பால்வாடிப் பள்ளியில் பாடம் பயின்றவன் நான்
மூக்கில் சீல் வடிய துள்ளி விளையாடியவன் நான் முதல் வகுப்பு பாடத்தை கைப்பிடித்து சொல்லித் தந்த
கருப்பையா மாஸ்டரும்,கோவிந்தராஜ் மாஸ்டரும்
என்ன சாதி என்ன மதம்..
ஐந்தாம் வகுப்பு பாடத்தை அன்போடு சொல்லித் தந்த
குழந்தை தெரசா டீச்சர் என்ன சாதி என்ன மதம்
பிராமண நண்பனின் வீட்டில் தயிர் சாதமும்,
தலித் நண்பனின் வீட்டில் பழைய சாதமும்
கிறிஸ்தவ நண்பனின் வீட்டில் மீன் சாதமும்
பண்போடு உண்ட நாட்கள் அது..
இதுவெல்லாம் நடந்தது இந்தியாவில்தான்
இந்தோனேசியாவில் அல்ல...
இதுவெல்லாம் நடந்தது இந்தியாவில்தான்
பாகிஸ்தானில் அல்ல.. -- காலச் சக்கரம் சுழல்கிறது
எங்கோ ஓர் இடத்தில் எவனோ ஓர் சுயநலக்காரனால்
குண்டு வெடிக்கிறது ....
பிராமண நண்பன் இந்தியனாகிறான் --
தலித் நண்பன் இந்தியனாகிறான் ---
கிறிஸ்த்தவ நண்பன் இந்தியனாகிறான் --- இந்த நாட்டில்
நான் மட்டும் தீவிரவாதியாகிறேன்.........இது நியாயமா?????????????
நன்றி : Niroz Khan
0 மறுமொழிகள்:
Post a Comment