Wednesday, April 09, 2008

இலங்கை மூதூர் றிஷானா நஃபீக் - வழக்கு மறுவிசாரனை

இலங்கையின் மூதூர்ப்பகுதியைச் சேர்ந்த ஏழை முஸ்லிம் பெண்,19 வயதான றிஷானா நபீக் என்பவர், தனது பாதுகாப்பில் இருந்த நான்கு மாதக் குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு சவூதி அரேபியாவில் மரண தண்டனை அளிக்கப்பட்டு இந்த விசயம் உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது நாம் அனைவரும் அறிந்த விசயம். இது குறித்து நமது வலைப்பதிவிலும் SRILANKA முஸ்லிம் பென்னை மரணத்திலிருந்து காப்பாற்றுங்கள் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

உலகெங்கும் உள்ள மக்களும், மனித உரிமை அமைப்புகளும் கொடுத்த பாரிய அழுத்தத்தின் காரனமாக இந்த வழக்கை சவுதி அரேபியாவின் அரசாங்கம் திரும்ப விசாரிக்க உத்தரவிட்டு மீண்டும் எந்த நீதி மன்றத்தில் ரிஸானா நஃபீக்கிற்கு மரன தண்டனை விதிக்கப்பட்டதோ அங்கே மறு விசாரனைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
நேற்று 08-04-2008 அன்று இந்த வழக்கின் விசாரனையின் போது கைகளில் விலங்கிடப்பட்டு இஸ்லாமிய உடையான பர்தா அனிந்த நிலையில் ரிஸானா நஃபீக் நீதி மன்றத்தில் உயர் நீதிபதி திரு. அப்துல்லாஹ் அப்துல் அஜீஸ் அல் ரொசைமி முன் முன்னிலைப்படுத்தப்பட்டார். உயர் நீதிபதி திரு. அப்துல்லாஹ் அப்துல் அஜீஸ் அல் ரொசைமி அவர்கள் தனது உத்தரவில் இந்த வழக்கு சம்பந்தமான அனைத்து எதிர்ப்புக்களும் சுப்ரீம் ஜீடிசியல் கவுன்சில் என்ற அமைப்பின் முன்பாகவே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
ரிஸானா நஃபீக்கின் வழக்குறைஞர் திரு. கதாதிப் ஃபஹத் அல் ஷம்மேரி தெறிவிக்கையில், இந்த வழக்கை மீண்டும் மறு விசாரனைக்காக பழைய இடத்திற்கே (எங்கே தண்டனை வழங்கப்பட்டதோ) அனுப்பியிருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது என்றார்.

சவுதி அரேபியாவின் அப்பீல் கோர்ட்டால் ரிஸானா நஃபீக்கின் தண்டனை உறுதி செய்யப்பட்ட பிறகு சவுதி அரேபியாவின் உச்ச நீதி மன்றம் இந்த வழக்கை எடுத்து மறு விசாரனக்கு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய இந்த விசாரனையின் போது ரிஸானா நஃபீக்கால் கொல்லப்பட்டதாக (குழந்தை கொல்லப்பட்டதற்கான எந்த ஆதாரங்களுமோ அல்லது, பிரேத பரிசோதனை அறிக்கையோ ஒன்றும் இது வரை இந்த வழக்கில் சமர்ப்பிக்கப்படவில்லை வெறும் வாதங்களின் அடிப்படையிலேயே இந்த வழக்கில் ரிஸானா நஃபீக்கிற்கு தண்டனை அளிக்கப்பட்டது குழந்தை பால் குடிக்கும்போது பொறையேறி மூச்சு தினறி இறந்ததாகவே கூறப்படுகின்றது) கூறப்ப்படும் குழந்தையின் தந்தையான திரு. நாயிப் ஜிஸியான் கலப் அல் ஒத்தைபி என்பவரும் உடணிருந்தார்.

தவாத்மியின் பள்ளிவாசல் ஒன்றில் பணியாற்றும் இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த தமிழ் பேசக்கூடியவரான ஃபவ்சுல் ரஹ்மான் எனபவர்தான் இந்த விசாரனையின் போது ரிஸானா நஃபீக்கின் மொழி பெயர்ப்பாளராக சேவையாற்றினார்.

