Wednesday, November 11, 2009
இறை இல்லம் கட்ட நிதி உதவி தேவை.
பள்ளிவாசல் கட்ட இடம் வாங்கவும்,கட்டவும் ரூபாய் 50,0000.00 என மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது, AL-MADRASATHUL DHEENIYATH ( Regd)NO.12,Halls Road, Kilpauk, CHENNAI-600010 என்ற இடத்தில் தொழுகை நடைபெற்று வருகிறது,ஆனால்- 25 நபர்கள் மட்டுமே தொழ இடம் உள்ளது,இன்ஷா அல்லாஹ் இன்னும் நிறைய மக்கள் தொழ வேண்டும் என்றால்,அதற்கு பெரிய பள்ளியாக கட்டினால் மட்டுமே முடியும்.தாராளமாக உதவுங்கள்,இன்ஷா அல்லாஹ்,அதை பன் மடங்காக்கி இம்மையிலும்,மறுமையிலும் தருவான்,ஆமீன்.
மேலும் விவரங்களுக்கு,
saibudeen 91-9841045673
kilpauk muslim welfare association
தகவல்:சைபுதீன்,அதிரை.
மேலும் விவரங்களுக்கும்,படங்களுக்கும்...........
http://peacetrain1.blogspot.com/
வாசர்களின் கேள்விகளுக்கு பதில் தருகிறார் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள்!
அரசியல்
சமுதாயம்
மனித உரிமை
தேர்தல் களம்
இஸ்லாம்
இஸ்லாமிய வங்கி
இன்னும் இத்தனைக்காலம் உங்கள் மனக்கிடங்கில் போட்டுவைத்த கேள்விகளை ask@muthupet.org க்கு அனுப்பித்தாருங்கள்.
அனுப்ப வேண்டிய கடைசித்தேதி- டிசம்பர் 05/09.
சகோதரர்களே! இணையத்தொடர்பு இல்லாத சகோதர சகோதரிகளிடமும் தகவல் கொடுத்து நீங்களே அவர்களின் கேள்வியைப்பெற்று அனுப்பித்தரலாம்!
இப்படிக்கு.
முத்துப்பேட்டை இணையதளம்
www.muthupet.org
Sunday, November 08, 2009
ததஜ வின் அழிச்சாட்டியங்களை 'அடக்கம்' செய்வோம் - தொண்டி த.மு.மு.க
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்....)
கடந்த சில தினங்களுக்கு முன்பு. ததஜ தலைவர் பீஜைனுல் ஆபிதீன், 'ஆன்லைன் பொய்யன் ஜமாத்' என்ற தனது அதிகாரப் பூர்வ இணைய தளத்தில் அப்துர் ரஹ்மானின் அறியாமை என்ற தலைப்பில் ஒரு ஆக்கம் எழுதியுள்ளார். குர்ஆன் ஹதீஸுக்கு எதிரான பீஜேயின் வழிகேட்டை எதிர்த்து அவரிடமிருந்து விலகிய அவருடைய மாணவர் அப்துர்ரஹ்மான் மன்பஈயை தனக்கே உரிய அபூஜஹ்ல் தனத்தோடு தாக்கி எழுதியிருக்கிறார்.
அதோடு தொண்டி த.மு.மு.கவையும் தவறான முறையில் விமர்சித்துள்ளார். அதற்கு தகுந்த விளக்கமளிக்கவே இதனை எழுதுகிறேன்.
'உள்ளுர் த.மு.மு.கவினர் தவ்ஹீது ஜமாஅத்துக்கு மட்டுமின்றி தவ்ஹீதுக்கும் எதிராகச் செயல்படுவது தெரிந்திருந்தும், கட்டப்பஞ்சாயத்துக்கு உள்ளுரில் பேர் பெற்ற த.மு.மு.கவில் சேர்ந்து கொண்டார். த.மு.மு.க கூட்டங்களில் நம்மைத் திட்டும் தலைப்பு இவருக்கு' இவ்வாறு கிறுக்கியுள்ளார் பீஜே.
இவருடைய மோசடி வார்த்தைப் பிரயோகத்தைக் கவனியுங்கள். 'தவ்ஹீது ஜமாஅத்துக்கு' எதிராக செயல்படுவதாக கூறுவது ஒரு பொய் என்பது ஒருபுறமிருக்க, தவ்ஹீது கொள்கை கொண்ட ஜமாத் இவர்கள் மட்டும்தான் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவது இன்னொரு பொய்.
நாங்களும் தவ்ஹீது வாதிகள்தான் இவர் முன்பு பிரிந்து வந்த ஜாக் இயக்கமும் தவ்ஹீத் கொள்கை கொண்ட ஜமாஅத்துதான். மட்டுமின்றி, பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் விபச்சாரக் குற்றச்சாட்டை கூறிக் கொண்டதால் இப்போது பிரிந்துள்ள இவரது உயிருக்குயிரான நண்பர்களின் இயக்கமும் தவ்ஹீது ஜமாஅத்துதான்.
நாங்கள் தவ்ஹீது கூட்டத்துக்கு எதிரானவர்கள் அல்ல, தருதலைக் கூட்டத்திற்கு எதிரானவர்கள்.
தவ்ஹுதுக்கு எதிரானவர்கள் என்றும் எங்களைபற்றி கிறுக்கி வைத்துள்ளார். நாங்களே தவ்ஹீதுவாதிகளாக இருக்கும் போது எப்படி தவ்ஹீதுக்கு எதிராக செயல்படுவோம். த.மு.மு.க சமூகப் பணிக்காக மட்டுமே துவக்கப்பட்ட இயக்கம். என்றாலும் தவ்ஹீதை நிலை நாட்டவும் மார்க்க அறிவை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் எங்களால் ஆன உழைப்பை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
பீஜேயும் சேர்ந்து உருவாக்கிய த.மு.மு.கவின் அமைப்பு நிர்ணயச்சட்டபடி எந்த முஸ்லிமும் இதில் உறுப்பினராக இருக்கலாம் அதன்படி மாற்றுகருத்துக்களை கொண்ட முஸ்லிம்கள் சிலர் இந்த இயக்கத்தில் உறுப்பினராக இருக்கத்தான் செய்வார்கள்.
சமுதாய நன்மைக்காக பல கருத்துள்ள முஸ்லிம்களும் ஒன்று பட்டு ஒரு இயக்கத்தில் இருப்பது தவ்ஹீதுக்கு எதிரானது அல்ல ஆனால் தொண்டி வடக்குத் தெரு மேலபள்ளிவாசலில் டி என் டி ஜே காரர் நிர்வாகியாக இருப்பது உங்கள் கொள்கைக்கும் இயக்கப் பாலிசிக்கும் எதிரானதாகும். ஷஷpர்க் செய்யக்கூடிய இமாமை வைத்து ஷஷpர்க் பாடல்பாடக்கூடிய, அதனை ஆதரிக்கக் கூடிய தலைமை நிர்வாகளைக் கொண்ட ஒரு நிர்வாகத்தில் ஒரு நிர்வாக உறுப்பினராக இருப்பதென்றால் கொள்கை என்னவாயிற்று வெட்கங் கெட்டவர்களே?
தொண்டி மேலப்பள்ளிவாசல் உங்களைப் பொறுத்தவரை ஒரு கட்டிடத்தை போல்தான் அதனால்தானே எந்த அவசியமும் இல்லாமல் அதன் எதிர்திசையில் அருகிலேயே உங்கள் ஜமாத் சார்பில் பள்ளிவாசல் கட்டுகிறீர்கள்! உங்கள் ஜமாத்துக்காரர்களை மேலப்பள்ளிவாசலில் தொழக் கூடாது எனத் தடுக்கிறீர்கள்!
பள்ளிவாசலில் ஷிர்க் நடக்கிறது. இமாம் ( உங்கள் பார்வையில் ) ஒரு முஷ்ரிக், ஜமாஅத் நிர்வாகிகளெல்லாம் முஷ்ரிக்குகள், அதில் டி என் டி ஜே காரன் ஒரு நிர்வாக உறுப்பினராக இருப்பதென்றால் உங்கள் கொள்கை என்னவானது வேடதாரி பீஜைனுலாபிதீனே!
இப்படி செய்யும் நீங்கள், அனைத்து முஸ்லிமும் பங்குபெறும் இயக்கம் என தெளிவாக அறிவித்து அறப்பணி செய்யும் த.மு.மு.கவை தவ்ஹீதுக்கு எதிராக செயல்படுதாக கூறுவதற்கு வெட்கப்பட வேண்டும்.
கட்டப்பஞ்சாயத்துக்கு உள்ளுரில் பேர் பெற்ற த.மு.மு.க என்றும் எழுதி தான் ஒரு அவதூறு பேர்வழி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் பீஜே.
இந்தப் பீஜே த.மு.மு.கவில் இருக்கும் போது செய்த நற்பணிகளை விட அதிகமாகவும் சிறப்பாகவும் தனது பணிகளை தொடர்ந்து கொண்டிருக்கிறது தொண்டி த.மு.மு.க! எல்லாப் பகுதி த.மு.மு.கவைப் போல!
