சலீம் நானா அன்றைய தினசரி ஒன்றை புரட்டிக்கொண்டிருந்தார்.ஒவ்வொரு பக்கமும் கேடுகெட்ட அரசியல்,சீரழிவுசினிமா,கொலை,கொள்ளை,கற்பழிப்பு,சாதகம்,சோதிடம்,"த்தூ"காறித்துப்ப வேண்டும் போல இருந்தது அவருக்கு.பேப்பரை மடித்து கக்கத்தில் வைத்துக்கொண்டார்,வெயிலுக்கு முன்னால்,வீடு பொய் சேர வேண்டும் என எண்ணிக்கொண்டார்.
"அஸ்ஸலாமு அலைக்கும்,சலீம்"குரல் வந்த திசை நோக்கி பார்த்தால்,அட நம்ம பஷீர் காக்கா, கையில் உமல் பொட்டியுடன்(பன்னாவா-கொடுவாவா காக்கா)."வ அலைக்கும் சலாம் காக்கா" முகமனுக்கு பதில் சொல்லிவிட்டு முறுவலித்தார் நானா.
"என்ன சலீம்,கையில பேப்பரும் ஆளுமா,எதுனா தேர்தல் செய்தியா?ஆமா,திருமங்கலத்துல யாரு ஜெயிச்சதாம்?என்ற பஷீர் காக்காவை பார்த்து சொன்னார் சலீம் நானா,"தி மு க தான் ஜெயிச்சிருக்கு,ஆனா அதுல நெறைய தில்லுமுல்லு நடந்திருக்குன்னு அம்மா சொல்லுது,அது கெடக்குது காக்கா,பேப்பர தொறந்தா ஒரே சினிமா,சோதிடம்,ராசி பலன் இப்பிடி சீரழிவு கலாச்சாரமும்,மூட நம்பிக்கையும் தான் அதிகம்,எனக்கு ஒரு விளக்கம் தெரியனும்,அதாவது இஸ்லாம் பார்வையில சோதிடம்,ராசி பலன் போன்ற மூட நம்பிக்கைகள் பற்றி நீங்க எனக்கு விளக்கனும்"வேண்டுகோள் விட்டார் சலீம் நானா.
பஷீர் காக்கா சொன்னார்," நாள், நட்சத்திரம் பார்த்தல்(சோதிடம்), சகுனம் பார்த்தல் ஆகியவற்றிற்கும் இஸ்லாத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. இவை இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானாவைகளாகும்."
"ஒருவன் முஸ்லிமாக வேண்டுமெனில் அவன் "நன்மை, தீமை யாவும் இறைவன் புறத்திலிருந்தே ஏற்படுகின்றன என்ற விதியையும்" நம்ப வேண்டும். அவ்வாறு நம்பிக்கை கொண்ட முஸ்லிம் நாள், நட்சத்திரம் பார்ப்பது அந்த நம்பிக்கைக்கு மாறு செய்வதற்கு ஒப்பானதாகும். அவ்வாறு எவரேனும் செய்தால் அவர் பாவமன்னிப்பு தேடி மீள்வது கட்டாயக் கடமையாகும்."
"அடுத்த நிமிடம் இவ்வுலகில் என்ன நடக்கும் என்பதை அறிந்தவன் இறைவன் ஒருவனே. அப்படியிருக்க தன்னை போன்ற ஒரு படைப்பான இன்னொரு மனிதனிடம் சென்று நல்ல நேரம் நிச்சயிப்பது, எதிர் காலத்தில் தனக்கு என்ன நிகழும் என்பதை அறிய குறி கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது அம்மனிதனுக்கு இறைவனுக்கு மட்டுமேயுள்ள எதிர் காலத்தை அறியும் சக்தி இருப்பதாக எண்ணுவதற்கு ஒப்பானதாகும். இதையே திருமறை குர்ஆன்,........அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும் , அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன).........(அல்குர்ஆன் 5:3) நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும் , அம்புகள் எறிந்து குறி கேட்பதும் , ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். (அல்குர்ஆன் 5:90) என்று இறைவனின் வார்த்தைகளாகக் குறிப்பிடுகிறது."
