Sunday, May 11, 2008

எங்கப்பன் குதிருக்குள் இல்லை - அதிரை ஏ.எம். ஃபாரூக்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்பின் சகோதர, சகோதரிகளே,

நாம் வல்லத்தில் பெருந்தோல்வியுடன் நடந்த கொண்டிருக்கும் ததஜ வின் "தவ்ஹீத் எழுச்சி மாநாட்டின் செய்திகளை" தந்திருந்தோம் உடனே அலறி அடித்து கொண்டு எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக தனக்கு தானே சுயமாக ஆப்ப வைத்துக் கொண்டர் அழைப்பு பணியில் அதிரை பாரூக் அவர்கள். அன்பரின் அறிவிப்பு இதோ மக்கள் பார்வைக்காக.

***********************************************


அல்லாஹ்வின் திருப்பெயரால்....

தவ்ஹீத் எழுச்சி மாநாடு தகவல்கள் .

எதிர்பார்த்ததை விட மக்கள் கூட்டம் மடைதிறந்நத வெள்ளமாய் வல்லத்தில் நிரம்பி வழிந்தனர். திரண்டு வந்த மக்கள் வெள்ளத்தை உட்கொள்ள முடியாமல் திணறியது ராட்சஸ அரங்குகள்.

எந்தெந்த ஊர்களிலிருந்து எத்தனை வாகணங்களில் எவ்வளவு மக்கள் வந்தார்கள் என்ற துல்லியமான கணக்கு சொல்வதெல்லாம் மிகைப் படுத்தப் படுவதாக அமையும்.

எனது சொந்த ஊர் அதிரையிலிருந்து 30 வேன்கள் சென்றதாக அதிரை கிளை தலைவரிடமிருந்து தகவல் பெற்றுக் கொண்டேன். (அதிரையில் இருந்து 250 பேர் வந்ததாக் நாம் எழுதியுள்ளோம் வேன் ஒன்றுக்கு 10-12 பேர் வந்ததாகவும் எழுதியுள்ளார் நமது செய்தியாளர் அதை உண்மை படுத்தியுள்ளார் அதிரை பாரூக்)

இவ்வாறு ஒவ்வொரு ஊர்களிலிருந்துமாக தமிழ்நாட்டின் நாலாப் புறங்களிலிருந்தும் மக்;கள் புடைசூழ்ந்ததால் மதியத்திற்கு மேல் அரங்குகள் மக்களை பிpதுங்க தொடங்கியது. அதனால் பெண்களுக்கு மட்டும் உள்ளே தங்க அனுமதி வழங்கிவிட்டு ஆண்கள் வெளியேற்றப்பட்டனர்.

குறைபாடுகள்

எதிர்பார்த்ததை விட அதிகப்படியான மக்கள் வருகை தந்ததால் ஏற்கனவே வாக்களிக்;கப்பட்ட அடிப்படை வசதிகள் தோல்வியை தழுவின.

அதிகப்படியான மக்கள் குழுமுவார்கள் என்று ஏற்கனவே எதிர்பாரத்தது தான் ஆனால் மேல்படி நிகழ்;ச்சிகளின் ஏற்பாடுகளுக்காக நியமிக்;கப்பட்ட பொறுப்பாளர்கள் தகுதியற்றவர்கள் அவ்வளவு தான்.

100 ஏக்கர் நிலத்தை செப்பனிடுவதும் அரங்கத்திற்கான பந்தல் அமைப்பதிலுமே கவனம் செலுத்தியவர்கள் அடிப்படை வசதிகளின் மீது சரியான கவனம் செலுத்த வில்லை என்பதற்கு பல டாய்லெடட்டுகளில் பீங்கான் பதிக்கவேப் படாமல் விடப்பட்டிருப்பது ஒரு காரணமாகும்.

வதந்திகள்

அதிகமான மக்;கள் குழுமவில்லை என்று ஒருவர் கூறுவதை நம்ப வேண்டாம் ? இது வடிகட்டியப் பொய் ! (எங்கப்பன் குதிருக்குள் இல்லை!!)

மக்களுக்கான அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்தப் படவில்லை என்பது மட்டுமே உண்மை.

கஃபா செட்டப் நொறுங்கி விழுந்ததாகவும் அதனால் மக்கள் அல்லோல கல்லோப் பட்டதாக கூறுவதையும் நம்ப வேண்டாம் பொய் அதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறவில்லை.

இது பலநாட்களுக்கு முன் அதற்கான அரங்கில் செட் பண்ணும் பொழுது அந்த செட்டப் விழுந்ததும் அதை மீண்டும் அமைத்து விட்டார்கள். (இந்த வாக்கியத்திற்கும் மேலுல்ல வாக்கியத்திற்கும் நேரடி முரன்பாடு!! கவணிக்கவும்)

இறுதி தகவல்

பக்கத்தில் இயங்கும் போர் செட்டிவிலிருந்து பிவிசி பைப் மூலமாக மாநாட்டு அரங்கிற்கு இன்று தண்ணிர் கொண்டுவரப்பட்டு விட்டதது. நேற்று திரும்பிச் சென்றவர்களில் பலரும், நேற்று வரமுடியாதவர்களில் பலரும் தகவல் அறிந்து இன்று வருகை தந்தவண்ணமிருக்கின்றனர் அதனால் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. (மீண்டும் எங்கப்பன் குதிருக்குள் இல்லை!!)



அஸ்ஸலாமு அலைக்கும் அழைப்புப் பணியில் அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template