மைக்கைப் பிடித்தால் ஏக வசனத்திலும் கீழ்த்தரமாகவும் ரவுடித்தனமாகவும் பேசும் உங்கள் ஜமாத் பொறுப்பாளர்கள் போன்றவர்களால் ஏற்படும் சண்டை சச்சரவுகளை நியாமான வழியில் தீர்த்து வைப்பது போன்ற சமூகச் சேவையில் தான் த.மு.மு.க ஈடுபடுமே தவிர கட்டப்பஞ்சாயத்தோ நெட்டப்பஞ்சாயத்தோ செய்வது கிடையாது.
பீஜே த.மு.மு.கவில் இருக்கும் போது யாரை விரும்பி தலைமையிலேயே வைத்திருந்தாரோ அந்த நன்னடத்தையும் தொண்டுள்ளமும் கொண்ட சகோதரர்தான் இப்போதும் தொண்டியில் எங்களை வழிநடத்துகிறார். அவரிடம் நற்பணிகளில் முன்னேற்றம் என்ற மாற்றத்தைத் தவிர வேறு மாற்றத்தை நாங்கள் காணவில்லை.
ஆனால் அலிச்சாட்டியங்களில் முன்னேறியுள்ள உங்களிடம் நிறைய மாற்றங்களை எல்லா மக்களும் கண்டு கொண்டிருக்கிறார்கள் பொய்யன் ஜமாத்தின் தலைமை குரு பீஜே அவர்களே!
த.மு.மு.க கூட்டங்களில் பீஜேயை திட்டுகிற தலைப்பு அப்துர்ரஹ்மானுக்கு கொடுக்கப்படுவதாகவும் கிறுக்கியிருக்கிறார் பீஜே.
த.மு.மு.கவின் எந்தக் கூட்டத்திலும் இவரைத் திட்டுகிற தலைப்பு யாருக்கும் கொடுக்கப்படுவதில்லை. கடந்த (2006) சட்டமன்றத் தேர்தலில் உங்களின் தவறான நிலைப்பாட்டை சரியான வழிமுறையில் விமர்சித்துப் பேசியது மட்டும் தான் அப்துர்ரஹ்மான் த.மு.மு.க மேடையில் உங்களைப் பற்றி பேசியது.
ஆனால் அதற்கு சில தினங்களுக்கு முன் நடந்த உங்கள் ஜமாத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உங்களுக்கே உரிய இழிந்த வழிமுறையில் த.மு.மு.க தலைமை நிர்வாகிகளை திட்டிப் பேசினீர்கள். உங்களிலன் மட்டரக நடத்தையை அடுத்தவர் மீது போடுவதேன்!
'கடந்த தேர்தலில் சாமியாரிடம் ஜவாஹிருல்லா ஆசி வாங்கிய பிறகும் .......' என்று பேப்பர்காரர்கள் வாந்தி எடுத்ததை திண்று மீண்டும் வாந்தி எடுத்துள்ளார் புரட்டல் மன்னன் பீஜே இந்த செய்திக்கு அப்போதே டிவியில் விளக்கமளித்து விட்டார்கள் ஜவாஹிருல்லா. தேர்தலில் ஆதரவு கேட்டுச் சென்றதை பேப்பர்காரர்கள் தங்கள் சிந்தனைப்படி அப்படி எழுதிவிட்டார்கள் என்று மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். அதை பார்க்காத மக்களிடம் தவறான செய்தியை கொண்டு செல்வதற்காக இதை எழுதியிருக்கிறார்.
கும்பிடு போட்ட தவ்ஹீது தலைவன் (?)
தவ்ஹீது கொள்கைவாதிகளின் தலைவனாக தன்னை பற்றி கற்பனை செய்து கொண்டு அலையும் பீஜே ஆட்சியாளரையும், அதிகாரியையும் சந்திக்கச் சென்ற போது கும்பிடுபோட்டவர்தான் என்ற செய்தியையும் அப்போது டிவியில் விளக்கமாக சொல்லப்பட்டது.
இவர்தான் அடுத்தவர் கொள்கை உறுதிபற்றியும் மார்க்கப் பற்று பற்றியும் அதிகப் பிரசங்கித்தனம் செய்து கொண்டு திரிகிறார்!
பொய்யன் ஜமாத் தலைவர் பீஜைனுலாபிதீன் அவர்களே உங்கள் நாவுக்கு அடக்கம் தேவைப்படுவதுபோல் உங்கள் எழுத்துக்களுக்கும் அடக்கம் தேவைப்படுகிறது. இதை புரிந்து செயல்படுங்கள்!
இல்லாவிட்டால் உங்கள் அழிச்சாட்டியங்களை அல்லாஹ்வின் உதவியோடு 'அடக்கம்' செய்யும் தொண்டி த.மு.மு.க!
எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன், அவனே சிறந்த பொறுப்பாளன்.
இவண் அஹ்மத் பாயிஸ்
தொண்டி.
Sunday, November 01, 2009
யார் பொய்களின் மொத்த உருவம்? - அப்துர்ரஹ்மான் மண்பஈ
சகோதரர் பீ.ஜைனுல் ஆபீதீன் அவர்களின் இணையதளத்தில் வெளியான தவறான தகவல்களுக்கு பதிலளித்து நான் எழுதியவற்றுக்கு அப்துர் ரஹ்மானின் அறியாமை என்ற தலைப்பில் மறுப்ப எழுதியிருக்கிறார்கள். அதில் தனக்கே உரிய பாணியில் பல பொய்களையும் சமாளிப்புகளையும் பதிய வைத்திருக்கிறார்கள்.
என் பெயரை எழுவதிலேயே பரிகாசம் செய்து அப்துர்ரஹ்மான் மண்பை என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதற்கு பதிலாக நாமும், ஜைனுல் ஆபீதீன் 'உளறி' என்று குறிப்பிடலாம், ஆனால் நாம் அவருடைய தவறான வழி முறையை தவிர்க்கிறோம்.
மாற்றுக் கருத்துடையவர்களின் கருத்துக்களை விமர்சி;க்கும் போது துவக்கத்திலேயே அபத்தமானது என்று மட்டம் தட்டுவார்கள். இதை அவரது எழுத்துக்களை படிப்பவர்கள் கவனித்திருப்பார்கள். விசயத்திற்குள் செலவதற்கு முன்பே, வாசகரின் மனதில் எதிராளியைப் பற்றி தவறான எண்ணத்தை நுழைக்கும் வேலை தான் இது, எனது நியாயமான ஆக்கம் பற்றியும் முதல் பாராவிலேயே இரண்டு தடைவை அபத்தமானது என்று குறிப்பிட்டுள்ளார்கள். அவர்களின் தவறான கருத்துக்களை சுட்டிக்காட்டுவதையெல்லாம் அபத்தமானது என்றுதான் எழுதுவார்கள்!
ஆப்துர்ரஹ்மான் அறிமுகம் என்று தலைப்பிட்டு என்னைப் பற்றிய பல தவரான தகவல்களை அள்ளி இறைத்ததுள்ளார்கள்.கடையநல்லூர் மதரசாவில் எனக்கு வேலை இல்லை என்று சொன்னதால் அவர்களுக்கு எதிராக எழுதுவதாக எழுதியிருக்கிறார்கள். இதுவே பெரிய பொய். ஏன்னை அவர்களிடம் பணியாற்றுவதற்காக எதிர்பார்த்துக்கொண்டிருக்கையில் நானாகத்தான் ஒதுங்கிக்கொண்டேன். அப்போது சில மாதம் கழித்து தொண்டியில் TNTJயின் சிலர், வேலை இல்லை என்று சொன்னதால்தான் பீ. ஜைனுல் ஆபிதீனை எதிhக்;கிறான.; என்று சொன்ன போது M.I. சுலைமானிடம், நானே நேரடியாக போனில் பேசினேன். ஆப்போது நீங்கள் என்னை ஆசிரியராகப் பணியாற்ற எதிர்பார்த்திருந்த போது நானாகத்தான் வராமல் இருந்தேன். இப்போது என்னைப் பற்றி இங்கு தவறான செய்தியைச் சொல்கிறார்களே என்று கேட்ட போது, நீங்களாகத்தான் வரவில்லை ஊரில் உங்களைப் பற்றி தவறாக பேசுபவர்கள் அவர்களாகப் பேசுகிறார்கள் என்றார்.
இப்போது இவர்கள் இப்படி எழுதியிருப்பதிலிருந்து இந்தப் பொய்யை அவிழ்த்துவிட்டது ஜெய்னுல் ஆபிதீன்தான் என்பது தெளிவாகிவிட்டது.
TNTJ யில் நான் பொறுப்பிலிருக்கும் போதே சகோதரர் அவர்களின் தவறான கருத்துக்களுக்கு மாற்று கருத்து கூறியுள்ளேன். என்பது அவர்களுக்கும் மற்ற சகோதரர்களுக்கும் தெறியும்.
கொள்கைவாதி வேலை?
