Sunday, November 03, 2013

ரைசுதீன் விபச்சார புரோக்கரா - ஜீனியா் விகடன்

வி.ஐ.பி-களை காப்பாற்ற பேரம் பேசுகிறதா காவல்துறை?திருவனந்தபுரத்தில் ஒரு சிறுமியைப் பாலியல் தொழிலில் பந்திவைத்த அதிர்ச்சியே தீராத நிலையில்... தமிழகத்திலும் ஒரு கொடுமை அம்பலம் ஆகியுள்ளது! மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே வாகைக் குளத்தைச் சேர்ந்த  ஈஸ்வரிக்கு (பெயர் மாற்றப்பட்டுள் ளது) 14 வயதில்  திருமணம் நடந்தது. மண வாழ்வுக்கான பக்குவம் அடையாத நிலை யில், அந்த உறவு முறிந்தது. அதன் பிறகு ஜவுளிக் கடை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார், ஈஸ்வரி.

ஒரு நாள், வேலை முடித்து வீடு திரும்பக் காத்திருந்த ஈஸ்வரியை, அவருடன் வேலை பார்த்த தோழி ஒருவரின் தாய் ஆசை வார்த்தை காட்டி அழைத்துச் சென் றார். பாலியல் தொழிலில் தள்ளினார். அதைத் தொடர்ந்து பல்வேறு ஊர்களில் உள்ள புரோக்கர்களின் கைகளில் சிக்கிய ஈஸ்வரி, கடந்த இரண்டு ஆண்டுகளாக பலரால் சீரழிக்கப்பட்டார். ஈஸ்வரியின் குழந்தைப் பாங்கான தோற்றம் மற்றும் வயதைக் காட்டி, ஒவ்வொரு கஸ்டமரிடமும் 'ஃப்ரெஷ் பீஸ்’ என்று சொல்லியே கொள்ளைப் பணம் கறந்துள்ளனர் புரோக்கர்கள். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று, ஈஸ்வரியை ரைசுதீன் என்பவர் மீட்டு, ராமநாதபுரம் போலீஸாரிடம் ஒப்படைத்தார்.

போலீஸாரது விசாரணையில் தென்மாவட்டங்களில் உள்ள பல முக்கியப் பிரமுகர்கள் ஈஸ்வரியை சிதைத்தது தெரியவந்துள்ளன. இதில், மதுரை புரோக்கர்கள் மற்றும் ராமேஸ்வரம் நகராட்சி சேர்மன் ஜலீல் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது!ஈஸ்வரியை போலீஸாரிடம் அழைத்துவந்த ரைசுதீனிடம் பேசினோம். ''கடந்த சனிக் கிழமை ஈஸ்வரியை புரோக்கர் கள் செல்வியும், ருக்மணியும் ராமநாதபுரத்துக்குக் கூட்டிவந்து, பாரதிநகரில் அழகு நிலையம் நடத்தி வரும் ஒரு பெண்ணிடம் ஒப்படைத்தனர். அமுதா என்பவ ரின் வீட்டில் இதற்கான டீலிங் நடக்க... ஈஸ்வரி மைனர் பெண் என அமுதாவுக்குத் தெரியவந்துள்ளது. உடனே, ஈஸ்வரியை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அமுதா கூட்டிப் போய்விட்டார். ஆனால், அங்கிருந்த போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் துரத்திவிட்டார்கள். இதன் பிறகு ஈஸ்வரியை அமுதா, தன்னுடன் அழைத்துப் போய்விட்டார். இதனால் கடுப்பான செல்வி குரூப் வாகைக்குளம் சென்று, ஈஸ்வரியின் தாயிடம், 'உன் மகளை ராமநாதபுரத்தில் பிடிச்சு வெச்சிருக்காங்க. அவளை வெளிநாட்டுக்கு அனுப்பிடுவாங்க. நீங்க வந்தா, விட்டுருவாங்க’ன்னு சொல்லி இருக்காங்க. கடந்த ஒரு வருஷமா ஈஸ்வரி பத்தின தகவல் எதுவும் தெரியாம இருந்த அந்தம்மாவும் இவங்களோட ராமநாதபுரம் வந்து... அமுதா வீட்டுக்குப் போய், தன் மகளின் நிலையைப் பார்த்து அதிர்ச்சி ஆயிட்டாங்க. ஈஸ்வரியை அவங்க அம்மாவோட அனுப்ப அமுதா ஏற்பாடு செய்ய... இதற்கு எதிர்ப்பு தெரிவிச்சு, செல்வி தரப்பினர் தகராறு செய்தனர். அந்த நேரத்தில் ஈஸ்வரி அருகில் இருந்த தொண்டு நிறுவனத்துக்குள் ஓடி வந்து விட்டார்.. அங்கிருந்த நான், ஈஸ்வரியை விசாரிச்சப்பதான்மொத்தக் கொடுமையும் தெரிஞ்சது.

