Friday, October 10, 2008

அக்டோபர் 13 மாபெரும் பேரணி & தொடர் முழக்கப் போராட்டம்!

அக்டோபர் 13 மாபெரும் பேரணி & தொடர் முழக்கப் போராட்டம்!

ஏன்? எதற்காக?
• கடந்த சில மாதங்களாக தமிழக அரசு முஸ்லிம்களை நசுக்கும் விஷயத்தில் கடுமையான தீவிர போக்கைக் கடைப்பிடித்து வருகின்றது. முஸ்லிம்களின் சட்டப்பூர்வ உரிமைகளை பரிப்பதிலும் தீவிரம் காட்டி வருகின்றது.

• முஸ்லிம்கள் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பம் செய்தால் அதன் விசாரணை அறிக்கையை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு தராமல் வேண்டுமென்றே வருடக் கணக்கில் தாமதப்படுத்தும் காவல் துறையின் அராஜகப் போக்கு. (எல்லா எடத்துலயும், எல்லாருக்கும் நடப்பதா தெறியலியே? வேண்டுமானால் ததஜ வின் தலைவர்கள் யாருக்காவது நடந்திரக்கலாம்)

• மத்திய அரசாங்கம் முஸ்லிம்களுக்காக வழங்கும் கல்வி உதவிகளை வழங்காமல் மாநில அரசு தட்டிக் கழிப்பது. (அப்படியாங்க...???)

• அடிப்படை வசதிகளுக்காகவும், உரிமைகளுக்காகவும் ஜனநாயக வழியில் போராடும் அமைப்பு சாரா முஸ்லிம்கள் மீது காட்டுமிராண்டித் தனமாக தாக்குதல் நடத்துவது. (அடிப்படை பிரச்சினை, உரிமைகள் என்றால் ததஜ தலைவர்களின் சொந்த பிரச்சினை குடும்ப பிரச்சினை என்று அர்த்தம் என்று யாரோ சொல்ராங்க.....)

• தாக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து அவர்கள் மீதே வழக்கு போடுவது.

• முஸ்லிம்களை மதத்தைச் சொல்லி போலிசார் கொச்சைப்படுத்தி பேசுவது.

• மத ஊர்வலம் என்ற பெயரில் முஸ்லிம் தெருக்களில் இஸ்லாத்தையும், முஸ்லிம் பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் கோஷம் போடுவதை அனுமதிப்பது, அத்தகையவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல் துறை வேடிக்கைப் பார்ப்பது.

• இலவச நிலம், இலவச வீடு உள்ளிட்ட எல்லா இலவச திட்டங்களிலும் முஸ்லிம்களின் சதவிகிதத்திற்கு ஏற்ப உரிமை வழங்க மறுப்பது.

• முத்துப்பேட்டை பள்ளிவாசலுக்குள் நுழைந்து நோன்பாளிகள் மீது கண்மூடித்தனமாக போலிசார் தாக்குதல் நடத்தியது.

• 7 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த கைதிகளை விடுதலை செய்து விட்டு 7 ஆண்டுகளும் அதற்கு மேலும் விசாரணைக் கைதிகளாக உள்ள முஸ்லிம்களை மட்டும் விடுதலை செய்யாமல் பாரபட்சம் காட்டியது. (7 ஆன்டுக்கும் மேலாக இவர்கள் சிறையில் இருப்பதற்கே உங்க மாஜி தலைவர்தான் காரனம்னு சொல்ராங்க....)

• இந்து கோவில்களில் பூசாரிகளாக பணியாற்றுவோர் நலனுக்காக வாரியம் அமைத்து விட்டு, பள்ளிவாசலில் பணியாற்றும் முஸ்லிம் மதகுருமார்களான உலமாக்களுக்காக நலவாரியம் அமைக்க மறுப்பது (உலமாக்களை புரோகிதர்கள் என்று விமர்சித்து அவர்களை கொச்சை படுத்தியதே உங்க மாஜி தலைவரும் உங்க அமைப்பும் தானுங்க...இப்ப நல வாரியம்னு ஸ்டன்ட் அடிச்சா எப்படிங்க...?)

என முஸ்லிம்களுக்கு எதிரான போக்கு தொடர்கின்றது.
இந்த அக்கிரமத்தை ஆள்வோருக்கு சுட்டிக்காட்டி உணர்த்தவும்,
எதிர் காலத்தில் இது போன்று நடக்காமல் தடு;த்து நிறுத்தவும்
இந்த சமுதாயம் மானத்தோடும் மரியாதையோடும் வாழ்வதை உறுதி செய்யவும் 13-10-2008 அன்று நடைபெறும் உரிமைப் போரில் பங்கேற்க.

இன்றிலிருந்தே தயாராவீர்! அநியாயத்திற்கு எதிராக
அலைகடலென திரண்டு வாரீர் (எத்தனை பேருங்க...பத்து லட்சமா???)
TAMILNADU THOUWHEED JAMATH

அபூ சுமைய்யா அவர்களின் மறுமொழி

அடே, முரண்பட்ட கொள்கைகளுக்குச் சொந்தக்காரர்களே!
நீங்கள் போராடுவது தௌஹிதுவாதிகளுக்கு மட்டும் தானா? அல்லது அனைத்து முஸ்லிம்களுக்குமா? என்பதை முதலில் தெளிவுபடுத்துங்கள்.
தௌஹீதுவாதிகளுக்கு மட்டும் எனில், பின்னர் எதற்காக மற்றவர்களையும் அழைக்கிறீர்கள். கூட்டத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் உள் சுற்றறிக்கை அனுப்பி அழைத்துச் செல்ல வேண்டியது தானே?

