Tuesday, May 06, 2008

திருக்குர்ஆன் பார்வையில் சமுதாயம்-அபூ ஆஃப்ரின்

அல்லாஹ்வின் திருப்பெயரால்..


திருக்குர்ஆன் பார்வையில் சமுதாயம்


அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகிறேன்).
அனைத்துப் புகழும் அகிலத்தாரின் இரட்சனாகிய அல்லாஹ்வுக்கே உரியது.
(அவன்) அளவற்ற அருளாளன், மிகக்கிருபையுடையவன்.
(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி. (எங்கள் இரட்சகா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக! எவர்களின் மீது நீ அருள் புரிந்தாயோ அத்தகையவர்களின் வழி(யில்) நடத்துவாயாக!
(அது உன்) கோபத்திற்குள்ளானவர்கள-(ன யூதர்களின் வழிய)ல்ல, அன்றியும், வழிகேடர்கள(hன கிருஸ்துவர்களின் வழியும)ல்ல. திருக்குர்ஆன் 1 : 1 முதல் 7 வரை




எப்படியெல்லாம் வாழலாம் என்று இஸ்லாம் சொல்லவில்லை, இப்படித்தான் வாழவேண்டும் என்ற ஒரு கட்டுப்பாட்டுக்குள் மனித சமுதாயத்தினை உருவாக்கி அவனை மனிதமாக மாற்றும் மார்க்கம் தான் இஸ்லாம். இது தெரியாமல் இன்னும் பல நாடுகள் கலாச்சாரம் என்று சொல்லிக்கொண்டு நாகரீகத்திற்கு நாங்கள் வழி கொடுக்கிறோம் என்பதனை காரணம் காட்டி மக்களை அநாகரீகத்திற்கு கொண்டு செல்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

அன்று, இருண்ட காலத்தில் அரபு உலகம்.. மனிதர்களை மனிதர்கள் அடிமைப்படுத்திய காலங்கள்.. அறியாமை தழைத்தோங்கிய காலங்கள்.. பெண்களுக்கு எந்த உரிமையையும் தராத காலங்கள்.. உலகம் என்னவென்றும், மனித உரிமைகள் என்னவென்றும் தெரியாமல் விட்டில் பூச்சிகளாய் இருந்த மக்கள்.. ஆம்.. அந்த நேரத்தில் மக்களை வெளித்திற்கு கொண்டு வர வேண்டும் அவர்களை நேர் வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கிற்காக பல சஹாபாக்கள், தாபீன்கள், தாபதாபீன்கள், மற்றும் சஹாபா பெண்மணிகள் முயற்சியினை மேற்கொண்டனர். அல்லாஹீதஆலா இப்பபூமிக்கு ஆதம்(நபி), இப்ராஹீம்(நபி), ஈஸா(நபி), தாவூத்(நபி), இல்யாஸ்(நபி), இஸ்மாயீல்(நபி), அல்யஸஉவ்(நபி), ஸீலைமான் (நபி), அய்யூப்(நபி), இஸ்ஹாக்(நபி), யஃகூப்(நபி), நூஹ்(நபி), யூஸீப்(நபி), மூஸா(நபி), ஹாரூன்(நபி), ஜக்கரியா(நபி), யஹ்யா(நபி), யூனுஸ்(நபி), லூத்(நபி), ஹீத்(நபி), ஸாலிஹ்(நபி), ஹுஐப்(நபி) போன்ற நபிமார்களை அனுப்பி அவரவர்களின் சமுதாயத்தின் மக்களை நேர் வழியினைப்படுத்துவதற்காக வேண்டி ஒவ்வொரு நபிமார்களும் ஒவ்வொரு வேதங்கள் ஒவ்வொரு காலக்கட்டங்களில் அருளப்பட்டு இருந்தது.

