Wednesday, July 23, 2008

"சுதந்திரம்" என்பதுகூட அல்லாஹ் ஒரு மனிதனுக்கு வழங்கியிருக்கும் மாபெரும் அருட்கொடை

"சுதந்திரம்" என்பதுகூட அல்லாஹ் ஒரு மனிதனுக்கு வழங்கியிருக்கும் மாபெரும் அருட்கொடை"

அன்புள்ள சகோதரர் திருச்சி அமானுல்லாஹ் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ

நேற்று (22-07-2008) நீங்கள் அனுப்பிய ஈ மெயிலை பார்த்ததும் .....தவறாக புரிந்து கொள்ளக்கூடிய மனிதரிடமிருந்து வந்திருக்கிறதோ என்கின்ற எண்ணம்தான் உண்டானது. எழுத்தில் கோபம் தெரிகிறது, ஆனால் ஏன்? எதற்கு என்பதுதான் புரியவில்லை.



" உங்கள் கோபத்துல அல்லாஹ் தண்ணிய ஊற்றுவானான, வயிற்றெரிச்சலில் பாலை பாலை ஊற்றுவானாக" என்ற ஆரம்ப வார்த்தைகளே நீங்கள் எதையோ படித்துவிட்டு தவறாகப்புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அறிய முடிந்தது. "


ஐடிஎம்கே" அண்ணே! என்றுவேறு எனக்கு அறிமுகமில்லாத ஒரு கட்சியின் உரிப்பினராகவே என்னை ஆக்கி விட்டீர்கள். இதுவரை எந்த அரசியல் கட்சியலும் இருந்ததில்லை, ஆனால் அரசியலை சென்னை பல்கலைக்கழகத்தில் ஒரு பாடமாக எடுத்து படித்தவன்தான். அதுமட்டுமல்ல உலக அரசியலையும் ஓரளவு படித்ததிருக்கிறேன். காரணம் ஐரோப்பாவில் பல ஆண்டுகள் இருந்தவன், உலகிலுள்ள ஏராளமான பத்திரிகைகளை படிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கப் பெற்றவன். இன்னும் சொல்லப்போனால் இன்று இருக்கும் பல கட்சியின் தலைவர்களுக்கு அரசியல் பாடத்தையே கற்றுக் கொடுக்கக்கூடிய அளவுக்கு அல்லாஹ்வால் கல்வி ஞானத்தை கொடுக்கப் பெற்றவன்தான்.

தமுமுக வின் மீது எமக்கு நல்ல அபிப்ராயம் உண்டு. அதுபோன்று தௌஹீத் ஜமாஅத்தார்கள் மீதும் நல்ல அபிப்ராயம் உண்டு. பொதுவாக உலகிலுள்ள எந்த மனிதரையும் வெறுக்கச் கொல்லி இஸ்லாம் சொல்லவில்லை. இன்று உலகில் வாழும் அத்தனை பேருமே பெருமானார் ஸல்லல்லாஹ

{ அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்துகள் தான் (அவர்கள் எந்த மதத்தை எந்த இனத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் சரியே!) என்பதை மனிதில் ஆழமாக பதிய வைத்துக் கொண்டீர்களானால் மற்றவர்கள் மீது எந்தவிதமான வெறுப்பும் வராது. அவர்கள் காஃபிராக இருந்தாலும் சரியே! ஏன் அவர்களும் அல்லாஹ்வின் படைப்புதானே!

ஆனால் இன்று என்ன நடக்கிறது. முஸ்லிம்களுக்குள்ளேயே போட்டி, பொறாமை, வெறுப்பு! இதைவிட கொடுமை வேரென்ன இருக்க முடியும்? என்ன காரணமாக இருக்க முடியும் என்று கொஞ்ச நேரம் அமைதியாக யோசித்துப் பாருங்கள். இஸ்லாத்தைப்பற்றி சரியாக புரிந்து கொள்ளாத சமூகத்தினராக இன்றைய முஸ்லிம்கள் வாழ்வது முக்கிய காரணம்.