"நாட்களிலோ, நேரங்களிலோ முற்றிலும் நன்மை பயக்கக் கூடியனவும் கிடையாது; முற்றிலும் தீமை பயக்கக் கூடியனவும் கிடையாது. எந்த நேரமானாலும் அதில் சிலர் நன்மையை அடைவார்கள். மற்றும் சிலர் கேடுகளை அடைவார்கள். யாருக்கு எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பதை அறிந்தவன் இறைவன் ஒருவனே.""நாட்களிலோ, நேரங்களிலோ முற்றிலும் நன்மை பயக்கக் கூடியனவும் கிடையாது; முற்றிலும் தீமை பயக்கக் கூடியனவும் கிடையாது. எந்த நேரமானாலும் அதில் சிலர் நன்மையை அடைவார்கள். மற்றும் சிலர் கேடுகளை அடைவார்கள். யாருக்கு எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பதை அறிந்தவன் இறைவன் ஒருவனே."இந்தக் காலங்களை மக்களிடையே நாம் சுழலச் செய்கிறோம்" - (அல்குர்ஆன் 3:140)
"சுழலும் சக்கரத்தின் கீழ்ப்பகுதி மேலே வரும், மேற்பகுதி கீழே செல்லும். இதுவே இயற்கை நியதி. இவ்வாறே காலத்தைச் சுழலவிட்டுச் சிலரை மேலாகவும் சிலரைக் கீழாகவும் ஆக்கிக் கொண்டிருப்போம் என்று இங்கே அல்லாஹ் தெளிவு படுத்துகிறான்."
"எதிர் காலத்தில் இன்னின்ன நடக்கும் என்பதை இறைவன் நபி(ஸல்) அவர்கள் வாயிலாக சிலவற்றை அறிவித்துத் தந்திருக்கிறான். அவற்றைத் தவிர வேறு எந்த விஷயத்தையும் அறியும் ஞானம் இவ்வுலகில் யாருக்கும் இல்லை. அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறாத சிலவற்றை மற்றவர்களால் அறிய முடியும் என நம்பிக்கை வைப்பது அவர்களை வரும் காலத்தை அறியும் பண்பு கொண்ட இறை நிலைக்கு உயர்த்துவதற்கு ஒப்பானதாகும். "
"இன்னின்ன நாட்கள் இன்னின்ன நபர்களுக்கு நல்ல நாட்கள் என்று நம்மைப் போன்ற ஒரு மனிதன் தான் முடிவு செய்கிறான். அவனிடம் சென்று அல்லது அவன் எழுதியதைப் பார்த்து நல்ல நாட்களைத் தீர்மானிக்கிறோம். ""ஒரு மந்திரவாதி(?)யிடம் சென்று எனக்கு நல்ல நாள் ஒன்றைக் கூறுங்கள் என்று சிலர் கேட்கின்றனர். அவரும் ஏதோ ஒரு நாளைக் கணித்துக் கூறுகிறார். அதை நம்பி தமது காரியங்களை நடத்துகின்றனர்.""நம்மைப் போன்ற ஒரு மனிதன் எப்படி இது நல்ல நாள் தான் என்று அறிந்து கொண்டான்? இதைச் சிந்திக்க வேண்டாமா? ""யாரேனும் சோதிடனிடம் சென்று அவன் கூறுவதை நம்பினால் முஹம்மதுக்கு அருளப்பட்ட மார்க்கத்தை அவன் நிராகரித்து விட்டான் என்பதும் நபிமொழி . (அஹ்மத் 9171) "
"இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். உலகத்துக்கெல்லாம் நல்ல நாள் கணித்துக் கூறக் கூடிய பூசாரிகள், சாமியார்கள், ஜோதிடர்களின் நிலைமையை கவனித்தால் அவை அனைத்தும் வயிற்றுப் பிழைப்புக்காக அவர்கள் நடத்தும் ஏமாற்று வித்தை என்பதை அறிந்து கொள்ளலாம். "
"மற்றவர்களுக்கு நல்ல நேரத்தையும் நல்ல நாளையும் கணித்துக் கூறும் இவர்களுக்கு தங்களுக்கு என்று விஷேசமான நல்ல நாளைத் தேர்வு செய்து தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்ள ஏன் முடியவில்லை? அவர்களைப் பொறுத்தவரை யாராவது அவர்களிடம் சென்று குறி கேட்கும் நேரம் தான் அவர்களுக்கு நல்ல நேரம். இல்லையெனில் அன்றைய சாப்பாட்டிற்கே அவர்களுக்குத் திண்டாட்டம் தான். இது ஒரு பித்தலாட்டம் என்பதை இதிலிருந்து தெளிவாக உணரலாம்.
"பஷீர் காக்கா சொல்லி முடித்ததும்,சலீம் நானாவுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை,"ஸுப்ஹாநல்லாஹ்,இஸ்லாம் ஒவ்வொரு விஷயத்தையும் எவ்வளவு அழகாக விவரிக்கிறது.சத்தியமாக இது ஒரு இறைவனுடைய மார்க்கம்தான்".அவருள் நிம்மதி வெளிப்பட்டது.
http://www.peacetrain1.blogspot.com/
Showing posts with label பஷீர் காக்காவும். Show all posts
Showing posts with label பஷீர் காக்காவும். Show all posts
Tuesday, January 13, 2009
Friday, January 02, 2009
அட!இது நம்ம ஆளு!!!
