களே, இன்று இரவு இந்திய நேரம் 9.00 முதல் 10.00 வரை 'நீதிக்காக' என்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ்,பி.ஜே.பி, கட்சிகளின் பேச்சாளர்களுடன் இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் சகோ. குத்புதீன் ஐபக் அவர்கள் மேற்கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி வின் டிவியில் ஒளிபரப்ப உள்ளார்கள். சகோதரர்கள் அளைவரும் இந்நிகழ்ச்சியை காண அழைப்பு விடுக்கிறோம்.

அன்புடன்,
இந்திய தேசிய மக்கள் கட்சி

Wednesday, May 21, 2008

மாமா வேலை பார்க்காததால் காவல்துறை என்னை கொல்ல பார்க்கின்றது - தவ்ஃபீக்


ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்குப் பின் தமிழகத்தில் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான லஸ்கர் - இ - தொய்பா வலுவாக கால் ஊன்ற ஆரம்பித்துவிட்டது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு நாசகார வேலைக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கு சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் `இறைவன் ஒருவனே' என்ற அமைப்பு பின்புலமாகச் செயல்படுகிறது. இந்து மதத் தலைவர்களைக் கொல்ல இவர்கள் திட்டமிட்டுள்ளனர்... என்ற ரீதியில் வெளியாகும் தகவல்களும், சென்னையில் பிடிபட்ட மூன்று தீவிரவாதி களிடம் பெறப்பட்ட ஆர்.டி.எக்ஸ் ரக வாக்குமூலங்களும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே 13-ம் தேதி இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்திற்குப் பின், சென்னை மண்ணடி, கொடுங்கையூர் பகுதிகளில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் பழனி உமர், மேலப்பாளையம் சையது காசிம், மண்ணடி காதர் ஆகியோர் பிடிபட்டனர். இதுபற்றிய தகவல்களை வெளியிட்ட போலீஸார், "தேடுதலில் பிடிபட்டவர்கள் `இறைவன் ஒருவனே' அமைப்பைச் சேர்ந்தவர்கள். அதன் தலைவர் தவ்ஃபீக், அபுதாகீர் ஆகியோர் தப்பியோடிவிட்டனர். ரியாத்துக்கு வேலை தேடிச் சென்றபோதுதான் தவ்ஃபீக்குக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகளோடு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. 2002-ம் ஆண்டு லஸ்கர் - இ - தொய்பா அமைப்பில் ஆயுதப் பயிற்சியை எடுத்துக் கொண்டார். ஆந்திராவில் லஸ்கர் - இ - தொய்பா மாநிலத் தலைவர் அப்துல் அஜீஸுடன் சேர்ந்து செயல்பட்டார். ஒரு சண்டையில் அஜீஸ் சுட்டுக் கொல்லப்பட்டதும், சென்னைக்கு வந்து தீவிரவாத வேலைகளைத் தொடங்கினார் தவ்ஃபீக். ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் `இறைவன் ஒருவனே' என்ற அமைப்பிற்கு முக்கியத் தொடர்பிருக்கிறது. தவ்ஃபீக்கைத் தீவிரமாகத் தேடி வருகிறோம்'' எனத் தெரிவித்தனர்.

தவ்ஃபீக்கின் மனைவி மர்லியாவும், கடந்த 17-ம் தேதி தமிழக முதலமைச்சர், டி.ஜி.பி ஆகியோருக்கு அனுப்பியுள்ள ஃபேக்ஸ் ஒன்றில் `என் கணவர் ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களுக்காக உழைத்து வருகிறார். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத போலீஸார் அவரை என்கவுன்ட்டர் செய்வதற்குத் திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன் அவரைப் பற்றி அவதூறாக பத்திரிகைகளில் செய்தி பரப்புகின்றனர். அவர் பிடிபட்டு சுட்டுக் கொல்லப்பட்டால் பொதுமக்களின் நன்மதிப்பைப் பெறுவதற்காக இப்படியெல்லாம் செய்கின்றனர். என் கணவர் எந்தவித தீவிரவாதச் செயலிலும் ஈடுபடவில்லை. அரசுதான் கருணையோடு அவரது உயிரைப் பாதுகாக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

தவ்ஃபீக்கின் வக்கீல்களிடம் பேசிய போலீஸாரும், `ஜமாத் ஆட்களின் உதவியோடு அவரைக் கூட்டி வாருங்கள். என்கவுன்ட்டர் பயம் தேவை யில்லை' என்று கூறியுள்ளனர். நாமும் தவ்ஃபீக்கைச் சந்திக்க அவரது வக்கீல்கள் மூலம் தொடர்ந்து முயற்சி செய்தோம். நமது தேடுதலை அறிந்து கொண்ட தவ்ஃபீக் நமது செல்போன் எண்ணுக்கே லைனில் வந்தார்.

"வணக்கம். என் பேர் தவ்ஃபீக். இந்தப் பேரைச் சொல்வது என்பது புரியாத அரபு பாஷையைச் சொல்வதுபோல்தான். அதனால் `இறையுதவி' என பெயரை மாற்றிக் கொண்டேன். தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட் டினம்தான் எனக்குச் சொந்த ஊர். மர்லியா என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். சிறு வயது முதலே இஸ்லாத்தில் தீவிர ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறேன். மற்ற இஸ்லாமிய அமைப்பு களைக் காட்டிலும் தமிழ் மரபு சார்ந்த விஷயங்களைப் பற்றி நான் பேசும் முறைகள் மார்க்க பெரியவர்கள் பலருக்குப் பிடிக்காமல் போய்விட்டது. என் வாழ்நாளில் சிறுபான்மையினர் நலனுக்காகப் பாடுபட்டு வருகிறேன். கடந்த சட்டமன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட்டு நான்காயிரம் ஓட்டுக்களை வாங்கினேன்.

ஆரம்பகாலத்தில் அதிராம்பட்டினத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தேன். அப்போது ஊருக்குள் கள்ளச்சாராயம் பெருகியிருந்தது. போலீஸார் கண்டுகொள்ளாததால் எனக்கும், போலீஸாருக்கும் இடையில் பலமுறை சண்டை வரும். அவர்களும் என்னைப் பழிதீர்க்க நேரம் பார்த்திருந்தார்கள். அப்போது (2000-ம் ஆண்டு) அதிராம்பட்டினத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையில் ஒருவர் கொல்லப்பட்டார். அதில் நான்தான் முக்கியக் குற்றவாளி எனக் கைது செய்தார்கள். கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன். ஜாமீனில் வெளிவந்ததும் சென்னை மண்ணடிக்குக் குடிபெயர்ந்தேன்.

சமயம் சார்ந்து உள்ள மரபுகள் பற்றியும், தமிழ் மரபை இன்னொரு மரபு ஆயிரம் ஆண்டுகாலமாக எப்படியெல்லாம் அடிமைப்பட வைத்திருக்கிறது என்பது பற்றியும், இஸ்லாத்தைப் பற்றியும் மேடைகளில் பேசி வருவது தான் எனக்கு முக்கிய வேலை. கடந்த 2002-ம் ஆண்டு சென்னை கொடுங்கையூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாற்பது டெட்டனேட் டர்களை போலீஸார் கண்டெடுத்தனர். இதை நான்தான் மறைத்து வைத்திருந்ததாக என்னைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போதுதான், அந்தக் கொடுமை நடந்தது. மும்பை காட்கோபர் பகுதியில் பஸ் ஒன்றில் வைக்கப்பட்ட குண்டு வெடித்து இரண்டு பேர் பலியானார்கள். அதில் நான்தான் கைப்பைக்குள் குண்டு வைத்து, வெடிக்க வைத்ததாக மும்பை போலீஸார் விசாரணைக்காக என்னைக் கொண்டு சென்றனர். சொல்லப்போனால் போலீஸார் என்னை 26.11.02-ம் தேதியன்று கைது செய்தனர். 29-ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதியும் போலீஸ் கஸ்டடிக்கு என்னை அனுப்பி வைத்தார். இதைப் பற்றி பத்திரிகைகளிலும், உங்கள் குமுதம் ரிப்போர்ட்டரிலும் என்னைப் பற்றி செய்தி வெளியானது.

மும்பையில் குண்டு வெடித்தது டிசம்பர் 2-ம் தேதி. போலீஸாரின் கஸ்டடியில் இருந்த நான், எப்படி மும்பை போய் குண்டு வைக்க முடியும்?. நான் முஸ்லிம் என்பதற்காகவே தீவிரவாதியாக சித்திரிக் கப்பட்டேன். மராட்டிய போலீஸார் என்னை சித்திரவதை செய்தனர். என்னைப் போலவே இருபத்தைந்து அப்பாவிகள் சிறையில் இருந்தனர். மும்பை வழக்கில் என் மீது பொடா சட்டத்தின்கீழ் வழக்குப் போட்டனர். மும்பை தானே மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன். தமிழக போலீஸாரின் கஸ்டடியில் இருந்ததை ஆதாரத்துடன் நிரூபித்ததால் `நான் குற்றவாளி அல்ல' என விடுதலையாகிவிட்டேன். அதிராம்பட்டினம் டிரைவர் கொலையில் இருந்தும் விடுதலையாகிவிட்டேன். டெட்டனேட்டர் பதுக்கியிருந்ததாக போலீஸார் தொடுத்த வழக்கில் சிறையில் நீண்ட காலம் இருந்ததால், நீதிபதி பெயில் வழங்கி உத்தரவிட்டார். இந்த வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதன்பிறகு தமிழ்நாடு உளவுத்துறையும், மத்திய உளவு அமைப்புகளான ஐ.பி.யும் என்னைச் சுற்றியே வருவார்கள். நானும் அவர்களிடம் சகோதர பாசத்துடன்தான் பழகி வந்தேன். கடலூர் மத்திய சிறையில் இருக்கும் போதே, பழ.நெடுமாறன் உள்பட பல முக்கியமான மனிதர்கள், மனித உரிமை ஆர்வலர்களிடம் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. இதைப் பார்த்த உளவுப் பிரிவு போலீஸார், `அவர்களோடு உங்களுக்கு என்ன தொடர்பு? தடை செய்யப்பட்ட அமைப்புகளைப் பற்றி எங்களுக்குத் தகவல் சொல்லுங்கள்?' என்று நிர்ப்பந்தித்தனர். நானோ, `என்னால் மாமா வேலை பார்க்க முடியாது' என முகத்தில் அறைந்தாற்போல் சொல்லிவிட்டேன். இதில் என் மீது போலீஸாருக்கு ஏக கோபம்.

