Thursday, February 04, 2016

பல கோடி மதிப்புள்ள கஞ்சா, போதைப்பொருளுடன் எஸ்.டி.பி.ஐ - பி.எஃப்.ஐ நிர்வாகிகள் கைதுஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பின் இசுலாமிய சொந்தங்களுக்கும், நீதி, நியாயமிக்க மனசாட்சி உடையோருக்கும், இன்று பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ போன்ற பெயர்களில் செயல்பட்டு வரும் அமைப்பினர் எம்.என்.பி யாக இருந்த காலங்களில் இருந்து நான் இவர்களின் தீவிர ஆதரவாளனாகவும், அன்றைய காலங்களில் இவ்வமைப்பினர் காவல்துறையாலும் , உளவுத்துறையாலும் துன்புறுத்தப்பட்டபோது என் கையில் இருந்த ஊடகங்களின் மூலம் இவர்களுக்காக நான் பலத்த குரல் எழுப்பியுள்ளேன். இரத்தின சபாபதி என்ற அதிகாரியால் இவர்கள் மீது வழக்குகள் புனையப்பட்டு இவர்களின் அமைப்பினர் துன்புறுத்தப்பட்டபோது இவர்களுக்காக இணையத்தளங்களின் வாயிலாக இவர்களுக்கு ஆதரவாக பெரிய யுத்தமே நடத்தியவன் நான். எனது எழுத்துக்களின் மூலமும் இவர்களின் வளர்ச்சி இருந்தது என்பது சற்றும் மறுக்க இயலாத உண்மை இவர்கள் இயக்கத்தின் மூத்த தலைவர்களை கேட்டால் தெறியும் நான் இவர்களுக்காற்றிய உதவி எவ்வளவு பாரிய அளவிலானது என்று.SDPI மெம்பர் என ஹிந்துவில் வந்துள்ள செய்தி
 

ஆனால் 2010 ம் வருடத்திற்கு பின்னால் நான் இந்தியாவில் இருந்து இவர்களின் நடவடிக்கைகளை கூர்ந்து கவணித்து வந்தபோது தான் இவர்களின் வேறு ஒரு முகம் எனக்கு தெறியவந்தது. இது குறித்து இவர்களின் தலைமைக்கு தெறியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் இவர்களைப்பற்றி யதார்த்தங்களை எனது எழுத்துக்கள் மூலம் வெளிச்சம் போட்டு காட்டியதால் என் மீதான பல தாக்குதல்களை பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ அமைப்பினத் நடத்தினர். மிகச் சமீபத்தில் கடந்த அக்டோபர் மாதம் என் மீது பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ  அமைப்பினர் கொலை வெறி தாக்குதல் நடத்தி என்னை கொல்ல முயன்றபோது நான் காவல்துறையில் அளித்த புகாரிலும் , வாக்குமூலத்திலும் சில விசயங்களை உறுதிப்பட கூறியிருந்தேன் அவற்றில் ஒன்று பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ  அமைப்பினர் இலங்கையில் இருந்து கடல் வாயிலாக போதைப்பொருள் , ஆயுதக்கடத்தல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று.


எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் கீழக்கரை அப்துலு் ஹமீதுடன் கஞ்சா கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள நிர்வாகி நவாஸ்கான் 

எனது புகாரில் நடவடிக்கை எடுத்த காவல்துறை பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகளை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்திலும் சிறையில் அடைத்தனர் ஆனால் மூன்று மாதங்களில் முறையாக இல்லாமல் பிழைகளுடன் குண்டர் தடுப்பு சட்டத்திற்கான ஆவணம் தயார் செய்யப்பட்டிருந்ததால் அதை காரணம் காட்டி தமிழகம் முழுவதும் 450 க்கும் மேறப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட கைதிகள் விடுவிக்கப்பட்டனர் அதில் இவ்வமைப்பினரும் விடுவிக்கப்பட்டனர். நான் கொடுத்த வழக்கில் தற்சமயம் பிணையில் உள்ளனர் வழக்கு நீதிமன்றத்திற்கு வரும்போது இன்சா அல்லாஹ் இவர்களுக்கு தண்டனை பெற்றுத்தருவேன்.


கோடிக்கணக்கான மதிப்புள்ள கஞ்சா கடத்தலில் கைதாகியுள்ளவர்களுக்கு ஆதரவாக எஸ்.டி.பி.ஐ வால் போஸ்ட்டர் 

இந்த வழக்கு குறித்து மேற்படி அமைப்பினரின் ஊதுகுழலான புதிய விடியல் எனும் புத்தகத்தில் 5 பக்கத்திற்கு அவதூறுகளையும், கற்பனைகளையும் தாங்கி ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தனர். அதில் நான் கொடுத்த புகார் பொய் என்றும் எனது வாக்குமூலத்தில் நான் கூறியிருந்த தகவல்கள் அனைத்தும் கட்டுக்கதை என்றும் அப்போதைய எஸ்.பி யான திரு. மயில்வாகணன் மற்றும் எஸ்.ஐ ஜேசுதாஸ் ஆகியோர் என்னுடன் கூட்டு சோ்ந்து அவர்கள் மீது பொய் வழக்கு போடுவதாகவும் கற்பனை செய்து எழுதியிருந்தனர் . அத்துடன் என்னை ஒரு சமூக விரோதி என்றும் , விபச்சார ஏஜென்ட் என்றும் என்மீதான வழக்குகளை பட்டியலிட்டு எழுதியிருந்தனர். அத்துடன் என் மீது காவல்துறைக்கும், மாவட்ட ஆட்சித்தலைவருக்கும் பொய்யான பெயர்களில் பல மொட்டை கடிதங்களை போட்டு வந்தனர்.

 


ஆனால் பாருங்கள் தோழர்களே வல்ல இறைவன் எவ்வளவு வல்லமையானவன் என்று? நான் எனது புகாரிலும், வாக்குமூலத்திலும் கூறிய சம்பவங்கள் ஒவ்வொன்றும் உண்மை என நிறுபிக்கும் வகையில் சமீபத்திய நிகழ்வுகளை இறைவன் நடத்தி காட்டி வருகின்றான்.பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ அமைப்பினரின் முக்கிய வருமானமே போதைப்பொருள் கடத்தல் மற்றும் கள்ளக்கடத்தல் மூலம்தான் என்பது நிறுபிக்கப்பட்டுள்ளது சகோதரர்களே அதுவும் யாரால் தெறியுமா? பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ அமைப்பினராலுயே மிக நோ்மையான அதிகாரி என சான்றளிக்கப்பட்ட கீழக்கரை டி.எஸ்.பி மகேஸ்வரி மூலமாகவவே உண்மைகள் வெளியே வந்துள்ளன.பி.எப்.ஐ - எஸ்.டி.பி.ஐ மாவட்ட நிர்வாகி நவாஸ்கான்
 