சலீம் நானாவுக்கு இருப்பு கொள்ளவில்லை."அடடா என்னமா,பேசுகிறார்.இஸ்லாத்தை அழகா,எவ்வளவு இனிமையா மேற்கோள் காட்டி மாணவர்கள்கிட்டேயும், எல்லா தரப்பு மக்கள்கிட்டேயும் விளக்குகிறார்.
"பஷீர் காக்காவுக்கு முதலில் புரியவில்லை.சலீம் நானாவைப் பார்த்து கேட்டார்,"என்ன சலீமு,யாரு,என்ன கொஞ்சம் விளக்கமாத்தான் செல்லேன்"என்றார்.
"பஷீர் காக்கா, அந்த சகோதரர் பேரு எஸ்.ஏ.மன்சூர் அலி.நம்ம நீடூர(மயிலாடுதுறை)சேர்ந்தவரு.பி எஸ்சி கெமிஸ்ட்ரி,பி எட்,எம் ஏ சோசியாலஜி,பீ ஜீ டிப்ளோமா கவுன்சிலிங் படிச்சிருக்கார்.கடந்த பத்து வருஷமா இஸ்லாமிய படிப்புத்துறையில ஆசிரியராவும்,மாணவர்களுக்கு கவுன்சிலராகவும் வண்டலூர் கிரசன்ட் ஸ்கூலில் பணிபுரிந்துவிட்டு,மாணவர்கள்,எல்லா தரப்பு மக்கள் என்று மனித வள மேம்பாடு பத்தி,ஆலோசனை,கருத்து பரிமாற்றம் எல்லாம் செய்கிறார்.இது மூலமா நிறைய மாணவர்கள்,தொழில் முனைவோர்,இப்படி எல்லா தரப்பு மக்களும் பயன் பெற்று வர்றாங்க.
"பஷீர் காக்காவுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை."நம்ம சமுதாயத்துல இப்படி ஒரு ஆளா?சலீமு,இவர நம்ம ஊருக்கு கூட்டி வந்து,மனித வள மேம்பாடு போன்ற கவுன்சிலிங் ஏற்பாடு பண்ணி,மாணவர்களுக்கும்,எல்லா தரப்பட்ட மக்களுக்கும் பயன் கிடக்கிற மாதிரி செய்யணும்,ஆமா அவர பத்தி,எங்க விசாரிக்கிறது?ஆர்வம் பீறிட கேட்டார் பஷீர் காக்கா."காக்கா,நீடூர் ஆன்லைன் போயி,உனக்குள் ஒரு சுரங்கம் என்கிற தலைப்புல பாத்தா,அவரோட பேச்சுக்கள வீடியோவுல பாக்கலாம்,நம்ம பீஸ் ட்ரைன் பிளாகில போய், http://www.peacetrain1.blogspot.com/ உனக்குள் ஒரு சுரங்கம் அப்படிங்கிற தொடுப்ப கிளிக் பண்ணினா,நேரடியா அவரோட வெப் சைட் திறக்கும்,அது அவரோட சொந்த வெப் சைட்.அதுல நிறைய கட்டுரைகள,அருமையான விளக்கங்களோட பாக்கலாம்,அதுல இருக்கிற ஸ்பேஷாலிட்டி என்ன தெரியமா,அது குரான் மற்றும் ஹதீஸ் அடிப்படையில விளக்குறதுதான். அதோட அவரோட முகவரியும் குறிச்சுக்கோங்க,எல்லாருக்கும் தேவைப்படும், S.A. Mansoor Ali, 3 – 125 / A, Jinnah Street,NIDUR – 609 203,Nagappattinam Dist, Tamilnadu, INDIA"."சலீமு,அவரு நீடூருக்கு மட்டும் உள்ள சொத்து கிடையாது,நம்ம சமுதாயத்தோட சொத்து.ஒட்டு மொத்த முஸ்லிம்களோட சொத்து,அவரு மூலமா நம்ம மாணவர்கள் பயன் பெறனும். "பஷீர் காக்கா உறுதியாய் சொன்னார்".

Labels:
சலீம் நானாவும்,
சுரங்கம்,
நீடூர்,
பஷீர் காக்காவும்,
மன்சூர் அலி
Subscribe to:
Posts (Atom)