தமிழ் மரபு சார்ந்து கூட்டங்களில் பேசும்போதெல்லாம், உளவுப் பிரிவு போலீஸார், `நீங்கள் இஸ்லாத்தைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். மற்ற சமயத்தவர்கள் பற்றிப் பேசுவது மிகவும் ஆபத்தானது' என்றெல்லாம் சொல்வார்கள். நான் ஒருமுறை சவூதிக்குப் போய் வந்தேன். அங்கு வெளிநாட்டு பிரஜை என்பதற்கான அடையாள அட்டை யை நான் ரினீவல் (புதுப்பிப்பு) செய்யவில்லை. உடனே என்னை தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டனர்.
நான் சவூதிக்குப் போய் வந்ததைத் தெரிந்து கொண்ட ஐ.பி. போலீஸ் அதிகாரி ஒருவர் என்னிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். `நீ அல்கொய்தா, லஸ்கர் - இ - தொய்பா அமைப்புகளின் தொடர்புகளை மேம்படுத்திக் கொள். அவர்களின் செயல் பாடுகளை எங்களுக்குச் சொன்னால் வேண்டிய பணம் தருவோம். உன் குடும்பத்திற்கும் உதவி செய்வோம். உன்னால் எளிதாக தொடர்புகளை ஏற்படுத்த முடியும்' என்றனர். நான்,`அப்படித் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டால் போலீஸ்,தீவிரவாதிகள் என ரெண்டு பக்கமும் எனக்கு ஆபத்து உள்ளது. என்னால் முடியாது' என்று சொல்லிவிட்டேன்.


இதன்பிறகு நான் `லஸ்கர் - இ - தொய்பா' தீவிரவாதி என்பதைப் போலவே போலீஸார் பிரசாரம் செய்தார்கள். நரேந்திர மோடி சென்னை வந்தபோது `முன்னெச்சரிக்கை நடவடிக்கை' என்று சொல்லி என்னைக் கைது செய்து, பதினெட்டு நாட்கள் சிறையில் அடைத்து வைத்திருந்தனர். இந்த நேரத்தில் தான் என்னைச் சுற்றி போலீஸார் வளையம் போட ஆரம்பித்துள்ளனர். கடந்த ஞாயிறன்று (4-ம் தேதி) மண்ணடி அங்கப்பநாயக்கர் தெருவில் பள்ளிவாசல் தொழுகை முடித்துவிட்டு ஓட்டலில் நண்பர்களோடு டீ குடித்துக் கொண்டிருந்தேன். அப்போது எஸ்.ஐ.யூ (ஸ்பெஷல் இன் வெஸ்டிகேஷன் யூனிட்) போலீஸ் எஸ்.ஐ. அசோக் என்னை மறைந்திருந்து நோட்டம் விட்டார். எனது நண்பர்களும், `அவர் நீண்ட நேரமாகவே உங்களை வாட்ச் செய்கிறார்' என்றனர். நான் அசோக்கின் செல்போன் எண்ணை வாங்கி அவரைத் தொடர்பு கொண்டேன். அவர் போனை எடுக்கவில்லை. உடனே, உளவுப் பிரிவு போலீஸாருக்குப் போன் செய்து விசாரித்தேன். அவர்களும் மழுப்பிவிட்டனர். அந்தப் பகுதியில் மஃப்டியில் பல போலீஸார் நின்று கொண்டிருந்தனர். ஏதோ நடக்கப் போகிறது என்று எண்ணிக் கொண்டு அங்கிருந்து தப்பி, நண்பர் ஒருவர் வீட்டில் தலைமறைவாக இருந்தேன்.

இரண்டு நாட்கள் கழித்து எனது வக்கீல் சந்திரசேகரின் பெசண்ட் நகர் வீட்டுக்கு இரவு ஏழு மணிக்குப் போனேன். அவர் வீட்டில் நான் போய்ச் சேர்ந்த பத்து நிமிடத்தில் அவருக்கு ஒரு போலீஸ் நண்பர் போன் செய்திருக்கிறார். வழக்குரைஞரின் முகமே வியர்த்துவிட்டது. என்னிடம் திரும்பியவர், `ஒருவரைச் சுட்டுக் கொல்வதற்காக என்கவுன்ட்டர் ஸ்பெஷல் டீம் எனது வீட்டை நோட்டம் விடுவதாகச் சொல்கிறார். யாரைச் சொல்கிறார்?' என்று கேட்டார். நான் இரண்டு நாளைக்கு முன்பு நடந்ததைப் பற்றிச் சொன்னேன். அவரும் தனது ஜூனியர்களை வெளியில் அனுப்பி பார்த்து வரச் சொன்னார். ஒரு ஆம்னி வேன், பைக் ஆகியவற்றில் மஃப்டி போலீஸார் இருந்தனர். அந்த நேரத்தில் தெருவில் லைட் ஆஃப் ஆனது. வக்கீல் வீட்டில் மட்டும் லைட் எரிந்தது. உடனே எனது இயக்கத்தவர்களுக்குத் தகவல் சொன்னேன். அவர்கள் ஒரு முப்பது பேர், ஜூனியர் வக்கீல்கள் எனத் திரண்டு வந்து என்னைத் தப்ப வைத்தனர்.

கடந்த 11-ம் தேதி எனது நண்பர் ரிட்டயர்டு எஸ்.பி ஜேம்ஸ்ராஜ் வசிக்கும் சூளைமேடு வீட்டிற்குப் போன கியூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் சுதர்சன், என்னைத் தேடி வந்திருப்பதாகக் கூறியுள்ளார். மேலும், தன்னை சூளைமேடு ஸ்டேஷன் ஏட்டு என அறிமுகம் செய்து கொண்டுள்ளார். விசாரிக்கும்போதுதான் உண்மை நிலவரம் தெரிந்துள்ளது.

`இறைவனால் உருவாக்கப்பட்ட எந்த உயிரையும் நியாயமின்றிப் பறிக்காதீர்கள்' என்று குரான் சொல்கிறது. ஆனால், என் உயிரைப் பறிக்க போலீஸார் அலைந்து கொண்டிருக்கின்றனர். எனக்கும், இஸ்லாத்தின் மார்க்க அறிஞர்களுக்கும் இடைவெளி இருக்கிறது. அதனால் தவ்ஹீத் துகள், த.மு.மு.க என யாருமே எனக்காகக் குரல் கொடுக்க வர மாட்டார்கள். அதுதான் போலீஸாருக்கு கூடுதல் தைரியத்தைக் கொடுத் திருக்கிறது. இறைவன் கருணையால்தான் நான் உயிர் தப்பியிருக்கிறேன். என் மீது போடப்பட்ட எல்லா வழக்குகளும் புனையப்பட்டவைதான். எதிலும் எனக்குச் சம்பந்தம் கிடையாது. நாங்கள் இறைப்பணியையும், மக்கள் பணியையும் மட்டும்தான் செய்து வருகிறோம். இதற்காக எங்கு குண்டு வெடித்தாலும் தவ்ஃபீக்தான் காரணம் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்?.
நான் அல்கொய்தாவும் இல்லை. லஸ்கர் - இ - தொய்பாவும் இல்லை. என்னைப் படுகொலை செய்ய போலீஸார் செய்யும் சூழ்ச்சியை மாநிலம் முழுவதும் கூட்டம் போட்டு எங்கள் அமைப்பினர் அம்பலப்படுத்துவார்கள். அதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபடத் திட்டமிட்டிருக்கிறோம்'' என்றதோடு முடித்துக் கொண்டார் தவ்ஃபீக்.


ஆனால், கியூ பிரிவு போலீஸாரோ, " என்னைக் கொல்ல முயற்சிக் கிறார்கள் என்று தவ்ஃபீக் சொல்வது வீண் விளம்பரம்தான். அப்படியொரு எண்ணமே போலீஸாருக்குக் கிடையாது. கேரளாவில் உள்ள வழக்குகளில் அவர் மீது பிடிவாரண்ட் போடப்பட்டிருக்கிறது. அதற்காகத்தான் ரிட்டயர்டு எஸ்.பி வீட்டில் தவ்ஃபீக்கைத் தேடி போலீஸார் சென்றுள்ளனர். காரணம், அவர் வீட்டில்தான் வாடகைக்கு அலுவலகம் எடுத்துச் செயல்பட்டு வந்தார் தவ்ஃபீக். `இறைவன் ஒருவனே' அமைப்பினர் இந்து முன்னணித் தலைவர் ராம.கோபாலன் உள்பட மூன்று பேரைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்திருந்தனர். அவர் தவறே செய்யவில்லையென்றால் எதற்காக ஓடி ஒளிய வேண்டும்? போலீஸார் மீது அவதூறு பிரசாரத்தைக் கிளப்பு வதுதான் அவரது வாடிக்கை'' என்கின்றனர்.

இஸ்லாமியக் கொள்கை விளக்க மாநாடு

இறைவனின் திருப்பெயரால்...

ஈருலக வெற்றிக்கு இஸ்லாம் ஒன்றே வழி
இன்ஷா அல்லாஹ், குமரி மாவட்டத்தில் மாபெரும்
ஒருநாள் இஸ்லாமியக் கொள்கை விளக்க மாநாடு

இடம்: எம்.கே. ஆடிட்டேரியம், வேர்கிளம்பி, குமரிமாவட்டம்
நாள்: 31-05-2008 சனிக்கிழமை காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி.