சமீபத்தில் இரகசிய தகவலின் அடிப்படையில் நடத்திய சோதனையில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ  அமைப்பின் முக்கிய நிர்வாகியான இராமநாதபுரம் நேரு நகரில் வசிக்கும் நவாஸ் கான் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியினரின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் இவர்களின் ஆதரவில் தங்கியிருந்த இலங்கையை சோ்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். நிச்சயமாக நவாஸ்கான் இதற்கு முழு பொறுப்பாக மாட்டார் , காவல்துறை கட்டாயம் முழு விசாரனை செய்து இதில் பின்புலமாகயிருக்குமு் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ அமைப்பின் முக்கிய தலைவர்களையும் , பொருளாதார உதவி செய்பவர்களையும் விரைவில் பிடிக்கும் அப்போது உண்மை தெறிய வரும்.நோ்மைக்கும் உண்மைக்கும் பெயர் போன டி.எஸ்.பி மகேஸ்வரியின் மீது அவர் ஒரு பெண் என்று கூட பாராமல் பல அவதூறுகளை தற்சமயம் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் வாரி இறைத்து வருகின்றனர். கடந்த முறை எஸ்.பி மயில்வாகணன் இருக்கும்போது அவரையும் எஸ்.ஐ ஜேசுதாசையும் ஆர்.எஸ்.எஸ் கைக்கூலிகள், முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் என சித்தறித்தனர். தற்போது இருவரும் மாறுதலாகிவிட்டனர் தற்சமயம் திரு. மணிவண்ணன் என்ற ஒரு மிக நோ்மையான அதிகாரி எஸ்.பி. யாக உள்ளார். இவரின் நோ்மைக்கு பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ அமைப்பினரே சான்றளித்துள்ளனர். இவர்கள்தான் தற்போது பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ நிர்வாகியான நவாஸ் கானை கையும் களவுமாக கைது செய்துள்ளனர் . இவ்வமைப்பினரின் வீடுகளில் இருந்தே பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள்களையும் கைப்பற்றியுள்ளனர். இந்த செய்தி தமிழகத்தின் ஆங்கிலம், தமிழ் என அனைத்து நாளேடுகளிலும் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிடிபட்டுள்ள பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ  அமைப்பின் நிர்வாகி நவாஸ்கான் என்பவர் இதுவரை எந்த ஒரு குற்ற வழக்கிலும் சிக்காதவர், இவரை காவல்துறையினர் ஆதாரங்களுடன் பிடித்துள்ளனர் என்பதிலிருந்து தெறியவில்லையா இது உண்மை என்று. கையும் களவுமாக மாட்டிக்கொண்டோம் என்றவுடன் தற்போது இவ்வமைப்பினர் இஸ்லாம், முஸ்லிம்கள், பொய் வழக்கு , காவல்துறையினர் காவித்துறையாக மாறிவிட்டனர் இது ஆர்.எஸ்.எஸ் சின் சதி என கூப்பாடு போடுகின்றனர். ஏன் தமிழக காவல்துறையில் ஒரு அதிகாரி கூடவா நோ்மையானவராக இல்லை? அனைவரும் ஆர்.எஸ்.எஸ் சின் கை்ககூலிகளா?

இஸ்லாம், முஸ்லிம்கள், ஜிஹாத் என கோசம் போட்ட இந்த போலி இஹ்வான்களின் முகத்திறை தற்போது கிழிந்துள்ளது. இவர்களின் உண்மை முகம் கஞ்சா, ஹெராயின், போதை, ஆயுதக்கடத்தல் என்பதுதான் என்பதை மக்கள் புறிந்து கொள்ள வேண்டும். இஸ்லாத்தில் தடுத்துள்ள போதை வஸ்த்துக்களை கடத்தி அவற்ற கோடிக்கணக்கில் விற்பதிலேயே இவ்வமைப்பினரின் பொருளாதாரம் இயங்குகிறது என்பதையும் மக்கள் கவணத்தில் கொள்ள வேண்டும்.காவல்துறையினரும், உளவுத்துறையினரும் ஒன்றை தெளிவாக அறிந்து கொள்ளுங்கள், நீங்கள் நினைப்பதுபோல் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் பத்தோடு பதினொன்றாக ஒரு அமைப்பு இல்லை, இவர்களின் பின்புலும் முழுவதுமாக அலசி ஆறாயப்பட வேண்டிய ஒன்று என்பதையும், இவர்களின் எல்லை தாண்டிய தொடர்புகள் முழுவதுமாக விசாரிக்கப்பட வேண்டும் என்பதையும் கவணத்தில் கொள்ள வேண்டும். மாநில , மாவட்ட காவல்துறை அதிகாரிகள் நான் இவர்கள் மீது அளித்துள்ள அனைத்து புகார்களையும் ஆய்வு செய்து அவற்றை மறு விசாரனை செய்தால் இவர்களின் முழு குற்ற பிண்ணனியும் தெறிய வரும். இந்திய தேசத்திற்கும், தேச பாதுகாப்பிற்கும் எதிரான அனைத்து காரியங்களையும் செய்து வரும் இவர்கள் தங்களை தற்காத்து கொள்ள இடை இடையே வெள்ள நிவாரனப்பணிகள், நோட:டு புத்தகம், ஸ்கூல் பேக் வழங்குதல் என சில லட்சங்களை செலவு செய்து சமூகப்பணிகள் என்ற பெயரில் புகைப்படங்களையும் , வீடியோக்களையும் எடுத்து வைத்துக்கொண்டு தங்களை சமூக நல இயக்கம் என நீதிமன்றங்களில் புழுகு மூட்டைகளை அவிழ்த்து விடுவார்கள் அதற்கு ஆதாரமாக மேற்கூறிய புகைப்படங்களை தாக்கல் செய்வார்கள், நீதியரசர்களும், அதிகாரிகளும் இவ்விசயத்தில் மிக கவணமாக இருக்க வேண்டும்.இராமநாதபுரம் எஸ்.பி மணிவண்ணனின் நேர்மையை பாராட்டும் எஸ்.டி.பி.ஐ அமைப்பினர்
 

வெளிநாட்டில் சம்பாதித்து தங்களின் செல்வங்களை வாரி வழங்கும் தோழர்களு அறிந்து கொள்ளுங்கள் இவர்களின் உண்மை முகத்தினை , நாட்டில் தொழில் செய்கிறோம் உங்களுக்கும் பங்கு தருகிறோம் என உங்களிடம் வாங்கிய பணத்தினை கொண்டு இவர்கள் செய்யும் கேவலமான தொழில் என்ன என்று இப்போது புறிகிறதா? சமூகத்தினை போதை பொருட்களை கொண்டும், மத மோதல்களை ஏற்படுத்தியும் அழிக்க நினைக்கும் இவர்களுக்காக உங்களின் சதக்கா, ஜக்காத், பித்ராக்களை வழங்குகின்றீர்கள்? சிந்தியுங்கள் தோழர்களே?

மாவட்ட காவல்துறை நிர்வாகமும், மாநில காவல்துறையும் இந்த வழக்கை இத்துடன் விட்டுவிடாது முழுமையாக விசாரித்து முழு குற்றவாளிகளையும் அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும். கடல வழியாக கடத்தி வரப்பட்டது தங்கமும், போதைப்பொருள் மட்டும்தானா? இல்லை ஆயுதங்களும் வெடிபொருள்களுமா? அப்படியானால் அவை சென்ற இடம் எங்கே? இவற்றிற்கு பைனான்ஸ் செய்யும் பெரும் முதலைகள் யார் யார்? நவாஸ்கான் ஒரு துருப்புதான் இவனின் பின்புலம் என்ன என்பது குறித்து உரிய விசாரனை நடத்த வேண்டும்.தமிழக முதல்வருடன் டி.எஸ்.பி மகேஸ்வரி அவர்கள்
 

