Saturday, May 10, 2008

வல்லம் தவ்ஹீத் எழுச்சி மாநாடு - சிறப்பு செய்திகள்

மாநாட்டு பந்தலில் பிசுபிசுத்த கூட்டம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினரால் தஞ்சை மாவட்டம் வல்த்தில் நடத்தப்படும் "தவ்ஹீத் எழுச்சி மாநாடு" பற்றி ஆஹோ..ஓஹோ வென புகழந்து அறிவிப்புகளும், அட்டகாசங்களுமாக இருந்தன. இடையிடையே இம்மாநாடு எதற்காக, என் நடத்தப்படுகின்றது என ததஜ வின் முக்கியத்தலைவர்களெல்லாம் தினந்தோறும் தொலைக்காட்சிகளில் மணிக்கணக்கில் புசிய வண்ணம் இருந்தனர் உச்சகட்டமாக ததஜ வனி் தலைவர் பி.ஜே அவர்கள் இம்மாநாட்டிற்கு 10 லடசத்திற்கும் அதிகமாக மக்கள் வருவர் என தனது 10 லட்ச புரானத்தையும் பாடினார். வலைகுடா நாடுகலெங்கும் ததஜ வின் தொண்டர்கள் அரபியிலும், ஆங்கிலத்திலும், தமிழிலுமாக பல மொழிகளில் அச்சடித்து நேட்டிஸ்கள் விநியோகித்து அரபுச் சள்ளிகளை வீதியெங்கும், ஏழை தொழிலாளர்கள் வசிக்கும் கேம்புகளென ஓடி..ஓடி பொருக்கி தங்கள் தலைமைக்கு லட்சங்களில் அனுப்பி வைத்தனர். இறுதியாக அந்த நாளும் வந்து விட்டது ததஜ வினர் ஆவலுடன் எதிர்பார்த்த "தவஹீத் எழுச்சி மாநாடு" நேற்று (10-05-2008) அன்று மிக தாமதமாக தொடங்கி இரவு 8 மணிக்கு முன்னராகவு முதல்நாள் அமர்வு முடிவடைந்து விட்டது.

"தவ்ஹீத் எழுச்சி மாநாடு" குறித்து பலரும் பலவாறு எதிர்பார்த்து காத்திருக்க வரக்கூடிய தகவல்களோ உண்மை தவ்ஹீது் வாதிகளுக்கு மகிழச்சியை அளிக்க கூடியதாகவே உள்ளது. மாநட்டில் ஊடுருவியுள்ள நமது சிறப்பு செய்தியாளர் சகோ. சலீம் அவர்கள் மாநாடு தொடங்கியதில் இருந்து இரவு 10.00 மணிவரை நடந்த தகவல்களை தொகுத்து அனுப்பியுள்ளார் அதை செய்தித் துளிகளாக உலகெங்கும் இம்மாநாடு குறித்த செய்திகளுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் மக்களுக்காக வழங்குகின்றோம்.

10 லட்சம் பேருக்கு வசதியா? 100 ஏக்கரில் பந்தலா? மக்கள் ஏமாற்றம்

மாநாட்டிற்கு 10 லட்சத்திற்கும் அதிகமானோர் வருகை தருவர் என ஆஹோ ஓஹோவென தகவல்கள் அள்ளி வீசப்பட்டிருந்தன, இணையமெங்கும் ததஜ வின் தொண்டர்கள் தரணி பாடிக் கொண்டிருந்தனர் 100 ஏக்கரில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது, ISO தரச்சான்றிதழ் உடன் தமிழகமே கண்டிராத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என மிகைப்படுத்தப்பட்ட தகவல்களும், புகைப்படங்களும் வெளியிடப்பட்டு வலைகுடா நாடுகள் எங்கும் மக்கள் நம்ப வைக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் ஆரம்பமே வந்திருந்த மக்களுக்கு பேரதிர்ச்சி அளிக்க கூடியதாக இருந்தது முக்கியமாக வலைகுடா நாடுகிளில் இருந்து அரபுச்சள்ளிகளை கட்டி அனுப்பிவிட்டு சிறப்பு விருந்தினராக வந்திருந்த வலைகுடா நாடுகிளன் பொருப்பாளர்களுக்கு.