இறைவனின் திருப்தியை அடைய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு பயணம் செய்யவேண்டிய மனிதசமுதாயம் இன்று மேல் நாட்டவர்களின் வழிமுறையை பின்பற்றி செல்லத் துவங்கிவிட்டது.
தன்னைப்படைத்த இறைவன் யார்? எதற்காக படைத்தான்? மரணித்த பின் மனிதனின் நிலை என்ன? இதைப்பற்றியெல்லாம் சிந்திக்காமல் தங்கள் மனோ இச்சைக்கு அடிமையாகி சீரழிந்து தடுமாறி வாழ்ந்து கொண்டிருக்கின்றது மனிதரில் ஒரு கூட்டம்.


இறைவேதம் கூறும் கொள்கை தெரியாமல், திருக்குர்ஆன் அருளப்பட்ட நோக்கம் புரியமல், தர்ஹா, தாயத்து, தட்டு, தரீக்கா ஆகிவற்றை இதுதான் இஸ்லாம் என்று மக்களை நரகத்தின் விளிம்பின் பக்கம் அழைத்துக் கொண்டிருக்கிறது மற்றொரு கூட்டம்.

இஸ்லாமிய அடிப்படைக்கல்வியை அறிய முன் வராமல் உலகாதாயக்கல்லியை மட்டும் பயின்று, ஒழுக்கக்கல்லியை கற்காமல் இன்டர்நெட், செல்போன் என சுற்றித்திறிகிறது மாணவர்களில் ஒரு கூட்டம்.

  • இந்த உலக மாயைகளிலிருந்து விடுபட்டு உங்கள் இறைவன் உங்களுக்கு வாக்களித்தது என்ன? என்பதை அறிந்து கொள்ளவும்.
  • இஸ்லாத்தின் மீது கூறப்பட்டுவரும் தவறான குற்றச்சாட்டுகளுக்கு தக்க பதிலடி கொடுக்கவும்
  • மனித சமுதாயத்தின் இம்மை மறுமை வாழ்க்கையின் வழிகாட்டியான இஸ்லாமை அதன் தூய வடிவில் அறிந்து நடந்திடவும்

உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறது.

இஸ்லாமியக் கொள்கை விளக்க மாநாடு!
குடும்பத்துடன் அணி திரண்டு வாரீர்!!
உங்கள் நண்பர்களையும் அழைத்து வாருங்கள்!!!
பெண்களுக்கு தனி இட வசதி உண்டு

நிகழ்ச்சி ஏற்பாடு
ஜம்மியத்துல் அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் (ஜாக்),
கன்னியாகுமரி மாவட்டம்
தொடர்புக்கு: 9345235598, 9442076269, 9486215365

Monday, May 19, 2008

நெல்லையில் சமூக தீமை ஒழிப்பு பொதுக்கூட்டம்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நெல்லை நகர 52வது வார்டு கிளை சார்பாக சமூக தீமை ஒழிப்பு பொதுக்கூட்டம் டவுண் உழவர் சந்தை அருகில் நகரத் தலைவர் காதர் தலைமையில் நடைபெற்றது. 52வது வார்டு தலைவர் முகம்மது பாபு வரவேற்றார். மாவட்ட செயலாளர் ஐ.உஸ்மான் கான், தலைமைக் கழக பேச்சாளர் காசீம் பிர்தௌசி, ஜாக் தாயீ ரபீக் பிர்தௌசி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இதில் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு: நெல்லை உஸ்மான் கான்

வஞ்சிக்கப்பட்ட சமுதாயத்தின் மறைக்கப்பட்ட உண்மைகள்

எட்டு ஆன்டுகளுக்கும் மேலாக சிறைக்குள் விசாரணைசிறைவாசிகளாக வாழ்க்கையைத் தொலைத்த நம் முஸ்லிம் சகோதரர்களின் குடும்பங்களின் இன்றை நிலையை நமது கவனத்திற்கு கொண்டு வருவதற்காக தயாரிக்கப்பட்ட ஒரு ஆவணப்படத்தை நாம் அனைவரும் கட்டாயம் காணவேண்டும். இதன் மூலம் இந்த பாவப்பட்ட குடும்பங்களின் உண்மை நிலை உலக மக்கள் உணர வேன்டும் என்ற நோக்கில் இங்கு அந்த ஆவணப்படம் Real Media Format ல் இடப்பட்டுள்ளது. High Quality ஒரே File ஆக உள்ளது.


வஞ்சிக்கப்பட்ட சமுதாயத்தின்

மறைக்கப்பட்ட உண்மைகள்

CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



Sunday, May 18, 2008

போன் செய்தால் போதும், டிக்கெட் வீடு தேடி வரும்

இங்கே சொடுக்கி படிக்கவும்.

போன் செய்தால் போதும், டிக்கெட் வீடு தேடி வரும்
Dial "139"

அன்புடன்,
சாதிக்.

Saturday, May 17, 2008

உறவைப் பேணுவோம் - மெளலவி அலி அக்பர் உமரி (VIDEO)

"உறவைப் பேணுவோம்"

அஷ்ஷேய்க். அலி அக்பர் உமரி அவர்கள்.

Al-Sheikh. Ali Akbar Umari


CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



அஷ்ஷேய்க். அலி அக்பர் உமரி அவர்கள்

அமீரகத்தில் நடந்த JAQH கூட்டத்தில் பங்கேற்றார் கமாலுத்தீன் மதனி



அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்.....)

நேற்று 16-05-2008 வெள்ளிக்கிழமை அன்று மாலை அசர் தொழுகைக்கு பிறகு துபாய் நைப் பார்க் அருகில் மலபார் சூப்பர்மார்க்கெட் எதிரில் மினி பவனில்
"ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் - அமீரகம் கிளை "யின்
அமீரக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.



இக்கூட்டததில் தாயகத்திலிருந்து அமீரகத்திற்கு வருகை தந்திருக்கும் "ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்" அமைப்பின் அமீர் கமாலுதீன் மதனி மற்றும் தலைமை நிலைய நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். இந்நிகழச்சியில் அமீரக "ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்" அமைப்பின் அமீரக நிர்வாகிகள் தோந்தெடுக்கப்பட்டார்கள்.


செய்திகள் : JAQH அமீரகம்

இது தமிழ்நாடா பாக்கிஸ்தானா?

சென்னை: சிறுமியைக் கல்யாணம் செய்து அவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றதாக 45 வயது நபரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னையைச் சேர்ந்த சிறுமி பவித்ரா (15). பத்தாவது வகுப்பு மாணவியான இவர் சென்னை புறநகரில் வசித்து வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் 18ம் தேதி முதல் காணவில்லை.

இதுகுறித்து போலீஸில் பவித்ராவின் பெற்றோர் புகார் கொடுத்திருந்தனர். இந்த நிலையில், பவித்ராவை ஆயிஷா மற்றும் அவரது கூட்டாளி சதீஷ் ஆகியோர் கடத்தினர். பின்னர் கோவையைச் சேர்ந்த அப்துல் என்பவரிடம், ரூ. 50 ஆயிரம் பணம் பெற்றுக் கொண்டு விற்றுள்ளனர்.

சிறுமியை விலை கொடுத்து வாங்கிய அப்துல் அவரை கல்யாணம் செய்து கொண்டார். பின்னர் பவித்ராவை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றார்.
இதையடுத்து அவரிடமிருந்து பவித்ரா தப்பினார். பின்னர் கோவையில் உள்ள காவல் நிலையத்தை அவர் அணுகினார்.

அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது அவர் கடத்தப்பட்டு விற்கப்பட்டு, அவரை அப்துல் கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து கொண்டது தெரிய வந்தது.

பெருங்களத்தூரில் உள்ள ஒரு வீட்டில் வைத்து அப்துல், பவித்ராவை திருமணம் செய்து கொண்டதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸார் அப்துல்லைக் கைது செய்தனர். ஆயிஷாவையும், சதீஷையும் வலை வீசி தேடி வருகின்றனர்.

நன்றி : தட்ஸ் தமிழ்

குறிப்பு : தலைப்பை பாத்துட்டு சில சன்மார்க்கம் பெயரில் சைட் நடத்துபவர்கள் இதை விவாதிக்க ஒரு திரியை திறந்து நம்ம எழுதுறா மாதிரி பொய்யா அவனுகளே எழுதுனாலும் எழுதுவானுக...பாக்கிஸ்த்தானுக்கும் இதுக்கும் என்ன தொடர்புன்னு நெனக்காதிங்க...பாக்கிஸ்த்தானுலதான் இத மாதிறி பொம்பள புள்ளைகளை கடத்தி திருமனம் செய்வார்கள் அல்லது விபச்சாரத்தில் ஈடுபடுத்துவார்கள் என்று நிறைய செய்திகள் வாசித்துள்ளேன் அட அந் த கலாச்சாரம் நம்ம ஊருலயும் தொடங்கிருச்சான்னுதான்.....உடனே பாக்கிஸ்த்தான் ஆதரவு தீவிரவாதிகள் சன்மார்க்கம் பெயரில் இயங்கும் சைட்டுகளில் திரி தொடங்கி என்னை முஸ்லிமா என்று கேட்டு அவர்களே அடுத்தவர் போல இமிடேட் செய்து எழுதினால் அதற்கு நான் பொருப்பில்லை.

Friday, May 16, 2008

தமிழக சிறைகளில் வாடும் சிறைவாசிகளின் இன்றைய நிலை

குறிப்பு : இன்றைய தேதிப்படி இன்னும் நூற்றும் மேற்ப்பட்ட சகோதரர்கள் 11 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றார்கள். இவர்களில் பலருக்கு ஆயுள் தண்டனை, தூக்கு தண்டனை என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இவர்களின் விடுதலைக்காக உசச் நீதி மன்றங்களில் முறையீடு செய்யவும், இவர்களின் குடும்ப உதவிக்காகவும் அதிகம் பொருளாதரம் தேவைப்படுகின்றது. இந்த குடும்பங்கள் உங்களிடம் கையேந்தி நிற்கிறார்கள். நம் சமுதாயம் என்றும் இவர்களை கைவிடாது என்ற நம்பிக்கையில் நம்மிடம் கையேந்தி உதவி கோரும் இம்மக்களை நம் சமுதாயம் கைவிடாது என்ற நம்பிக்கையில் நான் இதை இங்கு மீள் பதிகின்றேன்.