இவ்வுலகத்திற்கு இறுதி தூதராக அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கி.பி 570 ம் அவர்கள் மக்கா நகரில் பிறந்தார்கள். அவர்கள் பிறந்த சமயத்திலும் மக்கள் அறியாமை என்ற இருளில் மூழ்கி இருந்தார்கள். அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து மலைப்பிரதேசங்களுக்கு ஆடு மேய்க்க செல்லும் போது, நபிகளாரின் வயது உடைய பல சிறார்கள் மதுக்கோப்பையும் கையுமாக இருப்பார்கள். மற்றும் வீணான காரியங்களில் வீண் விளையாட்டியிலும் ஈடுப்பட்டுக்கொண்டு காலத்தினையும் நேரத்தினையும் கழித்தார்கள். அவர்கள் சிறு பிராயத்தில் இருக்கும் போதே மக்களை நேர் வழிப்படுத்த வேண்டும் என்பதற்காக வேண்டி, தனிமையில் பல முறை சிந்தித்துக்கொண்டே இருப்பார்கள்.

610 ம் வருடத்தில் ஹிரா குகையில் நபி அவர்களுக்கு வஹீ மூலமாக அருளப்பட்ட வேதமாக உள்ள திருமறை திருக்குர்ஆனானது உலக மக்கள் அனைவருக்கும் இறுதியான வேதமாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்யக்கூடியதுமாகவும், மனித சமுதாயத்தினை நல்வழிப்படுத்தக்கூடியதாகவும் உள்ளது.


(நபியே முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை - இதற்கு முன்னுள்ள (வேதங்கள் யா)வற்றையும் உண்மைப்படுத்தக்கூடியதாக (இது) இருக்க, உம்மீது அ(த்தகைய) வன் தான் இறக்கி வைத்தான், தவ்றாத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான். (திருக்குர்ஆன் 3:3 )



முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட திருமறையானது, இஸ்லாம் மார்க்கத்திற்காக மட்டுமல்ல இந்த உலகத்தில் உள்ள அனைத்து மதத்திற்கும் அனைத்து சமுதாயத்திற்கும் அனைத்து சமூகத்திற்கும் ஒரு வழி காட்டியாக இருக்கிறது. அரசியல்துறையாக இருக்கட்டும், பொதுத்துறையாக இருக்கட்டும், பொருளாதாரத்துறையாக இருக்கட்டும், ஆட்சி அமைப்புகளாக இருக்கட்டும் மற்றும் இது போன்ற உள்ள மற்ற துறைகளாக இருக்கட்டும் அனைத்திற்கும் ஒரு வழிகாட்டியாக திண்ணமாக திருமறை இருக்கிறது. எக்காலத்திற்கும் பொறுத்தக்கூடிய ஒரு மறை உண்டு என்றால் அது திருமறை திருக்குர்ஆன் தான்.


மேலும் பயபக்தியுடைவர்களிடம், உங்கள் இரட்சகன் எதை இறக்கி வைத்தான் என்று கேட்கப்பட்டது, (அப்போது) அவர்கள், நன்மையையே (இறக்கி வைத்தான்) என்று கூறுவார்கள். இவ்வுலகில் அழகானவற்றைச் செய்தார்களே அத்தகையோருக்கு (இவ்வுலகிலும் அழகான) நன்மையுண்டு, (அவர்களுடைய) மறுமையின் வீடும் மிக்க மேலானதாக இருக்கும், இன்னும், பயபக்தியுடைவர்களின் வீடு திட்டமாக நல்லதாகி விட்டது. திருக்குர்ஆன் 16:30



நாம் உண்ணும் உணவு எப்படி இருக்க வேண்டும், உணவுப்பொருள் ஹாலாலனதா, அல்லது ஹராமானதா என்று சிந்தித்து உண்ணக்கூடியவர்கள் தாம் இஸ்லாமியர்கள். அதற்காக தான் ஒரு சில உணவுப்பொருட்களை இஸ்லாமிய மார்க்கம் ஹாராம் என்று தடையும் செய்து உள்ளது. ஆனால் மற்ற சமுதாயத்தினரிடம் அத்தகைய ஹாலால் ஹாராம் என்ற பாகுபாடு இல்லை. எதையும் சாப்பிடக்கூடியவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். ஹாராமான உணவுப்பொருட்கள் தம்முடைய உடலுக்கு கேட்டினை உருவாக்கும் என்று தெரிந்தும் அவர்கள் அதனை சாப்பிடுகிறார்கள். திருக்குர்ஆனானது, தானாக செத்த பிராணிகளையும், பன்றியும் இறைச்சியையும் சாப்பிடக்கூடாது என்று சொல்கிறது.