ஆம் 100 ஏக்கரில் பந்தல் என்று அடித்து விடப்பட்ட கதையை நம்பியிருந்தவர்களுக்கு 3 ஏக்கருக்கும் குறைவான நிலப்பரப்பில் எந்த வசதியும் இல்லாது அமைக்கப் பட்டிருந்த பந்தல் பேரதிர்ச்சியாக இருந்தது. ஒரு ஏக்கருக்கு நெருக்கி அமாந்தாலும் பத்தாயிரத்துக்கு மேல் கொள்ளாது மூன்று ஏக்ரில் முப்பதாயிரம் பேர் கொள்ளளவு உள்ள பந்தலே அமைக்கப்பட்டிருந்தது.

மாநாட்டில் பென்கள் கலவரம்

மாநாடு தொடங்கி சரியாக சுமார் 3.00 மணியளவில் மாநாட்டிற்கு வந்திருந்த பென்கள் கலவரத்தில் ஈடுபடத் தொடங்கினர், காரணம் மாநாட்டிற்கு வந்தவர்களுக்கு எந்த ஒரு வசதியும் தங்குவதற்கோ, இயற்கை உபாதைகளை நிறைவுற்றுவதற்கோ செய்து தராமல் இருந்ததுதான். முக்கியமாக பென்களுக்கு தனி இட வசதி ஏதும் செய்திருக்கவிலிலை, பல்வேறு ஊர்களில் இருந்தும் வாகனங்களில் ஏற்றிவரப்பட்ட பென்கள் எவ்வளவு தூரம்தான் இத்தனை ஆன்களுக்கு மத்தியில் மூத்திரமோ, மலமோ கழிக்காமல் இருக்க இயலும்? முதலில் சரியான வசதிகள் இல்லை, இரன்டாவதாக தண்ணீர் சுத்தமாக இல்லை அவ்வளவுதான் பென்கள் கலவரத்தில் ஈடுபடத் தொடங்கி விட்டனர். உடனடியாக விழுப்புரம், சென்னை போன்ற பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள் கூட்டம் கூட்டமாக மாநாட்டு பந்தலில் இருந்து வெளியேறி தங்கள் ஊர்களுக்கு செல்ல துவங்கி விட்டனர்.

மாநாட்டிற்கு 10 லட்சம் பேர் வந்தனரா?

மாநாட்டில் கடைகள் அணைத்தும் பி.ஜே மற்றும் அவரது சுற்றத்தனராலேயே நடத்தப்பட்டது சாப்பாடு ஒன்று ரூ 50 க்கும் குடிநீர் பாக்கெட் ஒன்று 4 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டதை கண்டு மக்கள் கொதித்து போய் விட்டனர்.பி,ஜே யின் கணக்கு இங்கு தவறி விட்டது என்பதை வந்திருந்த கூட்டம் நிறுபித்தது. காவரி டெல்டா பகுதிகளில் இருந்து அதிகமாக கூட்டம் வரும் என்று மனக்கணக்கு போட்டுத்தான் வல்லத்தில் ஏற்பாடு செய்தார் ஆனால் பெரும் ஏமாற்றத்தை அளிக்கும் விதமாக அவர் மிகவும் எதிர் பார்த்த பகுதிகளில் இருந்து மக்கள் குறைவாகவே வந்திருந்தனர் உதாரனமாக முத்துப்பேட்டையில் இருந்து சுமார் 500 பேர் மட்டும், அதிராம்பட்டினத்தில் இருந்து 250 பேர், பொதக்குடியில் இருந்து 1 கார் மட்டும், பண்டாரவடையில் இருந்து 2 வேன்கள், திருவாருரில் இருந்து சுமார் 100 பேர் என் மிகக ஏமாற்றமளிக்கும் வகையிலேயே கூட்டம் வந்திருந்தது.