''கண்ணீர்க் கதறல்கள்'' வீடியோவைக் காண இங்கு சொடுக்கவும்
CLICK HERE TO VIEW THE VIDEO

இவர்களின் அவலம் மாறுமா?

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்பின் சகோதர, சகோதரிகளே.,

நமது சமுதாய இயக்கங்கள் அனைத்தும் யாருடைய விடுதலைக்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றனவோ அந்த முஸ்லிம் சிறைவாசிகள் சிறைக்கம்பிகளுக்குள் அடைக்கப்பட்டு நீண்ட நெடிய 8 ஆண்டுகளாகிவிட்டன. கொடிய சிறை வாழ்வு., இவர்களின் வாழ்க்கையின் ஒரு பெரும்பகுதி நான்கு சுவர்களுக்கு மத்தியில் விரயமாகிக் கொண்டிருக்கின்றன. இவை என்றுதான் முற்றுபெறுமோ? என்ற ஏக்கப் பெருமூச்சு நித்தம் நித்தம் இவர்களது குடும்பங்களை துளைத்தெடுக்கின்றது. ஆம்! இவர்களின் தேவை குடும்பங்களுக்கு அல்லவா மிக மிக அவசியம்.

எட்டு ஆண்டுகளில் இக்குடும்பங்கள் அடைந்திட்ட துயரங்களை வார்த்தைகளில் வடித்திட இயலாது. வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய ஆண்மக்களெல்லாம் அடைபட்டதால் வருமானங்கள் நிரந்தர தடையாகிவிட்டன. குடும்பத்தை காப்பாற்றிட வேண்டிய நிர்பந்தத்தால் இக்குடும்பத்தின் மென்மையான சகோதரிகள் தங்களின் மென்தோல்கள் வலுவிழக்கும் அளவிற்கு ஆண்களைப் போல் கடினமாக உழைத்திட வேண்டிய பரிதாபமான நிலை. இக்காலத்தில் என்னதான் கடுமையாக உழைத்தாலும் குடும்பத்தை ஒப்பேற்ற ஆணுக்கே மிக கடினம் என்கின்றபோது பெண்களால் என்னதான் செய்ய இயலும்.

வயிற்றுப்பாட்டுக்கே தினம் தினம் பெரும் திண்டாட்டம், மூன்று வேளை உணவைக்கூட முறையாக உண்பதே பெரும்பாடு என்கின்றபோது, குடும்பத்தின் மற்ற அத்யாவசிய செலவினங்களுக்கு என்னதான் செய்வார்கள் இவர்கள். ஒருவர் திடீரென கடும் நோய்வாய்ப்பட்டால் வேறு வழியில்லை, இறக்க வேண்டியது தான். பெரும் மழையினால் வீட்டுக்கூரை சரிந்துவிட்டால்.. என்ன செய்வது? வானம் பார்த்த வீட்டில் தான் சிரமப்பட்டாக வேண்டும். இன்னுமின்னும் நெஞ்சை பிழியவைக்கும் ஏராளமான துன்ப துயரங்கள் சிறைப்பட்ட ஒவ்வொரு வீடடிலும் தினம் தினம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. நித்தம் தொடரும் தொடர் துயரங்களால் இவர்களின் குடும்பங்களில் வாழ்க்கையின் போக்கு திக்கு தெரியாத காட்டில் திசைமாறிச் செல்வது போல முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கின்றன..

இந்தச்சிறைவாசிகளின் சகோதரிகளிள் பலர் திருமணம் கூட
ஆகாமல் முப்பது வயதைத்தாண்டியும் முதிர்கன்னிகளாகதங்கள் வாழ்வை தொலைத்து நிராதரவாக நிற்கின்றனர். தங்கள் தந்தையரையும், தமயர்களையும் சிறைகளிள் தொலைத்தது போல். காரணம் பொருளாதாரம்.. தமது வாழ்வாதாரங்களான ஆண்களை சிறைக்கு அனுப்பியபின் இவர்களின் குடும்பங்கள் இன்று திக்குத்தெறியாமல் நிர்க்கதியாய் நிற்கின்றன.
எட்டு ஆன்டுகளுக்கும் மேலாக சிறைக்குள் விசாரணை
சிறைவாசிகளாக வாழ்க்கையைத் தொலைத்த நம் முஸ்லிம் சகோதரர்களின் குடும்பங்களின் இன்றை நிலையை நமது கவனத்திற்கு கொண்டு வருவதற்காக தயாரிக்கப்பட்ட ஒரு ஆவணப்படத்தை நாம் அனைவரும் கட்டாயம் காணவேண்டும். இதன் மூலம் இந்த பாவப்பட்ட குடும்பங்களின் உண்மை நிலை உலக மக்கள் உணர வேன்டும் என்ற நோக்கில் இங்கு அந்த ஆவணப்படம் Real Media Format ல் இடப்பட்டுள்ளது.

எட்டு ஆன்டுகளாக தங்கள் கணவரை, சகோதரனை, தந்தையை பிறிந்து தவிக்கும் நமது சமுதாயச் சகோதரிகளின் கண்ணீர்க் கதறல்களை காவியமாக வடித்துள்ளார்கள்.


''கண்ணீர்க் கதறல்கள்'' வீடியோவைக் காண இங்கு சொடுக்கவும்

இதுமட்டுமல்லாது இவர்களின் குழந்தைகள் தங்களின் கல்வியை தொடர இயலாது தவித்து வருகின்றார்கள் இப்படியாக இவர்களின் வாழ்க்கை செல்கின்றது.

இக்குழந்தைகளின் தந்தைமார்களும், சகோதரர்களும் நான்கு சுவர்களுக்கு மத்தியில் விதிவசத்தால் முடங்கிக்கிடப்பது போல் இவர்களது குழந்தைகளின் கல்வியறிவு முடங்கிப் போய்விட சமுதாயம் காரணமாகி விடக்கூடாது. ஒருபோதும் இப்பெரும் பாவத்திற்கு சமுதாயம் ஆளாகிவிடக்கூடாது. குழந்தைகள் தொடர்ந்து தொய்வில்லாமல் படித்திட நம் சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தார்மீக பொறுப்புண்டு..


இந்த குழந்தைகளும் கூட நமது சமுதாயத்தின் செல்வங்கள்தான். இவர்களின் தந்தைமார்கள் சிறைவாசிகள் என்ற காரணத்திற்காக இவர்களை நாம் ஒதுக்கிவிட இயலாது. இக்குழந்தைகளின் விபரங்களும் இவர்களின் கல்வி செலவுகளும் (அதிகமில்லை சில ஆயிரங்களே இதை நமது சமுதாயம் கட்டாயம் ஏற்க வேண்டும்) இங்கு பதியப்பட்டுள்ளன. அவற்றை வேண்டுவோர் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.


சிறைவாசி குழந்தைகளின் கல்வி விபரம் டவுன் லோட்

இவர்களுக்கு உதவ விரும்புவோர் கீழ்கண்ட அறக்கட்டளையின் முகவரிக்கு தங்கள் உதவிகளை அனுப்பலாம்.


CHARITABLE TRUST FOR MINORITIES

A/C NO. SB 57991

UNITED BANK OF INDIA
OPPANAKKARA STREET BRANCH
COIMBATORE - 641001.
******************************
CHARITABLE TRUST FOR MINORITIES
RAHIM PLASTIC HOUSE
GNANIYAR NAGAR
SARAMEDU,
KARUMPUKKADAI
COIMBATORE - 8
TEL. : 0091-422-2307673 / +91-9786093544

படிப்பறிவில்லாதவர்களின் கல்விக்கண்களை திறக்கச் செய்தமைக்காக பத்ருப்போரின் கடும் எதிரிகளையே விடுதலை செய்திட்டார் நம் அருமைத்தலைவர் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள்.

நம் அருமைத் தலைவர் கல்விக்கு தந்திட்ட முக்கியத்துவத்தை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம். படிக்காத உம்மி நபிதான் ஆனால் சமுதாயத்தில் ஒருவர் கூட கல்வியறிவு இல்லாமல் இருந்திடக்கூடாது என அறிவுறுத்தத்தான் "தொலைந்து விட்ட பொருளை தேடுவது போல கல்வியை தேடிக்கொள்" என கல்வியின் மாண்பை எடுத்தரைத்தார்.

சமுதாயத்தில் நிகழ்ந்திட்ட கொடுமைகளை எதிர்த்ததற்காக இச்சிறை வாழ்வை பரிசாக பெற்றவர்களின் குழந்தைகளின் கல்விக்கண்கள் திறக்க எத்தடையும் இருந்துவிடக்கூடாது.
உதவியின்மையால் இவர்களின் கல்வி தடைபடுமானால் இதைவிடக்கொடுமை வேறெதுவும் இல்லை.


அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் இவர்களின் கல்விக்கண் திறக்க தாராளமாய் முன்வந்து உதவிகளை வாரி வழங்கிட வேண்டும். நீங்கள் செய்யக் கூடிய ஒவ்வொரு பைசா உதவியும் வீணாகி விடாது. இதுவே, உங்களின் உண்மையான (மறுமைக்கான) சேமிப்பு ஆகும்..


நிராதரவாகிப் போன இக்குழந்தைகளின் கல்விக்கு உதவுவது மிகவும் போற்றுதலுக்குரியதாகும். உதவிகளிலே மிகவும் மதிப்பு வாய்ந்ததாகும். இக்குழந்தைகள் படிக்க, படிக்க, பட்டங்கள் வாங்க வாங்க இவர்களால் சமுதாயம் பயன் அடைய அடைய உங்களின் தர்மத்தின் நன்மை கணக்கில்லை மறுமை வரை பெருகிக்கொண்டே செல்லும்!