ஒரு இயக்கத்தில் இணைந்திருப்பது எதற்காக? ஒரு லட்சியத்தை அடைவதற்கு சேவை செய்யத்தான். அந்த இயக்கத்தில் மிகச் சிலருக்கு வருவாய் வருகிற வேலை இருக்கலாம். வேலை இல்லை. என்று சொன்ன காரணத்துக்காக அந்த இயக்கத்தின் தலைவரின் கொள்கைகளை எதிர்ப்பது என்பது, வினோதமான அற்பத்தனம், இது நம்மிடம் இல்லை.
அவர்களிடம் இருக்கிறது என்பதற்கு அவர்களின் எழுத்துக்களே ஆதாரம், எனக்கு கொள்கையளவில் ஒத்துவரும், ஜமா அத்தில், ஒரு கொள்கைவாதி வேலை கேட்பாரா? அதுவும் அக்கொள்கையைப் போதிக்கும் மதரஸாவில் வேலை கேட்பாரா? என்று கேட்டிருக்கிறார்கள்.
நீங்கள் குறிப்பிடும் இயக்கத்திலோ வேறு எந்த இயக்கத்திலுமோ கொள்கைவாதி வேலை' என்று ஒன்று இல்லை. வருவாய்க்காக கொள்கை வாதியாக இருப்பது உங்களிடம் இருக்கிறதென்று தெரிகிறது. நீங்கள் ஒரு பெரிய அறிஞராக இருந்தும், உங்களின் குர்ஆன் ஹதீஸூக்கு எதிரான போக்கினால் மிக மோசமாக இடறி விழுகிறீர்கள். நீங்கள் குறிப்பிடும் இயக்கத்தின் மதரஸாவில் ஆசிரியராக இருக்க என்னை அழைக்கத்தான் செய்கிறார்கள்.
அரபுக்களை ஏமாற்றி பணபறிக்கும் நிறுவனம் என்று அபாண்டப் பழி போட்டுள்ளார்கள் மார்க்கப்பணி செய்கிறோம் என்று பிறரை ஏமாற்றவும், கொள்கையை விட்டுக் கொடுத்து நயவஞ்சகத்தனம் செய்யவும் வேண்டிய நிலையிருந்தால் நான் அந்த வேலையை செய்ய மாட்டேன், அல்லாஹ் அனுமதித்துல்ல எத்தனையோ, தொழில்களும,; வேலைகளும் இருக்கின்றன் அதை செய்து அல்லாஹ்வின் ரிஸ்கை தேடிக்கொண்டு என்னால் இயன்ற மார்க்கப் பணியை செய்து கொள்வேன்.
சவூதியிலிருக்கும் போதும் இந்தியா வந்த பின்பும் அப்படி நான் செயல் பட்டுள்ளேன். என்பது உங்களுக்கும் தொண்டியிலுள்ளவர்களுக்கும் தெரியும்.
ஆனால் யார் ஏய்த்துப் பிழைப்பார்?
சொந்த ஊரில் லட்சக்கணக்கில் செலவழித்துக்கட்டிய வீடு இருந்தாலும் எங்களைப் போன்றோரின் சம்பளத்தை விட கூடுதலான வாடகைக்கு வீடு எடுத்து சொகுசாக தங்கியிருப்பவரும், சொகுசு வாகனங்களில் பவனி வருபவரும், மார்க்கப்பணி செய்யக்கூடிய சகோதரர்கள் மீது அவதுறு கூறி அவர்கள் போடும் மான நஷ;ட ஈடு வழக்கை எதிர்கொண்டு பல ஆயிரங்களையோ லட்சங்களையோ செலவு செய்பவரும் தான் ஏய்த்துப்பிழைக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
இதற்கெல்லாம், தன் பேச்சில் மயங்கிய பணக்காரர்களை ஏய்த்தாக வேண்டும்.
உலக லாபத்திற்காக கொள்கையில்லாமல் செயல்படுவதாக பல தவறான தகவல்களை என் மீது அள்ளித் தெளிக்கிறார்கள் ஜைனுல் ஆபீதீன் அவர்கள்,
குர்ஆன் ஹதீஸ் என்ற பெயரில் இவர் அவிழ்த்து விடும் மார்க்க விரோதக்கருத்துக்களை எதிர்க்கும் பல பெரிய மார்க்க அறிஞர்களையும் இவ்வாறே பேசுகிறார். இது அபாண்டப் பழியும், தன் தவறுகளைகளிலிருந்து மக்கள் கவனத்தை திசை திருப்புவதற்கான தந்திரமும் ஆகும்.
முனாஃபிக் என்றும் அடிமை என்றும் அநியாயப் பழி போடுகிறார்.
தன்னிடம் இருப்பவர்கள் போல் :
இவர் தன்னிடம் இருக்கும், உலக லாபத்திற்காக முனாஃபிக் தனம் செய்யும் கும்பலை போல் மற்றவர்களையும் சித்தரிக்கிறார்.
இவரிடம் இருப்பவர்கள் பற்றி இவரே அவ்வாறு எழுதியிருக்கிறார். நடைமுறை நிகழ்வையும் ஆதாரமாகத்தருகிறேன். இவர்;கள் இப்போது முக்கிய பதவியில் வைத்துள்ள ஒருவர் துபை சென்றிருக்கும் போது அங்கிருகக்கூடிய அவருடைய வகுப்புத் தோழர் மார்க்க விரோதப் போக்குள்ள ஒரு இயக்கத்தில் நீ ஏன் இருந்து கொண்டு இருக்கிறாய் என்று கேட்டதற்கு, நான் வேறு இடத்தில் இருந்தால் இங்கு கிடைப்பது போல் கூடுதல் சம்பளம்;; கிடைக்காது என்று கூறியுள்ளார்.
மேலும் அதே நபர், தொண்டி விவாதத்திற்குப்பின் திருச்சியில் ஜூம்மா பிரசங்கத்தில், மிம்பரில் நின்று கொண்டு, முஜிபுர்ரஹ்மான் விவாத மேடையிலேயே அழுது தன் தோல்வியை ஒப்புக்கொண்டார். என்று பேசியிருக்கிறார். அதைக் கேட்ட விவாதத்தை நேரில் பார்த்த ஒருவர். விவாதத்தை நேரில்; பார்க்காத நீங்கள் சிடியில் பார்த்தீர்களா? நீங்கள் சொன்னது போல் நடக்கவில்லையே என்று சென்னதற்கு நான் சிடியை பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் பீ.ஜே.க்கு சப்போர்ட்டாகத்தான் பேசுவேன் என்று பதில் சொல்லியிருக்கிறார்.
இந்த தவறான நயவஞ்சகப்போக்கை கண்டித்து அந்த சகோதரர் ஒரு நோட்டீஸ்ஸும் வெயியிட்டிருக்கிறார்.
இதிலிருந்து காசு பணத்திற்காக நயவஞ்சகத்தோடு அடிமையாயிருக்கும் கும்பல் எங்குள்ளது என்பதை தெறிந்து கொள்ளலாம்.
தன் சகோதரி திருமணச் செலவுக்காக கூடுதலாக தேவைப்பட்ட பணம் துயுஞர் ல் கிடைக்காமல் போய் உங்களிடம் கிடைத்ததும் உங்களோடு ஒட்டிக்கொண்ட கொள்கை குன்றுகளும், பள்ளிவாசல் பணத்தை லட்சக்கணக்கில் மோசடி செய்து உங்களால் காப்பாற்றப்படக் கூடியவர்களும் உங்கள் ஜமாத்தில் மேலாண்மை செய்து கொண்டிருக்கையில், மார்க்க காரணத்திற்காக உங்களிடமிருந்து ஒதுங்கிக் கொண்ட என்னைப் போன்றவர்களை முனாபிஃக்குகள் என் கூறுகிறீர்கள்.
இது. நீங்கள் வாய் கிழிய பேசும் குர்ஆன் ஹதீஸூக்கு நீங்கள் மாறு செய்கிறீர்கள் என்பதற்கு அத்தாட்சி, 'குர்ஆன் ஹதீஸை பின்பற்றும் நல்லறிஞர்களுக்கு' இது தகுதியல்ல.
ஏன்னைப்பற்றி இன்னும் பலபொய்களை எழுதிவிட்டு தகுந்த காரணத்ததுடன் என்னை டேமேஜ் பண்ணுவதாக எழுதியிருக்கிறார்கள். பீ. ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள். இவர் மார்க்கத்திற்காக உழைக்கும் எத்தனையோ நல்லறிஞர்களையும், பிரச்சாரர்கர்களையும் இழிவு படுத்தியும் மட்டம் தட்டியும் பேசுவதையும் எழுதுவதையும் மக்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள்.
இவர்கள் நடத்திய தஞ்சாவூர் மாநாட்டில் ,இவர்களின் சத்தியமான(?) வழியிலிருந்து பணத்தாசை மற்றும் உலக ஆசாபாசங்களுக்காகவும் வழி தவறிப் போனவர்கள் என்று ஒரு நீண்ட பட்டியலை, வெளியிட்டடிருந்தார்கள். அந்த பட்டியலிலுள்ள பலர் குர்ஆன் ஹதீஸ் என்ற பெயரில் இவர் அவிழ்த்து விடும் வழிகேடுகளுக்கு ஆதரவு தெரிவிக்காதவர்கள். அது மட்டுமின்றி வெளிநாட்டிலுள்ள நல்ல மார்க்க அறிஞர்களை கூட இவரின் வழிமுறைப்படி அபாண்டமாக இழிவு படுத்தி பேசாமல் விட்டதில்லை.