மொத்தமாக உளவுத்துறை மற்றும் இவர்களின் கூட்டத்தை கவணித்து வரும் சில அமைப்புகளின் தகவல்படி 9 ம் தேதி இரவில் இருந்து 10 ம் தேதி இரவு சுமார் 10.00 மணி வரை வல்லத்துக்குள் தரை மார்க்கமாக நுலைந்த வாகனங்களின் எண்ணிக்கை கீழ் வருமாறு :

வேன்கள் (அனைத்து வகை) - 308 (1 வேனுக்கு 8 முதல் 12 பேரே அமாந்து வந்துள்ளனர்)


  • பஸ்கள் (அனைத்து வகை) - 172 (1 பஸ்சுக்கு 25 முதல் 40 பேர் வரை வந்துள்ளனர்)

  • சுமோ வகை கார்கள் - 78

  • ஸகார்பியோ இன்ன பிற வகை கார்கள் - 40

  • அம்பாசடர் கார்கள் - 79

  • மோட்டார் பைக் 2 சக்க வாகனங்கள் - 264

மொத்தமாக 10ம் தேதி மாலை வரை வந்த கூட்டம் சுமார் 13,000 த்தல் இருந்து 17,000 ம் வரையே. இந்த கூட்டத்திற்கே பந்தலில் முறையான வசதிகள் செய்யப்படவில்லை. ஆகையால் இதில் ஒரு பகுதியினர் மாலை 3 மணிக்கு மேல் தங்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப ஆரம்பித்ததை காண முடிந்தது.


30,000 பேரே அமர இயலாத பந்தலுக்கு ஏறத்தால 46,000 சேர்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு குவித்து வைக்கப்பட்டிருந்தது இவர்களின் சரிவர திட்டமிடாமையை காட்டியது. இடையில் பென்களின் ஊடே மாநாட்டிற்கு வந்திருந்த சில இளைஞர்கள் புகுந்து சில்மிசங்களில் ஈடுபட்டதால் அமளி ஏற்ப்பட்டது உடனே திரு. பாக்கர் அவர்களும், திரு. பி.ஜே அவர்களும் மைக்க பிடித்து உடணடியாக பென்களின் ஊடே ஊடுருவி உள்ள ஆன்கள் வெளியேறுமாறு தொடாந்து அறிவித்த வண்ணம் இருந்தனர்.

நொருங்கி விழுந்த காபா செட்

அசம்பாவிதங்களின் உச்ச கட்டமாக உலகெமெங்கும் எதிர்ப்பை மீறி மக்காவில் அமைந்துள்ள காபத்துல்லா என்ற இறையில்லம் போன்று அமைக்கப்பட்டிருந்த அந்த அமைப்பு (செட்) ன் ஒரு பகுதி நொருங்கி விழுந்தது. ஏற்னவே அக்கிணி வெயிலிலிலும் அனல் காற்றிலும் சரிவர எந்த வசதியும் செய்து தராததால் மனம் வெதும்பி போய் இருந்த பென்களுக்கு இது போன்று தண்ணீரோ மூத்திரம் பேய்வதற்கு கூட வசதிகளோ இல்லாததால் கூக்குரலிட்டு கலவரத்தில் ஈடுபட்டனர், இந்த நிலையில் காபா போன்று அமைக்கப்பட்ட செட்டும் உடைந்து விழுந்துவிட மக்களும் கட்டுப்பாடின்றி உரை எதையும் கேட்காமல் அங்கும் இங்கும் அலைய ஆரம்பித்தவுடன் வெறுப்பாகி போன் பி,ஜே யும் பாக்கரும் மேடையில் ஏறி சும்மாக்காச்சும் அழுது காட்டி மக்களை சென்டிமென்டாக டச் பண்ண முயற்சி செய்தனர் பாச்சா எதுவும் பலிக்கவில்லை என்றவுடன் விரைவாக மீட்டிங் முடிக்கப்பட்டது. .

