யாருக்காக கைதாகின்றார்கள்? கணவனுக்காகவா? எத்தனை போலிஸாரி்ன் கரங்கள் இம்மாதுகள் மீது பட்டிருக்கும்?
போராட்டமா? விருந்தா?
கட்டுரை ஆக்கம்: ஆமினா மைந்தன்
நமது முற்றம் ஏப்ரல் 2007.
அரசியல் கட்சிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவதற்கு தொண்டர்களை அழைப்பது வழக்கம். தடையை மீறுவதும் போலிஸாரின் தடியடிப் பிரயோகத்திற்கு பயந்து தலைதெறிக்க ஓடுவதும் அரசியலில் சகஜம்.
உண்ணாவிரதப் போராட்டமா? நடை பயணமா? ஊர்வலமா? எதற்கென்றாலும் ஓடோடி வந்து கலந்து கொள்வதற்கு வேலையில்லாத அரசியல் கட்சித் தொண்டர்கள் ஏராளமானவர்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள்.
அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட தலைவர்கள் அழைப்பு விடுத்தால்கூட போராட்டங்களில் கலந்து கொள்ள பெண்கள் யாரும் பெருமளவில் முன்வருவதில்லை.
பெண்களின் சிரமத்தை உணர்ந்து அரசியல் கட்சிகளும் ஆண் தொண்டர்களையே தங்கள் போராட்டங்களில் அதிகமாக கலந்து கொள்ள வைக்கின்றன.
ஆனால் பீ.ஜைனுல் ஆப்தீன் தலைமையிலான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், கண்டனக் கூட்டங்கள், மாநாடுகள் அனைத்திலும் ஆண்களை விட பெண்கள் கூட்டமே அதிகமாக இருக்கிறது.
சமீபத்தில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தழிழகமெங்கும் டி.என்.டி.ஜெ. ஆர்ப்பாட்டம் நடத்தியது, இதில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்.
கொளுத்தும் வெய்யிலில் கைக்குழந்தைகளை தோளில் போட்டுக் கொண்டு வீதிக்கு வந்து இந்த பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதை வேடிக்கை பார்க்க ஏகப்பட்ட கூட்டம்.
சில வருடங்களுக்கு முன்னால் வரை முஸ்லிம் பெண்கள் வெளியே வருவதே அரிதாக இருந்தது. அந்நிய ஆடவருக்கு தங்கள் முகத்தைக் காட்டவே வெட்கப்பட்ட அந்த முஸ்லிம் பெண்கள் இப்போதெல்லாம் விதவிதமான பர்தாக்களைப் போட்டுக் கொண்டு வீதிக்கு வந்து கோஷம் போடுவதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது.
அலங்கரித்த அழகிகளாக மைக்கில் கூவுவது? யாருக்காக? காமம் அலைமோதும் அந்நிய ஆடவர்களின் கண்களுக்கு விருந்தாக!!
''தர்கா விழாக்களுக்கு பெண்கள் சென்றால் அந்நிய ஆடவர்கள் அவர்களைப் பார்ப்பதற்காகவே வருவார்கள். அது கலாச்சார சீரழிவை ஏற்படுத்துகிறது, அதனால் தர்காவுக்கு பெண்கள் செல்லக்கூடாது"" என்று பிரகடனம் செய்தவர்கள் தங்கள் இயக்கத்தின் வளர்ச்சியைக் ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட பெண்களை பயன்படுத்துவது கேவலமாக இருக்கிறது.
''பெண் மறைவாக இருக்க வேண்டியவள். அவள் வெளியே வருவதை எதிர்நோக்கி ஷெய்த்தான் (அவள் வீட்டு வாசலில்) காத்துக் கொண்டிருக்கிறான். வீட்டில் இருப்பவளோ இறைக் கருணையை நெருங்கியவளாக இருக்கிறாள்"" (திர்மீதி) என்று நபிகள் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
பெண்களை வீட்டுக்கு வெளியே இழுத்து வந்து போராட்டம் நடத்த இஸ்லாம் சொல்லவில்லை. பெண்களை பாதுகாக்கும் பொறுப்பை இறைவன் ஆண்களிடம் தான் கொடுத்திருக்கிறான். ஆனால் அரசியல் லாபங்களுக்காக, தங்களுடைய சுயநலத்திற்காக முஸ்லிம் பெண்களை முச்சந்தியில் நிறுத்தி, ''இது தங்கள் இயக்கத்தின் வளர்ச்சி"" என்று மார்தட்டி சமுதாயத்தின் முகத்தில் எச்சில் துப்புகிறார்கள் சில அநியாயக்காரர்கள்.
