Showing posts with label தமிழ் முஸ்லிம். Show all posts
Showing posts with label தமிழ் முஸ்லிம். Show all posts

Saturday, November 08, 2008

ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிற சமுதாயமும் அதன் இயக்கங்களும் - சகோ. ரஃபீக் உதுமான்

ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிற சமுதாயமும் அதன் இயக்கங்களும்

அருள்மறை குர்ஆன் இஸ்லாத்தை அல்லாஹ்வால் ஏற்றுக்கொண்ட வாழ்க்கை முறையாக்கி அதை உலக மக்களுக்கு பரிபூரணபடுத்தி விட்டதாக பகர்கின்றது. அதையே வாழ்க்கை நெறியாக ஏற்று நடக்கின்ற நமது இஸ்லாமிய சமுதாயத்தின் இன்றைய நிலை என்ன?. இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் தந்த ஜனநாயக முறையை ஒழுங்காக இஸ்லாமியர்கள் பயன்படுத்தாததால் இன்று(இஸ்லாமிய மார்க்க இனத்தை அழிப்பதற்காக நேரடியாக) என்கவுண்டர் எதிர்வினை என்று தீவிரவாதத்தை செய்துவிட்டு சட்டத்தை தீர்ப்பை, சொல்கிற நீதிமன்றங்களிலும் பாராளுமன்றங்களிலும் சட்டமன்றங்களிலும் தைரியமாக உலா வருகிறார்கள்.

மும்பையில் ஒரு பீகார் இளைஞனை காவல்துறை சுட்டுவிட்டது. நேர் எதிர்மறையில் உள்ளவர்கள் நிதீஷ், லாலு மற்றும் பஸ்வான் இன்னும் பல தலைவர்கள் ஒன்றாக கைகோர்த்து பிரதமரை பார்க்கிறார்கள். தமிழகத்திலே திமுக உன் உறவு தேவையில்லை என்று பாமகவை வெளியேற்றிவிட்டது. கம்யூனிஸ்டுகள் திமுக உறவு தேவையில்லை என்று வெளியேறிவிட்டன. பரஸ்பரம் மாறி மாறி பழி சுமத்திக்கொண்டார்கள். இலங்கை பிரச்சனை வந்தபோது ஒன்றாக கைகோர்த்துக்கொண்டார்கள்.

ஒரே வேதம்! ஓர் இறை என்பதை பின்பற்றுகிற அனைவரும் சகோதரர்கள் என்று ஏற்றுக்கொண்ட இஸ்லாமிய இயக்கங்களே!! தலைவர்களே!!! உங்கள் மண்டையில் உறைக்கவில்லையா? எவ்வளவு காலம் ஈகோ வெறிபிடித்து பகைமை கொண்டாடுவீர்கள். இஸ்லாத்தை பின்பற்றுபவர்களை ஒடுக்க யார் காரணம்?. பெண் தீவிரவாதி சாத்விக்கு ம.பி.யில் நான் எம் எல் ஏ சீட் தருகிறேன் என்றும் மஹாராஷ்டிராவில் பத்திரிகை கௌரவிப்பதும் திமுக, காங்கிரஸ் அதிமுக உள்ளுர சிரிப்பதும் தெரிகிறதா. நாட்டிலே நடப்பதை மக்கள் உணரவில்லை. கண்ணை மூடிக்கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணமா? எத்தனை காலம் ஏமாற்றுவீர்கள். ஆட்டுமந்தை கூட்டமும் மழையின் இடி சப்தம் கேட்டு மிரண்டு பார்க்கும். சட்ட மன்றங்களிலும் பாராளுமன்றங்களிலும் இஸ்லாமியர்களின் கட்சி பிரதிநிதிகளின் குரலுக்கு ஆட்சியாளர்கள் மிரளும் வரை இந்த நிலை மாறாது.மாறாக ஒடுக்கிக்கொண்டேயிருப்பார்கள் என்று பாமரனுக்கும் தெரியும்.

இயக்கங்களே நீங்கள் என்ன செய்தீர்கள். கொஞ்சம் விழிப்புணர்வு வந்தது உண்மை. ஆனால் எத்தனை வருடங்களுக்கு இப்படி பிரிந்து போராட்டம் என்று கத்தி முதலிடத்தை பிடிக்க போட்டி போடுவீர்கள்?. பகைமையிலேயே இப்படியே இருந்து அடிபொடிகளின் உதவியோடு காசை பிரித்து சுகபோகமாக வாழ்ந்து காலத்தை கழித்துவிடலாம் என்ற எண்ணமா?. நீங்கள் எல்லா இயக்கங்களையும் ஜமாஅத்துகளையும் கலைத்து ஒன்றாகிவிடுங்கள் என்று ஒருவரும் அழவில்லை. வரும் தேர்தல்களில் இஸ்லாமிய (ஒடுக்கப்பட்ட) மக்களின் தனிக்கட்சி தனிச் சின்னம் வேட்பாளர்களுக்கு அது எந்த இயக்கத்தின் கட்சியானாலும் சரி அது புதிய கட்சியானாலும் சரி மற்ற கட்சியோடு கூட்டு வைத்திருந்தாலும் சரி ஒட்டு மொத்த ஆதரவை அளித்து அவர்களின் எண்ணிக்கையை கூட்ட வேண்டியது காலத்தின் உயிர்நாடி கட்டாயம். இதை மீறுகின்ற இஸ்லாமிய இயக்க ஜமாஅத்துகளை ஒடுக்கப்பட்டுக்கொண்டிருப்பதற்கு துணைசெய்தார்கள் என்று இந்திய திருநாட்டில் இஸ்லாமிய சமுதாயமும் வரும் தலைமுறையும் சபித்துக்கொண்டிருக்கும். நல்ல முடிவை எடுத்து எல்லோரும் ஒருமித்து குரல் கொடுத்து வெற்றி பெறுங்கள். எல்லா புகழும் இறைவனுக்கே.