உண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்கள் திண்ணமாக இறைவன் வீண் விரயம் செய்வோரை நேசிப்பதில்லை என்று திருமறை சொல்கிறது. ஆனால் தற்போது நாம் பார்க்கும் இவ்வுலகில் எத்தனையோ உணவுப்பொருட்கள் வீணாக குப்பைகளுக்கு போய் விடுகிறது. பல ஏழை நாடுகளில் ஒரு வேளை சாப்பாடு கிடைக்காத எத்தனையோ மக்கள் இருக்கிறார்கள். திருமறையில் ஏழைகளுக்கு உணவளியுங்கள், ஜகாத் கொடுங்கள், ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள் என்று பல இடங்களில் இஸ்லாமியர்களுக்காக மட்டுமல்ல அதனை படிக்கக்கூடிய அனைத்து தரப்பினருக்கும் சொல்கிறது.

உடையில் எடுத்துக்கொண்டாலும் அதிலும் ஒரு கட்டுப்பாடு.. பெண்கள் தன்னுடைய அழகினை மற்ற ஆண்களுக்கு காட்டக்கூடாது, அவர்களின் அலங்காரங்கள் அவர்களின் கணவனுக்கு மட்டுமே சொந்தமானது என்றும் சொல்கிறது. ஆகவே நல்லொழுக்கமுள்ள பெண்கள், அல்லாஹ்வுக்குப் பயந்து, தங்கள் கணவனுக்கு பணிந்து நடப்பவர்கள். கற்பு மற்றும் தங்கள் கணவனது உடைமைகள் ஆகிய மறைவானவற்றை, அல்லாஹ் பாதுகாக்கின்ற காரணத்தால் பேணிக்காத்துக் கொள்பவர்கள். ஆனால் இப்போது உள்ள சில நாகரீக நங்கைகள், உடுத்தும் உடைகள் எப்படி இருக்கிறது என்று சொல்லி தெரிவதில்லை.?..! இஸ்லாம் கூறியப்படி ஆடையினை நாம் ஒவ்வொருவரும் அணிந்து வந்தால் விபச்சாரங்கள் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. விபச்சாரம் என்பது ஒழுக்க ரீதியில் மிகவும் அபாயகரமான நோயாகும், விபச்சாரம் நம்மை வழி கேடுக்கும் என்பதால் தான் அதனுடைய எல்லாவிதமான வாயில்களையும் இஸ்லாம் தடை செய்கிறது. பால்வினை நோயானது 75 சதவீதம் தகாத உறவு மூலமாக தான் பரவுகிறது. மானக்கேடான செயல்களின் அருகே கூட செல்லாதீர்கள். அவை வெளிப்படையானவையாயினும் மறைவானவையாயினும் சரியே என்று திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது.


நபியே! உம்முடைய மனைவியருக்கும், உம்முடைய புதல்விகளுக்கும், விசுவாசிகளின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு நீர் கூறுவீராக! அதனால் அவர்கள் (சுதந்திரமானவர்கள் என) அறியப்படுவதற்கு இது மிக நெருக்கமானதாகும். அப்போது அவர்கள் (பிறரால்) நோவினை செய்யப்படமாட்டார்கள். இன்னும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மிகக்கிருபையுடைவனாக இருக்கின்றான். திருக்குர்ஆன் 33:59




