Sunday, August 30, 2009

இஸ்லாமிய ஒளியில் எஸ்.பி.பட்டிணம் பள்ளி

பிஸ்மில்ல ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

இஸ்லாமிய ஒளியில் எஸ்.பி.பட்டிணம் பள்ளி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

எஸ்.பி.பட்டிணம் மெயின் ரோட்டிலுள்ள பள்ளி வாசலை யார் நிர்வகிப்பது என்பதில், ஊர் ஜமாத்தினருக்கும் த.த.ஜவினருக்கும் சச்சரவு நடந்து கொண்டிருப்பது நாமெல்லாம் அறிந்தததே! இந்தப் பிரச்சனையை இஸ்லாமிய ஒளியில் நீதியின் வழி நின்று தீர்வை தேடுவோமாக!

த.த.ஜதரப்பு கூறுவது என்ன?

இடத்தின் உரிமையாளர் எங்கள் இயக்கத்துக்கு எழுதிக் கொடுத்துவிட்டதால் எங்களுக்கு உரியதே என்கிறார்கள்!


அவர்கள் வாதம் சரியே! அவர்கள் இயக்கத்திடம் பள்ளிவாசலை ஒப்படைப்பதே நீதீ! (இதற்கு தடையாக வேறு காரணம் இருந்தால் தவிர)

இந்த நீதிப்படி மேலாப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலை த.த.ஜகாரர்கள் ஜாக் இயக்கத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஏனென்றால் அந்த பள்ளிவாசல் இடம் ஜாக் இயக்கத்தின் பெயரில்தான் வாங்கப்பட்டு பதிவும் செய்யப்பட்டுள்ளது.

ஜாக் க்கும் த.த.ஜ ஐயும் அந்தப்பள்ளிவாசலுக்காக மோதிக்கொண்டபோது, அல் ஜன்னத் மாத இதழின் செப்டம்பர் 2006 வெளியீட்டில், அந்தப் பள்ளியின் பத்திர நகல் வெளியிடப்பட்டது அதில் அந்தப் பள்ளி ஜாக் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததை மக்கள் படித்தார்கள்.

மேலும் ஜாக் இயக்கத்துக்காக அந்த இடத்தை வாங்கிய அந்த அமைப்பின் நிர்வாகிகள் சாட்சிகளாக இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இத்தகைய தெளிவான ஆதாரங்களுக்குப் பின்பும் கூட உரியவர்களிடம் பள்ளியை ஒப்படைக்காமல், பலவந்நதத்தின் மூலம் தங்களிடமே வைத்திருக்கிறார்கள் த.த.ஜ காரர்கள்.

ஆகவே எஸ்.பி. பட்டிணத்தில் தாங்கள் பேசும் நீதீயை மேலாப்பாளையத்தில் முதலில் செயல்படுத்த வேண்டும் என்பதே குர்ஆன், ஹதீஸ் வழி நடக்கும் முஸ்லிம்கள் த.த.ஜ வுக்கு வைக்கும் வேண்டுகோள்!அப்படிச்செய்யாவிட்டால் 'வேதம் ஓதும் சாத்தான்கள்' என்பதற்கு பொருத்தமான உதாரணமாக நீடிப்பிர்கள் என்பதை சொல்லி வைக்கிறோம்.

அதே போல் ஜாக் பெயரில் பதிவு செய்யப்பட்டு, ஜாக் இயக்கத்தால் கட்டப்பட்ட கடையநல்லுர் மஸ்ஜிதுல் முபாரக் தவ்ஹீத் பள்ளிவாசலையும் திருச்சி சிங்காரத் தோப்பு தவ்ஹீத் பள்ளிவாசலையும் திரும்ப அந்த இயக்கத்தினிரிடமும் த.த.ஜ காரர்கள் ஒப்படைக்க வேண்டும். முறையற்ற வழியில் அந்தப் பள்ளிவாசலையும் அபகரித்ததற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் எஸ்.பி. பட்டிணத்தில் நீங்கள் உரிமை கேட்க கொஞ்சமாவது நியாயம் இருக்கும்.

மேற்கண்ட பள்ளிவாசலையும் பற்றிய விவரங்களை உறுதிப்படுத்திக் கொள்ள, அவற்றுடன் நேரடியாக தொடர்புள்ளவர்களிடம் கேட்டுக் கொள்ளலாம்.

மேலாப்பாளையும் - சிப்பத்துல்லாஹ் செல் - 9790307894
கடையநல்லுர் - சாகுல் ஹமீது, செல் - 9842186892
திருச்சி சிங்காரத்தோப்பு –முஹம்மது – 9047783649


நோக்கம் என்ன?

பள்ளிவாசல்களை கைப்பற்றுவதற்கும் புதிது புதிதாக ஆரம்பிப்பதற்கும் தவ்ஹீத் நோக்கமா? அல்லது தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதா? என்று பார்தால் தங்களின் த.த.ஜ இயக்க ஆதிக்கத்தை நிலைநாட்டும் நோக்கமும் பிரிவினை போக்குமே தென்படுகிறது.