இவ்வழக்கின் ஆரம்பத்தில் ரிஸானா நஃபீக்கிற்கு மொழிபெயர்பாளராக பணியாற்றிய ஒருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் தண்டனை வழங்கப்பட்டிருந்தது. நேற்று அந்த பழைய மொழிபெயர்ப்பாளரையும் கோர்ட்டில் ஆஜராக அழைத்திருந்தும் அவர் விசாரனைக்கு வரவில்லை. இந்நிலையில் இதை நீதி மன்ற அவமதிப்பாக கருதி அவர் மீது நடடிவடிக்கைக்கு நீதி மன்றம் உத்தரவிடுமா என்பது தெறியவில்லை. ரிஸானா நஃபீக்கிற்கு மொழி பெயர்ப்பாளராக இருந்த பெயர் குறிப்பிடப்படாத இந்த நபர்தான் ரிஸானா நஃபீக் கொலையை ஒப்புக்கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.இவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் ரிஸானா நஃபீக்கிற்கு மரன தண்டனை வழங்கப்பட்டிருந்தது. தற்சமயம் தவாத்மியின் பள்ளிவாசல் ஒன்றில் பணியாற்றும் இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த தமிழ் பேசக்கூடியவரான ஃபவ்சுல் ரஹ்மான் என்பவர் ரிஸானா நஃபீக்கிற்கு மொழி பெயர்ப்பாளராக சேவையாற்றுகின்றார்.

ரிஸானா நஃபீக் சிறுமியாக (மைனர்) இருந்தபோது அனைத்து சட்ட விதிமுறைகளும் மீறப்பட்டு சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு அனுப்பபட்டவர் என்பதும் அவர் வந்து இரன்டொரு வாரங்களிலேயே இந்த குற்றம் சுமத்தப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடதக்கது. இலங்கையில் இருந்துதான் அதிகளவில் சிறுமிகளாக இருக்கும் பலர் அரபு நாடுகளுக்கு வேலைக்கு அனுப்பப்படுகின்றார்கள். ஆனால் அவ்வாறு வரும் இவர்கள் பலத்த பாலியல் சித்திரவதைகளுக்கும் வண்புணர்வுகளுக்கும் கெடூரங்களுக்கு ஆடபடுத்தப்படுகின்றார்கள். இவர்களில் பெரும்பாலனவர்கள் முஸ்லிம்கள் என்பது வருந்ததக்க விசயம். இந்த நிகழ்வுகளை தடுக்கவும் முஸ்லிம் பெனகளை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பாமல் தடுக்கவும் இலங்கையில் உள்ள அணைத்து இசுலாமிய அமைப்புகளும் கட்டாயம் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தங்கள் பென் குழந்தைகளை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் பெற்றோர்கள் அந்நிகழ்வுகளை கண்டு கட்டாயம் சிந்திக்க வேண்டும். உங்கள் பென் மக்கள் வேலைக்கு வரும் நாடுகளில் கட்டாய பாலியல் வண்புனர்வுகளுக்கும் பலவித கொடுமைகளுக்கும் ஆளாக்கப்படுகின்றார்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும். முக்கியமாக சமுதாய ஆர்வலர்கள் இந்த விசயத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டியது கட்டாயம்.


தொடர்புடையது : 09-04-2008 அரப்நியுஸ் பத்திரிகை செய்தி

4 மறுமொழிகள்:

said...

//இவர்களில் பெரும்பாலனவர்கள் முஸ்லிம்கள் என்பது வருந்ததக்க விசயம்.//

உங்கள் மதவெறியைக் கக்கி முஸ்லீம்கள் மீது வெறுப்பு ஏற்படச் செய்ய வேண்டாம். உங்களுக்கு இறைவன் போதுமானவன்.

இந்த காலத்துல, எல்லா ட்யூப் லைட்டுகளுக்கும் கம்பியுட்டர் கிடைச்சிடிச்சு. முன்னாடி உக்காந்த்துகிட்டு அதுங்க உட்டு பொசுக்குற குசு நாத்தம் தாங்க முடியல.

said...

அட நாதாறி நாயே...Normalizer இதுல எங்கடா மதவெறி இருக்கு?

மனித நேய அடிப்படையில் தானடா இது பதிவாகியிருக்கு நாதாறிக்கு பொறந்த நாதாறி நாயே!!

said...

அட நாதாறி நாயே...Normalizer இதுல எங்கடா மதவெறி இருக்கு?

மனித நேய அடிப்படையில் தானடா இது பதிவாகியிருக்கு நாதாறிக்கு பொறந்த நாதாறி நாயே!!

said...

what is going on here?

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template