Friday, May 09, 2008

USF நடத்தும் மாணவ - மாணவிகளுக்கான வழிகாட்டி முகாம் மற்றும் புத்தக வெளியீட்டு விழா

10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மேற்படிப்பு வழிகாட்டி முகாம் மற்றும் "நாமும் சாதிக்கலாம்" புத்தக வெளியீட்டு விழா


யுனைட்டட் ஸ்டூடன்ட்ஸ் ஃபிரன்ட் (USF) அமைப்பின் நிர்வாகி திரு. T.R. ஜியாவுதீன் B.E அவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பில் தெறிவிக்கப்பட்டுள்தாவதுஇ யுனைட்ட் ஸ்டூடன்ட்ஸ் ஃபிரன்ட் (USF) அமைப்பின் சார்பாக தமிழகமெங்கும் மாவட்ட வாரியாக 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மேற்படிப்பு வழிகாட்டி முகாம் கள் நடத்தப் பட்டு வருகின்றன அதன் தொடாச்சியாக நாளை 10.05.2008 சனிக்கிழமை சென்னை, திருவல்லிக்கேணி, ஆதம் மாக்கெட், அஹமது அலி பார்பியா மெட்ரிக்குலேசன் பள்ளியில் காலை 10.00 மணியளவில் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மேற்படிப்பு வழிகாட்டி முகாம் மற்றும் "நாமும் சாதிக்கலாம்" புத்தக வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

இந்நிகழச்சியில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பல கல்வியாளர்களும், பிரபலங்களும் கலந்து கோண்டு மாணவுமாணவிகளுக்கு ஆலோசனைகள் வழங்க உள்ளார்கள்.


டாக்டர் ஜீலானி MBBS, BCH
டிரஸ்ட்டி, ஜான் டிரஸ்ட்

டாக்டர் ஆயிஷா ஹமீது
மேனேஜி்ங் டிரஸ்ட்டி - ஹிதாயா வெல்ஃபேர் டிரஸ்ட்

ஜனாபா. A. நஷீமா பேகம் M.A
முதல்வர் - அஹமது அலி பார்பியா மெட்ரிக் பள்ளி

பேராசிரியர் M. ஹமீது ஹீசைன் M.E
ஆலிம் முஹம்மது சாலிஹ் பொறியியல் கல்லுர்ரி

ஜனாப் N. முஹம்மது B.E
சீனியர் நெட்வொர்க் இன்ஜினியர்


ஆகியோர் உட்பட பலர் கலந்து நமது மாணவ மாணவிகளின் எதிர்காலத்திற்கு தேவையான ஆலோசனைகளை வழங்க உள்ளார்கள் ஆகவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்பி இந்நிகழச்சியில் கலந்து கொண்டு பயன் பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்வதாக யுனைட்டட் ஸ்டூடன்ட்ஸ் ஃபிரன்ட் (USF) அமைப்பின் நிர்வாகி திரு. T.R. ஜியாவுதீன் B.E அவர்கள் தெறிவித்துள்ளார்கள்.

1 மறுமொழிகள்:

said...

நல்ல முயற்சி.குழப்பத்தில் தனது அடுத்த அடியை எடுத்து வைக்க தயங்கி நிற்கும் மாணவ மணிகளுக்கு இது ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் உருடுனயாகவும் இருக்கும்.உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template