Thursday, April 10, 2008

இரானுவப் பயிற்சியில் MNP அமைப்பினர்!! நாட்டிற்கு ஆபத்தா?

தீவிரவாத பயிற்சியில் RSS (தினமனி பார்வையில் சமூக சேவையா?)

நடுநிலைவாதம் என்ற பெயரில் இஸ்லாமியர்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எதிராக விஷத்தை கக்கி பகையுனர்வை மூட்டிவரும் பத்திரிகைகளில் தற்சமயம் முதலிடம் வகித்து வருவது தினமனி ஆகும், ஃபாசிச சித்தாந்தத்தை ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்து கொண்ட இப்பத்திரிகையின் ஆசிரியர் குழு இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் ஒட்டுமொத்தமாக தீவரவாதத்தூடு தொடர்பு படுத்தி செய்திகளை வெளியிடுவதில் முன்னிலை வகிக்கி்ன்றது. இவ்வகையில் கடந்த 10-08-2007 அன்று "முஸ்லிம் இந்தியன் - பெயர் மாறுகின்றது" என்ற தலைப்பில் தினமனியின் குருமூர்த்தி ஐயர் என்ற பார்ப்பன வெறியர் ஒரு துவேஷ கட்டுரையை பதிந்திருந்தார். அந்த கட்டுரைக்கு பதில் அளிக்கும் விதமாக தினமனி மற்றும் குருமூர்த்தி ஐயரின் முகத்திரையை கிழித்து தொங்க விட்டு "இஸ்லாமிய இணையப் பேரவை" என்ற அமைப்பினர் தங்கள் இணையத் தளத்தில் "அட பித்தலாட்டமே உந்தன் மறுபெயர்தான் குருமூர்த்தியோ?" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை பதிந்திருந்தார்கள்.


RSS பென் தீவிரவாதி(தினமனி பார்வையில் சமூக சேவகியா?)

அந்த சூடு மாறுவதற்குள் 10-04-2008 அன்றைய தினமனி இதழில் "படை திரட்டும்' மனிதநீதிப் பாசறை: போலீஸார் கவலை என்ற தலைப்பில் இசக்கி என்ற ஃபாசிச தீவிரவாதி எழுதிய துவேஷ கட்டுரைய வெளியிட்டு தினமனி பத்திரிகை மீண்டும் முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் எதிரான தனது துவேசத்தை வெளிப்படுத்தி உள்ளது.

இவர்களெல்லாம் யார்? உளவுத்துறைக்கு தெறியாதா?

மனித நீதி பாசறை பற்றியோ அல்லது அதன் செயல்பாடு பற்றியோ சிறிதும் அறிவில்லாத இசக்கி என்ற இந்த ஃபாசிஸ்ட் 2004 ம் ஆன்டு துவக்கப்பட்ட மனித நீதிப் பாசறை அமைப்பு என்று எழுதியுள்ளார் இதிலிருந்தே இந்த ஃபாசிஸ்ட்டின் அறீவீனம் வெளிப்படுகின்றது.

//"அல்-உம்மா' அமைப்பு தடை செய்யப்பட்ட பின்பு, வேலைவாய்ப்பற்ற, விரக்தி அடைந்த இஸ்லாமிய இளைஞர்களை திரட்டி ஒருங்கிணைக்கும் வகையில் சில அமைப்புகள் ஆங்காங்கே உருவாகி திரைமறைவில் இயங்கி வருகின்றன. //

என்று பீதியை கிளப்பும் விதமாக கட்டுரையை துவக்கியுள்ள இந்த ஃபாசிச விஞ்ஞானி இசக்கி...

//"தீவிரவாதத்தில் உடன்பாடில்லை' என கூறும் இவர்கள், முக்கியமாக மனித உரிமை மீறல்கள், காவல்துறையின் அத்துமீறல்கள் போன்றவற்றுக்கு எதிராக களமிறங்கி பணியாற்றி வருகின்றனர். //

என்றும் எழுதியுள்ளார், நீயே தீவிரவாதத்தில் உடன்பாடில்லை, மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவு இந்த அமைப்பு போராடுகின்றது என்று எழுதிவிட்டாய் அப்புறம் எதுக்கய்யா இந்த " மனித நீதிப் பாசறையின் ராணுவப் பயிற்சியால்' காவல்துறையினர் கவலை அடைந்துள்ளனர் என்று எழுதுகின்றாய்?

