மக்களாட்சியில் மக்களின் மத நம்பிக்கை முக்கியமற்றது. அவர்கள் எந்த மதத்தை பின்பற்றுபவர்களாகவும் இருக்கலாம். மத நம்பிக்கை இல்லாதவர்களாகவும் இருக்கலாம். இருப்பினும் அவர்கள் தங்களை மதச் சார்பற்ற முறையில் நிர்வகித்துக் கொள்ளலாம் என்பது சமூக ஜனநாயகம் பற்றி பேசும் இவர்களுக்கு மக்களாட்சி என்றால் சமத்துவம் என்பது தெறியாது. அதனால் சமத்துவம் இவர்களுக்கு ஒவ்வாது. இவர்களுக்கு தங்கள் அமைப்பில் இல்லாதோர் தங்கள் அமைப்பினருக்கு சமமானவர்கள் அல்ல. முஸ்லிம்கள் கூட தங்களுக்குள் அனைவரும் சமமானவர்கள் இல்லை என்ற பாசிச சித்தாந்தத்தின் உறு உள்ளது.
பாசிசம் (fascism) என்பது ஒரு சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தால் சர்வாதிகார முறையில் பொருளாதார மற்றும் மற்றைய விடயங்கள் தீர்மானிக்கப்படுவதையே குறிக்கும்.தனிமனித உரிமைகளை நாட்டு நலனுக்காக, வல்லமைக்காக எனக் கூறி மதிக்காமல் அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை அடக்குமுறைகள் மற்றும் வன்முறை மூலம் நசுக்குகின்ற அரசியல் நடைமுறையே பாசிசம் எனப்படும்.
மேலே உள்ளதை அப்படியே சற்று மாற்றி "பாசிசம் (fascism) என்பது ஒரு சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தால் சர்வாதிகார முறையில் பொருளாதார மற்றும் மற்றைய விடயங்கள் தீர்மானிக்கப்படுவதையே குறிக்கும்.தனிமனித உரிமைகளை அமைப்பின் நலனுக்காக, வல்லமைக்காக எனக் கூறி மதிக்காமல் அமைப்புக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை அடக்குமுறைகள் மற்றும் வன்முறை மூலம் நசுக்குகின்ற அரசியல் நடைமுறையே பாசிசம் எனப்படும்" என வாசித்து பாருங்களேன்.
The New Dictionary of Cultural Literacy, (Third Edition. 2002) என்ற புத்தகத்தில் பாசிஸ்ட்டுகளை பற்றி கூறும்போது “பொதுவாக, பாசிச அரசுகள் ஒரு சர்வாதிகாரியின் அதிகாரத்தில் இருக்கும். இவர் பொதுவாக கவர்ச்சியான தோற்றத்தையும், பகட்டான சீருடைகளையும் கொண்டிருப்பார். இவர் தனது தொண்டர்களை பிரமாண்டமான பேரணிகள் மூலமும், தேசியத்தைப் பற்றிய கூச்சலான கோஷங்களுடனும் ஒன்று திரட்டுவார். அன்னியர்களைப் பற்றியும் தங்களுக்குள் உள்ள ‘அசுத்த’ மான மக்களைப் (ஜெர்மனியின் யூதர்கள்) பற்றியும் சந்தேகத்தையும் வெறுப்பையும் வளர்ப்பார்.”
மேலே உள்ள இந்த கருத்தாக்கத்தை அப்படியே சமீபத்தில் ஒரு அமைப்பு நடத்திய பகட்டான் சீருடை அணிவகுப்புடன் ஒப்பிட்டு பாருங்கள் யார் பாசிஸ்ட்டுகள் என்பதும் எனது சந்தேகம் சரியானதுதான் என்பதும் உங்களுக்கு புறியும்.
இறுதியாக பாசிசம் என்பது இந்துக்களுக்கும் மட்டுமோ அல்லது யூத கிருத்துவ மக்களுக்கு மட்டுமானதல்ல காவல்துறையும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரும் , இஸ்ரேலிய யூத பயங்கரவாதிகளும் மட்டும் பாசிசம் இருப்பதில்லை இசுலாமியர்களிளும் பாசிச கருத்தியலுடன் கூடிய அமைப்புகள் இருக்கலாம் என்பதுடன் பாசிசத்திற்கு எதிராள களமாடி பாசிசத்தை அழிக்க புறப்பட்டவர்கள் தங்களையும் அந்த சித்தாந்தத்திற்குள் ஆட்படுத்தி தாங்களும் நவீன பாசிஸ்ட்டுகளாக மாறியது மட்டும் நிதர்சனமான உண்மை.
- அன்புடன்
முகவைத்தமிழன் (எ) ரைசுதீன்
அலைபேசி 9047507665
0 மறுமொழிகள்:
Post a Comment