நாம் அன்றாடம் செய்து கொண்டிருக்கம் பல செயல்கள் பலரால் கண்டுகொள்ளப்படுவதில்லை. ஆனால், நாம் செய்யத் தவறிய அல்லது தவறாகச் செய்யும் ஒரு செயல் பலருடைய கண்டனத்துக்கு உள்ளாகிறது. குhல்பந்து விளையாட்டில் எதிரணியினர் போட மயலும் எத்தனையோ 'கோல்'களை ஒரு கீப்பர் எடுத்திருக்கலாம். ஆனால், அவர் தடுக்கத் தவறியதால் விழுந்த 'கோல்' மட்டுமே நம் நினைவில் வகிநிறது. ஆதைப் போலவே பயங்கரவாதத் தாக்குதல்களை காவல்துறை பலமுறை தடுத்திருக்கலாம். உளவுத்துறை மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட இருந்த பயங்கர வாதிகளைக் கைது செய்திருக்கக்கூடும். ஆனால், பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தவுடன் அரசு தடுக்க தவறிவிட்டது என்ற எண்ணமே நம் அனைவருடைய மனதிலும் நிறைந்துவிடுகிறது.
இந்த எண்ணம் சாதாரணமாக மக்கள் மனதில் எழுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அரசியல் கட்சிகள் இதுபோன்ற துயரமான நிகழ்வுகளைகூட அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துவதைப் பார்க்கும்போது மனதில் வேதனை எழுவதை தவிர்க்க முடிவிதில்லை.
கடந்த மே மாதம் 13-ம் நாள் ஜெய்ப்பூரில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் குறிந்து பாரதிய ஜனதா கட்சி எழுப்பிய கண்டனங்களில் மத்திய அரசு மீதான குற்றச்சாட்டும் இருந்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பலவீனமான அரசு என்றும், சிறுபான்மையினரின் ஓட்டு வங்கியைக் கருத்தில்கொண்டு பயங்கரவாதிகளுக்கு சதிராக உறுதியாக நடவடிக்கை எடுப்பதற்கு மத்திய அரசு தயங்குகிறது என்றும் மத்திய அரசு மீது குற்ற்ச்சாட்டுகள் எழுந்தன. முணி;டும் மீண்டும் ஒரே புகாரைச் சொல்லிக் கொண்டிருந்தால் மக்கள் அதை உண்மையென நம்பிவிடுவார்கள் என்று பீ.ஜெ.பி கருதுகிறது போலிருக்கிறது. போடா சட்டம் அமலில் இருந்த போதும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தன என்பதை இந்திய மக்கள் மறந்து பொயிருப்பார்கள் என்று அந்தக் கட்சித் தலைமை நினைக்கக்கூடும். இப்பொது கர்நாடக சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பீ.ஜெ.பி. பெற்றிருக்கும் நிலையைப் பார்க்கும்போது அந்தக் குற்றச்சாட்டும்கூட கர்நாடக மக்கள் மத்தியல் எதிரொலித்திருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது.
இந்தியவில் நடக்கும் பயங்கரவாத செயல்களில் அப்பாவி மக்கள் குறி வைக்கப்படுகிறார்கள் நம்முடைய மக்கள் கோயில்களிலும் மசூதிகளிலும் இறக்கிறார்கள். பேருந்துகளிலும் தொடர்வண்டிகளிலும் பயணம் செய்து கொண்டிலுக்கும்போதே மடிகிறார்கள். கடைவீதிகளிலும் பொழுதுபோக்குப் பூங்காகளிலும் சிதறி சின்னா பின்னமாகிறார்கள். எதற்கா சாகிறோம் என்று அறியக்கூட அவகாசம் இல்லாமல் அப்பாவிகளுடைய உயிர் பறிக்கப்பட்டு விடுகிறது. இவர்களில் பலர் அவர்களுடைய குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபராக இருக்கலாம். இவர்களுடைய மறைவுக்குப் பிறகு அந்தக் குடும்பங்கள் பலவிதமான துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் ஆளாகலாம். ஆனால், இவற்றைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல் சிலர் இந்தத் துயரங்களில் அரசியல் ஆதாயம் தேட முனைகிறார்கள்.

ஒவ்வொரு குண்டு வெடிப்புக்கம் ஏதாவது ஓர் அமைப்புகாரணம் என்ற முடிவுக்கு வருகிறோம். அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று யாராவது சிலர் கைது செய்யப்படுகிறார்கள்.
