Friday, March 27, 2009

தம்மாம் மாநகரில் காயிதெ மில்லத் பேரவை ஆலோசனை கூட்டம்

சவூதி அரேபியா - தம்மாம் மாநகரில் காயிதெ மில்லத் பேரவை ஆலோசனை கூட்டம்



சவூதி அரேபியாவின் கிழக்கு மண்டலமாக திகழக் கூடிய தம்மாம் மாநகரில் தமிழக முஸ்லிம் லீகர்களின் காயிதெ மில்லத் பேரவை பொறுப்பாளர்கள் மற்றும் கேரள முஸ்லிம் லீகர்களின் கேரள முஸ்லிம் கலாச்சார சங்கம் நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் தம்மாம் - பதர் பாலி கிளினிக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கேரள முஸ்லிம் கலாச்சார சங்கத்தின் தம்மாம் மண்டல தலைவர் எம். உம்மர் தலைமை தாங்கினார்.

எதிர்வரும் இந்திய பாராளுமன்ற தேர்தல் குறித்தும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் அது ஆதரிக்கக் கூடிய அணிக் காக சவூதி அரேபியாவிலிருந்து எவ்வாறு பிரச்சார உத்திகளை மேற்கொள்வது குறித்தும், தம்மாம் மண்டபத்தில் பணியாற்றி வரு கின்ற தமிழக முஸ்லிம் களுக்கு மத்தியில் முஸ்லிம் லீகின் காயிதெ மில்லத் பேரவையை வலுப்படுத்து வதற்கான நட வடிக்கைகள் குறித்தும் மற்றும் பல முக்கிய விஷயங்கள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.

கேரள முஸ்லிம் கலாச்சார சங்கத்தின் தம்மாம் மண்டல துணைத் தலைவர் குஞ்சு முஹம்மது, காயிதெ மில்லத் பேரவை யின் தம்மாம் மண்டல அமைப்பாளர் எஸ்.கே.எம். ஹபிபுல்லா, கேரள மாநில இளைஞர் லீகின் மலப்புர மாவட்ட முன்னாள் கன்வீனர் இப்ராஹீம், கடலூர் முஹைதீன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். கேரள முஸ்லிம் கலாச்சார சங்கத்தின் நிர்வாகிகள் ஷரீப், சுலைமான், இக்பால் சாஹிப், பதர் பாலி கிளினிக் முஹம்மது, காயிதெ மில்லத் பேரவை பொறுப் பாளர்களான கோவை நாசர் ஹம்ஸா, பரங்கிப் பேட்டை கரீமுல்லாஹ், நெல்லை அப்துல் கனி, திவான், அப்துல் காதர், திவான் மைதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இறுதியாக தம்மாம் - கதீப் பகுதி கே.எம்.சி.சி. அமைப்பாளர் அப்துல் சமத் நன்றி கூறினார்.

தகவல் . இளம்பிறையான, தம்மாம்

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template