இப்படியிருக்கையில் என்னைப் போன்றவர்கள் பற்றி இப்படிக் கேவலாக எழுதுவது பெரிய விசயமில்லை.
என்னை அறிமுகப்படுத்துவதாக கூறிக்கொண்டு பீ.ஜைனுலாப்தீன் அவர்கள் பொய்களை எழுதியதும் நன்மையாக முடிந்துவிட்டது.இவர் பொய்யர் என்று விமர்சிக்கபபடுவதை நம்பவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்த இவரின் புதிய நெருக்கமான உறவுகள் எல்லாம் இவர் மகா பொய்யர் என்று உறுதியாக தெறிந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்
என்னை கேவலப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு அவர் எழுதியவை அவரே கேவலப்பட காரணமாகிவிட்டது .நீங்கள் புத்திக் கூர்மையுள்ள பெரிய அறிஞர் என்றாலும் ணே;டுமென்றே தவறான போக்கை தொடர்ந்தால் அல்லாஹூத்தாலா தகுந்த நேரத்தில் சிக்க வைத்துவிடுவான் என்பதை குறிப்பாக பீ.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களுக்கும் பொதுவாக மற்றவர்களுக்கும் சொல்லிக் கொள்கிறேன்.
மார்க்க விசயத்தில் தாங்கள் புகுத்தியுள்ள தவறான கருத்துக்களை திருத்திக் கொள்ளவும.; மார்க்கப்பணியில் ஒன்றாயிருந்து பிரிந்த சகோதரர்கள் மீது தாங்கள் சுமத்தியுள்ள பழிகளுக்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்கவும் காலம் கடந்துவிடவில்லை. அல்லாஹ் விதித்த தவணை வந்துவிட்டால் காலம் கடந்ததாகிவிடும் இந்த எனது வார்த்தைகளையும் அலட்சியப்படுத்தி பரிகாசம் செய்யப்போகிறீர்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.
மக்கள் ஆடு மாடுகள் மாதிரி;
'மக்கள் ஆடு மாடுகள் மாதிரி' என்று பீ. ஜெய்னுல் ஆபிதீன் தான் கூறியதை மறைப்பதற்காக எவனோ ஒரு டிரைவர் சொன்னானாம். எனறுதிசை திருப்புகிறார்.அதோடு நாம் அப்படிச் சொலவதாகவும் பேச்சைமாற்றுகிறர்.
மக்கள் ஆடு மாடுகள் மாதிரி என்று பீ. ஜெய்னுல் ஆபிதீன் சொன்னது முன்னால் TNTJ மாநில செயலாளர் சகோதரர் கோடடூர் ரஃபீக் அவர்களின் டிரைவர் அப்பாஸ் அவர்களிடம் தான் சகோதரர் ரஃபீக் அவர்களின் உத்தரவுப்படி சில வருடங்களுக்கு முன்னால் பீ.ஜெய்னுக்காக அப்பாஸ் இரவு பகலாக வண்டி ஓட்டி இருக்கிறார்.
இதையெல்லாம் என்னிடம் தெரிவித்தது கோட்டூர் ரபீஃக் அவர்கள் தான். உங்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டவன் தான் இதையெல்லாம் சொல்லியிருப்பான் என்று எழுதியிருக்கிறீர்கள். ஆனால் கோட்டூர் ரபீஃக் அவர்கள், TNTJ தலைமையின் போக்கு சரியில்லை என்று தலைமை நிர்வாகிகளிடமே (நீங்கள் உட்பட) கடுமையாக கண்டித்துவிட்டு உங்களிடமிருந்து விலகிக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
தங்களைச் சார்ந்த மக்கள் அப்படித்தான் இருக்கிறார்கள் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கைத் தங்களுக்கு இருப்பதால் தான் எனக்கு பதில் சொல்வதாக வாதம் பதில், வாதம் பதில், என்று தலைப்பிட்டு ஏதேதோ எழுதியிருக்கிறீர்கள். விவாதத்தில், தன் தவறை ஒப்புக்கொள்ளாமல் சமாளித்துவிட்டு, விவாதத்திற்குப்பின் திருத்தியருப்பதை சுட்டிக்காட்டி பி.ஜெய்னுவின் தோல்வியை எடுத்துக்காட்டியிருந்தேன். அதற்கு பதில் சொல்லப்புகுந்த அவர், நான் மறுத்து பதில் பேசினேன் என்று ஒப்புக்கொண்டார். அதனல் நான் தோல்வி அடையவில்லை என்று வihந்திருக்கிறார்கள் பீ. ஜைனு அவர்கள்.; மறுத்ததைமட்டும் நான் சொல்லவில்லை. பீ. ஜைனு சமாளித்தார் என்றும் சொல்லியிருக்கிறேன்.
சரி, ஒருவர் விவாதத்தில் மறுத்துப்பேசி சமாளித்துவிட்டால், அவர் வென்றுவிட்டார் என்று அர்த்தமா? அப்படியானால் களியக்காவிளையில் உங்களுடன் விவாதம் நடத்திய ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி குழுவும் பதில் பேசி சமாளிக்கத்தான் செய்தது. அவர்கள் வெற்றி பெற்றவர்களா?
விவாதத்தில் அவர்கள் பேசி சமாளித்தாலும், கருத்து அடிப்படையில் அவர்கள் தோல்வி அடைந்தவர்கள். (உங்கள் தரப்பில் சில சில்லரைத்தனமான பேச்சுக்கள்குறையாக இருந்த போதிலும்) ஆனாலும் அவர்கள் விவாதம் முடிந்தபின் தாங்களே வென்றதாக வெற்றிவிழா கூட்டங்கள் நடத்திக் கொண்டு இருந்தார்கள்.
அதே போலவே தொண்டி விவாதத்தில் பேசி சமாளித்த நீங்கள் கருத்து அடிப்படையில் தோற்று இருக்கிறீர்கள். ஷேக் அப்துல்லா ஜமாலி வென்றாக ஆர்ப்பரித்தது போல் நீங்கள் பரையடித்துக் கொணடிருக்கிறீர்கள் என்று சொல்கிறேன்.
(நீங்கள் திருத்தம் செய்துள்ள பிறகும் என்னென் தவறான வியாக்கியானம் கொடுத்துக் கொணடிருக்கிறீர்கள் என்பது பற்றியும் முன்பு தில்லு முல்லு செய்த வேறு சில ஹதீஸ்களில் விவாதத்திற்குப் பின் எப்படி திருத்தம் செய்துள்ளீர்கள் என்பது பற்றியும் தனியாக எழுதுகிறேன்)
பொய்களின் மொத்த உருவம்
எனக்கு பதில் சொல்கின்ற,, என்னைப் பற்றி எழுதுகிற கட்டுரையிலேயே என் விசயத்தில் பொய்களை எழுதிவிட்டு, என்னை நோக்கி, 'பொய்களின் மொத்த உருவம்' என்று சொல்லியிருக்கிறீர்கள். இந்த விசயத்தில் உங்களின் அபார துணிச்சல் கண்டு ஆச்சரியப்படுகிறேன். கோயபல்ஸ்ஸயே மிஞ்சிவிட்டீர்கள்.
இந்த துணிச்சலால்தான் சிடியை எடிட்செய்துவிட்டு வீராப்பு பேசிக் கொண்டு இருக்கிறீர்கள். ஆனாலும் பதில் எட்டு என்று எழுதியுள்ளவற்றி;ல் நீங்கள் சிடியை எடிட் செய்துள்ளதை ஒப்புக் கொள்வது தெளிவாக தெரிகிறது.
ஏன்னைப்பற்றி என்னிடமே மகா பொய்களை அவிழ்த்துவிடும் நீங்கள் முஜிபுர்ரஹ்மானின் பொய் பித்தலாட்டங்களை பட்டியலிடப்போவதாக மிரட்டியிருக்கிறீர்கள். ஏன்னைப்பற்றி என்னிடமே பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடும் நீங்கள் அடுத்தவர் பற்றி இன்னும் அதிகமாக அவிழ்த்துவிட முடியும்! ஒரு வேளை முஜிபுர்hஹ்மான் பித்தலாட்டம் செய்தால் அவரையும் கண்டிக்கவும் இயன்றால் தண்டிக்கவும் செய்வேன் ஏனென்றால் எனக்கு அதிக அன்புக்கும் மரியாதைக்கும் உரியவராயிருந்த உங்களை மார்கத்தில் தாங்கள் செய்யும் தில்லு முல்லு, கருத்து வேறுபாடு கொண்டவர்கள் மீது தாங்கள் பழிபோட்டு பேசுவது போன்ற காரணங்களால்த்தான் எதிர்க்கத் துணிந்தேன்.
உங்களை எஜமானர்களாக கருதுபவர்கள் உங்கள் தவறுகளை நியாயப்படுத்தி பேசும் நிலையில் இருக்கிறார்கள். ஏன்னையும் அது போல் அடிமையாக சித்ததரித்து இருக்கிறீர்கள்;.
