Thursday, May 08, 2008

துபை - இந்தியன் இஸ்லாஹி சென்டரின் மார்க்க பணிகள்

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

துபை - இந்தியன் இஸ்லாஹி சென்டர் - வோர் அல் அன்ஸ்
(Indian Islahi Centre - IIC - Hor Al Anz - Branch) கிளையின்
மார்க்க பணிகள்


கேரளாவைச் சார்ந்த இஸ்லாமிய சகோதரர்களால் ஐக்கிய அமீரகத்தில் சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட, இந்தியன் இஸ்லாஹி சென்டர் தற்போது அபுதாபி - முஸ்தபா, அல்அய்ன், டேரா துபாய், பர்துபாய் - கராமா, அல்ஷாப், ஷார்ஜா, அஜ்மான், தையித், புஜைரா, ராசல்கைமா போன்ற பகுதிகளில் கிளைகளாக துவங்கப்பட்டு மார்க்க பணிகளை எந்தவிதமான மொழி இன பாகுபாடு இல்லாமல் செம்மையாக செய்து வருகிறது.

டேரா துபாய் வோர் அல் அன்ஸ் (Hor Al Anz) பகுதியில் செயல்படும் இந்தியன் இஸ்லாஹி சென்டரானது மிகவும் அமைதியான முறையில் வாரந்தோறும் மார்க்க பணிகளையும், மார்க்க சொற்பொழிவுகளையும், மற்றும் இன்னும் பல சேவைகளைள செய்து வருகிறது.

"விசுவாசங்கொண்டோரே..! அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் உங்களை வாழவைப்பதன்பால் (அல்லாஹ்வின் தூதராகிய) அவர் உங்களை அழைத்தால் பதில் அளியுங்கள், நிச்சயமாக அல்லாஹ், மனிதனுக்கும் அவனுடைய இதயத்திற்கும் மத்தியில் சூழ்ந்து(செயலாற்றிக் கொண்டு) இருக்கிறான். (ஆகவே, மனிதன் எதையும் அல்லாஹ்வின் அருளின்றி செய்யும் ஆற்றல் பெற மாட்டான்) என்பதையும், நிச்சயமாக அவனின் பாலே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்"

திருக்குர்ஆன் 8 : 24


 ஒன்று முதல் இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறார்களுக்கு தினமும் இஸ்லாமிய கல்வியினை போதிக்கிறது.

 அல்லாஹ்வின் நாட்டப்படி.. எல்லா செவ்வாய்கிழமைகளிலும் காலை 9 மணிக்கு பெண்களுக்கான வகுப்புகளும், இரவு 9 மணிக்கு ஆண்களுக்கான வகுப்புகளும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

 வாரந்தோறும் புதன் கிழமைகளில் 9 மணிக்கு அல்ஷாப் காலணி பிளாக் 113, பிளாட் நம்பர் 8 னில் மார்க்க பயான் மலையாள மொழியில் நடைபெற்று வருகிறது.

 எல்லா வியாழக்கிழமைகளிலும் அல்ஷாப் "சலப் ஸாலிஹியின்" பள்ளி வாசலில் இஷா தொழுகைக்குப்பின் மலையாளத்தில் பயான் நடைபெற்று வருகிறது.

 எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் பஜ்ர் தொழுகைக்கு பின் இந்தியன் இஸ்லாஹி சென்டரில் குர்ஆன் ஹதீஸ் வகுப்புகள் நடைபெறும். இடம் : அல்ஷாப் காலனி பிளாக் எண் 117 பிளாட் நம்பர் : 2

 இந்தியன் இஸ்லாஹி சென்டர் அனைத்து கிளைகளிலும் மற்றும் அங்குள்ள நூலகத்திலும் உலகளாவிய மார்க்க அறிஞர்கள் பேசிய ஒலி ஒளிப்பேழைகள் கிடைக்கும்.

 ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜீம்மா குத்பா பயான் "சலப் ஸாலிஹின்" பள்ளியில் மலையாள மொழியில் நடைபெறும். (அமீரக அரசின் அனுமதியுடன் அரபி அல்லாத மற்றைய மொழியில் ஜீம்மா குத்பா ஷார்ஜா ரோலாவில் உள்ள தமி்ழ் பள்ளியில், தமிழில் நடைபெற்று வருகிறது.. அல்லாஹ்வின் உதவியினை கொண்டு..)

 மாதத்தின் முதல் சனிக்கிழமையில் உருது பயான் நிகழ்ச்சியானது சகோதரர். சர்ருல் பசல் அல் மதனி அவர்களால் நடத்தப்படும்.

 துபை – அல்கூஸில் செயல்படும் அல் மனார் திருக்குர்ஆன் மையமானது இந்தியன் இஸ்லாஹி சென்டரின் ஒரு பிரிவாகும்.

 துபை மாகாணங்களில் மார்க்க பணியினை செய்வதற்கு அரசாங்க பதிவு பெற்ற மையமாக இது செயல்படுகிறது.


இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் மிக சிறப்பாக எந்த விதமான தொய்வு இல்லாமல், இந்தியன் இஸ்லாஹி சென்டர் தொடர்ந்து செய்துக்கொண்டு வருவதாக இந்தியன் இஸ்லாஹி சென்டர் - தமிழ் பிரிவினை சார்ந்த சகோதரர்கள் தெரிவிக்கிறார்கள். இவர்களின் மார்க்க பணிகள் இன்னும் மென்மையடைய நாம் அனைவரும் ஏக இறைவனிடம் பிராத்தனை செய்வோமாக..


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

INDIAN ISLAHI CENTRE TAMIL WING – HORAL ANZ BRANCH – DUBAI. TEL : 04 2689653, 050 6537140, 055 8295313.

இணையத்தள முகவரி :
http://www.islahiabudhabi.org/ , http://www.quraanonline.com/ , http://www.jumakhutuba.com/ .

மின்னஞ்சல் முகவரி : islahind@eim.ae


தகவல் : முத்துப்பேட்டை அபூ ஆஃப்ரின்

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template