Tuesday, February 24, 2009

வன்முறை வேண்டாம்! மீலாதை நடத்துபவர்களும் நம்முடைய சகோதர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே, நாம் அனைவர் மீதும் அந்த ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக. இஸ்லாமிய மார்க்கம் வரையறுக்கப்பட்ட மார்க்கமாகும். இதில் ‘லாயிலாஹா இல்லாஹ் முஹம்மதுர் ரசூல்லாஹ்” என்ற திருக்கலிமாவை மொழிந்தவர்கள் முஸ்லிம்கள். அல்லாஹ்வை இலாஹ்வாகவும்,நபிகள் நாயகத்தை இறைவனின் தூதராகவும் ஏற்றுக் கொண்டவர்கள் முஸ்லீம்கள் எனில்- மூமீன்கள் என்பவர்கள் யார்? என்பதை சமுதாய மக்கள் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

அல்லாஹ்வை இலாஹ்வாகவும் , நபிகள் நாயகத்தை இறைவனின் தூதராகவும் ஏற்றுக் கொண்டு இறைவன் முஸ்லீம்களுக்கு கட்டளையிட்டுள்ள கடமைகளை நிறைவேற்றி உலகத்தில் தோன்றிய நபிமார்களை நபிமார்கள் என்றும் இறைவன் எந்த ரசூலை ரசூலாக பறைசாற்றினானோ அந்த நாயகத்தின் மீது பிரியம் வைப்பது ஒவ்வொரு முஸ்லீம்களின் மீதும் கடமை என்பதை நடுமை நிலைக் கொண்ட பகுத்தறிவிற்கு சொந்தக்காரர்களாய் வாழும் உலக முஸ்லீம்கள், மூமின்கள் யாராலும் மறுக்கமுடியாது.இறைவன் தனது திருமறையாம் திருக்குர்ஆனில் இறைவனும் அவனது மலக்குமார்களும் ரசூல் (ஸல்) மீது ஸலவாத்து சொல்வாதாக மார்க்கத்தின் கண்மனிகள் வாயிலாக நாம் அறிய தெரிகின்றோம். இவ்வறாக கண்மனி நாயகத்தை இறைவன் கண்ணியப்படுத்தயிருக்க, நாயகத்தை இறைதூதராக ஏற்றுக்கொள்வோம் ஆனால் நாயகத்தின் மீது பிரியம் வைப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை என்று வாதிப்பவர்களும் சிலர் உலா வருகின்றனர். இவர்கள் நேற்று பெய்த மழையில் இன்று முனைத்த காளன்களைப் போன்றவர்கள். தங்களை மார்க்க மேதைகள் என்றும் தவ்ஹிதிற்கு சொநத்காரர்கள் என்றும் தன்னையே தாங்கள் புகழாரம் சூட்டிக்கொள்கின்றனர். நபி பிறந்த நாளை மீலாது என்று கொண்டாடி வந்த (அல்லது) நாயகம் பிறந்த நாளை மீலாது என்பதை பறைசாற்றுகின்ற மக்களைப் பார்த்து யுதனின் கைகூலிகள் தங்களை தவ்ஹித் வாதிகள் என்ற போர்வையை போர்த்திக் கொண்டு கண்ணிருந்தும் குருடனாய், காதிருந்தும் செவிடனாய் , வயிற்றை வளர்க்க இயக்கத்தை தோற்றுவித்தவர்களுக்கு கொடிப்பிடித்துக் கொண்டீருக்கின்றவர்கள் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.


நாயகத்தை கண்ணயப்படுத்தாமல் நீங்கள் எவ்வாறு மறுமையில் கண்ணியப்படுப்படுவீர்கள். நாயகத்தின் மீது ஸலவாத்து கூறாமல் எவ்வாறு நீங்கள் வெற்றியடைவீர்கள் அன்பிற்கினிய தமிழக சகோதரர்களே மீலாது நபி (ஸல்) கொண்டாடுவதினால் என்ன பயன் என்று கேட்கிறீர்களா? அல்லது மீலாது கொண்டாடுவது பித்அத் என்று சாதாரணமாக விவாதிக்க முன் வருகிறீர்களா? என்பது நமக்கு தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நன்றாக தெரிகிறது நீங்கள் நடுநிலையாளாய் இருக்க பழக்கப்படவில்லை.


