Tuesday, December 02, 2008

ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் சக்திகளை நடமாட விடாதீர்கள்!!

ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் மதவெறிச் சக்திகளை நடமாடவிட்டால் ஆபத்து மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும்

சென்னையில் தமிழர் தலைவர் விளக்கவுரை

சென்னை, டிச. 2- மத தீவிரவாத சக்திகளான ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார்க் கும்பலை நாட்டில் நடமாட விடாதீர்கள். இதில் கட்சி வேற்றுமை இருக்கக் கூடாது. மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

சாமியார் பெயரை மாற்றிக் கொண்டு

சாமியார் என்றாலே போலிதான். இதில் போலிச்சாமியார் என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை. சாமியார் ஆசிரமம் நடத்துவதாக சொல்லிக்கொண்டு பெயரை மாற்றிக் கொள் கின்றான். யார் மகந்த் என்று கேட்டால் அமிர்தானந்த். நம்ம ஊர் மஞ்சக்குடி அய்யர் எப்படி தயானந்த சரஸ்வதி ஆனார்கள் பாருங்கள் - அதுமாதிரி - இவர் யார்?

தயானந்த பாண்டே

வடநாட்டுப் பார்ப்பனர். இவருடைய பெயர் என்னவென்று சொன்னால் தயானந்த பாண்டே. பாண்டே என்றாலே வட நாட்டிலே பீகாரிலே பார்ப்பான் என்று அர்த்தம். தயானந்த பாண்டே திடீரென்று மகந்த் அமிர்தானந்த் ஆகிவிட்டார். அவர் எப்படி ஆனார் என்று இன்றைய விடுதலையைப் பார்த்தீர்களேயானால், நம்முடைய கவிஞர் அவர்கள் அருமையாக எழுதியிருக்கின்றார் - ஒற்றைப் பத்தியிலே.

சாமியாரின் வளமான தொழில்

சங்கராச்சாரியாரின் விலை என்ன? எட்டு ஆண்டுகளுக்கு முன்னாலே இந்திய இராணுவத்தில் விமானப் படையில் பணியாற்றியவர். அதன் பிறகு வாரணாசி - காசிக்கு வந்தார். சாமியார் தொழில் வளமான தொழில் என்பதை உணர்ந்தார். சபலம் தட்டியது. இண்டஸ்ட்ரிலேயே முதல் போடாத இண்டஸ்ட்ரி ஒன்று உண்டு என்று சொன்னால் - அது சாமியார் இண்டஸ்ட்ரிதான் (கைதட்டல்).

ஒன்றுமில்லை. காவிபோட வேண்டும், காவிக்கு வழியில்லை என்றால், வடநாடாக இருந்தால் கோவணம், கோவணமும் கிடைக்கவில்லையென்றால் - உச்சக் கட்டம் - நிர்வாண சாமியார் (கைதட்டல்). வாரணாசியில் ஏகப்பட்ட சங்கராச்சாரியார்கள் அங்கு இருக்கின்றார்கள். பெரிய போட்டி. சங்கராச்சாரியார் பதவியை இவர் விலைக்கு வாங்கினார். சங்கராச்சாரி பதவி ரூபாய் 15 லட்சத்திற்கு

வாரணாசியில் உள்ள ஒரு மடத்திற்கு ரூபாய் 15 லட்சத்திற்கு கொடுத்து அந்த மடத்தின் சங்கராச்சாரியார் பதவியை விலைக்கு வாங்கிவிட்டார். சங்கராச்சாரி பதவி என்பது ஏலம் போடுகின்ற பதவி அல்ல. இவரெல்லாம் கடவுளோடு பேசினாரென்றும், தானே கடவுள் என்றும் சொல்லக் கூடிய அளவிற்கு இருக்கக் கூடியவர்கள். இந்த செய்தியை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளவேண்டும்.

2007 ஆம் ஆண்டு மே மாதம் அய்தராபாத்தில் மெக்கா மசூதி குண்டுவெடித்தது. 2007 அக்டோபர் குவாஜா மொய்கவதீன் சிஷ்டி தர்கா அஜ்மீர் குண்டு வெடித்தது. 2008 மாலேகாவ்ன் குண்டு வெடிப்பு. ஆறுபேர் சாவு. 90 பேர் படுகாயம். சாத்வி பிரக்யா சிங் தாகூருக்கு மோட்டார் சைக்கிள் சொந்தம்.

மோட்டர் சைக்கிள் Boldஇல்லை என்றால் துப்பு துலங்கியிருக்காது

அந்த மோட்டார் சைக்கிள் இல்லையென்றால் இந்த துப்புவே வெளியே வந்திருக்காது. பிரக்யா சிங்தாகூருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை சுனில் ஜோஷி என்பவருக்கு 2004-ல் கொடுத்தார். அவர் இறந்தபின் கல்சங்கரா என்பவர் அதைப் பயன்படுத்தி குண்டு வைத்தார். இந்து மிலிட்டரி ஸ்கூல் என்று நடத்துகிறார்கள். நாம் யாராவது முஸ்லிம் மிலிட்டரி ஸ்கூல் நடத்தினால் அனுமதிப்பார்களா? அதை விடுவார்களா?

