Tuesday, April 29, 2008

மக்கா - மதீனா வரலாற்று சிறப்பு அறிய புதிய இணையத்தளம் அறிமுகம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்..

மக்கா - மதீனா புனித இரு நகரங்களின் வரலாற்று சிறப்பு அறிய புதிய இணையத்தளம் அறிமுகம்
- சவூதி அரசாங்கம்



உலக நாடுகள் எல்லாவற்றிற்கும் மையமாக இருக்கும் புனித மக்கா நகரத்தினை பற்றியும் மற்றும் மதீனா நகரத்தினை பற்றியும் வரலாற்று சிறப்புகளையும், மற்றும் இரு புனித நகரங்களில் உள்ள கலை பண்பாடு, எல்லாவற்றிற்கும் முன்னோடியாக இருக்கும் அழகான கலாச்சாரத்தினை பற்றியும் உலகில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் அறிந்துக்கொள்ளும் பொருட்டு சவூதி அரசாங்கம் புதியதொரு இணையத்தளம் ஒன்றினை சமீபத்தில் வெளியிட்டு உள்ளது. மாஷா அல்லாஹ் .. அதன் முகவரி


இந்த இணையத்தளமானது புனித இரு நகரங்களை பற்றிய முழு விவரங்களையும், அங்கு நடந்த வரலாற்று நிகழ்வுகளையும், ஐங்கால நேரத்தில் அங்கு நடைபெறும் தொழுகை பற்றியும், தொழுகை நேரத்தினை பற்றியும், அங்கு மக்கள் எவ்வாறு தொழுகையினை நிறைவேற்றி வருகிறார்கள். மற்றும் ஏழைகளின் பெரு நாளாகிய வெள்ளிக்கிழமைகளில் அங்கு நடைபெறும் தொழுகையினை பற்றியும், தொழுகைக்கு முன் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகளையும் உலகில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் நேரில் காணும் போது எப்படி உணர்வர்களோ அத்தகைய உணர்வுகளை இணையத்தில் காணும் போது உணரக்கூடிய அளவில் இருக்கும் என்று மக்கா - மதீனா தலைமையகம் அறிவித்து உள்ளது. குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் அமைந்த 45,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒலி ஒளிப்பேழைகள் இந்த இணையத்தில் உள்ளன என்பதும் இதன் சிறப்பாகும்.

மக்கா மதீனா தலைமையகமானது தனது இரண்டாவது கட்ட மார்க்க பணியாக, மின்னனுவாக்க கல்வியினையும் (E. Education service) துவங்க உள்ளது. இதன் மூலமாக பல அரிய தகவல்கள் ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த இணைய சேவையானது தற்போது ஆங்கிலத்தில் உள்ளது பிற்பாடு மற்ற நாட்டு மொழிகளிலும் வெளியிடு செய்வதற்கான ஆயத்தப்பணிகள் நடந்துக்கொண்டு இருப்பதாக கூறுகிறது.

இந்த இணையத்தளத்தில், எவ்வாறு ஹஜ் மற்றும் உம்ரா செய்வது பற்றி அரேபிய மொழியிலும் உருது மொழியிலும் ஆங்கில மொழியிலும் உள்ளது. இந்த இணையத்தில், அரேபிய, உருது, இந்தோனிஷியா மொழியில் உள்ள குர்ஆன் வானொலி சேவையும் உள்ளது. தர்ஜீமா குர்ஆனும் இந்த இணையத்தில் உள்ளது உலக மக்கள் அவர்களுடைய தாய் மொழியில் அதனை கேட்கலாம். மற்றும் மின்னனுவாக்க நூலகம் (E. Library) என்ற பகுதியில் மக்கா மற்றும் மதீனாவின் அரிய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

நாங்கள் துவங்கிய இந்த இணையத்தியத்தின் சேவை எப்படி உள்ளது என்பதினை பற்றி மக்களிடம் கருத்துக்களை அறிய உள்ளோம் என்றும், இந்த இணையத்தின் மூலமாக இஸ்லாம் மற்ற மக்களிடம் இன்னும் பலவாறாக பரவ வாய்ப்புள்ளது என்று முதன்மையாளர் ஷாலே அல் ஹீசேன் (Saleh Al Hosain – Head of the Presidency) அவர்கள் கூறினார்கள். மேலும் அவர் குறிப்பிடுகையில், இந்த இணையமானது ஹஜ் மற்றும் உம்ரா பற்றி அறியாத மற்ற மதத்தினருக்கு அதனை பற்றி தெரிந்துக்கொள்ள நல்லதொரு வாய்ப்பாக அமையும். அத்துடன் ஹஜ் மற்றும் உம்ரா எவ்வாறு செய்வது பற்றி இஸ்லாமியர்கள் இதன் மூலமாக தெரிந்துக்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தில் கஃபாவின் மீது போர்த்தப்பட்டுள்ள கிஸ்வா என்ற துணியினை பற்றிய வரலாற்று சம்பவங்களும், இந்த துணியினை தயாரிக்கும் மக்காவில் உள்ள கிஸ்வா தொழிற்சாலையினை பற்றிய தகவல்களும் அடங்கி உள்ளன.

சவூதி அரேபியாவில் உள்ள சுற்றுலா தலைமையாகமானது, (The Supreme Commission for Tourism) ஐந்து வருட காலத்திற்குள் 6 புதிய அருட்காட்சியகத்தினை (Museum) சவூதி அரேபியாவின் பல மாகாணாங்களில் துவங்குவதற்கான பணிகளை செய்ய உள்ளது. மற்றும் 12 க்கும் மேற்பட்ட பழைய அருட்காட்சியகத்தினை புதுப்பிக்கவும் உள்ளது என்று சுற்றுலா தலைமையகத்தின் பொது செயலாளரான அரசர் சுல்தான் பின் சல்மான் (Prince Sultan bin Salman) அவர்கள் கூறினார்கள். ஒரு வருடத்திற்கு சவூதி அரேபியாவிற்கு புனித யாத்திரைக்கு செல்பவர்களின் எண்ணிக்கையானது 10 மில்லியானகும். இவர்கள் அனைவரும் புனித பூமியினை பற்றிய பல சிறப்புகளை பற்றி அறிந்து பயன் பெறும் வகையில் இந்த அருட்காட்சியகம் செயல்படும். புனித யாத்திரை வருவோருக்கு தேவையான அனைத்து செய்திகளும் ஒருங்கே அமையப் பெற்றதாக இருக்கும் இந்த அருட்காட்சியகம். அத்துடன் சவூதி அரேபியாவில் பல இடங்களில் சுற்றுலா கிராமங்களை உருவாக்கும் திட்டத்தினையும் அரசாங்கம் செய்ய உள்ளது.

நன்றி : Khaleej Times – Page – 16 – Dated April 24 and 27. 2008

தமிழாக்கம் : முத்துப்பேட்டை – அபூ ஆஃப்ரின்

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template