பொய் வழக்கு , போராட்டம் என போஸ்ட்டர் அடித்து ஒட்டி , அநாகரிகமாக பெண் டி.எஸ்.பி. யையும் மாவட்ட காவல்துறை அதிகாரிகளையும் இழிவு படுத்தி சமூக வலைத்தளங்களில் பதிவுகள் போட்டு வரும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் இவர்கள் அழுத்தம் கொடுத்து விசாரனையை நிறுத்தவோ திசை திருப்பவோ முயல்கிறார்கள் என்பதை மாவட்ட , மாநில நிர்வாகங்கள் புறிந்து கொள்ள வுண்டும். இது ஒரு முக்கிய குற்ற வழக்கு, தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்பதை நினைவில் கொண்டு காவல்துறை செயலாற்ற வேண்டும். இவர்களின் அரசியல் மிரட்டல்களுக்கு ஒரு போதும் காவல்துறை அடிபணியக்கூடாது. காவல்துறையின் நெஞ்சில் ஏறி மிதிக்க வேண்டும் என தங்கள் தொண்டர்களுக்கு பயிற்சியளிப்பவர்கள் இவர்கள் என்பதை காவல்துறை கவணத்தில் கொள்ள வேண்டும். இதன் பிண்ணனியில் இவ்வமைப்பின் முக்கிய மாநில , மாவட்ட நிர்வாகிகள் சம்பந்தப்பட்டுள்ளனர் அவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் காவல்துறையையும் அரசையும் கெட்டு கொள்கிறேன்.
இறுதியாக வெளிநாடுவாழ், உள்நாட்டு இசுலாமிய, மாற்று மத நன்பர்கள் இவர்களின் சாயம் வெளுத்துவிட்டதை அறிந்து கொள்ள வேண்டும். இந்த வழக்கானது பொய் வழக்கல்ல...உண்மையான வழக்காகும், விசாரிக்கும் காவல்துறை அதிகாரிகள் அணைவரும் நோ்மையானவர்கள் என்பதையும் புறிந்து கொள்ளுங்கள். இஸ்லாத்தின் பெயரில் செயல்படும் இவர்கள் மாபெரும் இஸ்லாமிய விரோத , தேச விரோத சக்திகள் என்பதையும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.  எனது அடுத்த பதிவை எதிர்பார்த்து காத்திருங்கள் இன்னும் முக்கிய ஆதாரங்களுடன் வருகிறேன்.


என்றும் அன்புடன்,

முகவைத்தமிழன் (எ) ரைசுதீன்
9047507665

Tuesday, June 23, 2015

விலகல் அறிவிப்பு

தோழர்கள் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டமாக,

தமிழக சிறைகளில் வாடும் ஆயுள்சிறைவாசிகள்,அரசியல் சிறைவாசிகள், அனைவருக்குமான நீதியில் தனித்து புறக்கணிக்கப்பட்ட இசுலாமிய நீண்ட நாள் சிறைவாசிகளின் விடுதலை கோரிக்கையை குறிப்பாக முன்வைத்து கடந்த 2012ல் தமிழகத்தில் இருக்கும் அனைத்து ஜனநாயக சக்திகளை ஒன்று படுத்தி ஒரே மேடையில் ஒற்றை முழக்கமாக ”10ஆண்டுகளுக்கு மேல் தமிழக சிறைகளில் வாடும் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகள், ஆயுள்சிறைவாசிகளை விடுதலை செய்” என்ற கோரிக்கையுடன் பல களப்பணிகளையும், சட்ட பணிகளையும் செய்து வரும் தோழர் வழக்கறிஞர் உமர்கயான் அவர்கள் தலைமையிலான இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் பால் ஈர்க்கப்பட்டு கடந்த சில வருடங்களாக நானும் அதில் என்னை இணைத்து கொண்டு அதன் செயல்பாடுகளுக்கு ஆதரவாக ஏதோ என்னால் ஆன ஆதரவினை செய்து வந்தேன்.

10ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடிக்கொண்டிருக்கும் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளையும் விடுதலை செய்க…

இசுலாமிய சிறைவாசிகள் 10 ஆண்டுகள் கழித்து விடுதலைக்கு தகுதியிருந்தும் கடந்த ஆட்சியின் பாரபட்ச போக்கால் விடுதலை செய்யப்படவில்லை கடந்த ஆட்சியின் தவறுகளை கழைந்து இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்க..

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால் இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலையில் மட்டும் பாரபட்சம் ஏன் தமிழக சிறைகளில் உள்ள இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்க

மற்ற மாநிலங்களில் ஆயுள் சிறைவாசிகள் விடுதலையில் முடிவில்லா சிறைவாசம் இல்லாமல் 7.10, ஆண்டுகளில் விடுதலை செய்வதைப்போல் தமிழகத்திலும் வாழும் உரிமையை ஆயுள் சிறைவாசிகளுக்கு அளிக்கவேண்டும்.

அனைத்து சிறைவாசிகளுக்கும் இருப்பது போல் வழிகாவல் இல்லாமல் இசுலாமிய சிறைவாசிகளுக்கு பரோல் விடுப்பு அளிக்கவேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கைவைக்கவேண்டும்.

இசுலாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து அரசியல் சிறைவாசிகளின் முன் விடுதலைக்கு தடையாக முந்தைய ஆட்சியாளர்கள் பாரபட்சத்தோடு பிரப்பித்த அனைத்து அரசானைகளையும் ரத்து செய்ய தமிழக அரசு ரத்து செய்யவேண்டும்.
சிறையில் இனம்புரிய சிறைநோயில் தினம் செத்துக்கொண்டிருக்கும் அபுதாஹீரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.

சாதிய வண் கொடுமைக்கு எதிராக போராடி சிறைபட்டிருக்கும் தோழர் துரைபாண்டி,ஜோதி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் சிறையில் இருக்கும் ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட,தமிழ்தேசிய விடுதலைப் போராளிகளை விடுதலை செய்யவேண்டும்.

தமிழக சிறைகளில் வாடும் 10 ஆண்டுகள் சிறைவாசம் கழித்த அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் விடுதலை செய்க

சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் தமிழீழ அகதிகளை சிறையைவிட கொடுமையான முகாம்களை அடைத்து வைத்துள்ளவர்களை விடுதலை செய்து அவர்கள் குடும்பத்துடன் சுதந்திரமாக சேர்ந்து வாழ செய்யவேண்டும் சிறப்பு முகாம்களை உடனடியாக இழுத்து மூடவேண்டும் போன்ற இந்த அமைப்பின் நியாயமான கோரிக்கைகளுக்காக எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராது அயராது உழைக்கும் தோழர்களாக இவ்வமைப்பில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு உழைத்த தோழர் எமனை சர்புதீன், தோழர் தமிழ்பிரியன் செந்தில், தோழர் சதீஸ் குமார், தோழர் எட்கர் சாலமோன், தோழர் உமர்கயான இவர்களோடு எனது பயனமும் தொடர்ந்தது.

இவர்களின் இவ்வுன்னதமான கோரிக்கை போராட்டங்கள் வெற்றி பெற வேண்டுமென்றால் அனைத்து சமுதாய அமைப்புகளின் ஆதரவும் இவர்களுக்கு தேவைப்படக்கூடிய ஒரு நிலையில் இவ்வியக்கம் உள்ளது. சிறைக்கொட்டடிகளில் தங்கள் வாழ்வை தொலைத்து வாடி வரும் விளிம்பு நிலை மனிதர்களான சிறைவாசிகளின் விடுதலைக்கான இப்போரோட்டம் வெற்றி பெற வேண்டும் என்பதில் எவ்வித கருத்து முரன்பாடுகளும் இல்லை. இவ்விளிம்பு நிலை மனிதர்களுக்கான போராட்டத்தில் தனது வாழ்வாதாரங்கள் அனைத்தையும் செலவழித்து போராடி கொண்டிருக்கும் தோழர் உமர்கயானின் தியாகங்களை வார்த்தைகளால் வர்னிக்க இயலாது. சில நல்லுள்ளங்களின் சின்ன சின்ன அன்பளிப்புக்களோடு தனது உழைப்பு முழுவதையும் இதிலேயே செலவழிக்கும் தோழர் உமர்கயான தனது வாகணத்தை முதற்கொண்டு விற்று இதற்காக செலவழித்து கொண்டுள்ளார். அவரின் இப்பயனத்தில் இசுலாமியர்களை வட இசுலாமியர் அல்லாத தமிழ் சொந்தங்கள் இப்போராட்டத்தின் அர்த்தத்தினை உணர்ந்து தங்களையும் இணைத்து கொண்டு போராடி வருகின்றனர்.

