Saturday, April 26, 2008

அமெரிக்காவிற்கு ஈரான் அதிபர் தொடுக்கும் சவால்கள்..

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அமெரிக்காவிற்கு ஈரான் அதிபர் தொடுக்கும் சவால்கள்..

சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அமெரிக்கா இரட்டை கோபுர தாக்குதல்களுக்கு, பின் பல நாடுகளில் தன்னுடைய ஆதிக்கசக்திகளின் கோர தாண்டவத்தினை அமெரிக்கா செய்துக்கொண்டு இருக்கிறது. இதனால் பல பாதிப்புசேதங்களை பல நாடுகள் அடைந்துக்கொண்டு வருகின்றன. அத்துடன் உலக நாடுகளில் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகளும் முன்பு எப்போதும் இல்லாத அளவில் ஏறிக்கொண்டு இருக்கிறது. இதற்கு எல்லாவற்றிகும் காரண காரிய இருப்பது அமெரிக்கா தான் என்பது உலகவியலாளர்களின் கருத்தாகும்.

மேற்கு ஆப்ரிக்காவில் மட்டுமின்றி பசி பட்டினி அதனால் ஏற்படும் துயர சம்பங்கள் அதிகம் பல நாடுகளில். குறிப்பாக பல தேசங்களில் அரிசி தட்டுப்பாடுக்கள் அதிகரித்து வி்ட்டன. வளைகுடா நாட்டிற்கு, இந்தியாவிலிந்து ஏற்றுமதியாகும் அரிசியினை இந்தியா அரசாங்கம் நிறுத்தி விட்டது. இதனால் வளைகுடா பகுதியில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டது. விலைவாசிகளும் முன்பு எப்போதும் இல்லாத அளவில் ஏறிவி்ட்டது. அத்தியாவசிய விலைகள் ஒரு பக்கம் ஏறிக்கொண்டே வருகிறது. மற்றொரு பக்கம் உலக சந்தைகளில் எரிபொருட்களின் விலைகளும் ஏறிவிட்டது.

இரட்டை கோபுர தாக்குதலில் 3,000 த்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்து விட்டார்கள் என்று அமெரிக்கா சொல்லி இருந்தது. ஆனால் அந்த தாக்குதல்களில் இறந்து போனவர்கள் எந்த நாட்டை சார்ந்தவர்கள், எந்த இனத்தை சார்ந்தவர்கள், எந்த மொழியினை சார்ந்தவர்கள், இறந்தவர்களின் சரியான எண்ணிக்கை எத்தனை என்பது பற்றி அமெரிக்காவினால் வெளியிட முடியுமா..? சென்ற 23.9.2007 அன்று, நான் அமெரிக்கா வந்த போது தாக்குதலுக்குள்ளான இரட்டை கோபுரம் இருந்த பகுதியினை பார்வையிட ஏன்..? அமெரிக்கா அரசாங்கம் எனக்கு அனுமதி தரவில்லை. இருந்தாலும். அமெரிக்கா அதிபருக்கும் ஒரு அழைப்பினை ஈரான் அதிபர் விடுத்து இருந்தார். ஈரானின் உள்ள ஃபிர்தௌஸியா பல்கலைக்கழகத்தில் நடக்க உள்ள விழா ஒன்றில் உரை நிகழ்த்த தாங்கள் ஈரான் நாட்டிற்கு வர வேண்டும் என்ற கோரிக்கை ஒன்றினை முன்பு விடுத்து இருந்தார். ஆனால் இது நாள் அமெரிக்க அதிபர் ஈரான் நாட்டிற்கு செல்லவில்லை.

உலக நாடுகளில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கும், குழப்பங்களுக்கும் அமெரிக்கா மட்டும் தான் காரணம் என்று என்னால் ஆணித்தரமாக சொல்ல முடியும். தற்போது ஈரான் தன்னிறைவு பெற்ற நாடாக திகழ்கிறது. பொருளாதாரத்துறை, அரசியல் துறை, வாணிபத்துறை, இராணுவத்துறை என்று பல துறைகளிலும் நாங்கள் முன்னெறிக்கொண்டு வருகிறோம். ஆதிக்கசக்த்திகளை எதிர்த்து பேராடக்கூடிய மனப்பக்குவதில் ஈரான் நாடானது தயாராகி விட்டது என்று ஈரான் அதிபர் தைரியமாக கூறியுள்ளார். அல்ஹம்துலில்லாஹ்..

