அமைச்சர் அவர்களுடன் ரைசுதீன்
25.09.2013 அன்று இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் மாநில ஒருங்கினைப்பாளர் முகவைத்தமிழன் (எ) முகம்மது ரைசுதீன் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் மான்புமிகு டாக்டர் எஸ். சுந்தர்ராஜ் அவர்களை சந்தித்து பெரியபட்டினம் கிராமத்தில் சமூக விரோத கும்பலால் ஒற்றுமையை கெடுக்கும் விதமாக தீவைத்து எரிக்கப்பட்ட சந்தன கூட்டை மீண்டும் எடுக்கவும் , அதனை தீவைத்து எரித்த சமூக விரோத சக்திகளை கைது செய்ய சொல்லி காவல்துறைக்கு அறிவுருத்தவும் வலீயுருத்தி கோரி்ககை மனு அளிக்கப்பட்டது.
மனுவுக்கு பதில் அளித்த அமைச்சர் அவர்கள் உடனடியாக வக்பு வாரியத் தலைவர் ஜனாப் தமிழ் மகன் உசேன் அவர்களை அழைத்து உடனடி ந்டவடிக்கைக்கு பரிந்துறைத்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சந்தனக்கூட்டை செய்து அதை எடுக்கவம் பரிந்துரைத்தார். அதன் பின்னர் காவல்துறை அதிகாரிகளையும் மாவட்ட நிர்வாகத்தையம் அழைத்து 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த சந்தன கூட்டை எரித்த கயவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் மீண்டும் அவர்கள் சந்தன கூட்டை எடுக்கும்போது இடையூறு செய்யாதிருக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கூறினார்.
அதன் பின்னர் வக்பு வாரியத்தின் இராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களையும் சந்தித்து இது கோரிக்கைகளை வலியுருத்தி மனு அளிக்கப்பட்டது. அவரும் உடனடி நடவடிக்கைக்கு பறிந்துரைத்து நாளையே சந்தனக்கூட்டு வேலைகளை ஆரம்பிக்க உத்தரவிட்டுள்ளார். எல்லா புகழும் இறைவனுக்கே.
https://www.facebook.com/photo.php?fbid=10152206297313154&set=a.10150831919698154.507584.592838153&type=1&theater
0 மறுமொழிகள்:
Post a Comment