எனக்கும் சில மதவாத சித்தாந்த அமைப்புகளுக்குமிடையேயான கருத்து மோதல் இவர்கள் முன்னெடுத்து செல்லும் போராட்டங்களுக்கு இடையூராக உள்ளது. என்னால் எப்போதும் எனது சுயத்தை மாற்றிக்கொள்ள இயலாது. ஆகையினால் இன்றிலிருந்து இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் மாநில் ஒருங்கினைப்பாளர், அடிப்படை உறுப்பினர் எட்பட அனைத்து பதவிகள் பொறுப்புக்களில் இருந்து என்னை விடுவித்து கொள்கிறேன் என்பதை இவ்வமைப்பின் முதன்மை ஒருங்கினைப்பாளர் உட்பட அனைத்து நிர்வாகிகளுக்கும் இதன் மூலம் அறிவித்து கொள்கிறேன். இனிமுதல் எனக்கும் இன் அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்துக்கும் எவ்வித தொடர்புகளும் இருக்காது எனவும், அதன் அனைத்து செயல்பாடுகளில் இருந்தும் நான் விலகி நிற்பேன் எனவும் தெறிவித்து கொள்கிறேன். எனது இந்த விலகலின் மூலம் இநி வரும் காலங்களில் நீங்கள் எவ்வித நிர்ப்பந்தத்திற்கும் ஆளாக்க பட மாட்டீர்கள் என நம்புகிறேன். எனது எந்த பதிவுகளிலும் இவ்வமைப்பின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் யாரும் டேக் செய்யப்பட மாட்டீர்கள் எனவும் அதுபோல் இனிவரும் காலங்களில் இவ்வமைப்பினர் யாரும் தங்களது இயக்கம் சம்பந்தப்பட்ட பதிவுகளில் என்னை டேக் செய்ய வேண்டாம் எனவும் பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.

ஆகையால் இன் அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் "சகோதர இயக்கங்களுடனான முரண்பாடுகளை ஏற்படுத்தும் விதமாக நமது தனிப்பட்ட செயல்பாடுகள் இருக்ககூடாது" என்ற இவ்வமைப்பின் புதிய கொள்கையின்படி எனது தனிப்பட்ட செயல்பாடுகள் இதன் மூலம் இனி இவ்வமைப்பிற்கு இடையூராகவோ அல்லது முரன்பாடுகளை ஏற்படுத்தும் விதமாகவோ இருக்காது என நம்புகிறேன்.இன் அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தினர் முன்னெடுத்து செல்லும் உன்னதமான அனைத்து போராட்டங்களும் வெற்றி பெற வாழ்த்தி விடைபெறுகிறேன்.

நன்றி
என்றும் அன்புடன்
முகவைத்தமிழன் (எ) முகம்மது ரைசுதீன்
9047507665

Wednesday, April 01, 2015

பாப்புலர் ஃப்ரன்டும் பொய் மூட்டைகளும் !! 25 லட்ச ரூபாய் நஷ்ட்ட ஈடும்!!

பாப்புலர் ஃப்ரன்டும் பொய் மூட்டைகளும் !! 25 லட்ச ரூபாய் நஷ்ட்ட ஈடும்!!
பாப்புலர் பிரண்டு ஆப் இந்தியா என்ற அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் சேக் முகமது அன்சாரி. சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2014–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த ஒற்றுமை ஊர்வலத்தில் கலவரம் நடந்ததாகவும், அதில் 4 இந்துக்கள், ஒரு முஸ்லிம் என்று 5 பேர் கொலை செய்யப்பட்டதாகவும், அட்வகேட் ஜெனரல் மூலம் போலீஸ் கமிஷனர் கோர்ட்டுக்கு தகவல் தெரிவித்தார்.ஆனால், ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமல்லாமல், தமிழகத்தில் இப்படி 5 பேர் கொலை செய்யப்பட்டதாக எந்த ஒரு போலீஸ் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. அப்படி ஒரு சம்பவமும் நடைபெறவில்லை. ஆனால் பொய்யான தகவலை இந்த கோர்ட்டுக்கு தெரிவித்து, எங்கள் அமைப்புக்கு ஊர்வலம் செல்ல அனுமதி வழங்க விடாமல் போலீஸ் கமிஷனர் தடுத்து விட்டார்.இதனால், எங்கள் அமைப்பு இந்த நிகழ்ச்சிக்காக செலவு செய்த ரூ.8 லட்சம் வீணாகி போனது. பொய்யான தகவலை தெரிவித்து, எங்கள் அமைப்புக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் எங்கள் அமைப்புக்கு ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும். பொய் தகவலை கொடுத்து கோர்ட்டை ஏமாற்றிய போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவும், துறை ரீதியான விசாரணை நடத்தி அவரை தண்டிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் பாப்புலர் ஃபரன்ட் அமைப்பின் சார்பில் கூறப்பட்டிருந்தது.

#உண்மையில் நடந்தது என்ன?

கடந்த 2014 ம் ஆண்டு பிப்ரவரி மாதம்  பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பினர் நடத்த இருந்த அணிவகுப்பு மற்றும் கூட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. அதன் பின்னர் 16.02.2014 அன்று ஏடிஎஸ்பி வெள்ளைத்துரை தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில் மேற்படி அமைப்பினரின் வாக்குறுதிகளை நம்பி , சீறுடை அணிந்து அணிவகுப்பு நடத்தமாட்டோம் பேரணி மட்டும்தான் என்பன போன்ற பொய்யான வாக்குறுதிகளின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது. அந்த அனுமதியில் தெளிவாக :

1) சீறுடை அணிந்து அணிவகுப்பு நடத்த கூடாது .

2) ஆயுதங்கள், கம்பு , லத்தி போன்றவைகளை எடுத்து வரக்கூடாது.

3) குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது

4) டிரமஸ் வாசிக்க கூடாது.

என்ற நிபந்தனைகளுடன் அந்த பேரணியை இராமநாதபுரம் வெளிப்பட்டினம் , சின்னக்கடை நான்கு முனை ரோட்டில் இருந்து சந்தைப்பேட்டை தாஜ் திருமண மஹால் வரை அமைதியாக நடத்தி கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டது.

ஆனால் இவை அனைத்தையும் மீறி அனுமதிக்கப்பட்ட இடமான சின்னக்கடை நான்கு முனை ரோட்டில் நடத்தாமல் அங்கிருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குமரையா கோவில் மற்றும் இபுறாஹிம் சேட் நகரின் உட்புறத்தில் ஆரம்பித்து தேசிய நெடுஞ்சாலையை மறித்து நடத்த முயன்றனர்.

1) சீறுடை அணிந்தவாறு

2) ஆயுதங்கள், கம்பு , லத்தி போன்றவைகளில் பி.எப்.ஐ கொடியை கட்டி

3) குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டவாறு

4) டிரம்ஸ் வாசித்தபடி


அனைத்து நபிந்தனைகளையும் மீறி கலவரத்தில் ஈடுபட் வேண்டும் என்ற ஒரு உள் நோக்கத்துடன் இந்த பேரணி நடத்த முயன்றனர். அப்போது அதை தடுக்க முயன்ற காவல்துறையினர் மீதும், அருகில் இருந்த ஹிந்து கடைகள் மீதும் திட்டமிட்டு பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பினரால் கற்கள் மற்றும் ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த ஊர்வளத்திற்கு "ஹதீஸ் சொலகிறார்கள்" என கூறி அழைத்து வரப்பட்ட முஸ்லிம் பெண்களையும், குழந்தைகளையும் ஈவிரக்கமில்லாமல் மனித கேடயமாக பயன்படுத்தினர்.இதன் காரனமாக ஹதீஸ் கேட்கும் ஆவலில் வந்திருந்த இசுலாமிய பெண்கள் வெறும் பாவாடை ஜாக்கெட்டுடன் அடிவாங்கியபடி சிதறி ஓடிய அவலம் நேர்ந்தது. குழந்தைகளும் தப்பவில்லை. காவல்துறையினரை கொலை செய்யும் நோக்கத்தில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கு வேடிக்கை பார்க்க வந்திருந்த சில ஹிந்துக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது.

