போபால், டிச. 28-டெல்லியில் ஓடும் பஸ்சில் மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மாநிலத்தின் பல இடங்களில் பாலியல் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
மத்திய பிரதேச மாநில தலைநகர் போபால் அருகே உள்ள பால்காட் காவல் நிலையத்துக்கு நேற்று 21 வயதுடைய ஒரு இளம்பெண் வந்து புகார் கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:-
கடந்த 17-ம் தேதி மதியம் உள்ளூரில் உள்ள பரஸ்வாரா பகுதி பா.ஜ.க. அலுவலகத்திற்கு நான் இன்டர்நெட் பார்க்க சென்றேன். அப்போது அங்கு வந்த எனது உறவினர் என்னை அங்கு உள்ள ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்றார். உள்புறமாக கதவை தாழ்ப்பாள் போட்டு என்னை கட்டாயப்படுத்தி கற்பழித்தார். இது பற்றி வெளியே சொன்னால் உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டி சென்று விட்டார்.
வெளியே சொன்னால் சமுதாயத்தில் அவமானமாகப் பார்ப்பார்கள் என்று நானும் மவுனமாக, இந்த விஷயத்தை வெளியே சொல்லாமல் இருந்து விட்டேன்.
இவ்வாறு அவர் கூறி இருந்தார்.
இதே போல பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் 17 வயது இளம்பெண் 3 பேரால் கற்பழிக்கப்பட்டு அவமானம் தாங்க முடியாமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அந்தப் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளும் முன்பு ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில் கூறி இருந்ததாவது:-
இங்கு உள்ள போலீஸ்காரர் ஒருவர் எனக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்தார். கடந்த நவம்பர் 13-ந்தேதி அடையாளம் தெரியாத 3 மர்ம நபர்கள் என்னை ஒரு இடத்தில் வைத்து கற்பழித்தனர். பின்னர் இது பற்றி வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டினார்கள். இதனால் நான் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்தேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் கான்பூரில் 11 வயது சிறுமி 4 பேரால் கற்பழிக்கப்பட்ட கொடுமை அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கான்பூரில் வசித்து வரும் அந்த சிறுமியின் பக்கத்து வீட்டில் கோலு என்பவர் வசித்து வந்தார். அவர் சிறுமியை அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு 3 கூட்டாளிகளுடன் சேர்ந்து அந்த சிறுமியை பலவந்தமாக கற்பழித்தனர். பின்னர் தலைமறைவாகி விட்டனர்.
இது பற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சிறுமி தந்த அடையாளத்தை வைத்து முக்கிய குற்றவாளி கோலுவை கைது செய்துள்ளோம். மற்ற குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகிறோம் என்றார்.
http://www.maalaimalar.com/2012/12/28112016/madhya-pradesh-bjp-party-offic.html
0 மறுமொழிகள்:
Post a Comment