Sunday, November 23, 2008

கோவையில் காதலனுடன் கல்லூரி மாணவி கடத்தல்-வீட்டில் அடைத்து கற்பழித்த கொடூரம்


கோவை, நவ. 23-
கோவை ரேஸ்கோர்ஸ் ரெட்பீல்டு அவுசிங்ïனிட் பகுதியை சேர்ந்தவர் மோகனபிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மோகன பிரியா பொள்ளாச்சி ரோட் டில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.பி.ஏ. இறுதியாண்டு படித்து வருகிறார்.

இவரது நண்பர் சாய்பாபா காலனியை சேர்ந்த ஆனந்த் (30). இவருக்கு திருமண மாகிவிட்டது.

இவர்கள் இருவரும் ரேஸ்கோர்சில் உள்ள ஒரு காபி பார்முன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது 3 பேர் கார் அருகே வந்து கார் கண்ணாடியை தட்டினர்.

கார் கண்ணாடி திறக்கப்பட்டதும், நாங்கள் போலீஸ்காரர்கள், நீங்கள் 2 பேரும் யார், எதற்காக இங்கு இருக்கி றீர்கள், உங்களை விசாரிக்க வேண்டும் என்று கோரி திடீரென காருக்குள் ஏறிக் கொண்டனர். ஆனந்தும் போலீசார் தான் என நம்பினார்.

காரை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்வதாக கூறிய அவர்கள் சூலூர் அருகே கொண்டு சென்றனர்.

அப்போது காரில் இருந்த 3 பேரும் அவர்களை மிரட்டினர். பின்னர் கார் சூலூரில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டு முன்பு போய் நின்றது. மோகனபிரியா, ஆனந்தைகாரில் இருந்து இறக்கி வீட்டுக்குள் அழைத்து சென்று கத்தியை காட்டி மிரட்டி 2 பேரையும் நிர்வாணப்படுத்தினர்.

தொடர்ந்து அவர்களை நிர்வாண கோலத்தில் செல்போனில் போட்டோ, வீடியோ எடுத்துக் கொண்டனர். அதோடு இல்லாமல் மோகன பிரியாவை கற்பழித்துள்ளனர். மேலும் மெழுகு வர்த்தியை எரிய வைத்து மெழுகை மோகனபிரியாவின் உடலில் கொட்டி சித்ரவதை செய்துள்ளனர்.

வலிதாங்க முடியாத மாணவி மோகனபிரியா அலறிதுடித்தார். பின்னர் அந்த கும்பல் இதுப்பற்றி வெளியே சொன்னால் உங்களது நிர்வாண படங்களை இன்டர்நெட்டில் வெளியிடுவோம் என்று மிரட்டி ரூ.5 லட்சம் பணமும் கேட்டுள்ளனர்.

பணம் கொண்டு வர ஆனந்தை மட்டும் கொள்ளை கும்பல் அனுப்பி வைத்தது. அப்போது அங்கிருந்து வந்த அவர், நடந்த விவரங்களை செல்போன் மூலம் கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தெரிவித்தார்.

அதன்படி போலீஸ் கமிஷனர் மஹாலி உத்தர வின் பேரில், துணை கமிஷனர் ராஜேந்திரன், ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தர்ராஜன் தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பாழடைந்த வீட்டுக்குள் போலீசார் அதிரடியாக நுழைந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் 3 பேரும் தப்பி ஓடினர்.

அவர்களில் ஒருவரை போலீசார் விரட்டி பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது அவர் உக்கடம் பகுதியை சேர்ந்த ஹக்கீம் (வயது 30) என்பது தெரியவந்தது. இவர் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்பு உடையவர் ஆவார்.

மேலும் ஹக்கீம் கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளி பூனைக்கண் சலாம் என்பவரின் சகோதரர் ஆவார். ஹக்கீமிடம் துணை கமிஷனர் ராஜேந்திரன், உதவி கமிஷனர் சுந்தரவடிவேல் ஆகியோர் நடத்திய விசா ரணையில் பரபரப்பு தகவல் வெளியானது.

கைதான ஹக்கீம் தலைமை யிலான கும்பல் தனியாக நிற்கும் காதலர்களை கத்தி முனையில் கடத்தி சென்று அவர்களை நிர்வாணமாக்கி, படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளனர்.

வழக்கமாக இவர்கள் காதல் ஜோடிகளை சூலூர் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டுக்கு கொண்டு சென்று மிரட்டுவார்கள். அப்போது இவரது மற்ற நண்பர்களும் சேர்ந்து கொண்டு மிரட்டி வந்தனர்.

அதோடு இல்லாமல் பெண்களை கற்பழிக்கவும் செய்து உள்ளனர். இவர்கள் மீது பல வழக்குகள் உள்ளன. சினிமாவை மிஞ்சும் வகையில் திட்டமிட்டு இதுபோன்ற சம்பவங்களை அரங்கேற்றி இருப்பது தெரிய வந்துள்ளது.

கைதான ஹக்கீம் மீது கற்பழிப்பு வழக்கு போடப் பட்டுள்ளது. அதோடு ஹக்கீம், கொள்ளை கும்பலை சேர்ந்த ஜார்ஜ், மணி உள்பட 6 பேர் மீது போலீசார் கூட்டு சதி, கொலை மிரட்டல் உள்பட 11 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைதான ஹக்கீம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தப்பி ஓடிய 5 பேரையும் தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

மாணவியை கற்பழித்ததாக ஹக்கீம் மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட் டுள்ளது. ஆனால் மேலும் 2 பேர் மாணவியை கற்பழித்த தகவலும் வெளியாகி யுள்ளது.

இதற்கிடையே கொள்ளை கும்பலால் பாதிக்கப்பட்ட மாணவி மோகனபிரியா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
நன்றி : மாலைமலர்

1 மறுமொழிகள்:

said...

//அவர்களில் ஒருவரை போலீசார் விரட்டி பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது அவர் உக்கடம் பகுதியை சேர்ந்த ஹக்கீம் (வயது 30) என்பது தெரியவந்தது. இவர் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்பு உடையவர் ஆவார்.//

"இது உண்மையாக இருந்தால்" இந்த துலுக்க பயலின் குஞ்சை ஒட்ட வெட்டி விடவேண்டும். அப்போது தான் மற்ற 'ஆண்களுக்கு' பயம் இருக்கும். இனி மேல் எந்த பெண்ணையும் அவனால் 'அது' செய்ய இயலாது. அப்பறம் பெண்ணை போல யூரின் போகும் போது அதன் அவஸ்தையும் புரியும்.


குறிப்பு: எனது பின்னுட்டத்தை எடிட் செய்ய வேண்டாம்.with care and love,

Muhammad Ismail .H, PHD,

www.gnuismail.blogspot.com

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template