அல்லாஹ்வின் திருப்பெயரால்..
துபை மாநகரில் தமிழ் இஸ்லாமிய இஸ்திமா..
துபை மாநகரில் தமிழ் இஸ்லாமிய இஸ்திமா..
துபை மாநகரில் தமிழ் இஸ்லாமிய இஸ்திமா நிகழ்ச்சியானது, 25.4.2008 வெள்ளிக்கிழமை அஸர் முதல் இஷா வரை டேரா துபையில் உள்ள இந்தியன் இஸ்லாஹி சென்டரில் இனிதாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக சகோதரர். அமீர் சுல்தான் அவர்கள் கிராஆத் ஓதினார். அதனை தொடர்ந்து சகோதரர். ஷிப்காத்துல்லாஹ் அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் முதல் அமர்வின், சிறப்பு உரையினை சகோதரர். அப்துல் ஸலாம் மதனி (இயக்குனர் - அல் மனார் திருக்குர்ஆன் பயிற்சி மையம் - அல் கூஸ் - துபை) அவர்கள் நிகழ்த்தினார். அவரின் சிறப்பு உரையினை தொடர்ந்து தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள மெளலவி. நூருல் அமீன் அவர்கள் நிகழ்த்தினார்.
ம.ரிப் தொழுகை முடிந்தவுடன் இரண்டாவது அமர்வானது துவங்கியது. துபை இந்தியன் இஸ்லாஹி சென்டரில் பணியாற்றும் கேரளாவைச்சார்ந்த மெளலவி. ஷிஹாப் எடக்கர அவர்கள் உரை நிகழ்த்தும் போது, சத்திய மார்க்கத்தினை எடுத்துரைக்கும் பணியினை துபாயில் இருக்கும் அனைத்து மாநில இஸ்லாமிய சகோதரர்களும் தத்தம் பணியினை திறம் பட செய்ய வேண்டும். இந்த பணியில் ஏற்படும் சிரமங்களையும், கஷ்டங்களையும் பொறுத்துக்கொண்டு நாம் மேற்கொண்ட பணியில் தொய்வு இல்லாமல் செய்தால் மறுமையில் அல்லாஹ்விடத்தில் நமக்கு கூலி கிடைக்கும் என்பது போன்ற பல கருத்துக்களை, தமிழ் பேசக்கூடிய சகோதரர் புரிந்துக்கொள்ளும் விதத்தில் மலையாளம் கலந்த தமிழில் எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சி முடிந்து வெளியே சென்ற அனைத்து சகோதரர்களின் உள்ளங்களிலும் ஒரு மாற்றத்தினை அல்லாஹ் நாடினால் ஏற்படுத்தக்கூடிய அளவில் இருந்தது அவருடைய உரைகள் கற்கள். அதனை தொடர்ந்து சகோதரர். நாஸர் அலி கான் அவர்கள் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் ஏகத்துவ கொள்கையில் பற்றுள்ள அனைத்து சகோதர உள்ளங்களும் எந்த விதமான கருத்து பரிமாற்றங்களும் இல்லாமல் கலந்துக்கொண்டதினை காணும் போது, இஸ்லாமிய சகோதரர்களிடையே ஒற்றுமையானது ஏற்படும் என்பது திண்ணம். அல்லாஹ்வின் திருப்பொருத்ததை நாடி நடை பெற்ற இந்த நிகழ்ச்சியினை இந்தியன் இஸ்லாஹி சென்டர் – தமிழ் பிரிவு – துபை மிகச் சிறப்பாக செய்து இருந்தது. தமி்ழ் இஸ்லாமிய நி்கழ்ச்சியினை கேட்பதற்கு கேரளாவை சார்ந்த பல சகோதரர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
தகவல் : முத்துப்பேட்டை அபூ ஆஃப்ரின்
0 மறுமொழிகள்:
Post a Comment