அப்ப இவர்கள்? சமூக சேவகர்களா?


//பயிற்சி பெற்ற இவர்கள் எதிர்காலத்தில் தனிப்படையாக உருவெடுத்தால் அது நாட்டுக்கு நல்லதல்ல. இதை அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்பது சிறப்பு புலனாய்வுப் பிரிவினரின் கருத்து. //

மதுரை, கோவை, இராமநாதபுரம், என தமிழகத்தின் பல பகுதிகளில் பொது இடங்களில் ஆயுதப் பயிற்சி எடுக்கும் இந்துத்துவ தீவிரவாத குழுவான ஆர்.எஸ்.எஸ் சை விட மனித உரிமை மீறல்கள், காவல்துறையின் அத்துமீறல்கள் போன்றவற்றுக்கு எதிராக களமிறங்கி பணியாற்றி வரும் இந்த அமைப்பினர் மோசமானவர்கள் இல்லையே!!

இவர் யார்? தேச பக்தரா?

இந்திய சுதந்திரத்தில் இருந்து தொடங்கி, தேசப்பிதாவை கொன்ற இந்த தீவிரவாதிகள் மீரட், பாகல்பூர், குஜராத் என அப்பாவி மக்களை கொன்று குவித்து .ரத்த ஆற்றை ஓட்டிவரும் இந்த தீவிரவாதிகள் எடுக்கும் பயிற்சியோ அவர்கள் வைத்திருக்கும் ஆயுதங்களோ இந்த கட்டுரையை எழதிய இசக்கியின் கண்களுக்கோ அல்லது உளவுத் துறையின் கண்களுக்கு அதறியவில்லையா?

தேச பாதுகாப்பில்...

கருத்து மோதலில் கொல்லப்பட்ட குமார பான்டியன் என்ற ஃபாசிஸ்ட்டின் உடலை சிடிகளாக்கி, வெறியூட்டும் வாசகங்களுடன் மதக்கலவரத்தை துர்ன்டும் வகையில் பாடல்களாக்கி இசைத்தட்டுக்களாக தமிழகமெங்கும் பரப்பி மதக்கலவரத்துக்கான விஷ வித்துக்களை விதைது வரும் இந்து முன்னனி, இராம கோபாலன் வகையராக்களின் இந்த தேச விரோத செயல்கள் இசக்கியின் கண்களுக்கோ அல்லது உளவுத் துறையின் கண்களுக்கு அதறியவில்லையா?

ஆயுதப் பயிற்சியில் முஸ்லிம்கள் (இந்திய தேசிய கொடியேற்றும் MNP)

ரானுவப்பயிற்சி எடுத்துவரும் மனித நீதிப் பாசறை என்று மக்கள் மத்தியில் பதட்டத்தை ஒருவாக்குமு் வகையில் கட்டுரை எழுதியுள்ள ஃபாசிஸ்ட் இசக்கிக்கு இரானுவ பயிற்சிக்கும் "அணிவகுப்பு" பயிற்சிக்கும் வித்தியாசம் தெறியவில்லையா? இல்லை தெறிந்தும் இசுலாமியர்கள் மேல் அவதுர்றை பரப்ப வேண்டும் என்ற நோக்கில் இந்த கட்டுரை வெளியிடப்பட்டதா?

இரானுவ பயிற்சி பெற்ற முஸ்லிம் தீவிரவாதி (MNP பாலர் அணி)

தனிப்படையாக உருவெடுத்தால் நாட்டுக்கு நல்லதல்ல என்று கருதும் உளவுத்துரைக்கும், இதை எழுதிய இசக்கிக்கும் தெறியாதா யார் தனிப்படையாக உருவெடுத்து இரானுவத்தினர் மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஆயுதங்களை பிரயோகித்த நாடெங்கும் ஆயிரக்கணக்கில் கொடூர கொலைகளை நிகழ்த்தி வருவது என்று?


