Showing posts with label ஜமால் முகம்மது காலேஜ். Show all posts
Showing posts with label ஜமால் முகம்மது காலேஜ். Show all posts

Thursday, March 05, 2009

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் புதிய கட்டிடத் திறப்பு விழா

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் புதிய கட்டிடத் திறப்பு விழா

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் புதிய கட்டிடத் திறப்பு விழா இன்ஷா அல்லாஹ் 07.03.2009 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு என்.எம். காஜாமியான் நினைவு அரங்கில் நடைபெற இருக்கிறது.

இப்புதிய கட்டிடத்தை இராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை முஹம்மதியா பள்ளிகளின் ஆயுட்காலத் தலைவர் ஹாஜி எஸ். தஸ்தகீர் தனது தாயார் அன்னை எம்.எஸ். பாத்துமுத்து ஜொஹரா நினைவாக கட்டி அதனை கல்லூரிக்கு அர்ப்பணிக்கிறார். இக்கட்டிடம் இரண்டு மாடிகளைக் கொண்டது.

பொருளாதாரத்தில் நலிவுற்ற ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காக ரூபாய் 3.4 இலட்சம் வழங்கிய சென்னை சீனா தானா டிரஸ்ட் மேனேஜிங் டிரஸ்டியும், சென்னை ஈடிஏ டெக்னோ பார்க் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் தலைவருமான ஹாஜி எஸ்.எம். செய்யது அப்துல் காதர் ( சீனா தானா ) அவர்கள் இவ்விழாவில் கௌரவிக்கப்பட இருக்கிறார்கள்.

ஜமால் முஹம்மது கல்லூரி பழைய மாணவர் சங்க சென்னை கிளையின் தலைவர் அல்ஹாஜ் எஸ்.எம். இதாயத்துல்லா வாழ்த்துரை வழங்குகிறார்.

செய்திகள் நன்றி : முதுவை ஹிதாயத்
Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template