ஜமாத் பொறுப்பாளர்கள்
உங்கள் பொறுப்பாளர்களின் முறையற்ற நடைமுறையை நான் குறை கூறியிருந்ததை மறுத்து அவர்களின் முரட்டுத்தனத்தை நியாயப்படுத்தியிருக்கிறீர்கள். அமைதியாக பேசவிட்டிருந்தால் உண்மைகள் வெளிபட்டிருக்கும் என்று குறிப்பிட்டிருந்தேன். அதை அப்போது நீங்களும் விரும்பவில்லை என்று தெரிகிறது.
விவாதத்திற்கு பணம் செலவழித்ததால் கோபப்பட்டு முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக சொல்கிறீர்கள் .பீ.ஜெய்னுலாபிதீன் மலேசியாவில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நலமாக திருப்பி அனுப்பப்பட்டது தெரிநந்தும் வரவேற்க தனி வண்டி எடுத்து ஒன்பதாயிரம் ரூபாய்க்கு மேல்செலவு செய்து ஏறத்தாழ ஐநூறு கிலோமீட்டர் பயணம் சென்று, பணத்தை கணக்குப்பார்த்து அக்கரையோடு(?) செலவழித்த பொறுப்பாளர்கள் அல்லவா? அவர்கள் (இதை உங்கள் ஜமாஅத் முன்னால் மாவட்ட பொறுப்பாளர் சொன்னார்.) உங்கள் கட்டு உரைப்படி விவாதத்தில் தோல்வி அடைந்து கண்ணீர் வடித்து அழுத ஒருவருடன் பேச இன்னொரு முறை பணத்தை செலவழிகத்தான் அந்த முரட்டுத்தனமா?
முஜிபு ஓடி ஒளிவதாக எழுதியுள்ளீர்கள். தொண்டி விவாதத்திற்கு முன் நீங்கள் ஓடி ஒளிந்து கொண்டிருந்தீர்கள். இப்போது அவர் ஓடி ஒளிவதாக எழுதியிருக்கிறீர்கள்.எனக்கு உங்களைப்போன்று கட்டு உரைகளெல்லாம் தொகுக்க தெரியாது. நானறிந்து அவர் கலந்துரையாடலுக்கு தயாராகவே இருந்தார். நான் உங்களுக்கு நினைவு திரும்பியது பற்றி எழுதிய ஆக்கத்திலேயே நீங்கள் அழைக்கும் போது என்ன பேச திட்டமிட்டிருந்தார் என்று எழுதியிருந்தேன்.
முன்பு நினைவு திரும்பிய ஜெய்னுல் ஆபிதீன் என்று நான் தலைப்பிட்டிருந்ததற்குக் காரணம், நீங்கள் சொகுசு காரில் செல்வதை விட்:டு சொகுசு பஸ்ஸில் பயணிப்பதற்கு நின்ற நேரத்தில் முஜிபுர்ரஹ்மான் உங்களை எதார்த்தமாக சந்தித்த போது அப்துர்ரஹ்மான் எஸ்.பி. பட்டிணம் பள்ளி பற்றி நோடடீஸ் வெளியிட்டதால் தான் இப்போது தாக்கி எழுதுவதாக கூறியிருக்கிறீர்கள். அதனால் தான் அந்த தலைப்பு வந்தது.
நான் எழுதுவதற்கு பதில் எழுவதற்காக காத்துக்கொண்டிருப்பதாக மார்தட்டியிருக்கிறீர்கள், உண்மைதான் கருத்து வேறுபாடு கொண்ட சகோதரர்கள் மீது பழிபோட்டு எழுதுவதும் கேவலமான வார்த்தைகளாலும் இழிந்த நடையாலும் பரிகாசம் செய்து மட்டம் தட்டி பேசுவதும் எழுதுவதும் உங்களுக்கு கை வந்த கலை.
ஏன்னைப் பற்றி நீங்கள் கூறும் தவறான விமர்சனங்களுக்கு பதில் அளித்தாலும் அளிக்காவிட்டாலும் நீங்கள் மார்க்க விசயத்தில் செய்துள்ள, செய்துகொண்டிருக்கிற தவறுகளை அடையாளம் காட்டி எழுதுவதை நிறுத்தப்போவதில்லைஇன்ஷா அல்லாஹ்.
நான் கூலிக்கு மாரடிப்பதாகவும் --- உங்களுடன் இருப்பவர்களைப்போல --- அந்த வேலை இல்லாமல் போய்விடும் என்றும் கடைசியாக எச்சரிக்கும் விதத்தில் எழுதியுள்ளீர்கள். அல்லாஹ்வின் கிருபையால் நான் கூலிக்கு மாரடிப்பவனில்லை. தொண்டியில் எனது சிறு பணிகளால் குர்ஆன் ஹதீஸ் பேசும் உங்களை போன்ற வழிதவறியவர்கள் பற்றி மக்கள் நன்கு அறிந்து கொண்டார்கள். இங்கும் பணி தொடர்வதோடு தலைநகரம் வந்து பணி செய்யவும் திட்டமிட்டிருக்கிறேன். அங்கு அந்தப்பணி தொடரும். (இன்ஷா அல்லாஹ்) எதிர் பாருங்கள்.
எனக்கும் மற்றவர்களுக்கும் நான் நினைவூட்டும் அல்லாஹ்வின் வசனம்: 'ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள் .ஒவ்வொருவரும் நாளை (மறுமை)க்காக எதனை முற்படுத்தி வைக்கிறார். என்பதை கவனித்துப்பார்க்கவும்:' (59:18)
Saturday, October 17, 2009
மீண்டும் பெண் சாமியார் பிரக்யா சிங்கின் தீவிரவாதம்!! கோவா குண்டு வெடிப்பு

கோவாவில் பனாஜி அருகே மார்கோ நகரில் கிரேஸ் சர்ச் உள்ளது. இந்த சர்ச் அருகே நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் இருந்த வெடிமருந்து பொருள் வெடித்தது. இந்த சம்பவத்தில் சனாதன் சன்ஸ்தா என்ற இந்து அமைப்பை சேர்ந்த மெல்குண்டா பாட்டீல் பலியானார். யோகேஷ் நாய்க் என்பவர் படுகாயம் அடைந்தார். வெடிமருந்து பொருள் வெடித்ததில் மூன்று வாகனங்கள் எரிந்து சாம்பலாயின.
மும்பை மாலேகான் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்குரின் சனாதன் சன்ஸ்தா அமைப்புடன் இந்த இருவரும் சம்பந்தப்பட்டவர்கள், என போலீசார் தெரிவிக்கின்றனர். ஸ்கூட்டரின் உரிமையாளர் நிஷாத் பாக்லே என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நடந்த 20 கிலோ மீட்டர் தூரத்தில் மின் ஒயர்கள் சுற்றப்பட்ட பையையும் போலீசார் கண்டெடுத்துள்ளனர். மார்கோ பகுதி, கோவா முதல்வர் திகம்பர் காமத்தின் தொகுதி என்பதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு :
1) பி.ஜே.பி நடத்தும் தொடர் குண்டுவெடிப்புகள் - IIPONLINE.ORG
2) மாலேகான் குண்டுவெடிப்பும் இந்து பயங்கரவாதிகளும்
3) மாலேகான் குண்டுவெடிப்பு: இந்து அமைப்பே காரணம்
Thursday, October 15, 2009
லால்பேட்டை நன்நகருக்கு தாய்ச் சபை தலைவர்கள் வருகை!!
ஆம்! தமிழகத்தின் தலை சிறந்த கல்லுரியாக விளங்கும் ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரி விழாவில் துவங்கும் முஸ்லிம் லீக் தலைவர்களின் பங்கேற்ப்பு மாலையில் கொடியேற்றத்தைத் தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் நிறைவடையும்.இந்த இனிய வறலாறு இன்றும் நிகழப் போகிறது.
ஆம்! இன்ஷா அல்லாஹ் அக்டோபர் 18- ம் தேதி காலை லால்பேட்டை முஸ்லிம் பட்டதாரிகள் கல்விச் சங்கம் தோற்றுவித்த வறலாற்றுச் சிறப்பு மிக்க,(இன்ஷா அல்லாஹ் விரைவில் கல்லூரியாக மிளிரப் போகின்ற) இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முப்பெரும் விழாவிலும்,மாலையில் தாய்ச் சபை முஸ்லிம் லீகின் மாபெரும் பொதுக் கூட்டம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளிலும் பங்கேற்க்க இருக்கிறார்கள்.
பள்ளி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க்கும் தாய்ச் சபை முஸ்லிம் லீகின் பாராளுமன்ற உருப்பினரும், அனைத்துலக காயிதே மில்லத் பேரவையின் அமைப்பாளர்,
அல்லாஹ்விற்க்கு பிடித்தமான பெயரை வைத்துக் கொண்டதாலோ என்னவோ,எல்லோருக்கும் பிடித்துப் போனவர்.