எவ்வித ஆயுதங்களும் தரிக்காமல் தங்களது தேச பக்தியை அடையாளம் காட்டும் வகையில் அணிவகுப்பு நடத்தினால் அது தீவிரவாதமா? அப்படியானால் தடை செய்யப்பட்ட ஆயதங்களை தரித்து அரைக்கால் டவுசரில் நாடெங்கும் கொலைவெறி கூப்பாடிட்டு வரும் ஆர்.எஸ்.எஸ் சிவசேனா தீவிரவாதிகளை என்னவென்பது?

அடக்குமுறையே உலகில் தலைதுர்க்கும் தீவிரவாதங்களுக்கு அடிக்கல் என்பதை உளவுத்துறைக்கும், காவல்துறைக்கும், ஃபாசிச பத்திரிகை சக்திகளுக்கும் தெறிவித்து கொள்கின்றோம். எங்கெல்லாம் ஃபாசிச பத்திரிகைகளின் எழுத்துக்களுக்கு துனை பூகும் வகையில் அவர்களோடு இணைந்து அடக்குமுறை என்ற பெயரில் அரச பயங்கரவாதம் தலைதூக்குகின்றதோ அங்கெல்லாம் இன் விடுதலை என்ற பெயரில் போராட்டங்களும் வீறு கொண்டு எழும் இதை உணராதவர்கள் அல்ல இந்திய உளவுத்துறையும், காவல் துறையும்.

இந்திய இரானுவத்துக்கெதிரான யுத்தத்தில் முஸ்லிம்கள் (முகவை தமுமுக சச்சார் அறிக்கையை வலியுருத்தி அனிவகுப்பு)


மனித நீதிப் பாசறையினர் இந்த வருடம்தான் அதற்கு திட்டமிட்டுள்ளார்கள் ஆனால் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் தமிழகமெங்கும் மிடுக்கோடு பல அணிவகுப்புக்களை நடத்தியு்ளார்கள் அவர்கள் என்ன தீவிரவாதத்திலா ஈடுபடுகின்றார்கள், ஃபாசிஸ்ட் இச்க்கியின் வார்த்தையில் இரானுவ பயிற்சி எடுத்த தமுமுகவினர் என்ன இந்திய இரானுவத்திற்கெதிராகவா யுத்தம் செய்கின்றார்கள்.

பயங்கர ஆயுதங்களோடு அணிவகுத்து செல்லும் முஸ்லிம்கள் (முகவை தமுமுக சச்சார் அறிக்கையை வலியுருத்தி அனிவகுப்பு)

தமிழகமெங்கும் ஆம்புலன்ஸ்கள் மூலமும், இடர்பாடுகளின் போதும் குருமூர்த்தி, இசக்கி வகையராக்களால் தேசபக்தர்களாக ஆடையாளம் காட்டப்படும் தீவிரவாத கும்பலான ஆர்.எஸ்.எஸ் கும்பல்கள் செய்ய இயலாத மனித நேயப் பணிகளை ஜாதி, மத விரோதங்கள் இன்றி அமையதியாக செய்து வருகின்றார்களே இதுதான் தீவிரவாதமா? இன்று தமுமுக வினர் அரசிலும் அங்கம் வகிக்கின்றார்கள் இவாக்ள் தீவிரவாதிகளா என்ன?

வயதானவர்களையும், பென்களையும், குழந்தைகளையும் கொல்லும் முஸ்லிம்கள் (மருத்துவ சேவையில் முகவை எம்.என்.பி யினர்)

