Wednesday, March 12, 2008

இஸ்லாத்தின் எதிரிகளது கனவுகள்

இஸ்லாத்தின் எதிரிகளது கனவுகள்


இந்தப் பூமிப் பந்தை விட்டே இஸ்லாத்தைத் துடைத்து எறிந்து விடலாம் என்பது இஸ்லாத்தின் எதிரிகளது கனவாக இருந்து வருகின்றது. ஆனால் இவர்களது இந்தக் கனவு நிறைவேறாத ஒன்று என்பதை அவர்கள் அறிந்தே வைத்திருக்கின்றார்கள். எனவே, அவர்கள் இஸ்லாத்துடன் இணைந்து வாழ்வது தங்களால் சாத்தியமற்றது என்று கருதிக் கொண்டவர்களாக, சில சடங்கு சம்பிரதாயங்களுடன் பவனி வரும் கிறிஸ்தவத்தினைப் போல இஸ்லாமியர்களும் வாழ வேண்டும் என்று விரும்புகின்றார்கள். இன்னும் இஸ்லாமிய எதிரிகள் இஸ்லாம் இன்னதென்று வரையறை செய்து தருவதை, அதனை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகின்றார்கள். இந்த வகையில் கடந்த மூன்று நூற்றாண்டுகளாக கடுமையாக அவர்கள் உழைத்ததன் விளைவு, இதில் அவர்கள் பல வெற்றிகளையும் பெற்றுள்ளார்கள். அந்த மூன்று நூற்றாண்டின் இடையறாத அவர்களின் உழைப்பின் காரணமாக போலியான இஸ்லாமிய அங்கத்தவர்களையும், புதிய பிரிவுகளையும், புதிய கொள்கைகள் மற்றும் இஸ்லாத்திற்குள்ளேயே கருத்துமுரண்பாடுள்ள அம்சங்களை ஏற்படுத்துதல் போன்றவற்றை உருவாக்கி விடுவதில் அவர்கள் வெற்றி பெற்றே இருக்கின்றார்கள் என்றே கூற வேண்டும்.

உலகெங்கும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லிம்கள் தங்களின் வாழ்வியல் நெறிகளாகக் கடைபிடிக்கும் குர்ஆன் மற்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறைகள் ஆகியவற்றை விட்டும், முஸ்லிம்களை பாராமுகமாக்கி விட வேண்டும் என்று அவர்கள் ரகசியமான முறையில் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருப்பது ஒன்றும் ரகசியமானதொன்றல்ல. கிறிஸ்தவத்தில் உள்ள மத வழிபாட்டு முறைகளைப் போன்று இஸ்லாத்திலும் இருக்குமென்று சொன்னால், அத்தகைய இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்றார்களே தவிர, உண்மையான இஸ்லாத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.இஸ்லாத்தின் எதிரிகளை மூன்று வகையினராகப் பிரிக்கலாம்.

(1) மதச்சார்பற்ற அடிப்படைவாதிகள்,

(2) யூத மற்றும் இந்து மத அடிப்படைவாதிகள், மற்றும்

(3) கிறிஸ்தவ அடிப்படைவாதிகள்.

இந்த மூன்று அணியினரும் இணைந்தும், ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிக் கொண்டும், அவரவர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் இருந்து அதற்கான பணிகளை ஒருங்கிணைத்துக் கொண்டும் செயல்பட்டு வருகின்றார்கள். இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்தால் அமெரிக்க ஜனத்தொகையில் 4 சதவிகிதத்தினராகவும் அல்லது 10 மில்லியனுக்கும் குறைவான தொகையைக் கொண்டவர்களாகவுமே இருப்பார்கள். இருப்பினும், இந்த சிறு தொகையினரிடம் எல்லையில்லாத அதிகாரங்களும் மற்றும் மக்களை வசீகரிக்கும் தன்மையும் கூட உண்டு. இவர்களைத் தவிர்த்து ஏனைய 96 சதவீதத்தினர் கண்மூடிக் கொண்டு பின்பற்றும் அறியாமைச் சமூகமாகவும் இன்னும் இந்த இஸ்லாத்தின் எதிரிகள் சொல்வதை நம்பக் கூடியவர்களாகவும் இருக்கின்றார்கள். இஸ்லாத்தின் எதிரிகளுக்கும் மற்றும் அவர்களைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றிக் கொண்டிருக்கும் மக்களையும் எவ்வாறு பிரிக்க முடியுமென்று சொன்னால், இடையறாத அறிவூட்டும் நடவடிக்கையின் மூலமாக, பிரச்சாரப் பணிகளின் மூலமாக முஸ்லிம்களால் சாதிக்க முடியும்.