மோதலில் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இருந்தும், அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படி என்றால், முதலில் கைது செய்யப்பட்டவர்கள் அல்லது கொல்லல்ட்டவர்கள் தவிர, புதிதுபுதிதாக பயங்கரவாத இயக்கங்களில் உறுப்பினர்கள் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று பொருளாகிறது அல்லது கைது செய்யப்பட்டவர்களோ,கொல்லப்பட்டவர்களோ முந்தைய சம்பவத்துடன் தொடர்பில்லாதவர்கள் என்று அர்த்தமாகிறது.
இந்த பயங்கரவாத நிகழ்வுகளால் அரசியல் ஆதாயம் யாருக்குக் கிடைக்கிறது? இந்த சம்பவங்கள் நடைபெறவேண்டிய நாளைத் தீர்மானிப்பது யார்? அதில் ஏதேனும் அரசியல் இருக்கிறதா? ஒவ்வொரு பயங்கராவாத நிகழ்வும் வேறு ஏதாவது சம்பவத்துடன் தொடர்புடையதாக இருக்கிறதா? இவை எதுவும் அர்த்தம் இல்லாத கேள்விகளாக இருக்கலாம். அல்லது இவற்றில் ஒன்றிரண்டு கேள்விகளுக்கான விடைகளில் ஏதேனும் உண்மை ஒட்டிக் கொண்டிருக்கலாம். இந்த வினாக்கள் பலருடைய சிந்தனையில் எழுந்திருக்கக்கூடும். இருந்தும், தொடர்ந்து அவற்றுக்கான விடை தேடும் பணியில் ஒருவர் ஈடுபட முடியாமல் அவருடைய அன்றாடப் பணிகள் அவரை ஆக்கிரமித்திருக்கலாம்.
அண்மையில் தற்செயலாக இணையதளத்தில் படிக்க நேர்ந்த ஒரு ஆங்கிலக்கட்டுரையில் இடம் பெற்றிருந்த சில தகவல்கள் இந்தக் கேள்விகளில் அர்த்தம் இல்லாமல் இல்லை என்ற உணர்வை ஏற்படுத்தின.
சமீபத்தில் ஜெய்ப்பூரில் நடந்த குண்டு வெடிப்பில் சர்வதேச பின்னணி இருக்கக்கூடும். தேர்தல் மூலம் பாக்கிஸ்தானில் அமைந்த அரசின் வெளியுறவுத்துறை அமைச்சரை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மே 20-22 தேதிகளில் சந்திக்க இருந்தார். இரு நாடுகளுக்கு இடையில் நல்லுறவு ஏற்பட்டால் யாருக்கு இழப்பு ஏற்படுமோ, அவர்களே இந்தத் தாக்குதலுக்கு காரணமாக இருக்கக்கூடும்.
1948ம் வருடம் மே 14 அன்று இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி உலகமெங்கும் இஸ்லாமியர்களும் பாலஸ்தீன ஆதரவாளர்களும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். அந்த செய்தியபை; பின்னுக்குத் தள்ளி 'இஸ்லாமிய பயங்கரவாதம்' என்ற செய்தி உலக ஊடகங்களில் இடம் பெறும் வகையில் ஜெய்ப்பூரில் குண்டுகள் வெடித்திருக்கின்றன. லெபனான் மீது இஸ்ரேல் போர் தொடுக்க ஜூலை 11, 2006 அன்று மும்பையில் தொடர்வண்டியில் குண்டுகள் வெடித்தன.
மேலும் இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் சட்ட மன்றத் தேர்தலுக்கான வாக்கப்பதிவு நடக்க இருந்தது இதேபோல, குஜராத் தேர்தல் வாக்கப் பதிவுக்கு இரு மாதங்களுக்கு முன்தாக அஷhதாம் கோயிலில் பயங்கரவாதிகள் தாக்குதல் தொடுத்தனர். 2005, மே 2ம் நாள் அமெரிக்க அதிபர் இந்தியாவுக்கு வருகை தந்ததையொட்டி மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் இந்தியாவில் நடந்தன. அதற்கு ஐந்து நாட்களுக்குப் பிறகு வாரணாசியில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது.