இது பத்தி தென்மண்டல ஐ.ஜி. பொறுப்பு வகிக்கும் கண்ணப்பன் சாரிடம் சொன்னேன். ஈஸ்வரியை ராமநாதபுரம் எஸ்.பி. ஆபீஸில் ஒப்படைக்கச் சொன்னார். போகும் வழியில், புரோக்கர் கும்பல் வழி மறிச்சுத் தகராறு செய்ய... ஈஸ்வரியை என் வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்டேன். அதன் பிறகு அந்த புரோக்கர்கள் மதுரையில் உள்ள ரவுடிகள் மூலமாக என்னை மிரட்டினாங்க. அதுக்கெல்லாம் பயப் படாம மறுநாள், எஸ்.பி. ஆபீஸ்ல ஈஸ்வரியை ஒப்படைச்சேன்!'' என்று சொன்னார்.இந்த வழக்குத் தொடர்பாக நம்மிடம் பேசிய காவலர் ஒருவர், ''ராமநாதபுரத்திலும், ராமேஸ்வரத்திலும் விபசாரம் தடை இன்றி நடக்கிறது. எங்காளுங்க கண்டுக்கறதில்லை. இந்தப் பொண்ணை ஏற்கெனவே பல முறை ராமநாதபுரத்துக்குக் கூட்டிட்டு வந்திருக்காங்க. பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் உள்ள ஒரு லாட்ஜ் மற்றும் இறந்துபோன அ.தி.மு.க. பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான லாட்ஜ், இந்த ரெண்டு இடங்களிலும் வெச்சு ஈஸ்வரியைப் பல பேர் பாழாக்கியிருக்காங்க. அந்த லாட்ஜின் உரிமையாளர்கள், உள்ளூரில் நிதி நிறுவனம் நடத்தி வரும் ஒருவர், கட்சிக்காரர்கள் சிலர், காவல் துறையைச் சேர்ந்த இருவர் மற்றும் அரசு அலுவலகங் களில் பணியாற்றும் சிலர் என ஏராளமான பேர் இதில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர, சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் ஓனர் ஒருவரும் சென்னைக்கு அழைத்து, தன் சொகுசு பங்களாவில் வைத்து ஈஸ்வரியை சீரழித்துள்ளார். இதே போல்தான் ராமேஸ்வரம் சேர்மன் ஜலீலும் கொடைக்கானலுக்கு அழைத்துச் சென்று அனுபவித்து இருக்கிறார். விசாரணையின்போது, இவர்களின் பெயர்களை அந்தப் பெண்ணே சொல்லுச்சு. ஆனால் சில அதிகாரிகள், ஜலீல் உள்ளிட்ட சிலரை மட்டுமே இந்த வழக்கில் சேர்த்துவிட்டு, ஈஸ்வரியால் குற்றஞ்சாட்டப்படும் பல வி.ஐ.பி-களை வழக்கில் சேர்க்காமல் இருக்க பேரம் பேசி வருகின்றனர்!'' என்று சொல்லி, அதிரவைத்தார்.

ராமநாதபுரம் எஸ்.பி-யான அனில்குமார் கிரியிடம் இதுபற்றிக் கேட்டபோது, ''ஈஸ்வரி கேஸ் சம்பந்தமா எஃப்.ஐ.ஆர். போட்டுருக்கோம். குற்றவாளிகளைப் பிடிக்க மூன்று ஸ்பெஷல் டீம் போட்டிருக்கோம்...'' என்று மட்டும் சொன்னார்.

இந்த வழக்கில் காவல் துறை மந்தமாகச் செயல்படுவதாக ரைசுதீன் புகார் செய்யவே, அவரையும் இந்த வழக்கில் சம்பந்தம் இருப்பதாகச் சொல்லிக் கைது செய்து இருக்கிறார்கள்.என்னதான் நடக்கிறது என்பதை மேலிடம் கவனமாக விசாரிக்க வேண்டும்.

