Wednesday, April 15, 2009

சரத்குமாருடன் சுமுகமான கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது - இல. கணேசன்

சரத்குமாருடன் சுமுகமான கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது - இல. கணேசன்

சென்னை : நடிகர்கள் சரத்குமார், கார்த்திக் கட்சிகளுடன், பா.ஜ., நடத்திய கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது.

தமிழகம், புதுச்சேரியில் போட்டியிடும் 12 வேட்பாளர்களின் பட்டியல் பா.ஜ., சார்பில் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது. இந்நிலையில், பா.ஜ., மாநிலத் தலைவர் இல.கணேசனை, ச.ம.க., தலைவர் சரத்குமார், நாடாளும் மக்கள் கட்சித்தலைவர் கார்த்திக் ஆகியோர் நேற்று சந்தித்து, கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், நெல்லை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, திருப்பூர் உட்பட ஆறு தொகுதிகளில் ச.ம.க.,வும், விருதுநகர், தேனி உட்பட ஐந்து தொகுதிகளில் நா.ம.க.,வும் போட்டியிடுவது என சுமுகமாக முடிவு எடுக்கப்பட்டது. வரும் 18ம் தேதி ச.ம.க., சார்பில் இதுகுறித்து அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

இதுகுறித்து பா.ஜ., மாநிலத் தலைவர் இல.கணேசனிடம் கேட்டபோது, "பா.ஜ., - ச.ம.க., - நா.ம.க.,வுடன் சுமுகமான கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பா.ஜ., போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. மற்ற கட்சிகள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளின் முழுமையான பட்டியல் இன்று வெளியிடப்படும்' என்றார்.

நன்றி : தினமலர்

தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன?

சரத்துடன் கூட்டணி என்று தமுமுக அறிவித்திருந்தது. இந்த சூழ்நிலையில் நாம் சரத்குமார் பி.ஜே.பி யுடன் கூட்டணியில் உள்ளார் என்று நாம் சுட்டிக்காட்டி தமுமுக பி.ஜே.பி யுடன் கூட்டணியா? என்று கேள்வி எழுப்பியிருந்தோம். அதை மறுக்கும் விதமாக சரத்குமார் பி.ஜே.பி யுடன் கூட்டணியில் இல்லை ஆகவேதான் நாங்கள் சரத்துடன் கூட்டணி என்று தமுமுக வினர் தங்களது இணையத்தில் மறுத்து செய்தி வெளியிட்டிருந்தனர். தற்சமயம் சரத்குமாருடன் பி.ஜே.பி யின் கூட்டணி உறுதி செய்யப்பட்டு இல.கணேசன் அவர்களால் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன? இன்றும் சரத்குமாருடன் கூட்டணி தொடர்கின்றதா இல்லையா? - முகவைத்தமிழன்

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template