மீலாது கொண்டாடுவதினால் என்ன பயன் என்றுக் கேட்கிறீர்களா? மீலாது என்ற வார்த்தைக்கு பிறப்பு என்று பொருள். நபி பிறந்த நாளை மீலாது என்று தமிழகத்தில் கொண்டாடி வருகின்றனர். சில ஊர்களில் மீலாது மேடைகள் அமைத்து நபிகள் நாயகத்தின் சிறப்புகள் பற்றி பேசப்படுகின்றது .இதனால் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை நெறிமுறைகள் பற்றியும் அவர்கள் நமக்கு சொன்ன உபதேசங்களைப்பற்றியும் அறிந்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுகின்றது. ஸவவாத்து சொல்லும் வாய்ப்பும் ஏற்படுபகின்றது. மேலும் சில ஊர்களில் மதரஸா சிறார்களுக்கு நபிகளாரைப் பற்றிய தலைப்புகளில் கட்டுரைப்போட்டிகள், பேச்சுப் போட்டிகள், கிராத் போட்டிகள் நடத்துகின்றனர். இவ்வாறு செய்வதினால் சிறார்களின் உள்ளத்தில் நபிகள் நயாகத்தை பற்றிய உணர்வு, பிரியம் அதிகமாகுவது மட்டுமல்லாமல் நாமும் நபிகளாரின் வாழ்க்கையை முழமையாக அறிந்து கொள்ள வேண்டும், பின்பற்ற வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட வாய்ப்பு ஏற்படுகின்றது.

மீலாது என்ற பெயரில் மார்க்கத்திற்கு முரணான செயல்பாடுகள் நடைபெறுமாயின் அவை கண்டிக்கத்தக்கவை என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. உடன்பாடில்லாத சகோதர்கள் தயவு செய்து நடுநிலையைப் பேணி கொள்ளுங்கள்.

அதை விடுத்து வன்முறையில் ஈடுபடாதீர்கள. மீலாதை நடத்துபவர்களும் நம்முடைய சகோதர்கள் என்பதை உணருங்கள். அல்லாஹ் நாம் அனைவருக்கும் நற்கிருபை செய்வனாக! சத்தியத்தை சத்தயமாகவும், அசத்தியத்தை அசத்தியமாகவும் விளங்கி கொள்ள இறைவன் கிருபை செய்வனாக! தமிழக முஸலீம் சமுதாயத்தை ஒற்றுமையாக வாழச் செய்வானாக!

இது jalhira@hotmail.com என்ற மின்னஞ்சல் மூலமாக வந்தது.

1 மறுமொழிகள்:

Anonymous said...

//மேலும் சில ஊர்களில் மதரஸா சிறார்களுக்கு நபிகளாரைப் பற்றிய தலைப்புகளில் கட்டுரைப்போட்டிகள், பேச்சுப் போட்டிகள், கிராத் போட்டிகள் நடத்துகின்றனர். இவ்வாறு செய்வதினால் சிறார்களின் உள்ளத்தில் நபிகள் நயாகத்தை பற்றிய உணர்வு, பிரியம் அதிகமாகுவது மட்டுமல்லாமல் நாமும் நபிகளாரின் வாழ்க்கையை முழமையாக அறிந்து கொள்ள வேண்டும், பின்பற்ற வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட வாய்ப்பு ஏற்படுகின்றது.//

பாராட்டப்பட வேண்டியது...

//மீலாது என்ற பெயரில் மார்க்கத்திற்கு முரணான செயல்பாடுகள் நடைபெறுமாயின் அவை கண்டிக்கத்தக்கவை என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை//

கட்டயாமாக கூடாது, கண்டிக்கப்பட வேண்டியது...

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template