அணிவகுப்பு பயிற்சியையே இரானுவப் பயிற்சி என்று எழுதும் இசக்கிக்கு ஆயதப் பயிற்சி எடுக்கும் ஃபாசிச கும்பல்களை பற்றி ஏன் எழுத இயலவில்லை? தமிழகத்தில் இந்த தேச விரோத கும்பல்களான இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங் தள் செய்ய இயலாத மனித நேயப் பணிகளான இரத்த தானம், ஆம்புலன்ஸ், பேரிடர் மீட்பு, ஏழைகளுக்கு கல்வி உதவி என அனைத்து துறைகளில் தமிழகத்தின் இசுலாமிய அமைப்புகளான மனித நீதிப் பாசறை, தமுமுக, ததஜ போன்ற அமைப்புகள் செய்து வருகின்றதே அதற்காக அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் பதக்கங்களையும் பாராட்டு பத்திரங்களையும் வாங்கி குவித்து வருகின்றதே இந்த நல்ல காரியங்கள் உளவுத்துறைக்கும், ஃபாசிஸ்ட் இசக்கிக்கும் தெறியாதா என்ன?

மக்களின் இரத்தத்தை ஓட்டும் இரானுவ பயிற்சி பெற்ற முஸ்லிம் பயங்கரவாதிகள் (இரத்த தானம் செய்யும் தமுமுக வினர்)

எஞ்சிய அல்உம்மாவினர் மனித நீதிப் பாசறை போன்ற அமைப்புக்களில் சோந்து விட்டதாக திரு.இசக்கி எழுதியுள்ளார் நல்ல கண்டுபிடிப்பு உளவுத்துரை இவரை பயன்படுத்தி கொள்வது நல்லது. எஞ்சிய அல் உம்மாவினரும், பிடிபட்ட அல் உம்மாவினரும் என்ன ஆனார்கள், அவர்களின் இன்றைய நிலை என்ன என்பது உளவுத்துறைக்கு நன்றாகவே தெறியும், உளவுத்துரை கூறியதாக கதைவிட்டிருக்கும் இந்த ஃபாசிஸ்ட்டையும் மக்கள் மத்தியில் கலவர வித்துக்களை விதைத்து நாட்டில் மாபெரும் மதக் கலவரத்தை உண்டாக்கும் வகையில் கட்டுரைகளை வெளியிட்டு வரும் தினமனி பத்திரிகைகையயும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

ஏனென்றால் இசுலாமியர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் தற்சமயம் மிக விழிப்புணர்வுடன் உள்ளார்கள். அவதுர்று எழுதிய தினமலருக்கும் அதன் ஆசிரியர்களுக்கும் சமீபத்தில் நீதிமன்றம் அடித்த ஆப்பு நினைவிருக்கட்டும்.


தமிழகத்தை இடுகாடாக்க முயன்று வரும் தினமலரின் பாதையில் செல்லும் தினமனிக்கும் நாங்கள் கூறிக்கொள்வது என்னவென்றால் சகோதர வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் தமிழக மக்களை உங்கள் எழுத்துக்களின் மூலம் மத துவேஷத்தை மூட்டி தமிழகத்தை இரத்தக்காடாக்கி விடாதீர்கள். இதுபோன்ற ஃபாசிச தீவிரவாதிகளின் வெறிமூட்டும் எழுத்துக்களையும் மக்கள் அடையாளம் கண்டு கொள்வது நல்லது.

ஓரினத்தின் மீது காரன காரியம் இன்றி ஏவப்படும் அடக்குமுறையும், வகுப்பு வாத்தை தூன்டும் வகையில் ஃபாசிச பத்திரிகைளாளர்களால் வெளியிடப்படும் செய்திகளுமே பயங்கரவாதம் ஆகும்!!


ஃபாசிச பத்திரிகையாளர்களோடு இணைந்து அரசு இயந்திரங்களான உளவுத்துரை, காவல்துறை, இரானுவம் போன்றவற்றின் மூலம் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இனத்தினர் மிதும் கட்டவிழ்த்து விடப்படும் வண்முறையும், அரச பய்ஙகரவாதமுமே உலகின் ஒவ்வொரு பகுதியிலும் தலைவிரித்தாடும் தீவிரவாதத்திற்கு முக்கிய காரணம் என்பதை தமிழக அரசும், உளவுத்துறையும், ஃபாசிச பத்திரிகை துறையும் உணர வேண்டும் !!