இவர்களின் அவலம் கட்டாயம் மாறும்.. மாற்றலாம் நாம் நினைத்தால்... (இறைவன் துணையுடன்)

என்றும் அன்புடன்,
முகவைத்தமிழன்

Wednesday, May 14, 2008

வேலை வழிகாட்டி, வாய்ப்புகள்

அஸ்ஸலாமு அலைக்கும்.

இங்கே சொடுக்குங்கள் குறிப்பிட்ட தகவல்களைப் பெற:


அன்புடன்,
சாதிக்.

வல்லத்தில் கட்டப்பட்ட "காபா" வும் முதல் பொருளாதார குற்றச்சாட்டும்

வல்லத்தில் பி.ஜே கட்டிய "காபா"


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தவ்ஹீத் எழுச்சி மாநாடு என்ற பெயரில் தஞ்சை மாவட்டம் வல்லத்தில் நடத்தப்பட்ட "தவ்ஹீத் திருவிழா" செய்திகளையும் அதில் கூடிய "10 லட்சம்" பேரையும் இன்னும் "100 ஏக்கர் பந்தல்" போடப்பட்டதையும் ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டோம். மக்கள் வாசித்திருப்பீர்கள்.
எப்போதும் போல தற்போது இந்த கூட்டத்தின் மேல் மாநாட்டுக்காக "100 ஏக்கரில் பந்தல்" போடனும் தங்கும் வசதி, "10 லட்சம்" பேருக்கு வசதிகள் என கதையளக்கப்பட்டு கோடிக்கணக்கில் வசூல் செய்யப்பட்ட பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது என முதல் பொருளாதார குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. இதை சில சகோதரர்கள் எமக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருந்தார்கள் அதை மக்கள் பார்ரவைக்காக தருகின்றோம். (இது மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது எமக்கு)
மாநாட்டில் தவ்ஹீத் எழுச்சி என்ற பெயரில் நடந்த அத்தனை அநாச்சாரங்களும் வீடியோக்களாகவும், புகைப்படங்களாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்சா அல்லாஹ் இறைவன் நாடினால் கூடிய விரைவில் இம்மாநாட்டில் உண்மையில் நடந்த "தவஹீத் எழுச்சி" ஆதாரங்களுடன் காட்டப்படும்.
ஆம்!! குதிரையில் தவ்ஹீத் எழுச்சி வீர வீராங்கனைகளின் சூத்தை பிடித்து ஏற்றியதில் இருந்து ஆனும் பென்னும் கலந்து கடலை போட்டது வரை இன்னும் மாநாட்டு பந்தலின் பின்புறம் நடந்த தவ்ஹீத் எழுச்சியால் தீவைத்து கொழுத்தப்பட்டது வரை அனைத்து புகைப்படங்களும் வெளியிடப்படும் காத்திருங்கள். முதலில் எழுச்சி பெற்றவர்கள் தங்கள் பகுதியை முடிக்கட்டும் "எழுச்சியின் மறுபகுதி" நம்மாள் வெளியிடப்படும்.
யார் மேல் உள்ள காழப்புணர்ச்சியானலுமத் இது வெளியிடப்படவில்லை, நடந்த சம்பவங்களின் முழு பரிமானத்தை மக்கள் தெறிய வேண்டும் என்பதற்காக மட்டும் வெளியிடப்படுகின்றது. பி.ஜே மற்றும் பாக்கர் கும்பல் மாநாட்டு மேடையில் குற்றம் சாட்டியது போன்று முக்கியமாக இந்த தளம் தமுமுக வால் நடத்தப்படவில்லை இன்னும் எமக்கும் எந்த அமைப்புகளுக்கும் தொடர்பும் இல்லை.
*****************************************************
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்


அஸ்ஸலாமு அலைக்கும்....

அன்புள்ள சகோதரர் அவர்களுக்கு .....

நான் கடையநல்லூரைச் சார்ந்தவன் . தெஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்.
தாங்கள் மாநாடு பற்றி தங்கள் இணையதளத்தில் வெளியிட்ட சில தகவல்களை கண்டேன்.

குறைகளை மட்டும் சுட்டிக்காட்டிய தாங்கள் ... நிறைகளையும் காட்டியிருக்கலாம் ....

நீங்கள் கூறிய தவறுகள் உண்மையானால் கண்டிக்கக் கூடியவையே...

மேலும் எங்கள் ஊரில் நாங்கள் மாநாட்டுக்காக வசூல் செய்த தொகை சுமார் 3 லட்சம் ரூபாய் (உள்ளுர் வசூல் மட்டும்)

எங்கள் அமைப்பின் கடையநல்லூர் கிளை மூலம் தனியாக ரசீது புக் தயார் செய்து சுமார் 13 லட்சம் ரூபாய் வரை வெளி நாட்டிலிருந்து வசூல் வந்தது . இப்பணம் எங்கள் அமைப்பின் மாநில துணைத்தலைவர் ஸைபுல்லா காஜா ஹஸரத் அவர்களுக்கு உண்டியல் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது. இதை அறிந்த என் போன்ற மூன்று சகோதரர்கள் அவர்களிடம் தலைமைக்கு இந்தப்பணத்தை அனுப்பிவிட்டீர்களா எனக்கேட்டால் இந்தப்பணம் தனியாக மஸ்ஜிதுல் முபாரக் கோர்ட் செலவுக்காக வைக்கப்பட்டுள்ளது எனவும் ஏற்கனவே நிpர்வாகக் குழு கூட்டத்தில் கூறியபடி இதுவரை மஸ்ஜிதுல் முபாரக் பள்ளி செலவுக்காக செலவுசெய்த 26 லட்சத்தில் 6 லட்சம் கடன் உள்ளது எனவும் .

மாநாட்டு பந்தலின் முழு தோற்றம்

(இது மாநாடு முடிந்தபின் எடுக்கப்பட்டதல்ல இரன்டாம் நாள் பகலில் எடுக்கப்பட்டது. முதல் நாள் மாலை 3.00 மணிக்கு மேல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அதாவது மறைக்கப்பட்ட மறுபகுதி இனிமேல் வெளியிடப்படும்)


இதில் பேட்டையை சார்ந்த பாவா அவர்களுக்கு 4 லட்சம் கொடுத்கஉள்ளதாகவும் கூறினார்கள். மாநாட்டிற்காக மட்டும் நம் கடையநல்லூர் சகோதரர்கள் வசூல் செய்து அனுப்பிய பணத்தை இப்படி செய்யாமலிருக்கலாமே என நாசூக்காக கூறியும் ஹஸரத் அவர்கள் தட்டிக்கழித்துவிட்டு 3 நாட்களுக்கு முன்னமே மாநாட்டிற்கு சென்று விட்;டார்கள். மாநாட்டிற்காக வெளிநாட்டிலிருந்து வந்த ரியாத் சகோதரர் ரியாத்திலும், தம்மாமிலும் , வசூல் செய்த ரசீது புக்கின் அடிக்கட்டையை எங்களிடம் ஒப்படைத்து விட்டார். ஹஸரத் அவர்களிடம் மாநாட்டில் வைத்து கொடுத்துவிடலாம் என நினைத்து வந்தால் மாநாட்டில் தண்ணீர் தட்டுப்பாட்டால் மாநில நிர்வாகிகள் யாரையும் சந்திக்க முடியவில்லை. முதல்நாளே நாங்கள் பெறும் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினோம்.

மாநாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட அரசு பேருந்துக்காக முன்பணமாக சுமார் ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரம் கொடுக்கப்பட்டது . ஆனால் மாநாட்டுக்காக புறப்படும் நேரத்தில் பஸ்கள் எதுவுமே வரவில்லை. வாகனங்களுக்காக டிக்கட் வாங்கிய நம் மக்கள் 100க்கும் மேற்பட்டோர் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்த பணம் 150000 ஆயிரம் மீதி கையிருப்பு உள்ளது.


வஸ்ஸலாம்.

கலந்தர் மைதின்

மஜீத்

ரபீக்

From: EXSI XC <misiexsi@yahoo.co.in>Date: May 13, 2008 2:20 PMSubject: Re: salamTo: MohamedFazlul Ilahi <fazlulilahi@gmail.com>

தகவல் நன்றி : திரு.பஸ்லுல் இலாஹி அவர்கள்

Tuesday, May 13, 2008

பரங்கிப்பேட்டையில் நடந்த கல்வி மாநாடு CMN சலீம் பங்கேற்பு

கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டையில் நடந்த கல்வி மாநாடு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி தொகுப்பு... ஒரு (கருத்து) பகிர்வுக்காக தங்களின் முன்பு!

"நமது முக்கியமான பிரச்சனை நமது அடையாளத்தை நாம் உணராததில் துவங்குகிறது. இத்தனை ஆண்டு கால இருப்பில் பரங்கிப்பேட்டைக்கு என்று கூட தனி வரலாறு தொகுக்கப்படவில்லை. 1000 ஆண்டு ஆண்ட பரம்பரையான நமது அடையாளத்தை நம்மை வென்று ஆளவந்த வெள்ளயன் தொகுத்தான். அந்த திரிபுகளத்தான் இன்றும் அனைவரும் படிக்கிறோம். இந்த அடையாள தொலைத்தலின் காரணம்கூட கல்வியின்மைதான்...." இப்படியான போக்குடன் துவங்கி, மிக ஆழமான சிந்தனைகள தூண்டி வந்திருந்த மாணவமணிகள் மற்றும் பெற்றோர்களுக்கு ஒரு தனி சிந்தனை பரிமாணத்தை பரிசளித்தது சி.எம்.என். சலீம் அவர்களின் உரை.