இதுதான் அங்கு நடந்த உண்மை சம்பவம். மேற்படி அமைப்பின் நிர்வாகிகளுக்கும் பேரணியை அமைதியாக நடத்த வேண்டும் என்ற நோக்கம் இருக்கவில்லை மாறாக தங்கள் அமைப்பின் பெயரும் செய்தியும் இந்தியா முழுவதும் பத்திரிக்கைகளிலும் , தொலைக்காட்சிகளிலும் வரவேண்டும் அதற்காக ஏதாவது செய்தாக வேண்டும் என்ற முன்கூட்டிய திட்டமிடல் இருந்தது. அதன வெளிப்பாடே இவர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரம். இதன் பின்னர் பேசிய இவர்களின் நிர்வாகி ஒருவர் " இப்ப நாங்கள் வேர்ல்ட் புல்லா ரீச்ச ஆயிட்டம்ல, ஊர்வளம் நடந்திருந்தா கூட எங்க பெயர் இவ்வளவு ரீச் ஆகாது"என கமென்ட் செய்தார்.

இவர்களின் நோக்கம் மீடியா பாப்புலர் ஆக வேண்டும் என்பதாகவே இருந்தது.

அதன் பின்னர் நடந்த வழக்கில் மதுரை உயர் நீதிமன்றத்தில் மேற்படி அமைப்பினர் தவறான தகவல்களை அளித்தனர். காவல்துறையும் உளவுத்துறையும் கோட்டை விட்டதால் தவறான தகவல்களின் அடிப்படையில் இந்த வழக்கை ரத்து செய்து நீதிபதி அக்பர் அலி உத்தரவிட்டார்.

நீதிபதி அக்பர் அலி இந்த வழக்கை ரத்து செய்ததன் முக்கிய காரனமாக காட்டப்பட்டுள்ளது. இந்த கலவரத்தில் இராமநாதபுரம் மாவட்டம் , பெரியபட்டினம் கிராமத்தை சேர்ந்த கலிபுல்லா என்பவர் போலிஸ் தாக்கியதில் கொல்லப்பட்டார் எனற பாப்புலர் பிரன்டின் வாதத்தை மையமாக வைத்து இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டது.

ஆனால் உண்மையில் நடந்தது என்ன? கலிபுல்லா போலிஸால் படுகொலை செய்யப்பட்டாரா?

இல்லை என்பத நிதர்சனமான உண்மை. இராமநாதபுரம் மாவட்டம் , பெரியபட்டினம் கிராமத்தில் கலிபுல்லா என்பவர் இருந்தது உண்மை இறந்ததும் உண்மை. ஆனால் அவர் பாப்பலர் ஃப்ரன்ட் அமைப்பினரால் நடத்தப்பட்ட கலவரத்தில் போலிஸால் கொல்லப்படவில்லை.

#அப்படியானால் கலிபுல்லா எப்படி இறந்தார்?
உடல் நிலை சரியில்லாத மேற்படி கலிபுல்லாவை சோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சல்களின் பாதிப்பு முற்றிவிட்டதாகவும் அதனால் சிகிச்சை பெற வேண்டும் என தெறிவித்ததால் மேற்படி கலிபுல்லா உள்நோயாளியாக இராமநாதபுரம் கேணிக்கரையில் உள்ள ஜவஹர் பாருக் மருத்துவமனையில் 19 நாட்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் வீடு திரும்பிய அவருக்கு மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போகவே இராமநாதபுரம் லேத்தமஸ் பங்களா ரோட்டில் உள்ள கணகமனி மருத்துவமனையில் (டாக்டர் அரவிந்தராஜ்) மீண்டும் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

கலவரம் நடந்த பிப்ரவரி 17 ம் தேதி போலிசால் படுகொலை செய்யப்பட்டதாக சொல்லப்படும் மேற்படி கலிபுல்லா கணகமனி மருத்துவமனையில் உள்நோயாளியாக இருந்தார். அன்று காலை அவரது உடல்நிலை மோசமடையவே மருத்துவர்கள் இவர் பிழைக்க மாட்டார் என் கூறினர் அதனால் அவரது குடும்பத்தினரால் நாங்கள் இவரை வீட்டுக்கு தூக்கி செல்கிறோம், வீட்டில் மரணமடையட்டும் என சொல்லி மருத்துவமனையில் அவரது சகோதரரி எங்கள் சுய விருப்பத்தின் பெயரில் இவரை அழைத்து செல்கிறோம் என மருத்துவமனை நிர்வாகத்திடம் எழுதி கொடுத்துவிட்டு சுமார் 11 மணியளவில் சுயநினைவில'லாத கலிபுல்லாவை ஆம்புலன்சில் அழைத்து சென்றனர்.வீட்டிற்கு சென்றவுடன் அதாவது கலவரம் நடந்த இடத்தில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரியபட்டினத்தில் வைத்து மேற்படி கலிபுல்லா நோயின் காரனமாக மரணமடைந்தார்.

ஆனால் நோயின் காரனமாக சுயநினைன்றி மரணமடைந்த கலிபுல்லாவை கலவரத்தில் காவல்துறையால் கொல்லப்பட்டதாக நீதிமன்றத்தில் தவறான தகவல் அளித்து நீதிமன்றத்தை ஏமாற்றி மேற்படி கலவர வழக்கை தள்ளுபடி செய்ய வைத்துள்ளனர்.

பொய்யான தகவலை தெரிவித்து, எங்கள் அமைப்புக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் எங்கள் அமைப்புக்கு ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும். பொய் தகவலை கொடுத்து கோர்ட்டை ஏமாற்றிய போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவும், துறை ரீதியான விசாரணை நடத்தி அவரை தண்டிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் பாப்புலர் ஃபரன்ட் அமைப்பினர் மீது :

1) சீறுடை அணிந்து அணிவகுப்பு நடத்த கூடாது .

2) ஆயுதங்கள், கம்பு , லத்தி போன்றவைகளை எடுத்து வரக்கூடாது.

3) குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது

4) டிரமஸ் வாசிக்க கூடாது.

ஆகிய காவல்துறையின் நிபந்தனைகளுக்கு ஒத்துக்கொண்டு கையொப்பம் இட்டு உறுதி கொடுத்துவிட்டு இவை அனைத்தையும் மீறி கலவரத்தை நடத்தி, காவல்துறையினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து, தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்து, அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்சுகள் செல்லவிடாமல் தடுத்து பல உயிர்களுக்கு சேதம் விளைவித்து நோயினால் இறந்த நபரை காவல்துறை கலவரத்தில் அடித்து படுகொலை செய்ததாக உயர்நீதிமன்றத்தில் பொய்யான தகவலை கூறி உயர் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தி பொய்யான , போலியான ஆதாரங்களின் அடிப்படையில் நீதிமன்றத்தை ஏமாற்றி வழக்குகளை தள்ளுபடி செய்ய செய்த பாப்புலர் ஃபரன்ட் அமைப்பினர் மீது கமிசனர் ஜார்ஜீம், காவல்துறையும் ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?


கமிசனர் ஜார்ஜ் பொய் தகவலை நீதிமன்றத்திற்கு அளிக்கவில்லை ராமநாதபுரம் கலவரத்தில் கொலை செய்யப்பட்டார்கள் என பொய்யான தகவலை வழங்கியது மேற்படி பாப்புலர் ஃபரன்ட் அமைப்பினர் மட்டுமே அந்த தகவலின் அடிப்படையிலேயே அவர்கள் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. பாப்புலர் ஃபரன்ட் அமைப்பினர் வழங்கிய தகவலையே அதாவது ராமநாதபுரத்தில் நடந்த கலவரத்தில் கொலை செய்யப்பட்டார் என்ற தகவலை கமிசனர் ஜார்ஜ் நீதி மன்றத்தில் அளித்துள்ளார்.