நிகழச்சியில் தன்னாலும் முடியும் என்ற போட்டி மனப்பான்மையுடன் பீஸ் மாநட்டில் ஏற்பாடு செய்திருந்தது போல் ஒரு கண்காட்சிக்கும் முயற்சி செய்திருந்தனர் அந்த கண்காட்சியல் வைக்கப்பட்டிருந்த தகவல்தான் கொடுமையிக் உச்சம், அதாவது இஸ்லாத்தின் வரலாறு என்ற தலைப்பில் அமைக்கப்பட்டிருந்த பகுதியில் நபிமார்கள். சஹாபாக்கள், தாபியின்கள், அறிஞர்கள் என்ற வரிசையில் பலரின் பெயர், பிறந்த வருடம் ஊர் என குறிப்பிடப்பட்டிருந்தது அந்த வரிசையில் இமாம் புகாரி (ரஹ்) இப்னு தைமியா(ரஹ்) என இவர்களுக்கு அடுத்தபடியாக பி.ஜெயினுல்லாபுதீன் அவர்களின் பெயரை குறிப்பிட்டு மாபெரும் மார்க்க அறிஞர் என அவரின் பிறந்த வருடமும் குறிப்பிடப்பட்டு வைக்கப்பட்டிருந்தது பலரை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.


அதுவும் இமாம் புகாரி (ரஹ்) வரிசையில் இப்னு தைமிய்யா அவர்களுக்கு அடுத்தபடியாக உலகில் இஸ்லாத்திற்கு முக்கிய சேவையாற்றியவர் என பி.ஜெயினுல்லாபுதீன் அவர்களின் தகவல் வைக்கபபட்டிருந்ததை பார்த்த ததஜ வினர் பலருக்கே நெருடலாக இருந்ததை உணர முடிந்தது.
அத்துடன் இடையில் வெளியடப் பட்ட அறிவிப்பு ஒன்று இன்னும் மக்கள் சங்கடப்பட வைத்தது அதாவது நாளை (இன்று 11-05-2008) நடைபெறும் நிகழ்ச்சியில் பி.ஜெயினுல்லாபுதீன் அவர்களுக்கு தவ்ஹீதை காத்ததற்காக பட்டம ஒன்று வழங்கப்பட உள்ளது என்ற செய்தி. நிகழ்சி எதிர் பார்த்தபடி நடக்காததாலும் மக்கள் கூட்டம வராததாலுமட் வந்திருந்த மக்களுக்கு முறைப்படி வசதிகள் இல்லாததால் சலசலப்பு ஏறப்பட்டு கலைந்து சென்றதாலும் வெறுப்பின் உச்சத்தில் இருந்த பி.ஜே பலரை கடும் வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்ததை சாதாரன தொண்டர் முதற்கொண்டு காண முடிந்தது.

இறுதியில் மைக்கை பிடித்த பி.ஜே நீலிக் கண்ணீர் வடித்தும் மக்கள் மசியாததால் பதினைந்தாயிரம் பேரே கூடாத இந்த கூட்டத்தை கும்பகோனத்தில் நடக்கும் மகாமகத்துக்கும், மக்காவில் நடக்கும் ஹஜ்ஜீக்கும் ஒப்பிட்டார், ஹஜ்ஜீக்கு லட்சக்கணக்கில் வசூல் செய்யும் சவுதி அரசாங்கத்தாலேயே வரக்கூடிய மக்களுக்கு சவுகரியங்கள் செய்ய இயலவில்லை அது இது என சாக்கு போக்குகள் சொல்லி மற்றவர்களின் தவறுகளையும் குறைகளையும் எடுத்து சொல்லி அத்துடன் இம்மாநாட்டில் உள்ள குறைகள் ஒன்றும் பெரிததல்ல என்பது போல் ஒப்பீடு நடத்தியது வந்திருந்த மக்களுக்கு மேலும் எரிச்சலை ஏறப்படுத்தியது.

இடையி்ல் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை பி.ஜேயும் பாக்கரும் நடத்தினர் வந்திருந்த பத்திரிகையாளர்களுக்கு மத்தியில் உரையாற்றிய பி.ஜே மாநாட்டிற்கு ஒரு லட்சத்திற்கு அதிகமாக மக்கள் வந்திருப்பதாக தனது சுருதியை குறைத்து (10 லட்சம் என ஏற்கனவே பலமுறை அடித்து விட்டவர்) வாசித்தார் ஆனால் விடாத இந்தியா டைமஸ் நிருபர் ஒரு லட்சம் என்கின்றிர்கள் வந்திருப்பது மிக குறைவாக உள்ளதே என்றதற்கு மழுப்பினார்.