இஸ்லாத்தின் எதிரிகள் தங்களை உயர் தகுதிமிக்க அறிவாளிகளாக அதாவது, மருத்துவர், பேராசிரியர், ரெவரெண்ட், ஆய்வாளர் இன்னும் இது போன்ற பட்டங்களை முன்னிறுத்திக் கொண்டு தங்களை சமூகத்திற்கு அறிமுகப்படுத்திக் கொள்ளக் கூடியவராக இருக்கின்றார்கள். இன்னும் இவர்களது கருத்துக்களுக்கு இன்றைய ஊடகங்கள் அதிமுக்கியத்துவத்தையும் வழங்குவதோடு, இவர்களது கல்வித் தகுதி மற்றும் பின்னணி ஆகியவை அவர்கள் சொல்ல வருகின்ற கருத்துக்களுக்கு வலுச்சேர்ப்பனவாகவும் உள்ளது. இதற்கு சில எடுத்துக்காட்டுக்களை நாம் இங்கு முன் வைக்கலாம், டாக்டர் ராபர்ட் மோரே, டாக்டர் அனிஸ் ஷார்ரோஷ், ரெவெரெண்ட் பாட் ராபர்ட்ஸன், ரெவரெண்ட் பில்லி கிரஹாம், பேராசிரியர் ஸாம் ஹண்டிங்டன், பேராசிரியர். டேனியல் பைப்ஸ் மற்றும் பலர்.

மதச்சார்பற்ற அடிப்படைவாதிகளைப் பொறுத்தவரை தங்களை சமூகத்தில் அறிவாளிகளாக இனங்காட்டிக் கொண்டிருப்பவர்கள், இவர்கள் மதம் என்பது மக்களின் வாழ்க்கைக்கு ஒத்துவராத ஒன்று என்று கருதும் அதேவேளையில், மக்கள் தனிப்பட்ட முறையில் கடவுள் அல்லது பல கடவுகள்களின் மீது மத நம்பிக்கை கொள்வதனைச் சகித்துக் கொள்ளக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். இவர்களில் சிலர் பலவீனமான கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக ஒரு கடவுளையோ அல்லது பல கடவுள்களையோ வணங்கக் கூடியவர்களாக இருக்கின்ற அதேவேளையில், தங்களது நம்பிக்கைக்கும் சமூக, பொருளாதார மற்றும் அரசயில் வாழ்க்கைக்கும் தாங்கள் ஏற்று நம்பிக்கை கொண்டிருக்கின்ற கடவுள் கொள்கைக்கும் ஏதேனும் தொடர்பிருக்கின்றதா என்பதைக் கவனிப்பதில்லை, இவர்களில் அந்த மதங்களின் குருமார்களாகத் திகழக் கூடியவர்களும் அடங்குகின்றார்கள். இத்தகையவர்கள் குறிப்பாக இஸ்லாத்திற்கு எதிரிடையாக இருக்கின்றார்கள், ஏனெனில், இஸ்லாம் என்பது ஒரு கொள்கையுடன் பிணைக்கப்பட்ட சமூகச் சூழலை உருவாக்க விளைவதோடு, இதன் காரணமாக மதச்சார்ப்பற்ற கொள்கையுடன் போட்டி போடக் கூடியதாகவும் இருக்கின்றது. இயற்கையாகவே, இந்த மதச்சார்பற்ற கொள்கையுடையவர்களின் நோக்கமே இஸ்லாத்தினை முற்றாக அழித்து விட வேண்டும் என்பதேயாகும், இதற்கான தெளிவாக திட்டமும் அவர்களிடம் உண்டு. மேலே நாம் சுட்டிக் காட்டியுள்ள மூன்று வகையினரில் இந்த மதச்சார்பற்ற அடிப்படைவாதிகளே எண்ணிக்கையில் அதிகம் இருப்பதோடு, மிகவும் பலம் வாய்ந்தவர்களாகவும் இருக்கின்றார்கள். ஏனெனில், இந்தக் குழுவினரில் அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள், வியாபாரிகள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மேலைநாட்டுப் பொதுமக்களின் பெரும் பகுதியினர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் தான் அரசாங்கச் சக்கரத்தை இயக்கக் கூடியவர்களாகவும், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் துணை அமைப்புகளை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பவர்களாகவம், வங்கிகள், சர்வதேச வணிகத் தளங்கள், அறிவாளிகளின் குழுமங்கள், பல்கலைக்கழகங்கள், பள்ளிக்கூட நிர்வாகங்கள், நிதிநிறுவன அமைப்புகள், நன்கொடை அமைப்புகள் என்று எங்கினும் அவர்கள் நிறைந்து காணப்படுகின்றார்கள். இவர்கள் தான் இஸ்லாத்தினை எதிர்க்கக் கூடிய இயக்கங்களை இயக்கக் கூடிய தலைமைகள் ஆவார்கள். இத்தகைய தீவிரவாதிகளையும், ஏமாற்றுப் பேர்வழிகளையும் நாம் பேராசிரியர்களாகவும், துறைசார் நிபுணர்களாகவும், குருமார்களாகவும், கல்வியாளர்களாகவும் மற்றும் அறிவுசார்நிபுணர்களாகவும் இருக்கக் காணலாம்.

ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். அனைத்து மதச்சார்ப்பற்ற அரசியல்வாதிகளும் இஸ்லாத்தின் எதிரிகளல்ல. மாறாக, அவர்களில் பெரும்பகுதியினர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இஸ்லாத்தின் எதிரிகளாக இருக்கின்றார்கள் என்பதே உண்மையாகும். இந்த எதிரிகள் ஆராய்ச்சிகளின் மூலமாகவும், கல்வித்துறை சார்ந்த வகையிலும், வெளியீடுகள் மூலமாகவும், புத்தகங்கள், பத்திரிக்கைகளில் பத்திரிக்கைத் துறைசார் நிபுணர்களைக் கொண்டும் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களைப் பரப்பக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். இவ்வாறாக, அவர்கள் சமூகத்தில் வாழக் கூடிய மக்களின் மூளைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்களாக இருக்கின்றார்கள்.

யூதர்களும், ஹிந்து அடிப்படைவாதிகளும் இஸ்லாத்தினை தங்களது சுய இருப்புக்கான ஆபத்தாகக் கருதுகின்றார்கள். இஸ்லாத்தின் பரவலானது அவர்களது கொள்கைகளையும், அதிகார ஆட்சி பீடங்களையும் அசைத்து விடும் என்று கருதுகின்றார்கள். இதன் காரணமாகவே அவர்கள் இஸ்லாத்தினை மூர்க்கத்தனமாக பலப் பிரயோகத்தோடு எதிர்க்கின்றார்கள். அவ்வாறு எதிர்க்கக் கூடிய அத்தகையவர்களின் செயல்முறைகள் குறித்து இங்கு சிறிது காண்போம் :

