Wednesday, August 27, 2008

சுதந்திர தின அணிவகுப்பின் வெற்றி - ஜமாத்தார்கள், அனைத்து இயக்கங்களுக்கும் நன்றி

சுதந்திர தின அணிவகுப்பின் வெற்றி
முஸ்லிம் சமூகத்தின் வெற்றி!
ஜமாத்தார்கள், அனைத்து இயக்கங்களுக்கும் நன்றி


நமது தேசத்தின் சுதந்திரம் என்பது இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து போராடிப் பெற்ற சுதந்திரம். 15ம் நூற்றாண்டிலிருந்து ஏறத்தாழ 400 வருடங்கள் இந்த தேசத்தின் விடுதலைக்காக இரத்தம் சிந்தியவர்கள் முஸ்லிம்கள்.1947ம் ஆண்டு நமது தேசம் விடுதலையடைந்தபோது இருந்த முஸ்லிம்களின் ஜனத் தொகையை விட அதிகமான எண்ணிக்கையில் இந்த தேசத்தின் சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்தவர்கள் முஸ்லிம்கள்.

சுதந்திரமடைந்து 60 ஆண்டுகள் கழிந்தும் விடுதலை வரலாற்றின் வீர வடுக்களிலிருந்து முஸ்லிம்கள் திட்டமிட்டு அந்நியப்படுத்தப்பட்டு வருகிறார்கள். இந்த தேசத்தின் நச்சுக் கிருமிகளாகவும் புற்று நோயாகவும் திகழ்ந்து கொண்டிருக்கும் சங்பரிவார ஃபாசிஸ்டுகளின் நீண்ட நெடிய சதிச் செயல்களின் ஒரு பகுதிதான் இந்த அந்நியமயமாக்கல் திட்டம் என்பதை தாங்கள் நன்கறிவீர்கள்.போராடிப் பெற்ற சுதந்திரத்தில் முஸ்லிம்களின் உரிமையை பறைசாற்றும் விதமாகவும், இந்துக்களுடன் இணைந்து போராடிய ஒற்றுமையை நிலைநிறுத்தும் முகமாகவும், முஸ்லிம்களின் கண்ணியத்தை இந்த தேசத்திலே உயர்த்திப் பிடிக்கவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக கடந்த ஆகஸ்ட் 15ம் நாள் மதுரையில் சுதந்திர தின அணிவகுப்பு நடத்த நாம் திட்டமிட்டோம்.

அணிவகுப்பின் மூலம் முஸ்லிம்களுடைய சக்தி வெளிப்பட்டால் எங்கே முஸ்லிம் சமூகம் தைரியமும் தன்னம்பிக்கையும் வரப்பெற்றவர்களாக நெஞ்சை நிமிர்த்தி இந்த தேசத்தின் வீதிகளிலே வலம் வரத் துவங்கி விடுவார்களோ என அஞ்சிய சங்பரிவார ஃபாசிஸ்டுகள் முஸ்லிம்களின் இந்த அணிவகுப்பை எப்படியேனும் தடுத்து நிறுத்திட வேண்டும் என சதி செய்யத் துவங்கினர். மேலும் முஸ்லிம்களை அந்நியர்களாகவும் தேச விரோதிகளாகவும் சித்தரிக்கும் சதித் திட்டம் எங்கே நிறைவேறாது போய் விடுமோ என்ற அச்சத்தில் ஒப்பாரி வைத்து கூக்குரலிட்டனர். உளவுத்துறையும் காவல்துறையும் சங்பரிவார்களுடன் இணைந்து நின்று சொல்லொண்ணா இடையூறுகளை நமக்கு ஏற்படுத்தியது. மேலும் நமக்கு மைதானம் தந்த பள்ளிக்கூட நிர்வாகத்தை மிரட்டி மைதானத்தை அனுமதியை ரத்து செய்ய வைத்தனர். அணிவகுப்புப் பயிற்சியில் ஈடுபட்ட மனித நீதிப் பாசறையின் உறுப்பினர்களை கைது செய்து பொய் வழக்கு போட்டனர். இறுதியில் சங்பரிவார்களின் கோரிக்கையை ஏற்று நமது அணிவகுப்பிற்கு தடை விதித்தனர்.