பின்னர் மற்றொரு நிருபர் நேற்று வேலுர் கோட்டையில் தமுமுக வினர் தொழுகை நடத்த திரண்டு நடத்திய போராட்டத்தையும் அங்கு கூடிய மக்களையும் சுட்டிக் காட்டி கேள்விகளை எழுப்பினார் அதற்கும் மழுப்பலாக பி.ஜே நாங்கள் நடத்தும் இம்மாநாடு மக்களிடையே பிள்ளி, சூனியம், மந்திரம் தந்திரம் போன்ற மூட நம்பிக்கைகளை போக்கவும், வரதட்சினை போண்ற கொடுமைகளை ஒழிக்கவும் இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவுமே நடத்தப்படுகின்றது என திரும்ப திரும்ப கூறிக் கொண்டேயிருந்தார் ஒரு இடத்தில் கூட ஏகத்துவத்தை நிலைநாட்டவும், இஸ்லாத்தை பற்றிய எழுச்சியை மக்களிடையே ஏற்படுத்தவும் என கூறவில்லை. இறுதியாக மற்றோர் ஆங்கில பத்திரிகை நிருபர் தமுமுக வின் தலைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இம்மாநாடு குறித்து கருத்து தெறிவிக்கையில் "இது பொழுது போக்கிற்காக" நடத்தப்படும் நிகழச்சி (It is an entertainment gathering) என்று கூறியுள்ளார் இது குறித்து தங்கள் பதில் என்ன என்று கேட்டதற்கு மழுப்பலாகவே ஏதோ சொல்லிவிட்டு எழுந்து சென்று விட்டார்.

தென்மாவட்டங்களில் இருந்து அதிகமாக கூட்டம் வரவில்லை வந்த சில வாகனங்களையும் திருச்சியிலேயே நிறுத்தி வைத்துள்ளதாக தகவல், இங்கு இட வசதி இல்லை என்ற காரனத்தினால் பலர் திரும்பி சென்று கொண்டுள்ளனர், பெரும் தூரங்களில் இருந்த வந்திருந்த பென்கள் தங்குவதற்கும், இயற்கை உபாதைகளை நிறைவேற்றுவதற்குதம் கூட மறைவான இடம் இல்லை. நுறு (100) ஏக்கர் பந்தல் கதை அம்பேலாகி விட்டது.


மாநாட்டிற்கு வந்திருந்த மக்கள் காறித்துப்பாத குறையாக நிர்வாகிகளை பிடித்து உழுக்கி கொண்டிருந்தது வேடிக்கையாக இருந்தது. அரசியல் அனுபவமே இல்லாத தப்லீக் ஜமாத்தனர் கூட இரன்டு லட்சத்திற்கு அதிகமாக மக்கள் கூடிய தங்கள் இஜ்திமாவில் முறையாக உணவு, கழிப்'பிடம், தங்கும் வசதிகளை செய்திருந்தனர் ஆனூல் அரசியல் வித்தகர்களாக கூறிக்கொள்ளும் இவர்களால் 15 ஆயிரம் பேருக்கு வசதிக் செய்ய முடியவில்லை என பேசிக் கொண்டிருந்தனர்.

இறுதியாக மக்கள் தகவலுக்காக 10 லட்சம் பேர் வரவேண்டும் என்றால் எத்தனை வாகனம் வேண்டும் என்ற கணக்கு கீழே உள்ளது பார்த்து கொள்ளவும், இன்னும் 10 லட்சம் பேர் கூடிய ஒரு நிகழ்வு ஹஜ்ஜீக்கு அடுத்தபடியாக நிகழ்ந்ததென்றால் ஈரான் மதகுரு திரு. கொமெனி அவர்களின் சவ ஊர்வலத்தின்போது தான் தமிழகத்தில் பேரரிஞர் அண்ணா மரணித்தபோது இத்தனை பேர் கூடவில்லை என்பது வரலாறு.இது மக்ள் கற்பித்த பாடமா? இல்லை தற்பெருமைக்கு இறைவனால் வைக்கப்பட்ட ஆப்பா? .... செய்தி தொடரும்...


