"அராஜகமான கைதுக்கு மன்னிப்பு கேட்ட இன்ஸ்பெக்டர்"
முகபத்பீவீ என்னும் பெண்மணியை சட்ட விரோதமாகக் கைது செய்து லாக்கப்பில் வைத்துவிட்டு, பொய் ஆவணங்களைச் சமர்ப்பித்த இன்ஸ்பெக்டரை ஐகோர்ட்டு மன்னிப்புக் கேட்க வைத்தது.
மதுரை ஐகோர்ட்டில் ராமநாதபுரத்தை சேர்ந்த முகபத்பீவீ தாக்கல் செய்த ரிட் மனு:
வரதட்சணை வழக்கில் அனைத்து பெண்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தா மற்றும் 12 போலீசார் கடந்தாண்டு செப்., 23ல் அதிகாலை 4.30 மணிக்கு என் வீட்டிற்கு வந்தனர். தொழுகையில் ஈடுபட்ட என்னை புடவை கூட கட்ட விடாமல் கைலியுடன் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். கைது நமுனாவை என் குடும்பத்தினரிடம் வழங்கவில்லை. மாஜிஸ்திரேட் முன்பு மாலை 6.30 மணிக்கு ஆஜர்படுத்தினர். நான் உடல்நிலை சரியில்லை என கூறினேன். கோர்ட் உத்தரவின்படி இரவு 7 மணிக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். என் கைது நமுனாவை சகோதரர் லியாகத் அலியிடம் பகல் 2 மணிக்கு வழங்கினர். அதில் காலை 11.30 மணிக்கு என்னை கைது செய்ததாக குறிப்பிட்டனர். போலீஸ் நடவடிக்கை சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலுக்கு புறம்பானவை. எனவே கோர்ட் அவமதிப்பு வழக்கில் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கோரினார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கே.சந்துரு பிறப்பித்த உத்தரவு:
இவ்வழக்கில் இன்ஸ்பெக்டர் 3 பதில் மனுக்களை தாக்கல் செய்துள்ளார். ஆவணங்களை பார்க்கையில் சுப்ரீம் கோர்ட் வழிமுறைகளை இன்ஸ் பெக்டர் மீறியுள்ளது தெரிகிறது. அவர் போட்ட பதில் மனுக்களில் அந்த மீறல்களை மறைக்க முயன்றுள்ளார். மனுதாரரை காலை 11.30 மணிக்கு கைது செய்ததாக ஒரு வாக்குமூலத்திலும், மற்றொன்றில் காலை 4.30 மணிக்கும் என குறிப்பிட்டுள்ளார். கோர்ட் அவமதிப்பு செய்ததுடன் பொய் ஆவணங் களையும் இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்துள்ளார். இன்ஸ்பெக்டருக்கு 51வயது எனவும், கோர்ட் தண்டனை வழங்கினால் பதவி உயர்வு பாதிக்கும் என அவரதுவக்கீல் குறிப்பிட்டுள்ளார். அதே வேளையில் தவறு செய்த இன்ஸ்பெக்டரை விடவும் முடியாது. இன்ஸ்பெக்டரை தண்டிப்பதன் மூலம் மனதளவில் பாதிப்புக்குள்ளான மனுதாரரை சமாதானப்படுத்த இயலும். இன்ஸ்பெக்டர் மனுதாரர் வீட்டிற்கு சென்று அவரிடம் மன்னிப்புகோர வேண்டும். மனுதாரர் அவரை மன்னித்தால் இன்ஸ்பெக்டர் கோர்ட் நடவடிக்கையில் இருந்து தப்ப இயலும். இவ்வாறு குறிப்பிட்டார்.
அதன்படி இன்ஸ்பெக்டர் முகபத்பீவீ வீட்டிற்கு சென்று மன்னிப்பு கோரினார். அதனை முகபத்பீவீயும் ஏற்றார். நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது இன்ஸ்பெக்டர் மன்னிப்பு கேட்ட விவரத்தை அவரது வக்கீல் தெரிவித்தார். மனுதாரர் தரப்பில் மன்னிப்பை ஏற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக இரன்டு முறை TMPOLITICS செய்திகள் வெளியிட்டுள்ளது. இறுதியில் நியாயம் கிடைத்துள்ளது.
தவறாக பயன்படுத்தப்படும் வரதட்சினை சட்டம்
பெரியபட்டினம் (AUSTRALIA??) அழகி சுமையாவை கைது செய்ய உத்தரவு
0 மறுமொழிகள்:
Post a Comment