வேட்பாளர் விமர்ச்சனத்தின் போது முஸ்லிம் லீக் தலைவர்கள் காட்டிச் சென்ற லட்சியப் பாதையில்தான் பயணிப்பேன் என்று சொல்லி விமர்ச்சனத்திற்க்கு வேட்டு வைத்தவர்.
தமிழக முஸ்லிம்களின் தேசிய பிரதிநிதி,இவர் பங்கெடுக்கும் எந்த நிகழ்விலும் முஸ்லிம் லீகை பதிய வைக்காமல் இருந்ததில்லை.மொத்தத்தில் முஸ்லிம் லீகின் சொத்தாகத் திகழக் கூடியவர் அத்தகைய பெருமைக் குரியவர் கண்ணியத்தின் வழி வந்த நம்மவர் தாஜுல் மில்லத் அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான்.M.A.M.P.
மாணவர் அணிக்கு மகுடமாய் மிளிர்ந்த மாண்பாளர்,தான் கால் பதித்த அயல் தேசங்களிலெல்லாம் தாய்ச் சபையை தடம் பதிக்கச் செய்தவர்,சிராஜுல் மில்லத்தோடு வலம் வந்தவர் முனீருல் மில்லத்தோடு களம் காணுபவர்.தமிழக முஸ்லிம் லீக் வரலாற்றில் தனி முத்திரையாக மாநில பொதுச் செயளாலர் பொறுப்பை தன் தூய தொண்டால் தொட்டவர்.இவரே இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ் நாடு மாநில பொதுச் செயளாலர் ஹாஜி K.A.M. முஹம்மது அபூபக்கர் B.Sc., .
சமுதாயம் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் ,அவைகளை சில வார்த்தைகளில் சிறப்பாக முடிக்கும் ஆற்றல் பெற்றவர்,காரியம் பெரிதா?வீரியம் பெரிதா? என்ற கேள்வியை முன் வைத்து,இன்றைய இளைஞர்கள் வீரியத்தின் நிலையை வெகுவாக விரும்பினாலும் பல அமைப்புக்களுக்குச் சென்றாலும்முஸ்லிம் லீக்கிற்க்கு காரியம் தான் பெரிது என்று கம்பீரமாக சொல்லக்கூடிய முஸ்லிம் லீகின் துடிப்பு மிக்க சட்ட மன்ற உறுப்பினர்,மாநில அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆம்பூர் H. அப்துல் பாஸித் M.L.A.
அரசியலில் நீ தனித்தவன் அல்ல ,தனித்தன்மை வாய்ந்தவன் என்று முழங்கிய சிராஜுல் மில்லத்தின் சொந்தங்கள், திருப்பு முனைக்கு புதிய வடிவம் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்திய முஸ்லிம்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்வது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தான் என்று முழங்கி வரும் முனீருல் மில்லத்தின் தொண்டர்கள்.
ஆக இம்மூவரும் தாய்ச் சபை முஸ்லிம் லீகின் தலமை நிர்வாகிகள் இவர்கள் கண்ணியத்தின் பிறப்பிடத்திலிருந்து வந்தவர்கள்.இவர்களின் உரையை லால்பேட்டை மட்டும் தான் கேட்க போகிறது என்ற எண்ணத்தில் இருந்த எங்களுக்கு ஒரு இனிப்பான செய்தி.
ஆம்! மாவட்டம் முழுவதிலுமிருந்தும் மட்டுமின்றி அருகில் உள்ள விழுப்புரம்,நாகை,திருவாரூர்,பாண்டிச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் திரளானவர்கள் பங்கேற்க்கத் தயாராகிக் கொண்டிருக்கிரார்கள் என்ற இனிய செய்தி கடல் கடந்து வாழும் எங்களின் கல்புக்கு மகிழ்ச்சியளிக்கிறது அல்ஹம்துலில்லாஹ்!
இனிய இதயங்களே! முஸ்லிம் லீகைச் சார்ந்த பெருமக்கள் எதைத்தான் சொல்லுகிறார்கள்?எந்தப் பாதையில் செல்லுகிறார்கள்,அந்தப் பாதை வெல்லும் பாதைதானா? என்பதை முடிவெடுக்க தாங்கள் அனைவரும் பங்கெடுக்க வேண்டுமென உரிமையோடும்,உள்ளன்போடும் கேட்டுக் கொள்கிறோம்.
மாறா அன்புடன்,
ஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத் பேரவை லால்பேட்டை நண்பர்கள்.
Tuesday, October 13, 2009
இட்டுக்கட்டக்கூடிய அறிவிப்பாளர் பி.ஜே யா?
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
முஜிபுர்ரஹ்மான் உமரியுடன் விவாதம் செய்வது சம்மந்தமாக மூன்று மாதங்களுக்குப் பின் பீ. ஜைய்னுல் ஆபிதீன் அவர்களுக்கு ‘நினைவு’ திரும்பியுள்ளது. (எஸ்.பி.பட்டிணம் பள்ளிவாசல் தொடர்பான என்னுடைய நோட்டீஸைப் பார்த்திராவிட்டால் இன்னும் நினைவு திரும்பிஇருக்காது போலும்)
நினைவு திரும்பி, ‘முக்கிய அறிவிப்புகள்’ என்று தலைப்பிட்டு முஜிபுர்ரஹ்மான் உமரி கலந்துறையாடலுக்கு வராமல் ஓடுகிறார் என்றும், இன்னொரு தலைப்பிட்டு அதில் முஜிபுர்ரஹ்மான் உமரியை நேருக்கு நேர் சந்தித்த செய்தியையும் அப்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சியை இனைத்தும் சில செய்திகளை பீ. ஜைய்னுல் ஆபிதீன் எழுதியிருக்கிறார்.
மாய்ந்து மாய்ந்து அவர் எழுதியருப்பதில் முக்கிய பாயிண்ட் என்னவென்றால், ‘கடந்த மார்ச் மாதம் பீ. ஜைய்னுலாபிதீனின் தர்ஜமா தவறுகள் தொடர்பான விவாதத்தில் ஜைனுலாப்தீன் வென்றார் முஜிபுர்ரஹ்மான் தோற்றார். அதனால் அடுத்த கலந்துரையாடல்களுக்கு முஜிபுர்ரஹ்மான் பயப்படுகிறார்’ இது தான் அவர் முக்கியமாக வைப்பது.
தோல்வி அடைந்தது பீ. ஜைனுல் ஆபிதீன்-தான்:
அவர் தோற்றதற்கு தெளிவான ஆதாரத்தைத் தருகிறோம். அதை மூளை சரியாக வேலை செய்யக்கூடிய, சிந்திக்கின்ற ஆற்றல் உள்ள தமிழ் படிக்கத்தெறிந்த எல்லோரும் இலகுவாக அறிந்து கொள்ளலாம்.
முஜிபுர்ரஹ்மான் எடுத்துவைத்த பீஜேவின் தவறுகளில் முக்கியமான ஒன்று, ‘திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு’ என்ற தலைப்பில் பீ.ஜைனுல் ஆபிதீன் தன் கருத்தைப் புகுத்துவதற்காக ஹதீஸில் இடைச்செறுகள் செய்துள்ளது பற்றியதாகும்.
அதாவது ஒவ்வொரு வருடமும் ஜிப்ரீல் (அலை) வந்து நபியுடன் குர்ஆனை ஓதி செல்வது பற்றிய ஹதீஸில், “அந்த வருடத்தில் அருளப்பட்ட வசனங்களை திரும்ப” என்று எழுதி, அந்த வருடத்தில் என்ற வாசகத்தை செறுகி இருக்கிறார்.
இது, அவர் பின்னால் சொல்லப்போகிற ஒரு கருத்தை முன் கூட்டியே படிப்பவர்கள் மனதில் பதியவைப்பதற்காக செய்துள்ள காரியம் எனபதனால் இது ஹதீஸில் செய்கிற தில்லு முல்லு என்ற ரீதியில் முஜிபுர்ரஹ்மான் தனது வாதத்தை வைத்தார்.
ஆனால் ஜைனுல் ஆபிதீன் இதனை மறுத்தார். விவாதத்தில் ஓன்றுக்கு மேற்பட்ட சுற்றுக்கள் இது பற்றி பேசப்பட்ட போதும், தான் தவறு செய்யவில்லை என்றும் தான் எழுதியது சரிதான் என்று சமாளித்தார்.
ஆனால் விவாதத்திற்குப் பின் வெளியிட்டுள்ள தனது தர்ஜமாவின் எட்டாவது பதிப்பில், முஜிபுர்ரஹ்மான் தவறானது என்று நிரூபித்த வாசகத்தை பீ ஜைனுல் ஆபிதீன் நீக்கியுள்ளார். இங்கே முக்கியமாக ஒன்றைக் குறிபிட்டாக வேண்டும். இதே தவறை விவாதத்தில் சுட்டிக்காட்டும் போது அந்த நேரத்திலும் பிடிவாதமாக மறுத்தார். விவாதத்தின் இறுதி உரையிலும் முஜிபுர்ரஹ்மான் ஒரு தவறையும் எடுத்து வைத்து நிரூபிக்கவில்லை என்றும் இவர் கூறும் தவறு எதுவும் தவறு இல்லை என்றும் திமிராக பேசினார்.