10,00,000 - பத்து இலட்சம்

கும்பகோணத்தில் நடைபெற்ற பேரணியில் பத்து இலட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாக த.த.ஜ.வினர் கூறிவருகின்றனர். பத்து இல்லை பதினைந்து, பதினெட்டு என்று கூறுவோரும் உண்டு. பத்து இலட்சம் மக்கள் கலந்துகொண்டால் வாகன வசதி பின்வருமாறு இருக்க வேண்டும்.

5,000 - ஒப்பந்த ஊர்திகள்

34 பேர் பயணம் செய்யக்கூடிய பேருந்தில் மிக அதிகபட்சமாக 50 பேர் பயணம் செய்தார்கள் எனக்கொண்டால் 2,50,000 பேர்.

10,000 - வேன்கள்

11பேர் பயணிக்கக்கூடிய வேனில் மிக அதிகபட்சமாக 20 பேர் பயணம் செய்தனர் எனக் கணக்கிட்டால் 2,00,000 பேர்.

25,000 - பைக்குகள்

2 பேர் பயணம் செய்யக்கூடிய பைக்குகளில் 3 நபர் வீதம் பயணம் செய்தனர் என்று கணக்கிட்டால் 75,000 பேர்.

உள்ளூர் மக்கள்

கும்பகோணத்தின் மொத்த மக்கள் தொகை (இந்துக்கள் உள்பட) சுமார் 1,60,000. இதில் 1,50,000 பேர் கலந்து கொண்டார்கள் எனக் கருதுவோம்.

அக்கம் பக்கத்தினர் - 3,25,000

தஞ்சை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், மண்ணார்குடி, சென்னை சாலை என 5 வழித் தொடர்பு உள்ள கும்பகோணத்திற்கு ஒவ்வொரு வழியிலிருந்தும் அரசு பேருந்துகள் மூலமாக சுமார் 1000 பேருந்தில் ஒவ்வொரு பேருந்திலும் குறைந்தது 65 நபர்கள் பயணம் செய்தால் 3,25,000 மக்கள் கலந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

அதாவது மேலே குறிப்பிடப்பட்டுள்ள 5 வழித்தடங்களிலிருந்தும் காலை 4மணி முதல் மாலை 4 மணிவரை - 12 மணிநேரத்தில் சுமார் 1000 பேருந்துகள் வரவேண்டும். அதாவது ஒரு மணிநேரத்திற்கு சுமார் 83 பஸ்கள் - புரியும்படி சொன்னால் இந்த ஐந்து வழிகளில் ஒவ்வொரு வழியிலிருந்தும்
45 விநாடிகளுக்கு ஒரு பேருந்து வரவேண்டும். இப்படி பேருந்து சேவை உள்ள பகுதி உலகில் எங்குமே இல்லை என்று உறுதியாகக் கூறலாம்.

அக்கம் பக்கத்தினர் வருவதற்கு மட்டுமே 45 விநாடிகளுக்கு ஒரு பேருந்து. ஒப்பந்த ஊர்திகளில் வருவோரும் இந்த 5 வழிகளில்தான் வரவேண்டும். இதையும் சேர்த்தால் 12 மணி நேரத்தில் சராசரியாக 22.5 விநாடிகளுக்கு ஒரு பேருந்து வந்திருக்க வேண்டும். இவை பேருந்துக்கான கணக்கு மட்டுமே. வேன்களின் எண்ணிக்கையும் சேர்த்து நீங்களே கணக்கு செய்து கொள்ளுங்கள்.

பேரணி - மாநாடு முடிந்து இந்த வாகனங்களில் வந்தவர்கள் திரும்பி செல்வதாயிருந்தால் மொத்தம் 45,000 வாகனங்கள் ஒவ்வொரு வழியிலும் 9,000 வாகனங்கள் திரும்புவதாகக் கணக்கிடுவோம். 5 விநாடிக்கு ஒரு வாகனம் வீதம் நிமிடத்திற்கு 12 வாகனங்கள். ஒரு மணி நேரத்திற்கு 720 வாகனங்கள். 12.5 மணி நேரத்திற்கு 9000 வாகனங்கள் ஆகியிருக்கும். ஒரு நிமிடத்திற்கு 12 வாகனங்கள் வீதம் சென்றால் எத்துனை அசம்பாவிதங்கள் நடக்கும். எத்துனை போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதையெல்லாம் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