இந்திய-அமெரிக்க ஒப்பந்தம் குறித்த எதிர்ப்பு அதிகமாக இருந்த கடந்த ஆண்டில் ஹைதராபாத் பூங்காவில் குண்டுகள் வெடித்தன என்று அந்தக் கட்டுரை பட்டியலிடுகிறது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் பல நாடுகளில் தங்களுடைய பங்காளிகளுக்கு அரசியல் அதாயம் கிடைக்கும் செயல்களைச் செய்வார்கள் என்று அரசியல் தளத்தில் நிலவும் கருத்துக்கு வலுவூட்டுகிற வகையில் அந்தக் கட்டுரையின் உள்ளடக்கம் இருந்தது.
இவையெல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையா அல்லது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்குதம் முடிச்சுப் போடுவது போல் இட்டுக்கட்டி சொல்லப்படும் அரசியல் வாதங்களா என்பதை நம்மைப்போல சாதாரண மக்களால் அறிந்துகொள்ள முடியாது. அதிகாரம் நிறைந்த ஆட்சியாளர்களுக்கும் அரசு அதிகாரிகளும்தான் இதற்கான முன் முயற்சியை எடுக்கவேண்டும். அவர்களால்கூட கண்டுபிடித்து நிரூபிக்க முடியாத வகையில் செயல்படும் வல்லமை சர்வதேச பயங்காரவாதிகளுக்கு ஒருவேளை இருக்கக்கூடும். அந்தந்தப் பகுதியில் இருக்கும் ஏதாவது ஒரு இயக்கத்தின் மூலம் தங்கள் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும் வலிமை அவர்களுக்கு இருக்கலாம்.
இந்நிலையில் இந்தியா முழுவதும் நடந்த பல பயங்கரவாத நிகழ்வுகள் குறித்து முழுமையான ஆய்வு நடத்தி விசாரிப்பதற்கு சுதந்திரமான ஓர் ஆணையத்தை இந்திய அரசு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதாக அறிய முடிகிறது. எப்பொதும் சொல்லப்படும் இந்து-முஸ்லிம், இந்திய – பாக்கிஸ்தான் போன்ற முரண்பாடுகளையும் தாண்டி வேறு யாருடைய கரங்களாவது இந்திய மக்களை பலிவாங்கும் பயங்கரவாதச் செயல்களில் இருக்கிறதா என்பதை மக்களுக்கு அறியத்தர வேண்டும்.
நன்றி : ஜீனியர் விகடன்
http://www.vikatan.com/jv/2008/jun/01062008/jv0503.asp
Received by Mail
2 மறுமொழிகள்:
இறைவனின் திருப்பெயரால்...
அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்..
இது மிகவும் அருமையான வரவேற்தக்க கட்டுரையாகும், இதுபோன்று அகில இந்தியாவிலும் மற்றும் அகில உலகில் இருக்கும் அனைத்து ஊடகங்களும் இதுபோன்று நடுநிலையான, அனைத்து மக்களின் பரதிபலிப்பாக இவ்வூடகங்கள் இருக்கவேண்டும், மாறாக ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரிடையே குழப்பங்கள் ஏற்பட வகை செய்யும் விதமாக இருக்கக்கூடாது.
நன்றி
ஆனந்தவிகடனோ அல்லது ஜூனியர் விகடனாக இருந்தாலும், ரொம்ப காலம் தாள்ந்து உண்மை செய்தியை தெரிவித்து இருக்கிறார்கள். இஸ்ரேலில் இருக்கும் மொசாத் என்ற உளவு பிரிவு, அகில உலகத்திலும் பரவி உள்ளது. இந்தியாவில், பாகிஸ்தானில் தான் முக்கிய கேந்திரமுள்ளது. மக்களாக மக்களாக கலந்து பணத்தை வாரி இறைத்து, அன்நாட்டு மக்களின் உதவிக்கொண்டே குண்டு வெடிப்பு,தகர்ப்பு எல்லாம் கச்சிதமாக செய்யும் அறிவூ பூர்வமான(நாசத்திற்கு துணை போகும் அறிவு)அந்த உளவு பிரிவுக்கு உண்டு. தற்பொழுதாவது இந்திய பத்திரிக்கைகள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பெருமை விகடனுக்கு உண்டு.
இறைவன் நாடினால் இன்னும் உண்மை வெளி வரும்.
அசலமோன்
Post a Comment