Monday, April 21, 2008

ஏர்வாடியில் மதுக் கடையை அகற்றக் கோரி போராட்டம்

.
மதுக் கடையை அகற்றக் கோரி போராட்டம்.


நெல்லை மாவட்டம், ஏர்வாடி மெயின் ரோட்டில் மக்கள் குடியிருப்புகள் அதிகம் உள்ள செலக்ட் சப்பல் தெருவில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. இத்தெருவில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் பெண்கள் கடை வீதிக்கு செல்லும்போது இம்மதுபான கடையில் மது அருந்திவிட்டு, குடிகாரர்கள் பெண்களை நோக்கி ஆபாச வார்த்தைகள் கூறுவதோடு அப்பகுதி போக்குவரத்திற்கும் பெரும் இடையூறு செய்கின்றனர்.

இக்கடைய அகற்றக்கோரி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் உரிய நபர்களிடம் பலதரப்பினர் முறையிட்டும் எவ்வித பலனும் இல்லை. எனவே, இக்கடையை அகற்றிட வலியுறுத்தி ஏர்வாடி த.மு.மு.க. இக்கடையின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏர்வாடி கிளைத் தலைவர் மாஹின் தலைமை வகித்தார். நெல்லை மாவட்ட தலைவர் பாளை ரபீக், மாவட்ட செயலாளர் ஐ.உஸ்மான் கான், வட சென்னை மாவட்ட தலைவர் ஹமீது, நெல்லை மாவட்ட துணை செயலாளர்கள் அன்சர் மற்றும் மீரான் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதில் சர்வ கட்சி மற்றும் அனைத்து சமுதாய மக்களும் திரளாக கலந்து கொண்டனர். மதுபானக் கடைக்கு எதிராகவும், மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

செய்தி: நெல்லை உஸ்மான்

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template