Tuesday, September 02, 2008

இந்தியா டுடே பத்திரிக்கை மீது வழக்கு

இந்தியா டுடே பத்திரிக்கை மீது வழக்கு

இந்தியா டுடே வார இதழ் தனது 12-08-08 தேதியிட்ட சுரணையற்ற இந்தியா என்ற அட்டைப்பட இதழில் முஸ்லிம்களை தீவரவாதிகளாகவும். இஸ்லாத்தை பயங்கரவாத மார்க்கமாகவும் சித்தரித்து எழுதி இருந்தது. வழக்கமான சித்தரிப்புகளை விட மிக மோசமான நடையில் இருந்த இந்துத்துவா டுடேயின் எழுத்துக்களால் கொதித்தெழுந்த தமுமுக இந்தியா டுடெ பத்திரிக்கை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. நூற்றுக் கணக்கான தொண்டர்கள் கைதாகினர். காஞ்சி மாவட்டம் மறைமலைநகரில் உள்ள இந்தியா டுடெ பேப்பர் மில் முன்பும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் தமுமுக போராட்டங்களை நடத்தியது.

ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள் மட்டுமின்றி இந்தியா டுடெ மீது சட்ட ரீதியான நடவடிக்ககைகளை முன்னெடுக்க பல்வேறு பகுதிகளில் உள்ள தமுமுகவினரும் முயற்சிகள் மேற்கொண்டனர். இதன் முதல்படியாக காஞ்சிபுரம் ஜே.எம்-1 நீதிமன்றத்தில் தமுமுக காஞ்சி நகர செயற்குழு உறுப்பினர் எம். சுpத்திக் ஜமால் வழக்கு தொடர்ந்தார். வழக்கறிஞர்கள் கே. விஜயகுமார், எம். ஜைனுல் ஆபிதீன் (மாநில மாணவரணி செயலாளர்) ஆகியோர் மனுதாரர் சார்பாக ஆஜராகினர். வழக்கறிஞர்களின் வாதங்களை ஏற்ற நீதிபதி பக்தவச்சலம் அவர்கள் 28-08-08 அன்று வழக்கை ஏற்று மனுவை (C.M.P. No- 3287-08) விசாரித்து நடவடிக்கை எடுக்க சிவ காஞ்சி காவல் நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிட்டார். இதனால் இந்தியா டுடே ஆசிரியர் பிரபு சாவ்லா தமிழ் பதிப்பின் ஆசிரியர் ஆனந்த நட்ராஜன் உட்பட ஆறு பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவாகும் எனத் தெரிகிறது.

http://tmmk.in/news/999695.htm

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template