''அலீயே! (ஒரு பெண் மீது) உமது பார்வை விழுந்த பின்னால் மீண்டும் உமது பார்வை அவளைத் தொடரக்கூடாது. முதல் பார்வை குற்றமாகாது, ஆனால் இரண்டாம் பார்வை உமக்கு ஆகுமானதல்ல!"" (திர்மீதி).
இது நபிகள் (ஸல்) அவர்களின் ஹதீஸ். ஆனால் என்ன நடக்கிறது?
பருவ வயதுப் பெண்கள், நடுத்தர வயதுப் பெண்களெல்லாம் எப்போதடா வெளியே சாடலாம் என்று காத்திருந்து, தங்கள் தலைவரிடமிருந்து அழைப்பு வந்ததும் ரோட்டுக்கு வந்து கொடி பிடிக்கின்றனர். பர்தா தங்களின் பாதுகாப்பிற்காக அல்ல, வெளியே பாய்வதற்காக என்பதை இவர்கள் நிரூபித்து வருகின்றனர்.
கணவனல்லாத ஆன்களுடன் ஒருமிக்க கலந்து...? எத்தன பேரு இடிப்பான்? எத்தன பேரு தடவி பார்ப்பான்?
அண்ணலார் பாதுகாக்கச் சொன்ன அழகுப் பெண்களின் மீது எத்தனை அழுக்குப் பார்வைகள்? வீதியில் செல்கின்ற ஆடவர் கூட்டம் கண்களை மூடிக் கொண்டா செல்கிறது? அவர்களுக்கு எந்த அரசாங்கமாவது இலவச கடிவாளம் வழங்கியிருக்கிறதா?.
பூமான் நபிகள் போற்றி வைத்த பொக்கிஷங்கள் - இன்று புழுதிப் பார்வைகளில் புரள்கிறது. அவைகளின் பொன்மேனியில் கண்டவர் கண்கள் கண்டபடி மேய்கிறது. கண்களையும் கால்களையும் பார்த்தே கற்பனையில் மிதக்கிறது. அது மட்டுமா? மறுநாள் பத்திரிக்கைகளில் பிரசுரமாகும் வண்ணப் படங்கள் வக்கணைக் கொண்டோரின் பேச்சுக்கு விருந்தாகும் அவலங்கள்.
டி.வி. நிகழ்ச்சிகளிலும் அவை காட்டப்பட்டு பலபேர் மனங்களில் மறையாத நினைவுகளை மலரச் செய்கின்ற மங்கையர் திலகங்களாக மாறியிருக்கிறார்கள். முஸ்லிம் சமுதாயத்து பெண்மணிகள்.
''இவளா? இவ நேற்று கலெக்டர் ஆபிஸ் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்ய வந்தவ! சூப்பரா இருக்கா"" என்று தனது நண்பர்களிடம் கடைவீதியில் பார்க்கும் பெண்களைப் பற்றி கமெண்ட் அடிக்கும் கயவர் கூட்டம்.
அலங்கரித்து ரோட்டில் நிற்க வைத்து கணவன் மட்டும் காணும் அழகை மற்றவருக்கும் காண செய்து மற்றவர்களை உணர்ச்சி மூட்டுவதற்காகவா? யார் பொன்டாட்டியோ? யாருடைய பார்வைக்காக?