ஜாதி, மத துவேசம் இன்றி நீதியை நிலைநாட்ட வேண்டிய காவல்துறை இசக்கி போன்ற ஃபாசிச சிந்தனை உள்ள பத்திரிகைளர்கள் சிலரின் துர்ண்டுதலால் குற்றவாளிகளை ஒப்படைத்த பின்பும் கூட ஃபாசிச சக்திகளுடன் கைகோர்த்து பழி வாங்கும் என்னத்தில் ஒரு குறிப்பிட்ட இன மக்கள் மீது மேற்க்கொண்ட வண்முறைத்தாக்குதலில் ஏற்ப்பட்ட 19 மரனங்களும் அதன் தொடர்ச்சியாக நடத்த முயன்ற இன ஒழிப்பு கலவரங்கலுமே கோவையிலும் அதன் தொடர்ச்சியாக தமிழகமெங்கும் நடந்த வண்முறை வெறியாட்டங்களுக்கும், குண்டு வெடிப்புக்களுக்கும் காரனம் என்பதை அரசும், உளவுத் துறையும் மிக அறிந்தே உள்ளன.

மீண்டும் அதுபோல் ஒரு சம்பவத்தை தமிழகத்தில் அரங்கேற்ற நினைக்கும் அதிகாரிகளின் மீதும், பத்திரிகையாளர்கள் மீதும் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இன் மக்களான் எம் இன முஸ்லிம்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளை இந்த நாட்டில் நிலைநாட்டவும், எமது தேச பக்தியை வெளிப்படுத்தவும் உரியா நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

நன்றி

முகவைத்தமிழன்

ஃபாசிச தினமனியின் செய்தி

"படை திரட்டும்' மனிதநீதிப் பாசறை: போலீஸார் கவலை

ப. இசக்கி

திருநெல்வேலி, ஏப். 9: தமிழகம் முழுவதும் மனிதநீதிப் பாசறை அமைப்பினர் மேற்கொண்டு வரும் "ராணுவப் பயிற்சியால்' காவல்துறையினர் கவலை அடைந்துள்ளனர்.

பயிற்சியின் நிறைவில், சுதந்திர தின நாளான ஆகஸ்ட் 15-ல் மதுரையில் அணிவகுப்பை நடத்தவும் மனிதநீதிப் பாசறை அமைப்பினர் முடிவு செய்துள்ளதாக காவல்துறையின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.

கோவை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பின்பு "அல்-உம்மா' தீவிரவாத அமைப்பு தடை செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் பரவி இருந்த அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆங்காங்கே வன்முறை மற்றும் வெடிகுண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர கண்காணிப்பால் எஞ்சிய உறுப்பினர்கள் இதர அமைப்புகளில் கலந்து தங்கள் அடையாளத்தை மாற்றிக் கொண்டனர்.

"அல்-உம்மா' அமைப்பு தடை செய்யப்பட்ட பின்பு, வேலைவாய்ப்பற்ற, விரக்தி அடைந்த இஸ்லாமிய இளைஞர்களை திரட்டி ஒருங்கிணைக்கும் வகையில் சில அமைப்புகள் ஆங்காங்கே உருவாகி திரைமறைவில் இயங்கி வருகின்றன.

இந்த சூழ்நிலையில் கடந்த 2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட "மனிதநீதிப் பாசறை' அமைப்பினர், தங்களது வெளிப்படையான செயல்பாடுகளால் தமிழகம் முழுவதும் கிளைகளை உருவாக்கி, நிர்வாகிகளை நியமித்து செயல்பட்டு வருகின்றனர்.

"தீவிரவாதத்தில் உடன்பாடில்லை' என கூறும் இவர்கள், முக்கியமாக மனித உரிமை மீறல்கள், காவல்துறையின் அத்துமீறல்கள் போன்றவற்றுக்கு எதிராக களமிறங்கி பணியாற்றி வருகின்றனர்.

எனினும், இவர்களது நடவடிக்கைகளை உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் காவல்துறையின் சிறப்பு புலனாய்வுப் பிரிவினர், இவர்களுக்கும் தீவிரவாதத்தின் சாயல் இருப்பதாகவே கருதி அவர்களின் ஒவ்வோர் அசைவையும் கண்காணித்து வருகின்றனர்.