இந்து மிலிட்டரி ஸ்கூல்

ஆனால், இந்து மிலிட்டரி ஸ்கூல் நடத்தி நூற்றுக் கணக்கில் வன்முறையாளர்களை, தீவிரவாதிகளை பயங்கரவாதிகளை, மதவெறியர்களை உருவாக்கி அனுப்புகிறார்கள் என்று சொன்னால், அது சாதாரணமா? அது மட்டுமல்ல, பிரக்யாசிங் தாக்கூர், லெப்டினென்ட் கர்னல் சிறீகாந்த் பிரசாத் புரோகித், தயானந்த் பாண்டே (சங்கராச்சாரியார்) உள்பட பத்துப்பேர் கைது செய்யப்பட்டனர். நண்பர்களே, இந்த நேரத்திலே செய்தி முதலில் ஒன்று, இரண்டு என்று வந்தவுடனே இதை சாதாரணமாகக் கண்டு பிடிக்க மாட்டார்கள் என்று நினைத்தார்கள்.

முதலில் வீரம் பேசியவர்கள்

செய்தி நிறைய வந்தவுடனே என்ன சூழ்நிலை? இனிமேல் தாக்குப் பிடிக்க முடியாது என்று சொன்னவுடனே முதலில் வீரம் பேசினார்கள். தீவிரவாதமா? ஆகா, யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பேசினார்கள்.

உண்மைகளை விசாரிக்கும் குழு

இப்பொழுது அடுத்தபடியாக அத்வானி சொல்லுகின்றார் - அதெல்லாம் சங்பரிவார்க்கும் அதற்கும் சம்பந்தமில்லை. அடுத்து பி.ஜே.பி.யினுடைய தலைவர் ராஜ்நாத் சிங் சொல்லுகின்றார் - அவர்கள் எல்லாம் நிரபராதிகள். உடனே இதைப்பற்றி காவல்துறை எடுத்து விசாரிக்கிறது.

விசாரிக்கிறபொழுது உண்மைகளை வரவழைக்கிறார்கள். இன்னும் கேட்டால் உண்மையைக் கண்டறியக் கூடிய பரி சோதனைகளை எல்லாம் நடத்துகின்றார்கள். இவ்வளவும் செய்த பிற்பாடு அவர்கள் உண்மையை வரவழைக்க முயன்ற நேரத்திலே பல தகவல்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்புபடுத்தி வந்து கொண்டிருக்கின்றன. இந்த விசாரணையைத் தடை செய்ய வேண்டும் என்கிற அளவிற்குப் போகிறார்கள்.

அதுமட்டுமல்ல, இதை நிறுத்த வேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கின்றார்கள். எந்த அளவுக்கு என்றால், இப்படி நிறைய செய்திகளை சொல்லலாம். ஒன்றே ஒன்றைநான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மிலிட்டரியைக் கொச்சைப்படுத்தாதீர்கள் என்று

பி.ஜே.பி. யினர் சொல்லுகின்றார்கள். நீங்கள் மிலிட்டரியையும், மிலிட்டரி அதிகாரிகளையும் கொச்சைப்படுத்தாதீர்கள் என்று நடைமுறையில் என்ன செய்திருக்கின்றார்கள்?. ரிட்டையர் கூறுகிறார்கள் ரிட்டையர் ஆனவன் அங்கு அதிகாரத்தைப் பயன்படுத்தியிருக்கின்றான். துப்பாக்கியைப் பயன்படுத்தியிருக் கின்றான். இன்னும் வரிசையாகச் சொல்லவேண்டுமானால், ஏராளமான செய்திகள் இருக்கின்றன. ஒரு நாவல் படிக்கிற மாதிரி அவ்வளவு சுவையாக இருக்கிறது. பரபரப்போடு அவ்வளவு செய்திகள் இருக்கின்றன.

இரண்டு நாட்களுக்கு முன்னாலே டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் எழுதியிருந்தார்கள். இன்றைக்கு காலையிலே வந்திருக்கின்ற டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் கூட எழுதியிருக் கின்றார்கள். அதை எடுத்துச் சொல்லுகின்றார்.

Mind your words B.J.P leaders should not shoot off their mouths.

நல்ல அறிவுரையை ஜாடையாக சொல்லுகின்றார். நீ போய் முட்டாள்தனமாக உளறிவிடாதே. நிறைய விஷயம் வர இருக்கிறது. அதனால் நீ ஜாக்கிரதையாக இரு. வாயைப் பொத்திக்கொண்டிரு. நீ வெளியே வந்து சொல்ல ஆரம்பித்தால் எல்லாம்போய் விடும். பல தகவல்கள் இன்னும் வெளியே வர இருக்கின்றன என்று அவர்களுக்கு உதவி பண்ணுவதற்காகத்தான் ரொம்பத் தெளிவாகச் சொன்னார். இங்கே இதைத் தொடர்ந்தால் உள்நாட்டு யுத்தம் வரும் என்று பேசக் கூடிய அளவுக்கு இருந்தால் இப்படி பேசியவர் வெளியே இருக்கலாமா? தயவு செய்து நினைத்துப் பார்க்க வேண்டும் (கைதட்டல்).

மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறதே. ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பதைப்போல தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் என்று சொல்வதா? அல்லது இஸ்லாமியர்கள் என்று சொல்லுவதா? அல்லது கிறித்தவர்கள் என்று சொல்லுவதா?

இராணுவத்தைக் கைக்கொள்வார்களாம்?

ஆகவே உள்நாட்டு யுத்தத்தையே நாங்கள் நடத்துவோம். நாங்கள் தீவிரவாதத்தை நடத்துவோம். நாங்கள் இராணு வத்தையே கைக் கொள்வோம். நாங்கள் எல்லாம் வெடிகுண்டுகளுக்கு ஏற்பாடு செய்வோம். அந்தப் பழியை இஸ்லாமியர்கள் மீதோ, கிறித்தவர்கள் மீதோ, சிறுபான்மையினர்மீதோ அல்லது மற்றவர்கள் மீதோ போடுவோம் - நடவடிக்கை எடுக்கக் கூடாது.

கேட்டால் உள்நாட்டு யுத்தம் வரக்கூடிய அளவிற்கு அவர்கள் துணிந்திருக்கின்றார்கள் என்றால் அதை அனுமதிக்கலாமா? அங்கு இருக்கிறதோ - இல்லையோ தமிழ்நாடு அதற்கு வழிகாட்ட வேண்டாமா?

கலைஞர் வகுத்த வியூகம்

நாற்பதும் கலைஞர் அவர்கள் வகுத்த வியூகத்தினாலே நாற்பது தொகுதிகளிலும் வெற்றபெற்ற காரணத்தினால்தான் மத்தியிலே மதவெறி ஆட்சி இல்லாமல் ஆக்கப்பட்டது. அதை நன்றாக நினைவிலே வைத்துக் கொள்ளவேண்டும். இதற்கு நாம் எப்படி பதில் சொல்லப்போகிறோம் என்று சொல்லும்பொழுது இந்த உணர்வை முன்னிலைப்படுத்த வேண்டும். அடுத்த தலைமுறை மிக முக்கியம். அடுத்த தேர்தல் என்பதை விட அந்த தேர்தல் அடுத்த தலைமுறையை உருவாக்குவதற்கு பாதுகாப்பதற்கு எப்படி இருக்கவேண்டும் என்பதை எல்லோரும் நினைக்கவேண்டும்.

ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவாரை எதிர்க்க வேண்டும்

ஆகவேதான் இப்படிப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் பயங்கரவாதத்திற்கு வெளிப்படையாக இவைகள் எல்லா செய்திகளையும் எடுத்துச் சொல்லி, மக்கள் மத்தியிலே இதைக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய கடமை நமக்குண்டு. ஆர்.எஸ்.எஸ்.சை மதவெறியை எதிர்க்கிறோம் என்று சொல்லக் கூடிய அத்துணை கட்சிக்காரர்களுக்கும் உண்டு. காங்கிரஸ் நண்பர்கள் இதை செய்யவேண்டும். கம்யூனிஸ்டுகள் செய்ய வேண்டும். மற்றவர்களும் இதை செய்யவேண்டும்.

அரசியல் பணி வேறு - நாட்டுப் பணிவேறு

அரசியலிலே எந்த அணிகள் என்பதெல்லாம் இருக்கட்டும். ஆனால், இது நாட்டினுடைய பிணிகள். எனவே இதை சொல்லுகிற நேரத்திலே இதை ஒட்டு மொத்தமாகக் குரல் கொடுத்து எல்லாம் சேர்ந்து குரல் கொடுக்க நீங்கள் வராவிட்டால்கூட, ஒருவேளை இவர்களோடு சேர்ந்தால் அவர்கள் கோபித்துக் கொண்டு அணி சேராமல் போய்விடுவார்களோ என்பதற்காக நீங்கள் நினைக்காவிட்டாலும் பரவாயில்லை.

இந்தச் சக்திகளை நடமாட விடாதீர்கள்!

தயவு செய்து இந்தச் சம்பவங்களை நீங்கள் வெளியே கொண்டு வாருங்கள். மக்கள் மத்தியிலே சொல்லுங்கள். அழுத்தமும் கொடுங்கள். உரிய தண்டனை கொடுங்கள். இவைகளை - இந்தச் சக்திகளை நடமாட விடாதீர்கள். அதன்மூலமாக அமைதிப் பூங்காவாக இருக்கின்ற நாட்டை அமளிக்காடாக ஆக்குவதற்கு உள்நாட்டு யுத்தத்தை நடத்துவோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வாஜ்பேயிகளும், அத்வானிகளும், இந்த நாட்டிலே இருக்கின்ற பார்ப்பன ஏடுகளும், மற்றவர்களும் வருகிறார்கள் என்று சொன்னால், அதற்கு துளியும் இடம் கொடுக்காத அளவிற்கு தமிழ்நாடு அதற்குத் தயாராகட்டும், தயாராகட்டும் என்று சொல்லி முடிக்கின்றேன்.

- இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

நன்றி : தமிழ் ஓவியா

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template