நேற்று முகவையில் பா.ஜ.க வின் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பிரதமா் வேட்பாளா் நரமாமிச நரேந்திர மோடி பிரச்சாரத்திற்கு வந்திருந்தாா். எவ்வருடமும் சேராத கூட்டமாக பா.ஜ.க வின் இந்த கூட்டத்திற்கு சுமாா் 3000 முதல் 5000 மக்கள் கலந்து கொண்டனா். கூட்டம் குறைவாக இருந்தாலும் இந்த கூட்டம் ஏனைய மற்ற கட்சிகளான திமுக, அதிமுக போன்றவை கூட்டுவதுபோல் பல மாவட்டங்களில் இருந்து காசு கொடுத்து கூட்டி வந்ததாக தெறியவில்லை. முற்றிலும் உள்ளுா் மக்கள் மட்டுமே கூடியிருந்தனா்.இதில் கவனிக்கத்தக்கது என்னவென்றால் கூட்டத்தில் கலந்து கொண்டோரில் அதிகமாக இருந்தது யாதவா் (கோனாா்) , செட்டியாா், நாடாா் இன மக்கள்தான். கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது முகவை நகருக்குள் உலா வந்தபோது முகவையில் மேற்கூறிய சமுதாய மக்களின் வா்த்தக நிறுவனங்கள் ஒன்றுகூட திறக்கவில்லை. செட்டியாா்களும், நாடாா்களும், யாதவா்களும் தங்கள் வா்த்தக நிறுவனத்தை ஒரு நாள் மூடிவிட்டு மோடியை காண ஒற்றுமையுடன் சென்றுள்ளனா்.
இது இஸ்லாமியா்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. பல ஜாதிகள் உள்ளது, தாழ்த்தப்பட்டவன், உயா்ந்தவன் என்ற பேதம் உள்ளது என நம்மால் சொல்லப்படும் ஒரு மதத்தினா் தங்களுக்குள் உள்ள உயா்வு தாழ்வுகளை மறந்து ஜாதி வேறுபாடுகளை மறந்து ஹிந்துத்துவா என்ற ஒற்றை கொள்கையின் கீழ் அணிவகுக்க முடிகிறதென்றால் , உயா்வு தாழ்வு இல்லாத ஜாதி வேறுபாடுகள் அல்லாத சமூகம் என நம்மால் பெறுமையுடன் சொல்லப்படும் இஸ்லாம் மதத்தை பின்பற்றும் முஸ்லிம்களாகிய நம் மக்களால் ஏன் இஸ்லாம் எனும் ஒற்றை கொள்கையின் கீழ் ஒன்றினைய முடியவில்லை? எஞ்சி நிற்கும் மில்லியன் டாலா் கேள்வி இது.
நம்முடன் சகோதரனாய் பழகிய பிற சமூக மக்களை நம்முள் தோன்றிய சில இயக்கங்களின் கொள்கை கூச்சல்களும், ஜிஹாதிய கூப்பாடுகளும், நம்முள் சமூக அவலங்களை வைத்துக்கொண்டு தவறான புறிதல், முறைாயன விசாரிப்புகளின்றி நம் பெண்பிள்ளைகளுக்கு படித்து கொடுக்கும் மாற்று சமூக ஆசிரியா்கள், தம்முடன் பள்ளி கல்லுாரிகளில் பயிலும் நம் சமூக பெண்பிள்ளைகளோடு பழகிய அச்சமூக இளைஞா்கள் மீது நமது இயக்கவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்களின் விளைவுகள் இன்று அச்சமூக மக்களை ஹிந்துத்துவாவின் பால் அழைத்து சென்றுள்ளது. இது நாமே அவா்களை பாசிசத்தின் பால் தள்ளிவிட்டு ஒன்றினைய வைத்ததாகும்.
மோடிக்கு முகவையில் கூடிய கூட்டம் குறைவோ அதிகமோ பா.ஜ.க வெற்றி பெறுமா பெறாதா என்பது கேள்வியில்லை. முகவையில் மேற்கூறிய யாதவா் (கோனாா்) , செட்டியாா், நாடாா் இன மக்களின் ஹிந்துத்துவா பக்கமான முன்னகா்வு நமது இயக்கங்களின் இளைஞா்களின் தவறான நடத்தையின் வெளிப்பாடு இன்னும் இது சிந்திக்க கூடிய ஒன்றாகும். நிச்சயமாக இது கவணமாக கையாளப்பட வேண்டிய ஒன்று. நம்முடன் ஒன்றாக விளையாடின, படித்த, பழகிய , ஒரு தட்டில் உணவுண்ட, ஒரே தெருவில் வசித்த நட்புகள் , உரவுகள் இன்று நம்மை விட்டு விலகி செல்கின்றன என்பது ஒரு அபாயத்தை நமக்கு உணா்த்துகிறது. இதை இந்த பிரிவை, சமூக பிளவை அபாயமாக உணராமல் தங்கள் இயக்கங்களின் வெற்றியாக கருதும் இறக்குமதி செய்யப்பட்ட கொள்கையை பேசித்திறியும் இஸ்லாமிய இளைஞா்களுக்கும், அமைப்புகளுக்கும் எச்சரிக்கை...!! நாளை முகவையும் கோவையாக , குஜராத்தாக மாறலாம் என்பதற்கான முன்னறிவிப்பு மற்றும் அடையாளங்களே இவை.
இன்று ஹிந்துத்துவாவை நோக்கி நகரும் இச்சமூக மக்கள் வேறு யாருமில்லை நம்மோடு ஒரே ஊரில் , ஒரே தெருக்களில், வசிக்க கூடியவா்கள், நம்முடன் ஒன்றாக விளையாடின, படித்த, பழகிய , ஒரே தட்டில் உணவுண்ட தோழமைகள் . இவா்கள் நாளை நமது எதிரிகளாக இவா்கள் பரினாம வளாச்சி அடையும் முன் இவா்களை தடுத்தாக வேண்டிய கடமை நமது சமூகத்திற்கு உள்ளது. இவா்களை தடுப்பதற்கு ஆயுதங்களும் ஜிஹாதிய கூச்சல்களும் தேவையில்லை. இஸ்லாம் காட்டித்தந்த பொறுமையும் சகோதரத்துவதும் போதும். இந்த இஸ்லாமிய இயக்கங்கள் வருவதற்கு முன் உள்ள கால கட்ட மனநிலைக்கு நாம் சென்றாலே போதும், அப்புக்களாகவும், அப்பன் மகன்களாகவும், மாமன் , மாப்பிள்ளைகளாகவும் பழகினாலே போதும், திரை தானாக விலகி மீண்டும் உரவுகள் மலரும் ஆயுதமதின்றி , இரத்தமின்றி, கூப்பாடுகளின்றி மனங்களை வெல்லலாம் சமூக ஒற்றுமையை பேனலாம். இதுவே ஹிந்துத்துவாவிற்கு நாம் கொடுக்கும் சம்மட்டி அடியாக இருக்கும். சிந்திக்க வேண்டியவாகள் சிந்திப்பாா்களா?
அன்புடன் முகவைத்தமிழன் (எ) ரைசுதீன்.
9047507665
0 மறுமொழிகள்:
Post a Comment