தமுமுக வில் சேருமாறு அழைப்பு விடுத்திருக்கிறீர்கள். நன்றி. ஆனால் பலவிதமான மனிதர்களை படைத்துள்ள அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் பொருப்புகளை அளித்துள்ளான். தகுதிகளை வழங்கியுள்ளான். அவரவர்களின் வழியில் எது சிறந்தது என்பதை தேர்வு செய்து வாழும்போதுதான் அது அவர்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். அதைவிடுத்து தமுமுக வில் நான் சேரும் பட்சத்தில் எனது கல்வி ஞானம் முதற்கொண்டு மற்ற செயல்பாடுகளும் அதன் தலைமைக்கு கட்டுப்பட வேண்டிய நிலைக்கு ஆளாக நேரிடும்.


"சுதந்திரம்" என்பதுகூட அல்லாஹ் ஒரு மனிதனுக்கு வழங்கியிருக்கும் மாபெரும் அருட்கொடை. அதை எதற்காக ஒரு கட்சியில் சேர்ந்து கொண்டு நான் இழக்க வேண்டும்? இன்றைய கட்சிகளையும், இயக்கங்களையும் மேலோட்டமாக பார்த்தாலே ஒரு விஷயம் தௌ்ளத் தெளிவாக புரியும்.


* ஜமாஅத்தே இஸ்லாமியா? மௌதூதி அவர்களின் கொள்கைதான் அவர்களுக்கு அஸ்திவாரம்.


* தௌஹீத் ஜமாஅத்தா? பி.ஜே. என்ன சொல்கிறாரோ அது மட்டும்தான் அவர்களுக்கு இஸ்லாம்.


* சுன்னத்துவல் ஜமாஅத்தா? நாங்கள் செல்வது மட்டும்தான் இஸ்லாம். நீங்களாக சிந்திக்க அனுமதி கிடையாது! (சிந்திக்க தூண்டுகின்ற மார்க்கத்தில் சிந்தனைக்கு 144 போடுகின்றவர்கள்.)


* தரீக்கா குரூப்பா? முஸ்லிம்களை முஷ்ரிகீன்களாக ஆக்கியே தீர்வது என்ற முடிவோடு இருப்பவர்கள்.


* தப்லீக் ஜமாஅத்தா? தொழுகை ஒன்றே போதும். வீட்டில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் சரி 40 நாள் ஜமாஅத்துக்கு வா எல்லாம் சரியாகிவிடும் என்று நினைப்பவர்கள். அதுமட்டுமின்றி ஒருசில விஷயங்களை மட்டும் உள்வாங்கிக்கொண்டு பெரிய ஆலிம்களுக்கு இணையாக தங்களை நினைத்துக் கொள்பவர்கள்.


மேலே சொன்ன இவர்கள் எவரிடமும் நடுநிலைப்போக்கு இல்லை. அதன் காரணமாக எங்கு பார்த்தாலும் முஸ்லிம்களுக்கிடையே வெறுப்பு, போட்டி, பொறாமை அத்தனையும் கண்கூடாக இன்று சமுதாயத்தில் காணமுடிகிறது. இவ்வளவையும் மீறி ஒருசில இயக்கங்களால் நன்மை விளையத்தான் செய்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.


நீங்கள் தமுமுக வில் இருக்கிறீர்கள். அதில் இருப்பதன் வாயிலாக சமுதாயத்துக்கு நல்லது செய்யு முடியும் என்று நம்புகிறீர்கள். உங்கள் நிய்யத்தை அல்லாஹ் கபூல் செய்வானாக, ஆமீன். ஆனால் நடுநிலை போக்குடன் இருந்தால்தான் இம்மையிலும், முக்கியமாக மறுமையிலும் வெற்றயடைய முடியும் என்பது எனது கருத்தாக இருக்கிறது. (இந்த சமுதாயத்தை அல்லாஹ் திருக்குர்ஆனில் நடுநிலை சமுதாயம் என்று குறிப்பிடுவதை நினைவில் கொள்ளுங்கள்) அதுமட்டுமின்றி எந்த இயக்கத்தில் சேர்ந்தாலும் தலைமைக்கு கட்டுப்படவேண்டிய கட்டாயத்தில் எனது சுதந்திரம்



பாதிக்கப்படலாம். தேவையா எனக்கு இது! அவரவர்கள் விரும்பிய இடத்தில் முழு மனத்தூய்மையோடு பணியாற்றினாலே எல்லா வெற்றியையம் அல்லாஹ் கொடுப்பான். வஆகிருதஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.



எம்.ஏ.முஹம்மது அலீ

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template