''துலுக்கப்பயல்களெல்லாம் வெளிநாட்டில இருக்கான்,
துலுக்கச்சிகளெல்லாம் தெனவெடுத்து அலையிறாளுங்க. இவளுக எல்லாம் நமக்குத்தான் சொந்தம்"" என்று பகிரங்கமாக மேடைபோட்டு அராஜகமாக பேசும் அயோக்கியர்கள். இதற்கொல்லாம் வழிவகுத்துக் கொடுத்த சண்டாளர்கள் யார்?
''எந்த பெண்ணாவது தனது கணவருக்காக அல்லாமல் அந்நியருக்காக வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்வாளேயானால் நிச்சயமாக அது அறிவற்றதாகும். நரகத்தின் நெருப்பாகும்"";. என்பது நபிகளாரின் ஹதீஸ்.
வெளிநாட்டில் வேலைபார்க்கும் கணவன் அனுப்பித் தருகின்ற விலையுயர்ந்த வாசனைத் திரவியங்களை வீதிக்குப் போராட வருகின்ற அம்மணிகள் பீய்ச்சிக் கொண்டு வருவது யாருக்காக?
அந்நிய ஆடவர்களுடன் உடலோடு உடல் உரசி...இங்கு தக்வா வருமா? விரசம் வருமா? வெளிநாட்டில் இருக்கும் கணவன்மார்களே சிந்திப்பீர்களா?
இவர்கள் வீதிக்கு வந்து போராடவில்லையென்றால் அல்லாஹ் கோபித்துக் கொள்வானா? அல்லது இந்த பெண்களின் தலைவர் கோபித்துக் கொள்வாரா?
''அந்நிய ஆடவர் முன்னால் குரலை உயர்த்திப் பேசாதீர்கள்"" என்பது நபிகளின் கட்டளை!
குயில்கள் கூவினால் கேட்பதற்கு கசக்கவா செய்யும்?
கூடி நிற்கின்ற கூட்டத்தின் மத்தியில் அச்சம், நாணம், அடக்கம் அத்தனையும் துறந்து ஆரவாரக் கூச்சலிடுகின்ற இந்த இஸ்லாமியப் பெண்களைப் பார்த்து இபிலீஸ் சந்தோஷப்பட மாட்டானா?
கட்டாயம் சந்தோஷப்படுவான்!
இந்த பெண்களை அழைத்து வந்த இப்லீஸ்களும் சந்தோஷப்படுவார்கள். ''இவ்வளவு பெண்கள் நம் அழைப்பை ஏற்று போராட்டத்தில் கலந்துகிட்டாங்க, நம்ம வலிமையைப் பார்த்து நம்ம எதிரிங்க வயிறெறிஞ்சு போயிடுவாங்க"" என்று வக்கிர புத்தியோடு தங்கள் சுயநலவெறிக்காக முஸ்லிம் பெண்களை பயன்படுத்தி கேலப்படுத்துகின்ற அந்த இப்லீசுகளும் சந்தோஷப்படத்தான் செய்கிறார்கள்.
2003ம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்ததைக் கண்டித்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்னால் முஸ்லிம்கள் ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட அந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்து போலிஸார் தடியடி நடத்தினார்கள். ஆலிம்கள் உட்பட ஏராளமானவர்கள் தடகள பந்தயத்தில் கலந்து கொண்டவர்களைப்போல தலைதெறிக்க ஓடினார்கள். பலர் அடி பட்டார்கள், ஓட முயாமல் கீழே விழுந்தவர்களை மற்றவர்கள் மிதித்துக் கொண்டு ஓடினார்கள். ஆப்தீன் என்ற முதியவர் ஓடிவரும்போது ஒரு காரில் மோதி படுகாயம் அடைந்து சில நாட்களில் இறந்து போனார். ஆர்ப்பாட்டம் நடந்த இடம் போர்க்களமாக காட்சி தந்தது. வன்முறையில் ஈடுபட்டார்கள் என்று 80 பேர் மீது குற்றம் சுமத்தப்படடு அவர்கள் மீது வழக்கும் தொடரப்பட்டது. இன்று வரை அந்த வழக்கு முடிவுக்கு வரவில்லை.