ஆகவே பொய் தகவலை நீதி மன்றத்திற்கு வழங்கி , பொய்யான ஆதாரத்தில் தீர்ப்பை பெற்ற பாப்புலர் ஃபரன்ட் அமைப்பினர் மீது காவல்துறையினர் 100 கோடி ரூபாய் நஷ்ட்ட ஈடும், வழக்குகளை ரத்து செய்து வழங்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய அனுமதியும் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தெர்ர்வார்களா?

பாப்புலர் ஃபரன்ட் அமைப்பினர் காவல்துறையினர் மீது கலவரம் செய்வதற்காக கல் வீசியது. கலவரம் செய்தது, சதி திட்டம் தீட்டியது. கலவரத்தில் படுகொலை செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட கலிபுல்லா நோயினாலேயே இறந்தார் என்பதற்கான ஆதாரங்கள் என அனைத்தையும் நான் வழங்க தயார்.

என்றும் அன்புடன்,

முகவைத்தமிழன் (எ) ரைசுதீன்
9047507665

Tuesday, July 08, 2014

ஷரீஆ நீதி மன்றங்களை தடை செய்ய இயலாது - உச்ச நீதிமன்றம் Supreme Court Refused to ban Sharia Courts in India
முஸ்லிம்களின் ஷரீஅத் நீதிமன்றங்கள் சட்டப்படியானவை அல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது - முஸ்லிம்களின் ஷரீஅத் நீதிமன்றங்கள் தடை செய்யப்பட்டன, முஸ்லிம்களின் சிவில் சட்ட உரிமையை உச்சநீதி மன்றம் தடை செய்து விட்டதை போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்த ஊடகங்கள் முயன்று வருகின்றன. இதன் உண்மை நிலை அறியாத இசுலாமிய சகோதரா்கள் சிலரும் கொந்தளித்து போய் பதிவுகளை இட்டும், தலைவா்கள் பேட்டிகளை வழங்கியும் வருகிறாா்கள். ஆனால் உண்மை நிலைதான் என்ன?


விஸ்வா லோச்சன் மதன் என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நலமனுவில் முஸ்லிம் சமுதாயத்தினரின் ஷரியத் நீதிமன்றங்கள், நாட்டின் நீதித்துறைக்கு இணையானவையாக செயல்படுகின்றன.'முஸ்லிம் அமைப்புகளால் நியமிக்கப்படும், 'முப்தி'கள் மற்றும் 'குவாசி'கள் பிறப்பிக்கும் உத்தரவுகளால், முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன; பறிக்கப்படுகின்றன. இது, தடுக்கப்பட வேண்டும்' எனவும் ஷரீஅத் நீதிமன்றங்கள் இனி தொடரக்கூடது அவற்றை தடை செய்ய வேண்டும், இவை பிறப்பிக்கும் ஃபத்வா உத்தரவுகள் அரசியல் சட்டத்துக்கு எதிரானவை என்று அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

விஸ்வா லோச்சன் மதன் என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்திருந்த இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வழங்கிய தீா்ப்பு உண்மையிலேயே ஷரீஅத் நீதிமன்றங்களுக்கோ இசுலாமியா்களுக்கோ எதிரானது அல்ல, அந்த தீா்ப்பின் அடிப்படை என்னவென்றால் அதாவது வேறு வழியில் சொல்வதென்றால் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது புறியாத ஊடகங்களும், வெறு சிலரும் என்னவோ ஷரீஅத் நீதிமன்றங்களை உச்சநீதிமன்றம் தடை செய்து விட்டது போலவும், இனி ஷரீஅத் நீதிமன்றங்கள் செயல்பட இயலாதது போலவும் ஒரு பிம்பத்தை ஏற்படுத்த முயல்கிறாா்கள்.
சரி என்னதான அந்த தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது என்றால் அந்த தீா்ப்பின் சாரம்சம் இதுதான் :

முதலாவதாக உச்சநீதிமன்றம் தனது தீா்ப்பில் இந்த ஷரீஅத்தின் அடிப்படையில் நடைபெறக்கூடிய நீதிமன்றங்களை தடை செய்யவில்லை. தனது தீா்ப்பில் கூறியுள்ள சரியான வாா்த்ரத பிரயோகம் என்னவென்றால் :"The court however, refused to declare Dar-ul-Qazas (Islamic courts) or practice of issuing fatwas as illegal, saying it was informal justice delivery system for bringing amicable settlement and it was for the persons concerned to accept, ignore or reject it"
---
 

" இந்த நீதி மன்றம் தாருல் கஸ்ஸாஸ் எனும் இசுலாமிய ஷரீஅத் நீதி மன்றங்களை தடை செய்ய மறுத்துவிட்டது. அத்துடன் தாருல் கஸ்ஸாஸ் எனும் இசுலாமிய ஷரீஅத் நீதி மன்றங்களானது இருதரப்பினருக்கு இடையில் சுமூக தீா்வை ஏற்படுத்தும் ஒரு முறைசாறா நீதிமன்ற அமைப்பு என்றும் தாருல் கஸ்ஸாஸ் எனும் இசுலாமிய ஷரீஅத் நீதி மன்றங்கள் வழங்கும் தீா்ப்புக்களை ஏற்பதும் , நிராகரிப்பதும் அதை அனுகிய இரு தரப்பினரையே சாரும் என்றும் , தாருல் கஸ்ஸாஸ் எனும் இசுலாமிய ஷரீஅத் நீதி மன்றங்கள் வழங்கும் தீா்ப்புக்களை சட்ட விரோதமானது என அறிவிக்க இயலாது என்றும் மறுத்துள்ளது"


இன்னும் உச்ச நீதி மன்றம் தனது தீா்ப்பில் :

தாருல் கஸ்ஸாஸ் எனும் இசுலாமிய ஷரீஅத் நீதி மன்றங்களானது இந்தியாவின் தகுதி வாய்ந்த எந்த ஒரு சட்டமன்றத்தாலுா அல்லது பாராளுமன்றத்தாலோ உண்டாக்கப்பட்டதோ அல்லது அனுமதிக்கப்பட்டதோ இல்லை எனவும், எனவே தாருல் கஸ்ஸாஸ் எனும் இசுலாமிய ஷரீஅத் நீதி மன்றங்களினால் வழங்கப்படும் ஃபத்வா அல்லது தீா்ப்பானது இந்தியாவின் எந்த ஒரு சடடத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நீதி அமைப்பினால் அனுமதிக்கப்பட்டதல்லா என்றும் இது இருதரப்பினருக்கு இடையில் சுமூக தீா்வை ஏற்படுத்தும் ஒரு முறைசாறா நீதிமன்ற அமைப்பு மட்டுமே என்றும் இது வழங்கும் தீா்ப்புக்களை ஏற்பதும் , நிராகரிப்பதும் அதை அனுகிய இரு தரப்பினரையே சாரும் எனவும் தெறிவித்துள்ளது. ஆகவே மக்கள் யாரும் அச்சப்படவோ, தேவையற்ற வதந்திகளை பரப்பவோ வேண்டாம். இன்னும் இந்தியாவில் ஜனநாயகமும், நீதியும் உயிருடன்தான் உள்ளன.

இது குறித்து மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ வும், அனைத்து இந்திய தனியாா் சட்ட வாரியத்தின் உறுப்பினரும் ஆன டாக்டா் ஜவாஹிருல்லா அவா்கள் பி.பி.சி தமிழ் வானொலிக்கு அளித்த பேட்டியில் தெளிவாக விளக்கியுள்ளாா்.Thursday, April 17, 2014

முகவையில் மோடிக்கு கூடிய கூட்டம் ஒரு எச்சரிக்கை!!