இங்கே விவாதத்திற்கு முன்பு இருந்த பாதிப்புகளில் இடைச்செறுகலான வாசகம் இடம் பெற்று இருப்பதையும் விவாதத்திற்கு பின்பு அது நீக்கப்பட்டிருப்பதையும் தருகிறோம்.-பீ.ஜைனுல் ஆபிதீனின் தர்ஜமாவில் ‘திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு’ தலைப்பின் கீழ் ஏழாம் பதிப்பிலும் அதற்கு முந்திய பதிப்புகளிலும் இடம் பெற்றதாவது
அதாவது விவாதத்துக்குமுன்:இது தவிர ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு முறை ஜிப்ரீல் என்ற வானவர் வந்து அந்த வருடத்தில் அருளப்பட்ட வசனங்களைத் திரும்ப நினைவுப்படுத்தி முறைப்படுத்தி வரிசைப்படுத்திச் செல்வார்.
(பக்கம்:35-36 ஏழாம் பதிப்பு)
பெரிதாகப் பார்க்க, படத்தின் மீது சொடுக்கவும்


விவாதத்திற்குப் பின் இது தவிர ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு முறை ஜிப்ரில் என்ற வானவர் வந்து அருளப்பட்ட வசனங்களை திரும்ப நினைவு படுத்தி முறைப்படுத்தி வரிசைப்படுத்திச் செல்வார். (பக்கம் 41, எட்டாவது பதிப்பு, ஆகஸ்ட் 2009)
பெரிதாகப் பார்க்க, படத்தின் மீது சொடுக்கவும்

முந்தைய பதிப்புகளில் ‘அந்த வருடத்தில்’ என்று செறுகியிருந்த வாசகத்தை விவாதத்திற்குப் பின் நீக்கியுள்ளார்.
இந்த வாசகத்தின் விபரீதத்ததை புரியாதவர்கள் இதிலென்ன பெரிய தவறு வந்துவிடப்போகிறது என்று நினைக்கலாம். இதற்கு ஒரு சில பக்கங்களுக்குப் பின் குர்ஆனின் சூராக்களின் வரிசை நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்பட்டதல்ல என்ற கருத்தை பீ. ஜைனுல் ஆபிதீன் தேர்ந்தெடுத்துள்ளார். அந்த கருத்தை முன்பே வாசகர்களின் மனதில் போடுவதற்காக மேற்கண்ட ஹதீஸூக்கு மாற்றமான செய்தியை அதற்குள் லாவகமாக இடைச் செறுகல் செய்துள்ளார்.
ஹதீஸ் வாய்வழியாக அறிவிக்கப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில் இந்த ஜைனுல் ஆபிதீன் அவர்கள் வாழ்ந்திருந்தால் ஹதீஸ் கலை அறிஞ்ர்கள அவரை இட்டுக்கட்டக்கூடிய அறிவிப்பாளர் என்று அறிவித்திருப்பார்கள்.
தான் எழுதியது சரி தான் என்று விவாதத்தில் வைத்து சமாளித்ததுக்கொண்டிருந்தவர் இதனை நீக்கியிருக்கிறார். நீக்கியபின், முஜிபுர்ரஹ்மான் அது எப்படி இருக்கவேண்டுமென்று சொன்னாரோ அப்படியே வந்திருக்கிறது. (இன்னும் பல திருத்தங்கள் உள்ளன நாம் பின்பு மக்களுக்கு எடுத்துவைப்போம் இன்ஷா அல்லாஹ்) ஆனாலும் தானே ஜெயித்தாக பரையடித்ததுக்கொண்டிருக்கிறார் சகோதரர் பீ.ஜைனுல் ஆபிதீன் விவாதத்தில் தோற்றவர்தான் தனது தோல்வியையும் பலவீனமான வாதத்தையும், விதண்டாவாதத்தையும், மறைப்பதற்காக சீடியை எடிட் செய்து வெளியிடுவார். ஆகவே விவாத சீடியை எடிட் செய்து வெளியிட்ட சகோதரர் பீ.ஜைனுல் ஆபிதீன் மேற்படி விவாதத்தில் தோற்றவர் என்பது நிரூபனமாகிவிட்டது.
ஆனாலும் அவர் துணிச்சலாக, தான் வென்றதாக எழுதிக்கொண்டும் எதிராளியை மட்டம் தட்டி பரிகாசம் செய்து கொண்டும் இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் என்ன?
அதற்குக் காரணம் மக்களை (அதாவது அவரது இது போன்ற பேச்சுக்களையும் எழுத்துக்களையும் நம்பும் மக்களை) அவர் ஆடு மாடுகள் போல் கருதுவதால்தான், இதை நாமாகச் சொல்லவில்லை. அவர் வாயினாலேயே சொன்னது!
TNTJ உருவாக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் அதன் மாநிலச்செயலாளராயிருந்த ஒரு சகோதரர் அப்போது நடந்த (சகோதர இயக்கத்துக்கெதிரான) வன்முறை சம்பவத்தில் சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்படுகிறார்.
அது பற்றி பேசுவதற்காக, பீ ஜைனுல் ஆபிதீனுக்கு போன் செய்த அந்த சகோதரரின் டிரைவர் (இவர் மார்க்கப் பிரச்சாரத்தில் ஈடுபாடுள்ளவர்) இப்போது நடக்கும் சம்பவங்களால் மக்களிடத்திலே தவ்ஹீத்துக்குப் பின்னடைவு ஏற்பட்டுவிடுமே என்ற கவலையை தெரிவித்துள்ளார். அதற்கு பீ.ஜைனுலாபிதீன் சொன்ன பதில்:
‘மக்கள் என்பது ஆடு மாடுகள் மாதிரி , சீக்கிரமே மறந்து
விடுவார்கள்.
ஆக இவரை நம்பும் TNTJ காரர்களை இவர் இப்படித்தான் வைத்திருக்கிறார். இவர் நிலையை தெரிந்து கொண்ட எங்களைப்போல் பலர் அவரிடமிருந்து விலகிக் கொண்டோம். இவ்வளவும் தெரிந்த பின்னும் அவருக்கு ஆதரவாளர்களாயிருக்கும் சகோதரர்கள் சற்று யோசிக்க வேண்டும். இன்னும் எவ்வளவு காலம் ஆடு மாடுகள் மாதிரி இருக்கப்போகிறீர்கள்? ஜைனுல் ஆபிதீனிடம்!
அவர் இவ்வாறு கருதும் மக்களை –குறிப்பாக TNTJ-யிலுள்ள மக்களை ஏமாற்றுவதற்கு முஜிபுர்ரஹ்மான் உமரீயுடன் கலந்துரையாடல் நடக்காதது குறித்து தவறான தகவல்களை அள்ளிக் கொட்டியுள்ளார். ஆடு, மாடுகள் மாதிரியில்லாத மனிதர்களுக்கு அது குறித்து சுருக்கமான தெளிவைத் தருகிறோம்.
பீ. ஜைனுல்ஆபீதீனீன் தர்ஜூமா தவறுகளின் விவாத முடிவில், மற்ற தலைப்புகளை கலந்துரையாடலாக வைத்துக் கொள்ளும்படி ஜாக் மதுரை மாவட்டத் தலைவர் இமாம் ஹூசைன் கேட்டுக் கொண்டதனால் கலந்துரையாடலுக்கு தாம் ஒப்புக் கொண்டதாக எழுதி தவறான செய்தியை தருகிறார். உண்மையில் கலந்துரையாடலாக வைத்துக் கொள்ளலாம் என்று ஆரம்பித்ததே ஜைனுல் ஆபிதீன்தான்.
அடுத்த மூன்று தலைப்பு விவாதங்கள் பற்றி மேடையில் இருந்நதவர்கள் ஆலோசனை செய்த போது ஒரே நாளில் மூன்று விவாதங்களையும் வைத்துக் கொள்ளலாம். என்று நான் கூறினேன். அதை இமாம் ஹூசைன் ஜைனுலாபீதீன் அவர்களிடம் சொன்ன போது, ஒரு நாளா? போதாது அப்படியென்றால் கலந்துரையாடலாக வைத்துக் கொள்ளலாம், என்று முதலவாதாக கூறியது ஜைனுலாபிதீதான் அதனை முஜீபுர்ரஹ்மானிடம் இமாம் ஹூசைன் எடுத்துக்கூறிய போது அவரும் ஒப்புக்கொண்டார்.
இதுவெல்லாம் சிடியில் பதிவாகியிருந்தும் அதை மட்டும் துண்டித்திருக்கிறார். பிறரை மட்டம் தட்டுவதற்காக இவர் கையாளும் இழிந்த தந்திரங்களில் இது முதலாவது அல்ல என்பது ஆடு, மாடுகள் போல் இல்லாத மக்களுக்கும் தெரியும்.
