கைது செய்யப்பட்டுள்ள பெண் ஹிந்து தீவிரவாதத் துறவியான சாத்வி பிரஞ்யா சிங் மலேகாவ்ன் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் தனக்கு சொந்தமானது தான் என வாக்குமூலம் அளித்தாள்.
அவளிடம் விசாரணை நடத்திய மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் போலீசார் அவரும் இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய இன்னொரு குற்றவாளியான ராம்நாராயணனும் இந்த சதித் திட்டம் குறித்து தொலைபேசியில் சமீபத்தில் பேசிய விவரத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
அதன் விவரம்:
சாத்வி: என்னை போலீசார் இன்று மாலை கைது செய்யப் போகிறார்கள்.
ராம்நாராயணன்: ஏன்?
சாத்வி: மலேகாவ்ன் நகரில் குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட எனது மோட்டார் சைக்கிளை அவர்கள் கண்டுபிடித்துவிட்டனர்.
ராம்நாராயணன்: பைக்கை நீங்கள் தான் விற்றுவிட்டீர்களே.. (விற்றதாக சொல்லிவிடலாம் என்பதை இப்படி சொல்கிறார்)
சாத்வி: எங்கே விற்றதாக சொல்வது.. மத்திய பிரதேசம், குஜராத் அல்லது மகாராஷ்டிரம்..?
ராம்நாராயணன்: குஜராத் என்று சொல்லுங்கள்.
சாத்வி: எப்போது விற்றேன் என்று கேட்டால் என்ன சொல்ல?
ராம்நாராயணன்: ஞாபகம் இல்லை என்று சொல்லி விடுங்கள்.
சாத்வி: அந்த குண்டுவெடிப்பில் ஏன் மிகக் குறைந்த நபர்களே இறந்தனர். அதை நீ எங்கே பார்க் செய்தாய்.. ஆட்கள் நிறைய இருந்த இடத்தில் நிறுத்த வேண்டியது தான்?
ராம்நாராயணன்: நிறைய பேர் இருந்த இடத்தில் தான் நிறுத்த முயன்றேன். ஆனால், சரியான இடம் கிடைக்கவில்லை. கடைசியாக நான் நிறுத்திய இடத்தில் நிறைய பேர் இல்லை. சரி.. நிலைமை மோசமானால் (கைது நடவடிக்கை) அதை நாம் சந்திப்போம்...
இவ்வாறு அவர்கள் பேசியுள்ளனர் ஹிந்து திவிரவாதிகள்.இந்த ஆதாரத்தை நீதிபதியிடம் போலீசார் வழங்கியதையடுத்து சாத்வியை வரும் 17ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அப்போது பேசிய பிரஞ்யா, இந்த வழக்கு பொய்யானது, விசாரணை என்ற பெயரில் போலீசார் என்னை கொடுமைப்படுத்தினர் என்றார். பின்னர் அவர் நீதிமன்றத்திலேயே மயங்கினார்.
அவருக்கு ஆதரவாக சிவ சேனா, பாஜக, ஹிந்து மகா சபா, அபினவ் பாரத் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தில் வெளியே போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து அங்கு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.முன்னதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த சாத்வி பிரஞ்யா, மலேகாவ்ன் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் தனக்கு சொந்தமானது தான் என்று தெரிவித்தார்.
சாத்விக்கு பாஜக ஆதரவு:
இதற்கிடையே சாத்விக்கு பாஜக வேண்டிய உதவிகளை செய்யும் என அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.இந்த வழக்கே பொய்யானது, இந்துக்களை அவமதிக்கும் சதியின் ஒரு பகுதி தான் இந்த வழக்கு.
தீவிரவாதத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை, ஆனால் பொய் வழக்கு- விசாரணையை எதிர்க்கிறோம் என்றார்...
http://www.adiraipost.blogspot.com/
http://www.adiraipost.blogspot.com/
0 மறுமொழிகள்:
Post a Comment