 
 

நேற்று முகவையில் பா.ஜ.க வின் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பிரதமா் வேட்பாளா் நரமாமிச நரேந்திர மோடி பிரச்சாரத்திற்கு வந்திருந்தாா். எவ்வருடமும் சேராத கூட்டமாக பா.ஜ.க வின் இந்த கூட்டத்திற்கு சுமாா் 3000 முதல் 5000 மக்கள் கலந்து கொண்டனா். கூட்டம் குறைவாக இருந்தாலும் இந்த கூட்டம் ஏனைய மற்ற கட்சிகளான திமுக, அதிமுக போன்றவை கூட்டுவதுபோல் பல மாவட்டங்களில் இருந்து காசு கொடுத்து கூட்டி வந்ததாக தெறியவில்லை. முற்றிலும் உள்ளுா் மக்கள் மட்டுமே கூடியிருந்தனா்.

இதில் கவனிக்கத்தக்கது என்னவென்றால் கூட்டத்தில் கலந்து கொண்டோரில் அதிகமாக இருந்தது யாதவா் (கோனாா்) , செட்டியாா், நாடாா் இன மக்கள்தான். கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது முகவை நகருக்குள் உலா வந்தபோது முகவையில் மேற்கூறிய சமுதாய மக்களின் வா்த்தக நிறுவனங்கள் ஒன்றுகூட திறக்கவில்லை. செட்டியாா்களும், நாடாா்களும், யாதவா்களும் தங்கள் வா்த்தக நிறுவனத்தை ஒரு நாள் மூடிவிட்டு மோடியை காண ஒற்றுமையுடன் சென்றுள்ளனா்.

இது இஸ்லாமியா்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. பல ஜாதிகள் உள்ளது, தாழ்த்தப்பட்டவன், உயா்ந்தவன் என்ற பேதம் உள்ளது என நம்மால் சொல்லப்படும் ஒரு மதத்தினா் தங்களுக்குள் உள்ள உயா்வு தாழ்வுகளை மறந்து ஜாதி வேறுபாடுகளை மறந்து ஹிந்துத்துவா என்ற ஒற்றை கொள்கையின் கீழ் அணிவகுக்க முடிகிறதென்றால் , உயா்வு தாழ்வு இல்லாத ஜாதி வேறுபாடுகள் அல்லாத சமூகம் என நம்மால் பெறுமையுடன் சொல்லப்படும் இஸ்லாம் மதத்தை பின்பற்றும் முஸ்லிம்களாகிய நம் மக்களால் ஏன் இஸ்லாம் எனும் ஒற்றை கொள்கையின் கீழ் ஒன்றினைய முடியவில்லை? எஞ்சி நிற்கும் மில்லியன் டாலா் கேள்வி இது.

நம்முடன் சகோதரனாய் பழகிய பிற சமூக மக்களை நம்முள் தோன்றிய சில இயக்கங்களின் கொள்கை கூச்சல்களும், ஜிஹாதிய கூப்பாடுகளும், நம்முள் சமூக அவலங்களை வைத்துக்கொண்டு தவறான புறிதல், முறைாயன விசாரிப்புகளின்றி நம் பெண்பிள்ளைகளுக்கு படித்து கொடுக்கும் மாற்று சமூக ஆசிரியா்கள், தம்முடன் பள்ளி கல்லுாரிகளில் பயிலும் நம் சமூக பெண்பிள்ளைகளோடு பழகிய அச்சமூக இளைஞா்கள் மீது நமது இயக்கவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்களின் விளைவுகள் இன்று அச்சமூக மக்களை ஹிந்துத்துவாவின் பால் அழைத்து சென்றுள்ளது. இது நாமே அவா்களை பாசிசத்தின் பால் தள்ளிவிட்டு ஒன்றினைய வைத்ததாகும்.

மோடிக்கு முகவையில் கூடிய கூட்டம் குறைவோ அதிகமோ பா.ஜ.க வெற்றி பெறுமா பெறாதா என்பது கேள்வியில்லை. முகவையில் மேற்கூறிய யாதவா் (கோனாா்) , செட்டியாா், நாடாா் இன மக்களின் ஹிந்துத்துவா பக்கமான முன்னகா்வு நமது இயக்கங்களின் இளைஞா்களின் தவறான நடத்தையின் வெளிப்பாடு இன்னும் இது சிந்திக்க கூடிய ஒன்றாகும். நிச்சயமாக இது கவணமாக கையாளப்பட வேண்டிய ஒன்று. நம்முடன் ஒன்றாக விளையாடின, படித்த, பழகிய , ஒரு தட்டில் உணவுண்ட, ஒரே தெருவில் வசித்த நட்புகள் , உரவுகள் இன்று நம்மை விட்டு விலகி செல்கின்றன என்பது ஒரு அபாயத்தை நமக்கு உணா்த்துகிறது. இதை இந்த பிரிவை, சமூக பிளவை அபாயமாக உணராமல் தங்கள் இயக்கங்களின் வெற்றியாக கருதும் இறக்குமதி செய்யப்பட்ட கொள்கையை பேசித்திறியும் இஸ்லாமிய இளைஞா்களுக்கும், அமைப்புகளுக்கும் எச்சரிக்கை...!! நாளை முகவையும் கோவையாக , குஜராத்தாக மாறலாம் என்பதற்கான முன்னறிவிப்பு மற்றும் அடையாளங்களே இவை.

இன்று ஹிந்துத்துவாவை நோக்கி நகரும் இச்சமூக மக்கள் வேறு யாருமில்லை நம்மோடு ஒரே ஊரில் , ஒரே தெருக்களில், வசிக்க கூடியவா்கள், நம்முடன் ஒன்றாக விளையாடின, படித்த, பழகிய , ஒரே தட்டில் உணவுண்ட தோழமைகள் . இவா்கள் நாளை நமது எதிரிகளாக இவா்கள் பரினாம வளாச்சி அடையும் முன் இவா்களை தடுத்தாக வேண்டிய கடமை நமது சமூகத்திற்கு உள்ளது. இவா்களை தடுப்பதற்கு ஆயுதங்களும் ஜிஹாதிய கூச்சல்களும் தேவையில்லை. இஸ்லாம் காட்டித்தந்த பொறுமையும் சகோதரத்துவதும் போதும். இந்த இஸ்லாமிய இயக்கங்கள் வருவதற்கு முன் உள்ள கால கட்ட மனநிலைக்கு நாம் சென்றாலே போதும், அப்புக்களாகவும், அப்பன் மகன்களாகவும், மாமன் , மாப்பிள்ளைகளாகவும் பழகினாலே போதும், திரை தானாக விலகி மீண்டும் உரவுகள் மலரும் ஆயுதமதின்றி , இரத்தமின்றி, கூப்பாடுகளின்றி மனங்களை வெல்லலாம் சமூக ஒற்றுமையை பேனலாம். இதுவே ஹிந்துத்துவாவிற்கு நாம் கொடுக்கும் சம்மட்டி அடியாக இருக்கும். சிந்திக்க வேண்டியவாகள் சிந்திப்பாா்களா?

அன்புடன் முகவைத்தமிழன் (எ) ரைசுதீன்.
9047507665

Saturday, February 22, 2014

முஸ்லிம் பாசிஸ்ட்டுகள்???
பொய்யான பரப்புரைகள், தவறுகளை மறைக்க மதத்தை சம்பந்தப்புடுத்துதல், தங்கள் அரசியல் நாடகங்களை தான் சார்ந்திருக்கும் மதத்தின் புனித போர்களுக்கு ஒப்பிடுதல் என சமீபத்திய நிகழ்வுகளை பார்க்கும்போது பாசிசத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்ய வந்தவர்களே பாசிஸ்ட்டுகளாக மாறிவிட்டார்களோ என்ற ஐயம் ஏற்படுகிறது. பாசிசம் என்றால் என்ன என்று தெறியாத அப்பாவி சிறுவர்கள், இளைஞர்கள், முதியோர் , பெண்கள், குழந்தைகளை தங்களது பாசிச சிந்தனைக்கு பலியாக்கிவிட்டார்களோ என்ற என்னமும் எழுகின்றது.