சுதந்திர தின அணிவகுப்பு: இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி மதுரையில் சுதந்திர தின அணிவகுப்பை நடத்தும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய இடங்களில் பாசறையை சேர்ந்த இளைஞர்களுக்கு "ராணுவப் பயிற்சி' அளித்து வருவதாக கிடைத்த தகவல் போலீஸôரை கவலைகொள்ளச் செய்துள்ளது.

தென் மாவட்டங்களில் இஸ்லாமிய சமுதாய மக்கள் அதிகம் வசிக்கும் கடையநல்லூர், செங்கோட்டை, ஏர்வாடி, காயல்பட்டினம், திருவிதாங்கோடு, இடலாக்குடி ஆகிய இடங்களில் உள்ள இளைஞர்களை திரட்டி இந்த பயிற்சியை அளித்து வருவதாகக் கூறப்படுகிறது.

நாட்டுக்கு நல்லதல்ல: தமிழ்நாடு முழுவதும் சுமார் 22 ஆயிரம் பேரை உறுப்பினர்களாக கொண்டுள்ள இந்த அமைப்பில், மாவட்டத்திற்கு சுமார் 300 பேர் வீதம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி பெற்ற இவர்கள் எதிர்காலத்தில் தனிப்படையாக உருவெடுத்தால் அது நாட்டுக்கு நல்லதல்ல. இதை அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்பது சிறப்பு புலனாய்வுப் பிரிவினரின் கருத்து.

இதுகுறித்து மனிதநீதிப் பாசறை அமைப்பின் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகி முகம்மது முபாரக் கூறியதாவது:

""நாம் பெற்ற சுதந்திரமானது, இந்து, முஸ்லிம் என வேற்றுமை இல்லாமல் அனைவரும் ஒன்றுசேர்ந்து பாடுபட்டு பெற்று தந்தது. அந்த சுதந்திர உணர்வை எல்லா மக்களிடமும் எடுத்துச் செல்லும் நோக்கத்தில் சுதந்திர தினத்தன்று எங்கள் இயக்கத்தின் சார்பில் சீருடை அணிவகுப்பை நடத்த உள்ளோம். புதுதில்லியில் ராணுவத்தினர் நடத்துவது மாதிரிதான் இதுவும். அணிவகுப்பு நடத்தப்படும் இடம் இன்னும் முடிவாகவில்லை.

அணிவகுப்பில் பங்கேற்க மாவட்டத்திற்கு சுமார் 50 பேர் வீதம் பயிற்சி அளிக்கப்பட்டு, மொத்தம் சுமார் 1,000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். திருநெல்வேலி மாவட்டத்தில் ஏர்வாடியில் உள்ள எங்களுக்குச் சொந்தமான மைதானத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ரகசியம் ஒன்றும் இல்லை. பயிற்சி குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு எழுத்து மூலம் தகவல் தெரிவித்துள்ளோம்'' என்றார் முபாரக்.

7 மறுமொழிகள்:

said...

நல்ல கட்டுரை.

said...

said...

தினமணி ஆசிரியருக்கே இதன் நகல் ஒன்று அனுப்பி கொடுத்து இருப்பீர்கள் என நம்புகிறேன்.

உலக தமிழ் மக்கள் எல்லா பேருக்கும் RSS என்றால் என்ன என்று நன்றாக புரியும். என்று இவர்கள் நாக்பூரில் இந்த இயக்கத்தை ஆரம்பித்தார்களோ அன்றே சிறு பாண்மை இயக்கம்களை வேறு அறுக்கம் திட்டம் அமுல் ஆகி விட்டது. குறிப்பாக இஸ்லாமிய இயக்கம்களை. இவர்கள் ஏன் இப்படி இஸ்லாமிய இயக்கத்தை அழித்து, இந்துஸ்தான் இந்துக்களுக்கே என்று சொல்லும் திட்டத்தை கொண்டு வர போகிறார்களே. 400 ஆண்டுகளுக்கு முன்னர் நம் நாட்டை ஆண்டை முகலாய சக்ரவர்த்திகளுக்கு இப்படி ஒரு இயக்கம் பின்னால் வரும் என்று தெரியாமல் போய்விட்டது. இல்லை என்றால் அன்றே இவர்களின் திட்டத்தை அமுல் படுத்தி விட்டு போய் இருப்பார்கள். அரசியலுக்கு வேண்டி இந்த இயக்கத்தை மேலும், மேலும் வளர்த்துகிறாகள் இந்த் RSS அரசியல் வாதிகள்

said...