ஆப்கானிஸ்தான், ஈராக் நாடுகளில் ஏற்பட்ட தோல்வியால் நாடு திரும்பிய 300,000 அமெரிக்க போர் வீரர்கள், அவர்களின் குடும்பத்தினரோடு நிம்மதியாக வாழ முடியவில்லை. ஆம்.. அவர்கள் மனக்கஷ்டம், மன அழுத்தம், மன வேதனை, மன பாரம் போன்ற நோய்களால் அவதிப்படுகிறார்கள். நாடு திரும்பிய போர் வீரர்களிடம் எடுக்கப்பட்ட ஆய்வின் படி, அவர்களின் மூளையானது பாதிக்கப்பட்டுள்ளது. மற்றும் 320,000 போர் வீரர்களுக்கு Traumatic Brain என்ற மூளை நோயானது பரவி விட்டது. 18.5 சதவீத போர் வீரர்களுக்கு மன அழுத்தம் (Stress Disorder) போன்ற நோய்கள் இருப்பதாக கண்டு பிடிக்கபட்டுள்ளது. ஐந்தில் ஒரு போர் வீரர் என்ற விகிதாரம் படி நோய் வாய்ப்பட்டுள்ளனர் என்று அந்த ஆய்வானது கூறுகிறது. இதற்கு காரணம் யார்..?

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், காஸா பகுதி, பாலஸ்தீனம், ஈராக் போன்ற நாடுகளில் ஒன்றும் தெரியாத அப்பாவி பொது மக்கள், சிறு குழந்தைகள் இறப்பதற்கு யார் காரணம்.. கணவனை இழந்த மனைவிமார்கள் எத்தனை பேர்..? மனைவியினை இழந்த கணவன் எத்தனை பேர்கள், குழந்தையினை இழந்த தாய்மார்கள். தாயினை இழந்த குழந்தைகள் எத்தனை பேர்கள்..? இது போல் சொல்லிக்கொண்டே போகலாம்.. இவைகள் அனைத்திற்கும் யார் காரணம்..?

போர் மூலம் ஒரு பக்கம் ஆபத்துக்கள் தினமும் வந்த கொண்டு இருக்கின்றன. ஆனால் இன்னொரு பக்கம் ஊடகத்துறைகளும் ஆதிக்கசக்திகளுக்கு அடிமையாகி விட்டது. டென்மார்க், சுவீடன் போன்ற நாடுகளின் ஊடகத்துறைகளை தூண்டி விட்டு அதன் மூலம் வேடிக்கை பார்க்கிறது அமெரிக்கா. இஸ்லாம் ஒரு தீவிரவாதம் என்று மக்களிடம் சொல்லும் பொய் பிரச்சாரங்கள் எடுபட வில்லை. இஸ்லாம் ஒரு புனித மார்க்கம்.. ஒரு எளிய மார்க்கம் ..இனிய மார்க்கம் என்பது மட்டும் தான் உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் தெரிகிறது. அனைத்து மக்களின் நெஞ்சங்களிலும் இஸ்லாம் ஆழமாக பதிந்து விட்டது. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பொன் மொழிகளும் மக்களை சிந்திக்கக்கூடிய அளவிற்கு மாற்றி விட்டது. இஸ்லாம் அதி வேகமாக மக்களிடம் பரவுவதற்கு காரணமாக அமைந்து விட்டது அமெரிக்கா.

ஒரு மனிதன் இறைவனுக்கு மாறு செய்து கொண்டிருந்தம் கூட வெளியரங்கத்தில் செழிப்பும் அமைதியும் அவனை ஆரத்தழுவிக் கொள்கின்றன. ஆனால் உண்மையில் இது அல்லாஹ்விடமிருந்து அவனுக்கு அளிக்கப்படும் அவகாசம் ஆகும். அதன் பிறகு இறைத்தண்டனையின் கசையடிகள் விழக்கூடும். இறைவனுக்கு கீழ்ப்படிந்து வாழ்வதில் கிடைக்கும் மகிழ்வும் அமைதியும் தான் உண்மையானவை ஆகும்..

தகவல் தொகுப்பு : முத்துப்பேட்டை அபூ ஆஃப்ரின்

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template