மக்களாட்சியில் மக்களின் மத நம்பிக்கை முக்கியமற்றது. அவர்கள் எந்த மதத்தை பின்பற்றுபவர்களாகவும் இருக்கலாம். மத நம்பிக்கை இல்லாதவர்களாகவும் இருக்கலாம். இருப்பினும் அவர்கள் தங்களை மதச் சார்பற்ற முறையில் நிர்வகித்துக் கொள்ளலாம் என்பது சமூக ஜனநாயகம் பற்றி பேசும் இவர்களுக்கு மக்களாட்சி என்றால் சமத்துவம் என்பது தெறியாது. அதனால் சமத்துவம் இவர்களுக்கு ஒவ்வாது. இவர்களுக்கு தங்கள் அமைப்பில் இல்லாதோர் தங்கள் அமைப்பினருக்கு சமமானவர்கள் அல்ல. முஸ்லிம்கள் கூட தங்களுக்குள் அனைவரும் சமமானவர்கள் இல்லை என்ற பாசிச சித்தாந்தத்தின் உறு உள்ளது.

பாசிசம் (fascism) என்பது ஒரு சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தால் சர்வாதிகார முறையில் பொருளாதார மற்றும் மற்றைய விடயங்கள் தீர்மானிக்கப்படுவதையே குறிக்கும்.தனிமனித உரிமைகளை நாட்டு நலனுக்காக, வல்லமைக்காக எனக் கூறி மதிக்காமல் அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை அடக்குமுறைகள் மற்றும் வன்முறை மூலம் நசுக்குகின்ற அரசியல் நடைமுறையே பாசிசம் எனப்படும்.

மேலே உள்ளதை அப்படியே சற்று மாற்றி "பாசிசம் (fascism) என்பது ஒரு சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தால் சர்வாதிகார முறையில் பொருளாதார மற்றும் மற்றைய விடயங்கள் தீர்மானிக்கப்படுவதையே குறிக்கும்.தனிமனித உரிமைகளை அமைப்பின் நலனுக்காக, வல்லமைக்காக எனக் கூறி மதிக்காமல் அமைப்புக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை அடக்குமுறைகள் மற்றும் வன்முறை மூலம் நசுக்குகின்ற அரசியல் நடைமுறையே பாசிசம் எனப்படும்" என வாசித்து பாருங்களேன்.

The New Dictionary of Cultural Literacy, (Third Edition. 2002) என்ற புத்தகத்தில் பாசிஸ்ட்டுகளை பற்றி கூறும்போது “பொதுவாக, பாசிச அரசுகள் ஒரு சர்வாதிகாரியின் அதிகாரத்தில் இருக்கும். இவர் பொதுவாக கவர்ச்சியான தோற்றத்தையும், பகட்டான சீருடைகளையும் கொண்டிருப்பார். இவர் தனது தொண்டர்களை பிரமாண்டமான பேரணிகள் மூலமும், தேசியத்தைப் பற்றிய கூச்சலான கோஷங்களுடனும் ஒன்று திரட்டுவார். அன்னியர்களைப் பற்றியும் தங்களுக்குள் உள்ள ‘அசுத்த’ மான மக்களைப் (ஜெர்மனியின் யூதர்கள்) பற்றியும் சந்தேகத்தையும் வெறுப்பையும் வளர்ப்பார்.”

மேலே உள்ள இந்த கருத்தாக்கத்தை அப்படியே சமீபத்தில் ஒரு அமைப்பு நடத்திய பகட்டான் சீருடை அணிவகுப்புடன் ஒப்பிட்டு பாருங்கள் யார் பாசிஸ்ட்டுகள் என்பதும் எனது சந்தேகம் சரியானதுதான் என்பதும் உங்களுக்கு புறியும்.

இறுதியாக பாசிசம் என்பது இந்துக்களுக்கும் மட்டுமோ அல்லது யூத கிருத்துவ மக்களுக்கு மட்டுமானதல்ல காவல்துறையும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரும் , இஸ்ரேலிய யூத பயங்கரவாதிகளும் மட்டும் பாசிசம் இருப்பதில்லை இசுலாமியர்களிளும் பாசிச கருத்தியலுடன் கூடிய அமைப்புகள் இருக்கலாம் என்பதுடன் பாசிசத்திற்கு எதிராள களமாடி பாசிசத்தை அழிக்க புறப்பட்டவர்கள் தங்களையும் அந்த சித்தாந்தத்திற்குள் ஆட்படுத்தி தாங்களும் நவீன பாசிஸ்ட்டுகளாக மாறியது மட்டும் நிதர்சனமான உண்மை.

- அன்புடன்
முகவைத்தமிழன் (எ) ரைசுதீன்
அலைபேசி 9047507665


Monday, February 17, 2014

முகவையில் இசுலாமியர்கள் மீது காவல்துறை கடும் தாக்குதல்இந்திய சனநாயக நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு சனநாயக ரீதியாக எமது சகோதர இயக்கம் நடத்திய பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் பேரணியில் திட்டமிட்டு உட்புகுந்து கலவரத்தை ஏற்படுத்தும் நோக்குடன் செயல்பட்ட விசமிகளை கைது செய்யாமல் பேரணியில் கலந்து கொண்ட ஒட்டு மொத்த சனத்திரள் மீதும் தனது வக்கிரமான கோரத்தாக்குதலை நடத்திய காவல்துறையின் செயல் வண்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த கொடூர தடியடி பிரயோகத்தில் காயமடைந்தவர்கள் பெரும்பாலானோர் பெண்களும், முதியவர்களும், குழந்தைகளும் என்பது இன்னும் கவலையளிக்க கூடிய விசயமாகும்.

நாம் இந்திய சனநாயக நாட்டில்தான் வாழ்கின்றோமா அல்லது ஏதாவது காட்டாட்சியின் கீழ் வாழ்கின்றோமா என்ற சந்தேகம் எம்முள் எழுந்துள்ளது. இந்திய தேசியத்தில் சிறுபான்மையினரின் மீதான அரசபயங்கரவாதத்தின் கோர அடையாளங்களில் இதுவும் ஒன்றாக இன்று பதிந்துள்ளது. இதன் மூலம் சிறுபான்மை இன மக்கள் இந்த அரசின் மீதான நம்பிக்கையின்மையின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்பது நிதர்சனமான உண்மை.


எது எப்படியாக இருந்தாலும் எம் சமுதாயத்தின் மீதான இந்த அரச பயங்கரவாதம் என்பது எத்தகைய முறையிலும் ஏற்றுக்கொள் இயலாதது. வரும் தேர்தல் களத்தில் இதற்கான பதிலை எம் மக்கள் எதிரொலிப்பார்கள் என்று நம்புகிறோம்.

நாங்கள் எம் முன்னோர் மூட்டிய சுதந்திர யாகத்தில் பிறந்த அக்கிணி குஞ்சுகள்...எம் மீதான தாக்குதலை கொண்டு எம்மை அடக்கி ஆளலாம் என்று நினைத்தால் அது நடக்காது.....வல்ல இறைவனை தவிர வேறு யாருக்கும் அஞ்சிடவோ ...அடி பனிந்திடவோ மாட்டோம் நாங்கள்....!!

இந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பரப்பப்படும் வதநதிகளை யாரும் நம்ப வேண்டாம். யாருடைய உயிருக்கும் எந்த ஆபத்துமில்லை. காயமடைந்தவர்களில் பெரும்பகுதியினர் சிகிச்சை முடித்துவிட்டனர். பெருங்காயமுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. களத்தில் நயவஞ்சகர்களை தவிர அனைத்து அமைப்பினரும் ஒற்றுமையுடன் செயல்பட்டுக்கொண்டுள்ளனர்.
https://www.facebook.com/raisudeen/posts/10152585169128154?notif_t=like
Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template