காலையில் ஒரு குழந்தை படுக்கையை விட்டு எழுந்த உடன் என்ன சொல்லும்.. குட்மார்னிங் என்று சொல்லும்..அந்த குழந்தை ஒரு கிறிஸ்வ சமுதாய குழந்தையாக இருந்தால்.. நமஸ்காரம் என்று சொல்லும் அந்த குழந்தை ஒரு இந்து சமுதாய குழந்தையாக இருந்தால்.. குட்மார்னிங் சொல்வதாலும் மற்றும் நமஸ்காரம் சொல்வதாலும், சொல்லக்கூடிய குழந்தைக்கும் சரியே அதனை கேட்கக்கூடிய பெற்றோர்களுக்கும் சரியே கடுகு அளவு நன்மையோ ஏற்படுவதில்லை. ஆனால் அந்த குழந்தை ஒரு இஸ்லாமிய சமுதாய குழந்தையாக இருந்தால் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) என்று அழகாக சொல்லும்.. அதனை கேட்கும் பெற்றோர்களும் அந்தக்குழந்தையின் ஸலாத்திற்கு பதில் ஸலாம் சொல்வார்கள். அதன் மூலமாக அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் இருவருக்கும் உண்டாகும். அத்துடன் அந்த இல்லத்திலும் ஒரு பரக்கத்தும் ரஹ்மத்தும் கிடைக்கும்.

சின்னஞ் சிறு வயதானது, பெற்றோர்கள் எப்படி நடக்கிறார்களோ அதனை கடைப்பிடிக்கும் வயதாகும். ஆகையால் சிறார்களை இளம் பிராயத்திலிருந்தே இறைநெறியின் பக்கம் அழைத்து செல்லக்கூடிய பெற்றோர்களாய் நாம் இருக்க வேண்டும். சரியான கல்வியினை கொடுக்க வில்லை யென்றால் அவர்கள் தற்போது உள்ள நாகரீக உலகத்திற்கு அடிமைப்பட்டு போய் விடுவார்கள். நாம் அவர்களுக்கு உலகக் கல்வியினை கொடுத்தாலும் சரியே, மார்க்க கல்வியினை கொடுத்தாலும் சரியே சரியான கல்வியாகவும் கொடுக்க வேண்டும். பிள்ளைகளிடம் அன்பு செலுத்துங்கள். இருந்தாலும் அன்பினை அதிகமாக காட்டக்கூடாது. அன்பு எல்லை மீறி போகாமல் பெற்றோர்களாகிய நாம் அனைவரும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் பிள்ளைகள் ஏழு வயதுடையவர்களாய் இருக்கும் போது தொழுகையைக் கடைப்பிடிக்குமாறு அவர்களை ஏவுங்கள். பத்து வயதுடையவர்களாய் இருக்கும் போது தொழவில்லையெனில் அவர்களை அடியுங்கள். மேலும் அவர்களை தனித்தனி விரிப்புகளில் தூங்க வையுங்கள்.

அறிவிப்பாளர்: அம்ர் இப்னு ஷு ஐப் (ரலி)
ஆதாரம் : அபூதாவூத். மிஷ்காத்.




இப்போது உள்ள காலங்கள் நம்மை நல் வழியில் கொண்டு செல்வது என்பது கொஞ்சம் எளிதான காரியமல்ல. வெட்கக்கேடு, மானக்கேடு, தீயச்செயல், மற்றும் அதனின் தூண்டுதல் போன்றவற்றிற்கு அடிமைப்படாமல் நாம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும். நம்மை நாம் சீர்ப்படுத்திக்கொள்ள நம்மால் தான் முடியும். திருக்குர்ஆன் ஆராக்கியமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்திய கூறிய சமூகத்தில் நாமும் ஒரு அங்கமாக இருந்து செயல்பட்டால் நாம் அனைவரும் ஓரணியில் இருக்கலாம். ஒற்றுமையாக செயல் படலாம். அந்த ஒற்றுமையினை வல்ல அல்லாஹ் நமக்கு தந்து அருள் புரிய வேண்டும்.. ஆமீன்.. யாரபில்லாலமீன்..

முத்துப்பேட்டை. அபூ ஆஃப்ரின் - ஃபுஜைரா - அமீரகம்

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template