இவ்வாறு சங்பரிவார்களும் காவல்துறையும் உளவுத்துறையும் ஓரணியில் நின்று சதி செய்த போது, இதற்கெதிராக கிளர்ந்தெழுந்த முஸ்லிம் ஜமாஅத்துகள், இயக்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து போராடின. சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை; முஸ்லிம்களின் சுதந்திர தின அணிவகுப்பிற்கு அனுமதி தந்தே ஆக வேண்டும் என ஆதரவுக் குரல்கள் ஓங்கி ஒலித்தன. ஜமாஅத் லெட்டர்களும், தந்திகளும் ஃபேக்ஸ்களும், இயக்கங்களின் கடிதங்களும் தமிழக முதல்வரின் அறையை நிரப்பின.ஆனாலும் தமிழக அரசு முஸ்லிம்களின் சுதந்திர உணர்வுகளுக்கும் உரிமைக் குரலுக்கும் செவிசாய்க்கவில்லை.


இறுதியாக நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினோம். அல்லாஹ்வின் பெருங்கருணையினாலும் உங்கள் எல்லோருடைய துஆ பரக்கத்தாலும் அணிவகுப்பிற்கு அனுமதி கிடைத்தது.நாம் அனைவரும் இணைந்து சுதந்திர தின அணிவகுப்பை திட்டமிட்டபடி செவ்வையாக நடத்தினோம்.முஸ்லிம் சமூகத்தின் சக்தியை வெளிப்படுத்தினோம். சுதந்திர தின அணிவகுப்பின் வெற்றி என்பது ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

நிகரற்ற ஆற்றலுக்குச் சொந்தக்காரனாகிய அல்லாஹ்வும், எம்பெருமானார் ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் காட்டித் தந்த ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப் பிடித்ததால் நமது கண்ணெதிரே முஸ்லிம் சமூகத்தின் வெற்றியைக் கண்டோம். சூது மதியாளர்களின் சூழ்ச்சிகள் தவிடு பொடியானதைக் கண்டோம். முஸ்லிம் சமூகத்தின் இஸ்ஸத் கண்ணியம் உயர்ந்து நின்றதைக் கண்டோம். ""கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஃமின்களுக்குமே உரியது.'' அல்குர்ஆன் 63 : 8


சுதந்திர தின அணிவகுப்பை வெற்றிபெறச் செய்து இந்த நிலையை நம் சமூகம் எட்டுவதற்கு பாடுபட்ட ஜமாத்தார்கள், இயக்கங்கள், நல்லுள்ளங்கள் அனைவருக்கும் மனித நீதிப் பாசறையின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழகம், கேரளம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் நாம் நடத்திய சுதந்திர தின அணிவகுப்பின் மூலம் அகில இந்திய ரீதியில் முஸ்லிம் சமூகத்தின் கண்ணியம் உயர்த்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த அணிவகுப்பின் மூலம் சங்பரிவார சக்திகளின் கனவுகளும் கலைக்கப்பட்டிருக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ். மேலும் இது மட்டுமின்றி எல்லா நிலையிலும் இதே போன்று நாம் ஒன்றிணைந்தால் இன்ஷா அல்லாஹ் இந்த தேசத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் சக்தியாக முஸ்லிம்கள் மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது நிதர்சனமான உண்மை.


இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை(அருட்கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகி விட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் நீங்கள் நேர் வழி பெரும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்துகளை வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகின்றான். அல்குர்ஆன் 3:103


திருமறையும் திருத்தூதரும் காட்டிய வழியில் ஒன்றிணைவோம்! வெற்றி பெறுவோம்!!இப்படிக்கு,
அ. யா முஹைதீன்,

மாநில பொதுச்செயலாளர்,
மொபைல்: 98406 97079

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template