அந்நிய ஆடவர்களோடு ஒருமிக்க கலந்து...கணவர்களோ வெளிநாட்டில்...இங்கு தவறு நிகழாது என்பதற்கு யார் உத்தரவாதம்?
இப்படிப்பட்ட ஒரு அசம்பாவிதம் இந்த பெண்கள் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டங்களில், போராட்டங்களில் ஏற்பட்டால் இந்த பெண்களின் நிலை என்னவாகும்? எத்தனை பெண்களால் ஓடமுடியும்? எத்தனை பெண்களின் முதுகில் போலிஸாரின் தடியடி விழும்? எத்தனை பெண்கள் மிதிபடுவார்கள்? எத்தனைக் கைக்குழந்தைகள் அதாபுக்கு ஆளாவார்கள்?
மூச்சுக்கு மூச்சு மற்றவர்களையெல்லாம் சிந்திக்க வேண்டாமா? சிந்திக்க வேண்டாமா? என்று கேள்வி கேட்கின்ற பைத்தியகாரர்கள் இதையெல்லாம் சிந்திக்க வேண்டாமா?
யார் அடிப்பட்டால் என்ன? யார் செத்தால் என்ன? தனக்கு பேரும் புகழும் பணமும் வரவேண்டும். தன்னைத் தவிர இந்தத் தமிழ்நாட்டில் வேறு எவனும் தலைவனாயிருக்காத நிலை வரவேண்டும் என்று நினைப்பவர்கள் எங்கே சிந்திப்பார்கள்? அப்படியே ஒரு சம்பவம் நடந்தாலும் அதையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஆதாயம் தேடும் புத்தி அவர்களுக்குண்டு.
இப்படிப்பட்ட இழிநிலை மாறாவிட்டால் தமிழ் முஸ்லிம் சமுதாயத்துப் பெண்களின் நிலை மிகமிகக் கேவலாமாகிவிடும்.
தலைவன் என்று கூறிக்கொள்ளும் எவனோ ஒருவனின் எடுப்பார் கைப்பிள்ளையாக தங்கள் வீட்டு பெண்களை விட்டுவிட்டு வெளிநாட்டில் வேலை செய்யும் முஸ்லிம் ஆண்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது.
தங்கள் மகள்களை, மனைவிகளை, சகோதரிகளை வீட்டில் மானத்தோடு வாழ வைப்பது தான் முஸ்லிம் ஆண்களின் கடமை. அதை மறந்து பெண்களை வீதியில் இறக்கி விளையாட்டுக் காட்டுவது நல்ல கலாச்சாரம் இல்லை.
ஆண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட வேண்டுமெனில் வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு தாய்நாட்டுக்கே வரவேண்டும், போராட வேண்டும். கலெக்டராகவோ, எஸ்பியாகவோ ஆக வேண்டும், தங்கள் தலைவரை முதலமைச்சராக ஆக்க வேண்டும், தங்கள் பிள்ளைகளை பிரதமராக்க வேண்டும்..
அதையெல்லாம் விட்டுவிட்டு பெண்களை வீதியில் இறக்கிப் போராட வைத்து மற்றவர்களுக்கு விருந்தாக்குவது இஸ்லாமிய நடைமுறையல்ல, நபிகளாரின் நடைமுறையுமல்ல! மனித நாகரீகமுமல்ல.
இது முழுக்க முழுக்க இறைவனுக்கு வழிகெட்ட ஷெய்த்தானுடைய நடைமுறை. மக்களை வழிகெடுத்து, கேவலப்படுத்தி, நடுத்தெருவில் நிற்க வைப்பது மட்டுமே அவனது முழுநேர வேலை.
இதைத் தலைவர்கள் உணர்ந்து தங்களைத் திருத்திக் கொள்கிறார்களோ இல்லையோ சம்பந்தப்பட்ட பெண்களின் உறவினர்கள் இந்த அபாய விளையாட்டை கை விட்டு தங்கள் பெண்களை பாதுகாத்துக் கொள்வது நல்லது.!
இஸ்லாம் முஸ்லிம்
0 மறுமொழிகள்:
Post a Comment