Saturday, December 27, 2008

தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி 18 வது பட்டமளிப்பு விழா

தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி 18 வது பட்டமளிப்பு விழா

மேடையில் முக்கியஸ்த்தர்கள்

தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் 18வது பட்டமளிப்பு விழா இன்று (27.12.2008) மாலை 2 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநிலை பயின்ற மாணவியர் 302 பேர் இவ்விழாவில் பட்டம் பெற்றனர்.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தேசிய சிறுபான்மை ஆணைய தலைவர் நீதியரசர் எம்.ஜே.ஏ. சித்திக் அவர்கள் புது தில்லியில் இருந்து வருகை தந்து மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

தங்கம் பதக்கம் பெற்ற B.Sc. Home Science மாணவி முனிரா அவர்கள்


கல்வி என்பது மனிதனுக்கு வாழ்வாங்கு வாழ்வதற்குறிய அறக்கருத்துக்களையும், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியையும் அவனுக்குள் விதைப்பதாக இருத்தல் வேண்டும் என்றும், நல்லொழுக்க பண்புகளையும், மனித நேயத்தையும் விதைப்பதுதான் உண்மையான கல்வி என்று தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி அறிவியல் கருத்துக்களை எடுத்துக் கூறாத சமயம் குற்றமுடையது என்றும், அறிவியல் கருத்தக்களை எடுத்துக்கூறாத சமயம்குருட்டுத்தனமானது என்றும் ஆல்பர்ட்ட ஐன்ஸ்டின் என்ற தத்துவ ஞானி கூறிய கருத்துக்களையும் எடுத்துக்கூறினார். கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் புதிய கண்டுபிடிப்புக்களை உலகுக்கு வழங்கும் ஒப்பற்ற நிறுவனங்களாகும் இந்த அறிவியல் யுகத்தில் அறிவுலகப் பிரம்மாக்களாகவும் திகழ்கின்றன என்று குறிப்பிட்டு பேசினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூட்டத்தின் ஒரு பகுதி

கல்லூரித் தாளாளர் மருத்துவர் ரஹ்மத்துன்னிசா அப்துர்ரஹ்மான் அவர்கள் விழாவிற்கு தலைமை தாங்கினார். செயளாலர் திரு. காலித் ஏ.கே புகாரி அவர்கள் விழாவை துவக்கி வைத்தார்கள். டாக்டர் ரஹ்மத்துன்னிசா அப்துர்ரஹ்மான் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள். பட்டம் பெறும் மாணவழயருக்கான உறுதி மொழியை கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ்.சுமையா அவர்கள் வாசித்தார்கள்.மாணவியர் அதனை வழிமொழிந்தார்கள். விழாவை முனைவர் திருமதி நாதிரா கமால் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கில் மாணவியர்களும் அவர்களின் உரவினர்களும், முக்கியஸ்த்தர்களும் பங்கு பெற்றனர். இறுதியில் மாணவியரின் நாட்டுப்பண்ணுடன் விழா முடிவுற்றது.

செய்தி தொகுப்பு : முகவைத்தமிழன்
the thassim beevi abdul kader college for women, kilakarai

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template