நிச்சயமாக இந்த கல்வி மாநாடு மற்றும் வழிகாட்டுதல் பரங்கிப்பேட்டைக்கு புதிது. பிற சமுதாயங்கள் கல்விக்கு கொடுத்த முக்கியத்துவத்தினால் அந்த சமுதாயம் கண்ட பலன்கள சி.எம்.என். சலீம் அவர்கள் விரிவாக அலசினார். சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக முஸ்லிம்களின் நிலை பற்றி ஆராய்ந்த ராஜேந்திர சச்சாரின் கமிட்டியின் அறிக்கையில் படம்பிடித்துக்காட்டப் பட்ட முஸ்லிம்களின் அவல வாழ்நிலையை பிற சமுதாய முன்னேற்றத்துடன் ஒப்பு நோக்கி பேசினார். கல்வியின் முக்கியத்துவம் பற்றி மிகவும் அழுத்தமான பதிவுகள வைத்த அவர், தொடர்ந்து கல்வி வழிகாட்டுதல் தொடர்பான விஷயங்கள கோர்வையாக விளக்கினார்.



ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.டி. போன்ற சாமானியர்கள் நெருங்க தயங்கும் கல்வியில் நுழைவது எப்படி என்றும், மருத்துவம், பொறியியல், மேலாண்மை மற்றும் பல்வேறு தரப்பட்ட கல்விப்பிரிவுகளயும் அதற்கான தயார்படுத்தல்கள் பற்றியும்,இந்திய ஆட்சிப்பணி, (ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்) போன்றவைகள படித்து சாதிப்பதில் எத்தனை எளிதான முறைகள் உள்ளன என்றும்,

டி.என்.பி.சி., யூ.பி.எஸ்.சி போன்ற போட்டித்தேர்வுகள எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும், சட்டம் படித்தவர்கள் வழக்குரைஞர்களாகப்போய்தான் சம்பாதிக்க வேண்டியதில்லை, சட்ட கண்ஸல்டண்டகளாக மிக அதிகளவில் பொருளீட்ட முடியும் நிலையைபற்றியும், அதுவும் உள்நாட்டு சட்டம் பற்றியல்லாமல் சர்வதேச மற்றும் மிடில் ஈஸ்ட் சட்டம் பயிலலாம் என்பது பற்றியும், பயன்தரத்தக்க கருத்துக்கள மிகவும் எளிமையான முறையில் பகிர்ந்து கொண்டார்.

தேநீர் இடைவேளக்கு பின்னர் தொடர்ந்த உரையில், பரங்கிப்பேட்டை மட்டுமல்ல சுற்றுவட்டார 3 மாவட்டங்களுக்கு ஒரே ஒரு பெண்கள் கல்லூரிகூட இல்லை என்ற ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டார். பெண் கல்விக்கு பாதுகாப்பான சூழல்கள நாம் ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் உணர்த்தினார். (பிற்பாடு கல்விக்குழு தலைவர் பேசுகையில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் அவர்கள் பேரூராட்சி மன்றத்தின் தலைவராகவும் இருப்பதால், நமதூரில் பெண்கள் கல்லூரி ஒன்றினை துவங்குமாறு கோரிக்கை வைத்தார்.) இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் எம்.எஸ. முஹம்மது யூனூஸ் அவர்கள் தனது தலைமை உரையில் பரங்கிப்பேட்டை கல்வி வளர்ச்சிக்கு ஜமாஅத் பாடுபட்டு வரும் முறைமைகள விவரித்தார். கடந்த காலங்களில் பள்ளி முதல் நிலை பெற்ற மாணவர்களான நூர் முஹம்மது நைனா, ஹபீபா ஜுலைகா போன்றோர் தங்களது கருத்துக்கள மேடையில் பகிர்ந்து கொண்டது இனிமை.

இந்த கல்வி மாநாட்டிற்கு நிறைவாக வந்திருந்த கூட்டம், இது பரங்கிப்பேட்டைதானா என்ற மெல்லிய வியப்பை ஏற்படுத்தியது. மண்டபத்தின் பக்கவாட்டுச்சுவர்களில் குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள் கொண்ட டிஜிட்டல் பேனர்கள் கட்டப்பட்டிருந்தன. மிகவும் எளிமையான முறையில் துவங்கி அழகிய முறையில் ஆர்பாட்டங்கள் ஏதுமில்லாமல் அறிவார்ந்த அடையாளங்களாடு கல்விக்குழு தலைவரின் நன்றியுரையுடன் மாநாடு இனிதே நிறைவுற்றது.

http://mypno.blogspot.com/

M.G. Fakrudeen

நெல்லை ஏர்வாடியில் மேற்படிப்பு வழிகாட்டி முகாம் - 2008

மேற்படிப்பு வழிகாட்டி முகாம் - 2008


மேடையில் விருந்தினர்கள் மற்றும் கல்வியாளர்கள்

யுனைடெட் ஸ்டூடண்ஸ் ஃபிரண்ட் சார்பாக ஏர்வாடி O.K. திருமண மஹாலில் வைத்து மாணவர்களுக்கு மேற்படிப்பிற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் S. சாதிக் M.B.A., அவர்கள் தலைமை தாங்கினார்கள்.


சகோதரர் ரியாஸ் M.B.A., அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள். ராணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் திருமதி. ராணி ஜெயசெல்வி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்கள். USF ன் மாநில பொதுச் செயலாளர் திரு. அன்வர் அவர்கள் USF ஐ பற்றி அறிமுகப்படுத்தி பேசினார்கள். மேலும் மருத்துவத்துறை சம்மந்தப்பட்ட கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை டாக்டர்.முஸ்தபா M.B.B.S., DCA., டாக்டர் ஸ்ரீகுமார் M.B.B.S., ஆகியோர் வழங்கினார்கள்.


நிகழ்ச்சியில் பங்கொண்டு பயன்பெற்ற மாணவிகள்

பொறியியல் துறை சம்மந்தப்பட்ட கருத்துக்களை பேராசிரியர் ஹைதர் அலி (HOD, PET Eng, College) பேராசிரியர் S. பாபு ரெங்க ராஜன் (HOD, IT) ஆகியோர் வழங்கினார்கள். அறிவியல் துறை சார்பாக பேராசிரியர் சேக் அப்துல் காதர் மற்றும் பேராசிரியர் அஹமது கனி ஆகியோர் கருத்துக்களை வழங்கினார்கள். சட்டப்படிப்பு பற்றி அட்வகேட் பெல்மான் அவர்கள் கருத்துக்களை வழங்கினார்கள். கலந்து

நிகழ்ச்சியில் பங்கொண்டு பயன்பெற்ற மாணவர்கள்

கொண்ட பேராசிரியர்களுக்கு சிறப்பு நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் இடையே USF தயாரித்துள்ள மேற்படிப்பு வழிகாட்டி நூல் வெளியிடப்பட்டது. இதன் முதல் பிரதியை USFன் பொதுச் செயலாளர் திரு. அன்வர் அவர்கள் வெளியிட திருமதி. ராணி ஜெயசெல்வி அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். முடிவில் சகோதரர் முகைதீன் B.Sc., நன்றியுரை கூறினார்.

விழாவில் 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

செய்தி தொகுப்பு : மூலக்கரைப்பட்டி ஜவாஹிர் ஹஸன், ஏர்வாடி, நெல்லை

Monday, May 12, 2008

தினமனியில் வந்த விளம்பரம் - பஸ்லுல் இலாஹி (மீள் பதிவு)


பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்

முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் வன்முறையிலும் தீவிரவாதத்திலும் இறங்கினார்களா?

ஜைனுல் ஆபிதீன் கூறியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஏற்கனவே இஸ்லாமிய இணையப் பேரவையில் முஸ்லிம் விரோத தினமணியின் பித்தளாட்டத்தையும் முஸ்லிம்களுக்கு எதிரான செயல்களையும் கண்டித்து ""அட பித்தலாட்டமே உந்தன் மறுபெயர்தான் குருமூர்த்தியோ?"" ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. அதை இங்கு சொடுக்கி வாசிக்கவும்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..


உயர் திரு தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் அவர்களுக்கு மேலப்பாளையம் கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி எழுதிக் கொள்வது. முதற்கண் உங்கள் மீது ஏக இறைவன் சாந்தியும் சமாதானமும் உண்டாகச் செய்வானாக என்ற வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன். 14.10.2007 அரசியல் அரங்கம் எனும் தலைப்பில் த.த.ஜ. தலைவர் ஜைனுல் ஆபிதீன் என்பவர் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதனுக்கு அளித்த சிறப்பு பேட்டி என்ற பெயரில் ஒரு பக்க விளம்பரம் இடம் பெற்றிருந்தது. அவரைப் பற்றி அவர் எப்படியெல்லாம் விளம்பரம் செய்து கொள்ள விரும்பினாரோ அந்த விளம்பர வாசகங்களை அப்படியே அவரது பேட்டி போல் வெளியிட்டிருந்தார்கள். தனக்கு விளம்பரம் தேடுவதற்காக, தன்னை தூய்மையானவராக காட்டுவதற்காக, அவர் விரும்பியவாறு விளம்பரம் செய்ய அவருக்கு உண்டு. அதற்காக முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் வன்முறையிலும் தீவிரவாதத்திலும் இறங்குகிறார்கள் என்று ஜைனுல் ஆபிதீன் கூறியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதனால்தான் இந்த கண்டன மடல்.

அனைத்தையும் டி ராஜேந்தர் படித்து விட்டாரா?

முன்னதாக நீங்கள் செய்துள்ள அறிமுக வாசகங்கள் கூட உங்களுடையது அல்ல. விளம்பரத்துக்காக அவர்கள் எழுதி தந்துள்ளதையே நீங்கள் அறிமுகம் செய்வது போல் இடம் பெறச் செய்துள்ளீர்கள். விளம்பரம் என்றாலே அவர்கள் எழுதி தருவதைத்தானே போட முடியும். ஜைனுல் ஆபிதீனின் திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பு நூல் விளம்பரத்துக்காக சினிமா நடிகர் விஜய டி ராஜேந்தரைக் கொண்டு விளம்பரம் தயாரித்தார்கள். இதுவரை வெளி வந்த திருக்குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்புகளிலேயே இதுதான் சிறந்தது என்று அவரை பேச வைத்தாhகள்;. இதுவரை வெளி வந்துள்ளதில் இதுதான் சிறந்தது என்று டி ராஜேந்தர் சொல்வதாக இருந்தால் இதுவரை வெளி வந்துள்ள திருக்குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்புகள் அனைத்தையும் டி ராஜேந்தர் படித்து விட்டாரா? என்று அறிவுள்ளவர்கள் கேட்டார்கள். அதன் பிறகு அந்த விளம்பரத்தை நிறுத்தினார்கள். இந்த மாதிரிதான் உங்கள் அறிமுக எழுத்துக்ளும் உள்ளன.