இஸ்லாத்தையும் அதனைப் பின்பற்றுகின்ற முஸ்லிம்களையும் தீமைகளின் சின்னங்களாக உருவகப்படுத்திக் காண்பித்து, யூதம் மற்றும் இந்து மதம் தான் சிறந்தது என்று சரிகாண்பது. இதன் மூலம் முஸ்லிம்களை மனிதாபிமானமற்றவர்களாகவும், தீமைகளின் பிறப்பிடங்களாகவும் இருப்பதே அந்தக் கொள்கைக்குரியது என்று பிரச்சாரம் செய்வது. இதன் மூலம் இத்தகைய தீய சக்திகளை இந்தப் பூமியிலிருந்து களைவது அல்லது கொல்வது சரியானதொரு செயல்முறைதான் என்பதனையும், முஸ்லிம்களது சொத்துக்களைச் சூறையாடுவது, அவர்களை அடக்குமுறைக்குள்ளாக்குவது மற்றும் அவர்களைக் கைது செய்து சிறைக்கம்பிகளுக்கு நடுவே சித்தரவதைகளுக்கு உள்ளாக்குவது ஆகிய அனைத்தும் அவசியமானதொன்றே என்று தங்களது செயல்களுக்கு, இந்த இஸ்லாத்தின் எதிரிகள் நியாயங்களைக் கற்பித்துக் கொள்கின்றனர். இதன் காரணமாகவே ஒரு எலியை இந்த உலகத்தில் கொல்லப்படுவது பத்திரிக்கைச் செய்திகளிலும் தொலைக்காட்சிச் செய்திகளில் முன்னுரிமை கொடுத்து ஒளிபரப்பப்படுவதிலும் இந்த எதிரிகள் காட்டுகின்ற அக்கறை, ஒரு முஸ்லிம் செத்தால் அல்லது கொல்லப்பட்டால் தேவையற்ற செய்தி போல அவற்றை தலைப்புச் செய்திகளில் மட்டுமல்ல, பெட்டிச் செய்திகளில் போடுவதற்குக் கூட இடம் மறுக்கப்படுகின்ற அவல நிலையை நாம் அன்றாடம் கண்டு வருகின்றோம். அதேவேளையில் ஒரு யூதனோ அல்லது இந்துவோ ஒரு முஸ்லிமினால் கொலை செய்யப்பட்டு விட்டால், அது அன்றைய தினப் பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிச் செய்திகளிலும் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கப்பட்டு, ஒளிபரப்பப்படுவதை நாம் காண முடியும். பாலஸ்தீனியர்கள் அவர்களது சொந்த நாட்டில் அடக்குமுறைக்கு உள்ளாக்குப்படுவதையும், காஷ்மீர்கள் மக்கள் படும் அவஸ்தைகள் மற்றும் காவல்நிலையப் படுகொலைகளையும், செசன்யாவில் ஒடுக்கப்படும் முஸ்லிம்களைப் பற்றியோ இந்த மேற்குலகு கண்டு கொள்ளாது, வாய் மூடி மௌனியாக இருக்கும், அவர்களது துன்பங்களைக் கண்டு இரக்கம் கூட காட்ட எத்தணிக்காது என்பது தான் சோகமானது. தங்களது சொந்த உரிமைகளுக்காகப் போராடக் கூடிய முஸ்லிம்களை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல ''தீவிரவாதிகள்'' என்ற அடைமொழிப் பெயர் கொண்டு அழைக்க மட்டும் இந்த மேற்குலகு தவறுவதில்லை. இஸ்லாத்திற்கு எதிராக இந்த மேற்குலகு கடைபிடிக்கக் கூடிய கொள்கைக்கு ஒரு உதாரணத்தைச் சொல்ல வேண்டுமென்றால், இந்தோனேஷியாவில் உள்ள கிழக்குத் தைமூர் பிரச்னையைச் சொல்லலாம். இந்தோனேஷியாவின் ஒரு பகுதியாகிய இந்த கிழக்குத் தைமூர் தீவில் வாழும் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து முஸ்லிம்களைக் கொலை செய்ததோடு மட்டுமல்லாது, அவர்களது வணக்கத்தளங்களைத் தீயிட்டுக் கொளுத்தியும், பயங்கர கொலை கார ஆயுதங்களைக் கொண்டு முஸ்லிம்களின் தெருக்களில் வலம் வந்ததையும் கூறலாம். இந்தப் பயங்கரவாத