Saturday, April 04, 2009

முஸ்லிம் லீக் ஏணி சின்னத்தில் போட்டி


சென்னை :வேலூர் தொகுதியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் காதர் மொய்தீன் எம்.பி., மீண்டும் போட்டியிடுகிறார். "ஏணி' சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தி.மு.க., கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் தற்போதைய எம்.பி.,யும், கட்சித் தலைவருமான காதர் மொய்தீன் மீண்டும் போட்டியிடுகிறார். சென்னையில் நேற்று நடந்த கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


செயற்குழு கூட்டத்திற்குப் பின், காதர் மொய்தீன் எம்.பி., நிருபர்களிடம் கூறியதாவது: கட்சியின் முடிவுப்படி வேலூர் தொகுதியில் நான் மீண்டும் போட்டியிடுகிறேன். கடந்த முறை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டேன். இதை முஸ்லிம் சமூகத்தில் பல்வேறு இயக்கங்கள், கட்சியை தி.மு.க.,வில் அடகு வைத்து விட்டதாக பிரசாரத்தில் ஈடுபட்டன. இந்த பிரசாரத்தை முறியடிக்கும் வகையில், இந்த முறை "ஏணி' சின்னத்தில் போட்டியிடுகிறேன்.தி.மு.க., காங்., தேர்தல் அறிக்கைகளில், முஸ்லிம்கள் இதுவரை கேட்டு வந்த பல்வேறு கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இந்த தேர்தல் அறிக்கை, எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை போலவே உள்ளது. தி.மு.க., கூட்டணி 40 தொகுதிகளிலும் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். மூன்றாவது, நான்காவது அணி என்பதெல்லாம் இல்லாத ஊருக்கு, செல்லாத வழிகாட்டுவது போன்றது. மீண்டும் மன்மோகன் தான் பிரதமராக வருவார்.இவ்வாறு காதர் மொய்தீன் கூறினார்.
நன்றி : தினமலர்

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template