பொய்களை அரங்கேற்றும்பொழுதுதான் கூறப்படுகிறது, கருத இடமுண்டு என்று எழுதுவார்கள்.

எல்லா மதத்தினரையும் ஜாதியினரையும் கொண்ட தி.மு.க, அ.தி.மு.க. நடத்திய நிகழ்ச்சிகளில் கூட அவர்கள் 10 லட்சத்தைக் கூட்டியதாகக் கூறவில்லை. 2007 டிசம்பர் 14இல் தி.மு.க நடத்த இருக்கும் இளைஞர் அணி மாநாட்டுக்கு கூட 5 லட்சம் பேர் கூடுவார்கள் என்றுதான் மு.க. ஸ்டாலின் கூறி வருகிறார். சிறுபான்மை முஸ்லிம்களில் மிகச் சிறுபான்மையினரான தவ்ஹீதுவாதிகளில் பல பிரிவுகளில் ஒன்றுதான் த.த.ஜ. அது 10 லட்சத்தைக் கூட்டியதாக எழுதி தந்ததை போட முடியாத நீங்கள் சுதந்திர இந்தியாவில் மிகப் பெரிய பேரணி என்று கூறப்படுகிறது என எழுதியுள்ளீர்கள். கூறப்படுகிறது, கருத இடமுண்டு என்று சொன்னாலே த.த.ஜ. தலைவரின் அகராதிப்படி அவற்றின் மறு பெயர் பொய் என்பதுதான். உண்மைகளைத்தான் திட்டவட்டமாக உறுதியிட்டுக் கூற முடியும். பொய்களை அரங்கேற்றும்பொழுதுதான் கூறப்படுகிறது, கருத இடமுண்டு என்று எழுதுவார்கள். அப்படித்தான் அந்த விளம்பரத்திலும் உங்கள் பெயரால் எழுதப்பட்டுள்ள வாசகம் உள்ளது.

மொத்தத்தில் இது பேட்டி அல்ல. த.த.ஜ. தந்துள்ள விளம்பரம்.

தேச துரோகி கிரிமினல் பி.ஜே

(ISI என்ற பாகிஸ்த்தானிய உளவு அமைப்பின் தொடர்போடு தமிழக முஸ்லிம்களிடத்தில் முதல் முதலில் தீவிரவாதத்தை விதைத்து தமிழகமெங்கும் பல இந்து தலைவர்கள் கொல்லப்படுவதற்கும் பல குண்டு வெடிப்புகள் நிகழ்வதற்கும் மூல காரணமாயிருந்தவன் சவுதியில் ஜித்தாவில் உள்ள ஜிப்லி என்ற தனது ஏஜென்ட் மூலமும் இன்னும் இலங்கையில் உள்ள பாகிஸ்த்தானிய தூதரகத்தில் வைத்து நேரிலும் ISI உடன் ஆலோசனை நடத்தியவன். தற்போது முதல்வர் மகள் கனிமொழியின் பெயரையும் முதல்வர் பெயரையும் அடிக்கடி பயன் படுத்தி வருகின்றான் சம்பந்தப்பட்டவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் முக்கியமாக தோழி கனிமொழி அவர்கள் உஷாராக இருக்கவும்)


சட்ட மன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் இருந்த முஸ்லிம் கட்சிகளில் த.மு.மு.க. மட்டும்தான் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு கோரிக்கையை முன் வைத்து கூட்டணி அமைத்தது. இந்தச் செய்திகள் தேர்தல் நேர தினமணியின் எல்லா பதிப்புகளிலும் செய்தியாக வந்திருக்கிறது. இந்த உண்மைக்கு முரணாக எழுத முடியாது. அதனால்தான் அவர்கள் கூற்றை அப்படியே போட முடியாமல் கருத இடமுண்டு என்று எழுதியுள்ளீர்கள். ஒருவனை நல்ல படிக்கிறான் என்று ஆசிரியரும் நல்ல படித்திருக்கிறான் என்பதை அவனை விட கூடுதலாக படித்தவனும்தான் சொல்ல முடியும். வைத்தியநாதனின் கருத்து போல் இடம் பெறச் செய்யப்பட்டுள்ள இஸ்லாமிய கோட்பாடுகளை கரைத்துக் குடித்தவர் என்று சொல்லுக்கும் இதுதான் அளவுகோல்.

இது பேட்டி அல்ல. த.த.ஜ. தந்துள்ள விளம்பரம் இது. செய்திகள் வாசிப்பது போல் பேட்டி எடுப்பது போல் விளம்பரங்கள் டி.வி.க்களில் வருகின்றன. அது போன்ற ஒன்றுதான் இது என்பதை அப்பாவிகள் அறிய மாட்டார்கள்.


ஜைனுல் ஆபிதீன். இடம் பெறச் செய்துள்ள பொய்.

ஜனநாயக ரீதியில் எதிர்ப்பதுதான் மக்களாட்சியில் சரியான வழியே தவிர தீவிரவாதம் அல்ல என்பது தான் அன்றும் இன்றும் எனது அழுத்தமான அபிப்பிராயம். தங்களது எதிர்ப்புகளை நியாயமாக தெரிவிக்க முடியாதபோதுதான் வன்முறையிலும் தீவிரவாதத்திலும் எங்களது சமுதாய இளைஞர்கள் இறங்குகிறார்கள். இது முதல் கேள்வியின் பதிலில் ஜைனுல் ஆபிதீன் இடம் பெறச் செய்துள்ள பொய். அதாவது தனக்கு விளம்பரம் தேடுவதற்காக தன்னை தூய்மையானவராக காட்டுவதற்காக தன்னை காத்துக் கொள்வதற்காக முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் வன்முறையிலும் தீவிரவாதத்திலும் இறங்குகிறார்கள் என்று எழுதியுள்ளார். இந்தியாவிலுள்ள தீவிரவாதிகளில் பலரும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு உடையவர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. இந்திய முஸ்லிம்கள் அவர்களது சதி வலையில் விழுந்த விடக் கூடாது என்பதுதான் த.த.ஜ. கோரிக்கை என்றும் எழுதியுள்ளார்.

அதை தீவிரவாத இயக்கமாக ஆக்கப் பார்த்தார்.

உண்மை என்னவென்றால் ஜாக் என்ற அமைப்பில் இருந்த ஜைனுல் ஆபிதீன் அதை தீவிரவாத இயக்கமாக ஆக்கப் பார்த்தார். 1992இல் இலங்கை சென்ற அவர் பாகிஸ்தான் தூதரகம் சென்றார். ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு கொண்டார். ஐ.எஸ்.ஐ.யின் சதி வலையாக ஆனார். தீவிரவாதம்தான் தீர்வு என்பதில் உறுதியான கொள்கை உடைய ஜைனுல் ஆபிதீன் அதற்காக இஸ்லாமிய சட்டங்களை வளைத்து திரித்து விளக்கம் கூறி இளைஞர்களை தூண்டி விட்டு கெடுத்து வந்தார். எனவே அதன் அமீர் (தலைவர்) கமாலுத்தீன் மதனி எதிர்ப்பு தெரிவித்தார். அதனால் ஜாக் அமீர் (தலைவர்) கமாலுத்தீன் மதனியை பார்த்து நீ கோழை, தொடை நடுங்கி என்றெல்லாம் ஜைனுல் ஆபிதீன் விமர்சித்தார். 1992இல் இலங்கை சென்று ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு கொண்டார்.

மத்திய மாநில உளவுத் துறையினரிடமும் உள்ளது.

எனவே ஜைனுல் ஆபிதீனிடம் ராஜினாமா கடிதம் எழுதி வாங்கிய ஜாக் அமீர் (தலைவர்) கமாலுத்தீன் மதனி ஜைனுல் ஆபிதீனை ஜாக்கிலிருந்து ஓரங் கட்டினார். தீவிரவாத செயலில் ஈடுபட்டதால் ஜாக்கிலிருந்து ஓரங்கட்டப்பட்டதை அறியாதவர்கள் பல சமாதான கூட்டங்களை கூட்டினார்கள். அவற்றில் ஒன்றுதான் 01.05.1997 வியாழன் அன்று திருச்சி அரிஸ்ட்டோ ஓட்டலில் நடந்த ரகசிய கூட்டம். 38 மவுலவிகள் (மதக் குருக்கள்) மட்டுமே கலந்த கொண்ட அந்த ரகசிய கூட்டத்தில் ஜைனுல் ஆபிதீன் அளித்த ரகசிய வாக்கு மூலம் ஆடியோவாகப் பதியப்பட்டுள்ளது. அதில் சேத்துப்பட்டு ஆர்.எஸ்.எஸ். ஆலுவலக குண்டு வெடிப்பு, நாகூர் பார்சல் குண்டு வெடிப்பு, சிந்தாதிரிப் பேட்டை இந்து முன்னணி அலுவலக குண்டு வெடிப்பு, பம்பாய் படப் பிரச்சனை மணிரத்னம் வீட்டு குண்டு வெடிப்பு, மதுரை ராஜகோபாலன் கொலை இப்படி தொடராக உள்ள அனைத்து சம்பவங்களுக்கும் நான்தான் மூல காரணம் என ரகசியமாக வாக்கு மூலம் கொடுத்துள்ளார். இந்த ரகசிய வாக்கு மூல கேஸட்கள் மத்திய மாநில உளவுத் துறையினரிடமும் உள்ளது.

