Sunday, January 18, 2009

ததஜ (TNTJ) உடைந்தது இந்திய தவ்ஹித் ஜமாத் (ITJ) உதயம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உடைந்தது; பாக்கர் தலைமையில் புதிய அமைப்பு

சென்னை, ஜன. 16 : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு உடைந்து அதன் பொதுச் செயலாளராக இருந்த எஸ்.எம். பாக்கர் தலைமையில் 'இந்திய தவ்ஹீத் ஜமாத்' என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
சென்னையில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் புதிய அமைப்பை எஸ்.எம். பாக்கர் அறிவித்தார்.
பாக்கருடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் எஸ்.எம். சையது இக்பால், மாநிலப் பொருளாளர் அபுபக்கர் தொண்டியப்பா, மாநிலச் செயலாளர்கள் முகம்மது சித்திக், முகம்மது முனீர், முகம்மது சிப்ளி, அபு பைசல் ஆகியோரும் அந்த அமைப்பிலிருந்து வெளியேறியுள்ளனர்.

எஸ்.எம். பாக்கர் 'இந்திய தவ்ஹீத் ஜமாத்'தின் தலைவராகவும், முகம்மது சித்திக் பொதுச் செயலாளராகவும், எஸ்.எம். சையது இக்பால் துணைப் பொதுச் செயலாளராகவும், அபுபக்கர் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிய அமைப்பு குறித்து எஸ்.எம். பாக்கர் செய்தியாளர்களிடம் கூறியது:
பல்வேறு அமைப்புகளில் இருந்து எதுவும் செய்ய முடியாததால் 'இந்திய தவ்ஹீத் ஜமாத்' என்ற அமைப்பை தொடங்கி உள்ளோம்.
இந்த அமைப்பு யாருக்கும் எதிரானது அல்ல. நாங்கள் என்றும் ஓரிறை (ஒரே கடவுள்) கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள். ஓரிறை கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் எங்கள் அமைப்பில் சேரலாம். இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமான மார்க்கம் அல்ல. எல்லோருக்கும் இஸ்லாத்தை கொண்டுச் செல்வதுதான் எங்களின் முக்கிய நோக்கம். நாங்கள் ஒருபோதும் தேர்தலில் போட்டியிட மாட்டோம். ஆனால் முஸ்லிம்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை பிரசாரம் செய்வோம்.

திருக்குரான் மற்றும் நபி வழியை முஸ்லிம்கள் மத்தியில் போதிப்பது, செயல்படுத்துவது, மக்கள் தொகைக்கேற்ப முஸ்லிம்களுக்கு இட ஓதுக்கீடு கேட்டு போராடுவது, வரதட்சணை, மது, ஆபாசம், தீவிரவாதம், பிரிவினைவாதம், வட்டிக் கொடுமை, மூட நம்பிக்கைகள் போன்ற சமூக சீர்கேடுகளுக்கு எதிராக வீரியமுடன் போராடுவதற்காகவே இந்த இயக்கம்.
வெளிநாட்டு அரசாங்கம் மற்றும் அமைப்புகளிடம் இருந்து நிதி பெறமாட்டோம். இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு வேலைக்காகச் சென்றிருப்பவர்களிடமிருந்து மட்டுமே நிதி பெறுவோம் என்றார் பாக்கர்.

பாக்கர் நீக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து எஸ்.எம். பாக்கர் நீக்கப்பட்டதாக அதன் துணை பொதுச் செயலாளர் எஸ். கலீல் ரசூல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு அவர் வெளியிட்ட அறிவிப்பு: சேலத்தில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் பாக்கரை அமைப்பின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து பாக்கருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துக்கும் இனி எவ்விதத் தொடர்பும் இல்லை என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி: தினமணி

7 மறுமொழிகள்:

Anonymous said...

நான் பெரியவனா? நீ பெரியவனா? என்று போட்டி போடுவதில் இந்த தமிழக இஸ்லாமிய இயக்கங்களை மிஞ்ச ஆளில்லை.

இஸ்லாமின் பெயரால் ஒன்றுபட முடியாத இந்த ஈகோ விலங்குகள் அதை பிரச்சாரம் செய்வதாகச் சொல்வது நல்ல நகைமுரண். "அல்லாஹ்வின் கயிற்றை (ஒற்றுமை)யை பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள்"

சொற்களாலல்ல; செயல்களால் அமைவதே நல்ல பிரச்சாரம் என்று இந்தப் பதர்களுக்கு யார் விளங்க வைப்பது?

இறைவா, இஸ்லாமை இத்தகைய சந்தர்ப்பவாத முஸ்லிம்களிடமிருந்து பாதுகாப்பாயாக.

said...

காலைவணக்கம்!
கவித்தேநீர் அருந்த
என் வலை
வருக.
அன்புடன்,
தேவா..

said...

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
தேசிய லீக்...சுன்னத்துல் ஜமாத்,ஜாக்,தமுமுக...தவ்ஹீத் ஜமாத்...பாப்புலர் ப்ரண்ட், மனித நீதி பாசறை,இந்திய தேசிய மக்கள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, இந்திய தவ்ஹித் ஜமாத்...போதாது..இன்னும் இன்னும்...நம் ஒற்றுமையை பறை சாற்ற இன்னும் இன்னும்...நிறைய எதிர்பார்க்கிறோம்...

said...

intha naiyingala thirutthave mudiyadhu bakkar oru pombala porukki antha ala intha ayokkiya pj en itthana naal vacchurundhannu theriyala

Anonymous said...

ithu than islam entru mattru mathathinar elli nagai aada nalla santharpatrrai eaar pduthi kodutha Ba(thar)kkarukku -Nanri

Anonymous said...

intha ammaipil irundundu (TNTJ)pirindalum inimel thani amaibu uruvakka mattom enru pala medaihalil urathu sonna bakkara thirumbavum oru privu,amaippu uruvakkiyadu. vekkappada venum, ungalin asingangali maraipadatku ningal therndu edutha vali iduvo??? ...
ashkar fuard Duabi, sri lankan

Anonymous said...

bakkare jaqh, tmmk avarhali vimarsithu kodirunda ningala ! ungalin web il avarhalin muhavari? ...

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template