ஒரு ஆச்சர்யம் என்னவென்றால், இந்தியா அமைதியாக லஞ்ச லாவண்யங்கள், ஏமாற்றுதல்,கொலை,கற்பழிப்பு, இன்ன பிற எந்த வித அச்சுறுத்தல் இல்லாமல் அமைதியாக இருக்க விரும்பினால் அது தப்பா, சொல்லுங்கள் இந்திய வரலாற்றில் எந்த ஆட்சி மக்களுக்கு நிம்மதியை கொடுத்தது? யார் யாரெல்லாம் மக்களை சுரண்டினர்? இன்னும் தினசரி புதிது புதிதாக உதயமாகும் கட்சியின் மேல்தான் உங்களுக்கு நிம்மதி உள்ளதா? இப்படி தினமனியில் எழுதிய கட்டுரை ஆசிரியரின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் இந்தியாவில் அவர்களுக்குரிய உரிமையை பெற்று நிம்மதியாக வாழ வேண்டும் என்று ஆசையில்லையா? அமைதியான இந்தியாவிற்கு அசையில்லையா? இதையெல்லாம் வலியுறுத்தி பேரணி, அணிவகுப்பு நடத்தினால் தப்பா? காந்தி சொன்னார் "உமரின் ஆட்சி இந்தியாவிற்கு வந்தால்தான் உண்மையான சுதந்திரம்" இந்த உமரின் வரலாறு அவருக்கு எப்படி ஈர்த்தது? எதிரி கூட அமைதியாக, கண்ணியமாக, அக்கரையுடன் இஸ்லாத்தின் நிழலில் வாழ்ந்தது அவருக்கு தெரிந்திருக்கின்றது அதனால்தான் அப்படி சொன்னார். எந்த மதம் மக்களுக்கு நியாயம் செலுத்துவதை புனிதத்தில் உயர்ந்தது என்று சொல்லும் இஸ்லாம் தவிர, இந்தியாவை இஸ்லாம் தெரியாத அல்லாத முஸ்லீம் மன்னர்கள் ஆண்டார்கள் தவிர இன்று வரை எந்த ஆட்சி மக்களுக்கு நிம்மதியை தந்தது? எல்லாரும் ஆண்டு பார்த்துவிட்டார்கள் எங்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் நாங்கள் ஒரு தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தாவிடில் ஒவ்வொரு முஸ்லீமையும் தெருவில் நிற்கவைத்து செருப்பால் அடியுங்கள். MNP & Popular Front of India போன்ளவற்றிற்கு வாய்ப்பு கொடுங்கள்.

said...

வருகைக்கு நன்றி

said...

சிறப்பு புலனாய்வு பிரிவின் துவேஷ சிந்தனை நாட்டுக்கு நல்லது அல்ல -MNP அறிக்கை

Anonymous said...

வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் பயங்கரவாதத்தை ....குண்டு போடும் பயங்கரவாதத்தை வேண்டுமானால் சட்டம் போட்டு .... போலீஸ் போட்டு தடுக்கலாம்.

ஆனா நாடுக்குள்ளேயே பெண்ணியம் (feminism) என்ற உள்பகை ... , உள்ளேயே இருக்கும் புற்று நோய் …. , பெண்ணிய (feminist) பயங்கரவாதம் கிளமியிருக்குதே... இதை என்னா செய்ய ?

இப்ப இந்திய உளவு ஸ்தாபனமேஇல்லை ஆடிப்போயி இருக்குது. மேல் விபரங்களுக்கு
http://batteredmale.blogspot.com/2008/08/blog-post_6091.html

அன்புடன்
விநாயக்

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template