Tuesday, May 13, 2008

நெல்லை ஏர்வாடியில் மேற்படிப்பு வழிகாட்டி முகாம் - 2008

மேற்படிப்பு வழிகாட்டி முகாம் - 2008


மேடையில் விருந்தினர்கள் மற்றும் கல்வியாளர்கள்

யுனைடெட் ஸ்டூடண்ஸ் ஃபிரண்ட் சார்பாக ஏர்வாடி O.K. திருமண மஹாலில் வைத்து மாணவர்களுக்கு மேற்படிப்பிற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் S. சாதிக் M.B.A., அவர்கள் தலைமை தாங்கினார்கள்.


சகோதரர் ரியாஸ் M.B.A., அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள். ராணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் திருமதி. ராணி ஜெயசெல்வி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்கள். USF ன் மாநில பொதுச் செயலாளர் திரு. அன்வர் அவர்கள் USF ஐ பற்றி அறிமுகப்படுத்தி பேசினார்கள். மேலும் மருத்துவத்துறை சம்மந்தப்பட்ட கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை டாக்டர்.முஸ்தபா M.B.B.S., DCA., டாக்டர் ஸ்ரீகுமார் M.B.B.S., ஆகியோர் வழங்கினார்கள்.


நிகழ்ச்சியில் பங்கொண்டு பயன்பெற்ற மாணவிகள்

பொறியியல் துறை சம்மந்தப்பட்ட கருத்துக்களை பேராசிரியர் ஹைதர் அலி (HOD, PET Eng, College) பேராசிரியர் S. பாபு ரெங்க ராஜன் (HOD, IT) ஆகியோர் வழங்கினார்கள். அறிவியல் துறை சார்பாக பேராசிரியர் சேக் அப்துல் காதர் மற்றும் பேராசிரியர் அஹமது கனி ஆகியோர் கருத்துக்களை வழங்கினார்கள். சட்டப்படிப்பு பற்றி அட்வகேட் பெல்மான் அவர்கள் கருத்துக்களை வழங்கினார்கள். கலந்து

நிகழ்ச்சியில் பங்கொண்டு பயன்பெற்ற மாணவர்கள்

கொண்ட பேராசிரியர்களுக்கு சிறப்பு நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் இடையே USF தயாரித்துள்ள மேற்படிப்பு வழிகாட்டி நூல் வெளியிடப்பட்டது. இதன் முதல் பிரதியை USFன் பொதுச் செயலாளர் திரு. அன்வர் அவர்கள் வெளியிட திருமதி. ராணி ஜெயசெல்வி அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். முடிவில் சகோதரர் முகைதீன் B.Sc., நன்றியுரை கூறினார்.

விழாவில் 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

செய்தி தொகுப்பு : மூலக்கரைப்பட்டி ஜவாஹிர் ஹஸன், ஏர்வாடி, நெல்லை

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template