அன்புடன் சகோ. ரஃபீக் உதுமான், நாகர்கோவில் (ரியாத்)

Saturday, November 10, 2007

முஸ்லிம் மாணவர்களின் கவணத்திற்கு - அவசரம்

முஸ்லிம்கள் கல்வி கற்பது கடமை!
பணம் இல்லையே என்று படிக்காமல் இருப்பது மடமை!!
இதோ, முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைகள்


B.Sc(Agri) B.V.Sc., B.Ed, A.Arch., B.L., B.E.,B.Tech.,B.D.S.,M.B.B.S.,M.S.,M.D.,M.E.,M.S.W.,M.Tech.,M.C.A மற்றும் Professional/Technical இதர பட்டப் படிப்புகளில் சேர்ந்து படிக்கும் முஸ்லிம் மாணவர்கள் 366 பேருக்கு மத்திய அரசின் சிறுபான்மையினர் அமைச்சகம் கல்வி உதவித்தொகை வழங்குகின்றது. மாணவியருக்கு தனியே 30% ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக் கல்விக் கட்டணம் (டியுசன் பீஸ்) ரூ.20,000/- வரை. மேலும் விடுதியில் தங்கிப் படிப்போர்க்கு ஆண்டிற்கு ரூ.10,000/- மற்றவர்களுக்கு ரூ.5,000/ கிடைக்கும்.

IIM, IIT, NIT, IITDM, JIPMER ல் படிப்பவர்களுக்கு முழுக்கட்டணம் கிடைக்கும்.


இந்த உதவித் தொகை பெறத் தகுதி பெற்றவர்கள் :

1.+2 தேர்வில் 50% மார்க் பெற்றிருக்க வேண்டும்.


2. பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ 2,50,000 க்கு மிகாமல் இரக்க வேண்டும்.Affidavit is non judicial stamp paper without notary public signature அல்லது பணி செய்யும் நிறுவனங்களில் இருந்து ஆண்டு வருமானச் சான்றிதழ் பெற்றுத் தர வேண்டும்.

3. தமிழ் நாட்டை சேர்ந்தவர் என்ற அரசு அதிகாரியின் சான்றிதழ் (Residency Certifivcate) பெற வேண்டும்.

4.வெளி மாநிலங்களில் படிக்கும் தமிழ் முஸ்லிம் மாணவர்களும் தமிழ் நாட்டு ஒதுக்கீட்டிலேயே பெற வேண்டும்.

5.தற்சமயம் படிக்கும் நிறுவனத்திடம் இருந்து அனுமதி (Admission Card) மற்றுமு் கல்விக் கட்டணம் (Tution fee) சான்றிதழ் பெற வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

www.minorityaffairs.gov.in என்ற இணையத் தளத்தில் Scheme என்ற தலைப்பின்கீழ் Merit Cum Mens Scholorship Scheme ல் சென்று விண்ணப்ப படிவம் மற்றுமு் இதர விபரங்களை டவுன்லோடு செய்து தேவையான சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம்.

14-10-2007 Hindu நாளிதழ் பக்கம் 12 ல் மற்றும் 14-10-2007 தினத்தந்தி நாளிதழ் பக்கம் 13 லட இது சம்பந்தமான விளம்பரம் உள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 25-10-2007 இருந்து 30-11-2007 வரை நீடிக்கப்பட்டுள்ளது.


பூர்த்தி செய்ய விண்ணப்பங்களை கீழ்க்கண்ட முகவரிக்கு தாங்கள் படிக்கும் கல்லூரி மூலம் உடனே அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்.


சிறுபான்மையினர் நல ஆணையர் மற்றும் மேலான்மை இயக்குநர்,
தமிழ்நாடு சிறுபான்மையனர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்,
807, அண்ணாசாலை, சென்னை - 600002


மேலும் விபரங்களுக்கு : ஜனாப். ரிஸ்வான் அஹமது (மேலாளர் TAMCO)
தொலைபேசி 044-28514846 அல்லது 044-28515450
என்ற தொலைபேசயில் தொடர்பு கெள்ளவும்.


சமுதாய ஆர்வளர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், இமாம்கள், சமுதாய அமைப்புகள் ஆகிய அனைவரும் இச்செய்தியினை பள்ளிவாசல்கள், கல்லூரிகளின் அறிவிப்பு பலகையில் இடம்பெறச் செய்து மேலும் அச்சடித்து விநியோகம் செய்து முஸ்லிம்களிடம் எடுத்து சொல்லி உடன் பயன் பெறச் செய்யவும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி : 30-11-2007


வீழ்ந்து கிடக்கும் சமுதாயம் எழுந்து நிற்க கைகொடுப்போம்!!
Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template