இது சாத்தியமா? இத்துனை மக்கள் கும்பகோணத்தில் கூட முடியாது என்பதும் கூடினால் என்னென்ன விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என்பதெல்லாம் அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தெரியாதா? பின் யாரை ஏமாற்ற 10 இலட்சம்? வெளிநாடுகளில் இருக்கும் தமிழக முஸ்லிம்கள் நாம் சொல்வதை அப்படியே நம்பிவிடுவார்கள் என்ற எண்ணம்தானே இப்படிச் சொல்ல வைக்கின்றது. அவர்கள் சிந்திக்க மாட்டார்கள் என்று நினைக்காதீர்கள்.

குறிப்பு: பேரணி நடந்த மறுநாள் நான் போட்ட கணக்கு இது. பத்து இல்லை. அதில் பாதி கூட கலந்து கொள்ளவில்லை என்பதை தேர்தல் நிரூபித்துவிட்டது. எனினும், த.த.ஜ.வினர் பொய்க் கணக்குகளை, புள்ளி விபர மோசடிகளை இன்றும் அப்படியே நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவி பக்தர்கள் அறிந்து கொள்வதற்காக இப்போது பதிகிறேன்

3 மறுமொழிகள்:

Anonymous said...

காபத்துல்லா செட் இடிந்து விட்டதாக உங்கள் நிருபர் எழுதியிருப்பது தவறு. அது இடியவில்லை ஆனால் மாநாட்டுக்கு முன்னரே இடிந்து விட்டதாம் பின்னர் சரி செய்யப்பட்டது.

ஆனால் மாநாட்டு அன்றும் இடிந்து விட்டதாக அங்கு சிலரால் கூறப்பட்டது ஆனால் தகவல் தவறு. காபா செட்டை சுற்றி பென்கள் கட்டுப்பாடில்லாமல் முத்தமிடுவதும் தவாப் செய்வதுமாக இருந்தனர் இது மாபெரும் பாவமான செயலாகும்.

வீடியோ கிளிப் அப்லோட் செய்து லிங் அனுப்பியுள்ளென் சைட்டில் போடவும். நிறைய அநாச்சாரங்கள் நடந்தது.


தாவூத்
அதிராம்பட்டினம்

said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்புள்ள சகோதரருக்கு,
நிங்கள் அப்லோட் செய்தவிட்டு அனுப்பிய வீடீயோ லிங் கிடைத்தது ஆனால் அந்த குறிப்பிட்ட செர்வர் முகவரி சவுதி அரேபியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் டவுன்லோட் செய்ய இயலவில்லை. பரவாயில்லை வேறு நாட்டில் உள்ள எனத தோழரிடம் கூறி அதை சரி செய்ய சொல்லி உள்ளேன். கட்டாயமாக உங்கள் குரலல் நீக்கம் செய்துவிட்டே அது ஏற்றம் செய்யப்படும்.

காபா செட் இடிந்து விழுந்தது என்பது தவறான தகவல் நிகழச்சியின் அன்று இடியவில்லை என்று சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. அந்த செய்தி எங்கள் தளத்திற்காக செய்தி சேகரிப்பதற்கு ஒருவரை அனுப்பியிரந்தோம் அந்த சகோதரின் தவறான புறிதலால் அந்த செய்தி அவ்வாறு தொகுக்கப்பட்டுள்ளது.

அடுத்தமுறை ஃபைல்களை கூகிலிலேயே ஏற்றுங்கள் அல்லது சேர்ட் செர்வரில் ஏற்றுங்கள் yousendit.com இங்கு தடை செய்யப்பட்டள்ளது அதில் ஏற்றவேண்டாம்.நன்றி

Anonymous said...

இரண்டாம் நாள் மாநாட்டை பற்றியும் விளக்கமாக எழுதவும்.

சீக்கிரமாக வீடியோ லிங்க்கை அப்லோடு செய்யவும்

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template