முஜிபுர்ரஹ்மான் உமரீ ஓடி ஒளிவதாகவும் அவர் மீது பரிதாபப்பட்டு தான் மவுனம் காத்ததாகவும் பி.ஜைனுலாபிதீன் கதைத்திருக்கிறார். ‘வாக்களித்த காலம் முடிந்து மாதங்கள் பல ஓடிவிட்டன. தொடர்ந்து ஓட்டம் பிடிக்கிறார். என்று எழுதிய ஜைனுலாபிதீனுக்கு நாம கூறுகிறோம் வாக்களித்த காலம் முடிந்தவுடன் உடனடியாக நேரில் அவரிடம் ஆள் அனுப்பிக்கேட்கவில்லை. விருதுநகரில் அவர் இருக்கும் பகுதியில் தான் TNTJ மாவட்டச் செயலாளாரும் நகர நிர்வாகிகளும் இருக்கிறார்கள். அல்லது நேரடியாக தபால் எழுதியும் கேட்க வில்லை. நாம் இதில் தொடர்ந்து தலையிட மறுத்து நேரடியாக பேசிக்கொள்ளட்டும் என்று ஒதுங்கிய பின் மேற்கண்டவாறு பீ ஜைனுல் ஆபிதீன் செய்திருந்தால் இப்போது அவர் கதைப்பது உண்மையாக இருந்திருக்கும். ஆனால் நேரடியாக தனது கட்சி பொறுப்பாளரை அனுப்பி பேசுவதற்கோ அல்லது தபால் மூலம் தொடர்பு கொள்ளவோ பயந்தார் ஜைனுலாப்தீன். ஏனென்றால் அப்படிச் செய்திருந்தால், விவாத சி.டி.யில் பல இடங்களில் எடிட் மோசடி செய்து வெளியிட்டது அதைப்பற்றி முஜிபுர்ரஹ்மான் கேள்வி எழுப்புவார் தான் அவமானப்பட வேண்டியது வரும் என்ற பயத்தினாலேயே மவுனம் காத்தார்.
ஆனால் முஜிபுர்ரஹ்மான் உமரீ மீது பரிதாபப்பட்டு மவுனம் காத்ததாக சொல்லி இவர் ஆடு மாடுகளாக கருதும் மக்களின் காதுகளில் பூ சுற்றுகிறார்.
யாருக்கு பரிதாபப்படுகிறாராம் இவர்? இவரது கருத்துப்படிதவ்ஹீதுக்கு எதிராக பிரச்சாரம் செய்யக்கூடிய, பணத்துக்காக சத்தியக் கொள்கையிலிருந்து வழி கெட்டுக்குபோய் அந்த வழிகேட்டைப் பிரச்சாரம் செய்யக்கூடிய, இவரது தர்ஜமாவில் தவறே இல்லாதவற்றை தவறென்று கூறிய, தவ்ஹூதுக்கு எதிராக சதி செய்யக்கூடிய, இஸ்லாத்தின் அடிப்படைகளிலேயே மாற்றம் செய்துவிட்ட ஜாக் இயக்கத்தினரோடு சேர்ந்து கொண்டு மார்க்கத்தில் குழப்பம் செய்யும் ஒருவரை மார்க்க அடிப்படையில் எதிர்கொண்டு அடையாளம் காட்டாமல் பரிதாபப்பட்டு சும்மா இருந்நதாராம். இதை நம்புபவர் ஆடு மாடுகளைப் போன்றவர்கள் அல்ல, ஆடுமாடுகளாகத்தான் இருக்க முடியும்!
முஜிபுர்ரஹ்மானிடம் விவாதம் குறித்துப் பேச நாம் மேற்குறிப்பிட்ட இலகுவான வழிகள் இருக்கும் போது குப்பை, குப்பை என பிதற்றிக்கொண்டு டாட்காம்களுக்கும் சவால் விடுகிறார் என்றால் இதன் மூலம் ‘இவரைத் தெரிந்துக் கொள்ளுங்கள்!’
கடந்த 25.9.2009 அன்று முஜிபுர்ரஹ்மான் உமரீ தொண்டியில் பீஜே அவர்களை எதார்த்தமாக கண்டபோது தானே சென்று , ஸலாம் சொல்லி கைகுலுக்கியதை இவர்களாக வலுக்கட்டாயமாக அவரிடம் போய் பேசியதாக திசை திருப்பியிருக்கிறார்.
அதோடு அப்போது நடந்த பேச்சுக்களையும், நிகழ்வுகளையும் பதிவு செய்து அதிகார பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டிருக்கிறார். (அதிலும் கட்டிங்)
அதை வெளியிட்டதும் மிகுந்த நன்மையாக போய் விட்டது. பீ. ஜைனுலாபிதீன் அவர்கள் தன் ஆதரவாளர்களை ஆடு மாடுகளை மாதிரி கருதி வைத்திருக்கிறார். என்பது அவரே சொன்னது. அதன் உதாரண நிகழ்வுதான் அந்த பதிவில் நாம் காண்பது.
முஜீபும் பீ.ஜைனும் லாபிதீனும் உரையாடியதை சற்று நேரம் அமைதியாக தொடரவிட்டிருந்தால், சில உண்மைகள் வெளிப்பட்டிருக்கும், ஆனால் அதற்கு வாய்ப்பளிக்காமல், இருவரும் பேசுவதை குழப்பும் விதத்தில் சுற்றி நின்றவர்களில், பீ.ஜைனுவால் ஆடு மாடுகள் மாதிரி என்று சரியாக கணிக்கப்பட்டவர்கள், இடையிலே தாங்கள் சொல்வதையே திரும்பத்திரும்ப சொல்லி கூச்சல் குழப்பம் செய்வதை நாம் பார்க்கிறோம்.
மரியாதையான வார்த்தைகளால் பேச்சு நடந்து கொண்டிருக்கும் போது, தரக்குறைவான வார்த்தைகளை – வேண்டுமென்றே இடையில் புகுந்து பேசி அதை சண்டையாக மாற்றும் ததஜ ஜமாஅத் பொறுப்பாளர்களையும் அந்தப் பதிவில் பார்க்கிறோம்.
பேச்சு நாகரீகமும், மரியாதையும் ஒழுங்கும் அறியாத முரடர்கள் தான், ததஜ ஜமாஅத்தின் பொறுப்பாளர்கள் என்பதால் அந்த ஜமாஅத்தின் தரம் பற்றி முடிவு செய்வது மக்களுக்கு எளிதாகி விட்டது.
பீ.ஜைனுல் ஆபிதீன் பெரிய அறிவாளி, புத்திசாலி, மனோநிலை அறிந்து பேசுபவர் என்பது எல்லோருக்கும் தெரியும், அதன்படி தன் ஆதரவாளர்களைப்பற்றி ஆடுமாடுகள் மாதிரி என்று அவர் கூறியதற்கு சரியான எடுத்துக்காட்டாக இப்போது தனது இணைய தளத்தில் வெளியிட்ட – முஜிபுர்ரஹ்மானுடன் சச்சரவு செய்த – வீடியோ காட்சிகள் உள்ளன.
ஆகவே, அதை அவசியம் பார்க்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் வைக்கிறோம்! அதை நீண்ட நாட்களுக்கு வைத்திருக்குமாறு ஆன்லைன் பீஜே இணைய தளத்தைக் கேட்டுக் கொள்கிறோம்.
தவறுகளுக்கு தண்டனை கொடுக்காமல் அல்லாஹ் விட்டு வைத்திருப்பதை தவறாக பயன்படுத்தி மேலும் மேலும் தவறுகள் செய்து, தங்களை கூடுதல் அழிவுக்கு ஆளாக்கிக் கொள்கிறார்கள் வழிகேடர்கள்.
அத்தகையவர்களின் வழிமுறையில் தொடர்ந்து செயல்படாமல், வருந்தி திருந்துங்கள் என்று பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.
எனக்கும் மற்றவர்களுக்கும் நான் நினைவுபடுத்தும் இறை வசனம் :
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
ஈமான் கொணடவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள், மேலும், ஒவ்வொருவரும் (மறுமை) நாளுக்காக தான் முற்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்துக் கொள்ளட்டும், இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள், நீங்கள் செய்பவற்றை, நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன். (59:18)
- M. அப்துர் ரஹ்மான் மன்பஈ
நன்றி : இஸ்லாம் கல்வி
Saturday, October 10, 2009
சவுதி தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மரணம்
நம்முடைய நெருங்கிய நண்பரும், சவுதி தமிழ்ச் சங்கத்தின் தலைவருமான ஜனாப். அப்துல் மாலிக் அவர்கள், இன்று மதியம் 4: 45 மனி அளவில், ஜெத்தாவில், மாரடைப்பினால் மரணமடந்த செய்தியினை, ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்கிறோம். (إنا لله وإنا إليه راجعون ) .
அவருடைய குடும்பத்தினர் அனைவரும் அவருடன் ஜெத்தாவில் வசித்து வருகின்றனர்.
அன்னாருடைய மறைவினைத் தாங்கும் மன உறுதியினை அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நல்கிட, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.
அவருடைய பிழைகளை மன்னித்து அவருக்கு சொர்க்கத்தில் உயர்ந்த பதவிகளை அருளிட எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரம் ஏந்தி பிரார்த்திப்போமாக!
ஆழ்ந்த வருத்தத்துடன்,
செயளர்
ரியாத் தமிழ்ச் சங்கம்