அதனால்தான், தவ்ஹீது பள்ளிகள் இருக்கும்போது அவற்றுக்கு அருகிலேயே சில ஊர்களிள் வீம்பாக வாடகைக்கு எடுத்த இடத்தில் பள்ளிவாசல் நடத்துகிறார்கள் இந்த த.த.ஜ வினர்.
இப்படி நாம் அறிந்த ஊர்களில் சில: நாகூர், கோட்டுர்,கீழக்கரை
இதுபற்றி உறுதிப்படுத்திக் கொள்ள
நாகூர்- காதர். செல்- 9443572374 கோட்டுர்-ஹாக்கிம்,-9445381837
கீழக்கரை – சேக் அலி, செல் : 9994296263



சயீது ஹாஜியாரும் துணைவியாரும்

சர்ச்சையாக்கப்பட்டுள்ள எஸ்.பி. பட்டிணம் பள்ளிவாசல் இடத்தின் உரிமையாளர் ஹாஜியானி திருமதி. சயீது ஹாஜியார் அவர்கள் 11.8.2009 இரவு இமயம் டி.வி. பேட்டியில் எதிர் தரப்பினரை கடுமையாக விமர்சித்து பேசினார்கள். தனது தவறை மறைத்து விட்டு பிறர் மீது கோபத்தை கொட்டினார்கள்.

1994ம் வருடம் அந்தப் பள்ளிவாசல் திறப்பு விழாவில் பலநூறு மக்கள் சாட்சியாக பள்ளிவாசலை வக்ஃப் செய்வதாக அறிவித்தும் ஊர் ஜமாத்திடம் ஒப்படைத்ததும் சயீது ஹாஜியார்தான்.

இந்த வருடம் (2009) ஜனவரி மாத்தில், பள்ளியின் பொருளாதாரத்திற்கும் நான் பொறுப்பு அதன் மற்ற காரியத்துக்கு ஊர் ஜமாஅத் பொறுப்பு என்று எழுதி கையொழுத்திட்டுக் கொடுத்ததும் சயீது ஹாஜியார்தான்.


அவர் வக்ஃப் செய்தபோதும், எழுதிக் கொடுத்த போதும் பதினான்கு வருடமாக மௌன சாட்சியாக இருந்து விட்டு இப்போது திடீரென நான் தான் இடத்தின் உரிமையாளர் என் இஷ்டப்படி யாருக்கு வேண்டுமானாலும் கொடுப்பேன் என்று கிளம்புவது உங்கள் தவறு.

இது ஊரையும் சமுதாயத்தையம் ஏமாற்றுகிற செயல் அனைவரையும் மடையர்களாக்குகிற பாதகச் செயல் உங்களின் இந்தத் தவறுக்கு நிதானத்தோடு பரிகாரம் காணுங்கள்.பின்பு உங்கள் உரிமையை நிலைநாட்டுங்கள் என்பதே உங்கள் மீது பாசமும் மரியாதையும் வைத்துள்ள எங்களின் வேண்டுகோள்!

உண்மைத் தவ்ஹீத்வாதியின் நோக்கம் பள்ளிவாசலில் நபி வழிக்குமாhற்றமான செயல்கள் நடக்கக்கூடாது என்பது தான். தங்களின் உரிமையைப் பயன்படுத்தி அனாச்சாரங்கள் நடைபெறக் கூடாதென வலியுறுத்தியிருந்தால்இ அது ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கும். மக்களின் ஒற்றுமையுடன் நபி வழி பள்ளியாக அது செயல்பட்டுக் கொண்டிருந்திருக்கும. பள்ளி பூட்டப்பட்டிருக்காது இந்த நல்ல நிலையை ஏற்படுத்த இப்போதும் காலம் கடந்து விடவில்லை .

த.த.ஜவினருக்கு

சில தனிநபர்களின் தவறான வழிகாட்டலுக்கு கட்டுப்பட்டு உங்களின் மறுமை வாழ்கைக்கு நஷ்டத்தை தேடிக் கொள்ள வேண்டாம்

கடந்த 31.7.2009 அன்று எஸ்.பி பட்டிணத்தில் ஏற்பட்ட மோதலுக்குப் பின் வந்த உணர்வுப் பத்திரிக்கையில் வெளியான புரட்டல் செய்தியை படித்த அந்த ஊரைச் சேர்ந்த த.த.ஜ தீவிர தொண்டர்கள் சிலர் மனம் நொந்து இயக்கத்தை விட்டே வெளியேறி விட்டார்கள் என்பதை தெரிந்துகொள்ளங்கள்! இது பற்றியும் இப்பள்ளியின் பதினான்கு வருட சரித்திரமும் அறிய தொடர்பு கொள்ளுங்கள். யாகூப் ஆலிம். செல்: 9442750475

அனைத்து தரப்பினரிடமும் செவிகொடுத்து கேளுங்கள்! சிந்தித்து நிதானத்துடன் செயல்படுங்கள் இல்லாவிட்டால் கீழ்வரும் அல்லாஹ்வின் பழிப்புரைக்கு ஆளாவீர்கள் என்று எச்சரிக்கிறோம் .

அல்லாஹ் கூறுகிறான்

அல்லாஹ்விடம் மிகவும் கெட்ட உயிரினம் (உண்மையை)விளங்காத செவிடர்களும் ஊமைகளுமாவர் (திருக்குர்ஆன் 8:22)


சமுதாயத்தின் நலன் விரும்பி இதனை தெரிவிக்கிறோம்.

அப்துர் ரஹ்மான் மன்பஈ
அஹ்லுஸ்ஸீன்னா இஸ்லாமிய ஆயவு மையம்
தொண்டி.செல் : 98408 28225

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template