Monday, February 17, 2014

முகவையில் இசுலாமியர்கள் மீது காவல்துறை கடும் தாக்குதல்



இந்திய சனநாயக நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு சனநாயக ரீதியாக எமது சகோதர இயக்கம் நடத்திய பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் பேரணியில் திட்டமிட்டு உட்புகுந்து கலவரத்தை ஏற்படுத்தும் நோக்குடன் செயல்பட்ட விசமிகளை கைது செய்யாமல் பேரணியில் கலந்து கொண்ட ஒட்டு மொத்த சனத்திரள் மீதும் தனது வக்கிரமான கோரத்தாக்குதலை நடத்திய காவல்துறையின் செயல் வண்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த கொடூர தடியடி பிரயோகத்தில் காயமடைந்தவர்கள் பெரும்பாலானோர் பெண்களும், முதியவர்களும், குழந்தைகளும் என்பது இன்னும் கவலையளிக்க கூடிய விசயமாகும்.

நாம் இந்திய சனநாயக நாட்டில்தான் வாழ்கின்றோமா அல்லது ஏதாவது காட்டாட்சியின் கீழ் வாழ்கின்றோமா என்ற சந்தேகம் எம்முள் எழுந்துள்ளது. இந்திய தேசியத்தில் சிறுபான்மையினரின் மீதான அரசபயங்கரவாதத்தின் கோர அடையாளங்களில் இதுவும் ஒன்றாக இன்று பதிந்துள்ளது. இதன் மூலம் சிறுபான்மை இன மக்கள் இந்த அரசின் மீதான நம்பிக்கையின்மையின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்பது நிதர்சனமான உண்மை.






எது எப்படியாக இருந்தாலும் எம் சமுதாயத்தின் மீதான இந்த அரச பயங்கரவாதம் என்பது எத்தகைய முறையிலும் ஏற்றுக்கொள் இயலாதது. வரும் தேர்தல் களத்தில் இதற்கான பதிலை எம் மக்கள் எதிரொலிப்பார்கள் என்று நம்புகிறோம்.

நாங்கள் எம் முன்னோர் மூட்டிய சுதந்திர யாகத்தில் பிறந்த அக்கிணி குஞ்சுகள்...எம் மீதான தாக்குதலை கொண்டு எம்மை அடக்கி ஆளலாம் என்று நினைத்தால் அது நடக்காது.....வல்ல இறைவனை தவிர வேறு யாருக்கும் அஞ்சிடவோ ...அடி பனிந்திடவோ மாட்டோம் நாங்கள்....!!

இந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பரப்பப்படும் வதநதிகளை யாரும் நம்ப வேண்டாம். யாருடைய உயிருக்கும் எந்த ஆபத்துமில்லை. காயமடைந்தவர்களில் பெரும்பகுதியினர் சிகிச்சை முடித்துவிட்டனர். பெருங்காயமுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. களத்தில் நயவஞ்சகர்களை தவிர அனைத்து அமைப்பினரும் ஒற்றுமையுடன் செயல்பட்டுக்கொண்டுள்ளனர்.
https://www.facebook.com/raisudeen/posts/10152585169128154?notif_t=like

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template