- இரா.மோகன், படங்கள்: உ.பாண்டி


ரைசுதீனை கைது செய்துவிட்டு அவதுாறு பரப்பிய காவல்துறை

Aadil1 Years ago
மிருகங்களை தூக்கில் போட வேண்டும் உடனடியாக விசாரணை ஏதும் இல்லாமல். இந்த சிறுமியை வைத்து அடையாளாம் காட்டச் சொல்லி அனைவரையும் கூண்டோடு தூக்கிலிடவேண்டும்.
Reply Like | Report AbuseHari Sankar1 Years ago
புரோக்கர் பெண்கள் என்று அடையாளம் காட்டப்படுபவர்கள் கைதாகி விட்டனரா? அவர்களைப் பிடித்து நாடு கடத்துங்கள்!!!! இது போன்ற ஒவ்வொரு கேஸிலும்... ஒன்றிரண்டு அல்லக்கைகள் தண்டிக்கப் பட்டால், நாளடைவில் நாடு முன்னேறும்..... இல்லாவிட்டால்.... ஆட்கள் மாறுவார்கள்... காட்சி மாறாது......
Reply Like 2 | Report Abuse


Senthil1 Years ago
இன்டர் நேஷனல் சட்டமே வந்தாலும் காசு வாங்கிகொண்டு சிறுமிகளை காவு கொடுப்பார்கள் நம் அரசியல்வாதிகள்
Reply Like | Report Abuse


jaya1 Years ago
""ஈஸ்வரியை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அமுதா கூட்டிப் போய்விட்டார். ஆனால், அங்கிருந்த போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் துரத்திவிட்டார்கள்"" Immediately enquire and suspend them...Innocnets going police station finally..but that time also,they are not getting help..Stupid officers..

Reply Like 2 | Report Abuse


usha1 Years ago
பால் காந்தி சார் அந்த சட்டம் வந்தாலும்,இவர்கள் என்ன மாட்டவா போகிறார்கள்..அந்த 14வயது குழந்தை பட்டிருக்கும் உடல்ரீதியான துன்பத்தை நினைத்தால் ,மனம் ரணமாக உள்ளது.
Reply Like 1 | Report Abuse


usha1 Years ago

ரைசுதீனை கைது செய்துள்ளதில் இருந்தே தெரியவில்லையா காவல்துறை எப்படி செயல்படுகிறது என்று,வெறுப்பாக உள்ளது.

Reply Like 2 | Report Abuse


Rajendran1 Years ago

"இந்த வழக்கில் காவல் துறை மந்தமாகச் செயல்படுவதாக ரைசுதீன் புகார் செய்யவே, அவரையும் இந்த வழக்கில் சம்பந்தம் இருப்பதாகச் சொல்லிக் கைது செய்து இருக்கிறார்கள்."
இனிமே யாராவது எதுக்காவது புகார் கொடுத்தா அந்த வழக்கில் புகார் கொடுத்தவரையும் கைது செய்யுங்கப்பா. விளங்கிரும்.
Reply Like 1 | Report Abuse


Tamil1 Years ago
இவ்வாறே தினமும் பல சிறுமிகள் சீரழிக்கப்பட்டு வருகிறார்கள்.. இதை தடுக்க கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் அரசு...
Reply Like | Report Abuse


Murugesan1 Years ago
What is action from Girls parent side. They are first criminal. why they didn't search girl past 2 years???
Reply Like 1 | Report Abuse


Padmanabhan1 Years ago
ப்ரொக்கர்கள் செல்வி, ருக்மணி மட்றும் சேர்மன் ஜலீல் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் காவல்துரை கருப்பு ஆடுகள் அனைவரையும் மொத்தமாக கைது செய்து கடுங்காவல் சிறையில் இருபது ஆண்டுகள் வைத்து முறைப்படி விசாரணை செய்து தண்டணை அளிக்கவேண்டும்.
Reply Like 1 | Report Abuse


சித்திர குப்தன்1 Years ago
பாவம் ரைசுதீன், மக்கள் அவர் பக்கம் நிற்க வேண்டும். அவரைக் கைது செய்த காவல் துறை மீது துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Reply Like 4 | Report Abuse


raju1 Years ago
ரைசுதின் என்ன ஷெயிதார்?
Reply Like | Report Abuse


Pal Gandhi1 Years ago
சிறுமிகளை கடத்தி பாலியில் தொழில் செய்தால் தூக்கு தண்டனை என்று சொல்லுகிறார்கள். இன்னும் இந்த இன்டர் நேஷனல் சட்டம் இந்தியா வரவில்லையா?


நன்றி : ஜீனியர் விகடன் : http://www.vikatan.com/article.php?mid=2&sid=247&aid=8947

முகவைத்தமிழன், ரைசுதீன், முகம்மது ரைசுதீன், ரைஸீதீன், ரயீசுதீன், விபச்சாரம், முகவை, இராமநாதபுரம்,

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template