இவரே காட்டிக் கொடுத்து இதுவரை தப்பித்து வந்திருக்கிறார்.

இந்த ரகசிய வாக்கு மூல கேஸட்களில் உள்ளதை அறிந்ததால்தான் 2004இல் அவர் துபையிலிருந்து அடித்து விரட்டப்பட்டார். இந்த ரகசிய கேஸட்டை கேட்டு விட்டுத்தான் சிலோன் போலீஸ் 2005இல் அவசரமாக நாடு கடத்தியது. தமிழகத்தில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கெல்லாம் நான்தான் மூல காரணம் என்று ஜைனுல் ஆபிதீன் கேஸட்களில் சொல்லி உள்ளதை கேட்டு விட்டுத்தான் கத்தர் அரசு வெளியான விஸாவை ரத்து செய்தது. மலேசிய அரசும் நாடு கடத்தியது. இந்தியாவில் மட்டும்தான் சட்டத் துறையினரை சரி செய்து இவரால் தூண்டி விடப்பட்டவர்களை இவரே காட்டிக் கொடுத்து இதுவரை தப்பித்து வந்திருக்கிறார்.

அவர்களிடம் மட்டும் அடிமை போல் அணுசரித்துப் போகிறார்.

தீவிரவாதத்தை தூண்டி விடுவார். பயிற்சி கொடுப்பார். அதில் ஒருவர் மாட்டிக் கொண்டாலும் வரிசையாக மற்றவர்களையும் காட்டிக் கொடுத்து இன்பார்மர் வேலை செய்து இவர் மட்டும் நல்லவராக திறம்பட நடித்து தப்பி விடுவார். ஆக இதுவரை சிறையில் இருந்தவர்கள் தண்டணை பெற்று இருப்பவர்கள் பெரும்பாலும் அப்பாவிகளும் அம்புகளும்தான். எய்தவர் ஜைனுல் ஆபிதீன்;தான். இதற்குரிய ஆதார கேஸட் மேலப்பாளையம் ஷம்சுல்லுஹா, தென்காசி சுலைமான் ஆகியவர்களிடம் உள்ளது. அதனால்தான் பல பிரச்சனைகள் ஏற்பட்டும் அவர்கள் இருவரையும் த.த.ஜ.வை விட்டு நீக்காமல் தாஜா செய்து அவர்களிடம் மட்டும் அடிமை போல் அணுசரித்துப் போகிறார்.
தவ்பா பள்ளியில் போய் வம்பு இழுத்துக் கொண்டுதானிருக்கிறார்கள்.
தீவிரவாதம்தான் தீர்வு என்பதில் இன்றும் உறுதியாக உள்ளவர்தான் த.த.ஜ. தலைவர் ஜைனுல் ஆபிதீன். தீவிரவாதத்துக்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை. த.த.ஜ. தலைவர் ஜைனுல் ஆபிதீனிடம் அனுமதி உண்டு. இதை ஆதாரத்தின் அடிப்படையில் இவரை விசாரிக்க கைது செய்ய அதிகாரிகள் முயற்சி செய்யும்பொழுதெல்லாம். ஆட்சியாளர்களின் காலில் விழுந்து சரண் அடைந்து விடுவார். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் இருந்து தப்ப அப்பொழுது கருணாநிதி காலில் விழுந்தார். பிறகு ஜெயலலிதா காலில் விழுந்தார். இப்பொழுது மீண்டும் கருணாநிதி காலில் விழுந்து கிடக்கிறார். இன்றும் இவரிடம் அடியாட்கள் உண்டு. பல கொலைகள் செய்த இவரது அடியாட்கள் இப்பொழுதும் மேலப்பாளையத்தில் உள்ள தவ்பா பள்ளியில் போய் வம்பு இழுத்துக் கொண்டுதானிருக்கிறார்கள். பெருநாளையொட்டி கடலூர் மவாட்டம் சிதம்பரம் ஈத்கா விஷயத்திலும் வம்பிலுக்க முயன்றார்கள். தீவிரவாதம்தான் தீர்வு என்பதில் உறுதியான கொள்கை உடையவர் ஜைனுல் ஆபிதீன்தான்.

குடும்பத்துடன் பல போராட்டங்களை நடத்தியவர்.

த.மு.மு.க. நிர்வாகத்தில் எந்த வேலையும் செய்யாமல் எனது தற்காப்புக்காக த.மு.மு.க. அமைப்பாளர் பதவியை வகித்து வந்தேன். இப்பொழுது ஆபத்து நீங்கி விட்டது என 2001லேயே த.மு.மு.க. அமைப்பாளர் பதவியை விட்டு விட்டு வனவாசம் செல்வதாக அறிவித்தவர் ஜைனுல் ஆபிதீன். இப்பொழுது ""ஆமாம் அதன் அமைப்பாளர் நான்தான்"" என விளம்பர பேட்டியில் எழுதியுள்ளார். இன்றும் அவர்தான் த.மு.மு.க. அமைப்பாளர் என்ற கனவில் இருக்கிறார் பாவம். ராஜகோபாலன் கொலை வழக்கில் தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதிலிருந்து தன்னை காத்துக் கொள்ள குணங்குடி ஹனீபாவின் த.மு.மு.க.வில் சரண்டர் ஆனவர் ஜைனுல் ஆபிதீன். இட ஒதுக்கீடுகளுக்காக குடும்பத்துடன் பல போராட்டங்களை நடத்தியவர் சிறை சென்றவர் குணங்குடி ஹனீபா. பெயரளவில் அமைப்பை வைத்திருந்ததாக எழுதி அவரையும் கொச்சைப்படுத்தியுள்ளார்.

த.மு.மு.க. தலைமையை காத்து இருந்து கருவறுத்தார்.

பதவி அரசியலில் நாட்டம் இல்லாதவர் எனவும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்கு ஆசைப்பட மாட்டேன் என்று சொல்லிக் கொண்டே ஒவ்வொரு அமைப்பிலும் இருந்தார். புதிய அமைப்பில் தலைவராக இருந்தால் அது பதவியாக இருக்காது. கடினமாக உழைத்து அதை வளர்க்க வேண்டிய பொறுப்பாக இருக்கும் பொறுப்புடன் இருந்து கடமை ஆற்றாமல் அறுவடை செய்து மட்டுமே பழக்கப்பட்டவர் ஜைனுல் ஆபிதீன். எனவே தலைவர் பதவிக்கு ஆசைப்பட மாட்டேன் என்று சொல்லிக் கொண்டே காலத்தை ஓட்டி வந்தார். த.மு.மு.க. பேரியக்கமாக வளர்ந்ததும் அதன் தலைமைப் பதவியை கைப்பற்ற முயன்றார். தஞ்சைப் பேரணிக்கு முன்பு நடந்த பொதுக்குழுவிலேயே மூக்கறுபட்டுப் போனார். தஞ்சைப் பேரணிக்கு முன் விலகினால் செல்லாக் காசு ஆகி விடுவோம் எனவே த.மு.மு.க. தலைமையை காத்து இருந்து கருவறுத்தார்.

ஜைனுல் ஆபிதீனின் சிகப்பு விளக்க ஆசை.

த.மு.மு.க.வுக்கு அரசியல் ஆசை என்றும் தனக்கு அரசியல் ஆசை இல்லை என்றும் கூறுகிறார். காங்ரஸ் கட்சியினர் ஜெய் ஹிந் என சொல்கிற மாதிரி. த.த.ஜ. எந்தக் காலத்திலும் தேர்தலில் போட்டியிடாது என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து ஒவ்வொரு கூட்டத்திலும் சொல்ல வேண்டும் என்றதற்கு மறுத்து இருக்கிறார். தலைவர் பதவிக்கு ஆசைப்பட மாட்டேன் என்று 20 வருடமாகக் கூறி வந்தவர் த.த.ஜ. தலைவராக இருந்தவரை கீழே தள்ளி விட்டு விட்டு இவர் தலைவராக ஆகி இருக்கிறார். இப்பொழுது அவரது ஒரே ஆசை தொண்டியைச் சார்ந்த த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர் அலி சிகப்பு விளக்க மின்ன பணியாற்றி வருகிறாரே. பணியாற்றும் தகுதி நமக்கு இல்லா விட்டாலும் கொஞ்ச நாளுக்கு சிகப்பு விளக்க மின்ன பவனி வர வேண்டும். இதுதான் ஜைனுல் ஆபிதீனின் சிகப்பு விளக்க ஆசை.

பேட்டி என்ற பெயரால் வெளியாகியுள்ள விளம்பரம்.

அவரது சிகப்பு விளக்க ஆசையை நிறைவேற்ற ஒரே வழி த.த.ஜ.வை தேர்தலில் போட்டியிடும் அமைப்பாக மாற்றுவதுதான். அதற்கு தடையாக இருப்பவர்கள் ரகசிய வாக்கு மூல கேஸட்களை வைத்துக் கொண்டு அவரை ஆட்டிப் படைக்கும் மேலப்பாளையம் ஷம்சுல்லுஹா, தென்காசி சுலைமான் ஆகியவர்கள்தான். எனவே அவரது ஆதரவாளர்களையெல்லாம் த.த.ஜ.வை தேர்தலில் போட்டியிடும் அமைப்பாக ஆக்க வேண்டும் என அவர்களாக சொல்வது போல் சொல்ல வைக்கும் வேலையில் முனைப்போடு ஈடுபட்டு வருகிறார் அதற்கான ஆயத்த பணிகளில் ஒன்றுதான் நீங்கள் எடுத்த பேட்டி என்ற பெயரால் வெளியாகியுள்ள விளம்பரம். பத்திரிக்கைகளில் விளம்பரம் வெளியிடுவது அவரவர் உரிமை. நீங்கள் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் Adv என போட மறந்து விட்டீர்கள். வஸ்ஸலாம்.


அன்புடன்:- கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி,
55.சமாயினா ஷேக் முஹம்மது மூப்பன் தெரு,
மேலப்பாளையம், திருநெல்வேலி, 627005.

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template