அனைத்து முஸ்லிம்களுக்கும் எனில்,
யார் யாரெல்லாம் முஸ்லிம்கள் என்பதை முதலில் சொல்லுங்கள். பின்னர் அவர்கள் அனைவரையும் தௌஹீத் ஜமாஅத்தில் முதலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

1. ஷியா முஸ்லிம்கள் இந்தப் பொராட்டத்திற்கு வரலாமா? அவர்கள் முஸ்லிம்கள் அல்ல என்று நீங்கள் கூறுகின்றீர்கள்.

2. கப்ரு வணக்கத்தை விடாமல் கடைபிடிக்கும் புறாபி முஸ்லிம் வரலாமா? அவர்களை முஷ்ரிக் என்று நீங்கள் கூறுகின்றீர்கள்.

3. நீங்கள் கூறும் தௌஹீது கொள்கை பக்கம் வராமல் எதிர்த்து நிற்கும் சுன்னத் வல் ஜமாஅத்தினர் வரலாம? அவர்களையும் நீங்கள் முஷ்ரிக்குகள் என்கிறீர்கள்.

4. நீங்கள் பிரிந்து வந்த த.மு.மு.க, ஜாக்கைச் சேர்ந்த முஸ்லிம்கள் வரலாமா? அவர்களை யூதக்கைக்கூலிகள் என்கிறீர்கள் நீங்கள்.

5. நீங்கள் எதிர்க்கும் பைஅத்தை அடிப்படையாக வைத்து இயங்கும் மனித நீதி பாசறையினர் வரலாமா? அவர்களை ஈரான் கைக்கூலிகள் என்கிறீர்கள் நீங்கள்.

6. இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி எனும் கனவுடன் செயல்படும் ஜமா அத்தே இஸ்லாமியினர் கலந்து கொள்ளலாமா? அவர்களை வழிகெட்டவர்கள் என்கிறீர்கள் நீங்கள்.

7. மக்களிடையே நல்ல பழக்கவழக்கங்களையும் கட்டுப்படுதலையும் இபாதத்தையும் உறுதியான முறையில் வார்த்தெடுக்கும் தப்லீக்கைச் சேர்ந்தவர்கள் வரலாமா? அவர்களையும் வழிகெட்டு மற்றவர்களையும் வழிகெடுப்பவர்கள் என்கிறீர்கள் நீங்கள்.

8. இனி, இவர்கள் இல்லாமல் தௌஹீதில் உறுதியுடன் இருந்து ஆரம்பகாலத்திலிருந்து அடியும் உதையும் பட்டு தமிழகத்தில் தூய இஸ்லாத்தை மக்களிடையே பரப்பவும் இப்பொழுதும் ஆங்காங்கே எவ்வித விளம்பரமும் வேண்டாம் என, அமைதியாக தங்களால் இயன்ற முறையில் இஸ்லாமிய பணிகளைச் செய்து கொண்டு வாழும், உங்களின் இஸ்லாமிய விரோத செயல்பாடுகளைக் கண்டு மனவெறுத்துப் போய் விலகிச் சென்ற நடுநிலையாளர்கள் கலந்து கொள்ளலாமா? அவர்களை "தடம் புரண்டவர்கள்" என கூறுகிறீர்கள் நீங்கள்.

இவர்கள் எவருக்காகவும் இல்லை, இவர்களை நீங்கள் ஏற்றுக் கொள்ளவும் இல்லை எனில், ஏன் இந்த "முஸ்லிம்களே" என்ற அழைப்பு?.

வெளியே, காவல்துறையினரியினரிடமிருந்து அடியும் உதயும் வாங்கவும் சிரைக்குப் போகவும் வேன்டும் எனில் மேற்குறிப்பிட்ட பட்டியலிலுள்ள முஸ்லிம்கள் எல்லாம் உங்களுக்குத் தேவைப்படுகிறார்கள்.

வீட்டினுள் இருக்கும் நேரத்தில், சீ, சீ தூரப்போ, நீ முஸ்லிமே இல்லை என்ற புறக்கணிப்பு.
வெட்கமாக இல்லை உங்களுக்கு?

சாக்கடை அரசியல்வாதிகளை விடக் கேவலமான உங்களின் இந்த நிலைபாட்டை நினைத்து உங்கல் உடல் அரிக்கவில்லை?

முதலில் உங்கள் கொள்கை என்ன என்பதை வரையறுங்கள். அதன் பின் அந்தக் கொள்கையில் (குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும்) உறுதியுடன் இருந்து போராடுங்கள். வெற்றி அல்லாஹ் தருவான். கூட்டம் சேர்ந்தால் தான் வெற்றி என்ற மயக்கத்தில் இருந்து வெளிவாருங்கள். கூட்டம் இன்று இருக்கும். நாளை மற்றொருவருக்கு இருக்கும். கொள்கை தான் முக்கியம்.முதலில் கொள்கை என்ன என்பதை வரையறுத்து விட்டு வாருங்கள் - கொள்கையற்றவர்களே!
Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template