நடவடிக்கையைக் கண்டிப்பதற்குப் பதிலாக கிறிஸ்தவர்களின் பக்கம் சாய்ந்து கொண்டு, இந்தோனேஷியாவின் பிடியிலிருந்து கிழக்குத் தைமூரை விடுதலை செய்து கொடுத்து விட்டுத் தான் வேறு வேலை பார்த்தது. ஆனால் அதேவேளை, தங்களது அடக்குமுறைகளிலிருந்து விடுதலை பெற்றுக் கொள்வதற்காக போராடிக் கொண்டிருக்கும் பாலஸ்தீனம், காஷ்மீர், மிந்தானாவோ முஸ்லிம்கள் ''தீவிரவாதிகளாக'' சித்தரிக்கப்பட்டு, அவர்களை இன்னும் ஒடுக்குவதற்கு சம்பந்தப்பட்ட அடக்குமுறை ஆட்சியாளர்களுக்கு இந்த மேற்குலகு உதவிக் கொண்டிருக்கின்றது. இதனைத் தான் நாம் இரட்டை வேடம் என்கிறோம். ஏன் இந்த இரட்டை அளவுகோள்? அக்டோபர் 2000 ல் ஒரு நூறு அரபு இளைஞர்களை அமெரிக்க மக்களின் வரிகளினூடாகப் பெற்றுக் கொள்ளப்பட்ட துப்பாக்கிகளைக் கொண்டு இஸ்ரேலிய அடக்குமுறை இராணுவத்தினர் கொலை செய்தார்கள். இதில் படுகொலை செய்யப்பட்ட பெரும்பாலானவர்கள் இளைஞர்களாவார்கள் மற்றும் சிறு குழந்தைகளும் அதில் அடங்குவர். ஆனால் இந்த படுகொலைக்குக் காரணமான இஸ்ரேலை எந்த அதிபரும், எந்த அரசாங்கமும் கோபித்துக் கொள்ளவில்லை. கண்டனக் கணைகள் பறக்கவில்லை. ஆனால் அதேவேளை, இஸ்ரேலிய இராணுவத்தால் படுகொலைகளுக்குப் பயிற்றுவிக்கப்பட்ட இரண்டு இஸ்ரேலிய இராணுவத்தினரைக் கையும் களவுமாகப் பிடித்து பாலஸ்தீனியர்கள் கொலை செய்ததை, உலக மீடியாக்கள் முக்கியத்துவம் கொடுத்து முதல் பக்கச் செய்தியாக, தலைப்புச் செய்தியாக வெளியிட்டன. பயிற்றுவிக்கப்பட்ட கொலைகாரர்கள் சமாதானத் தூதுவர்களாகவும், 6-16 வயது மதிக்கத்தக்க இளைஞர்களும், சிறுவர்களும் தீவிரவாதிகளாகவும் சித்தரிக்கப்படுகின்றனர். சிந்திக்கத் திராணியற்ற மக்கள் தான் இத்தகைய அவதூறுச் செய்திகளை நம்பிக் கொள்வார்கள். இன்றைய அமெரிக்காவிலும் ஏனைய மேற்குலகிலும் சோம்பேறித்தனமும், பய நோயும், முரண்பட்ட போக்கும், கவன ஈனமும், முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் தலைவர்களது பொடுபோக்குத் தனமும், குறிப்பாக மேற்குலகில் வாழக் கூடிய முஸ்லிம்களின் சுயநலப் போக்கும் தான் இத்தகைய செய்திகள் முக்கியத்துவம் பெறக் காரணமாக அமைந்து விடுகின்றன. மேற்குலகில் வாழக் கூடிய முஸ்லிம்கள் தங்களது வாய்ப்பு வளங்களை முறையாகப் பயன்படுத்தினால், இதனூடாக அதிகாரமும் கைவரப் பெற்றால் இன்றைக்கு இருக்கும் நிலையை முற்றிலுமாக மாற்றி, இஸ்லாமிய எதிர்ப்பு என்ற நிலையை மாற்றி, இஸ்லாமிய ஆதரவு என்ற நிலையைக் கொண்டு வந்து விடலாம்.இஸ்ரேலிய மற்றும் இந்துத்துவ அடிப்படைவாதிகள் முஸ்லிம்களை மனிதாபிமானமற்றவர்களாகவும், கொடிய பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கும் அதேவேளையில், உண்மையிலேயே பயங்கரவாதிகளாகத் திகழக் கூடிய அமைப்புகளான சிஐஏ, இஸ்ரேல், மற்றும் இந்திய இந்துத்துவா போன்ற அமைப்புகளுக்கு அமெரிக்க அரசும், அமெரிக்க காங்கிரஸும் பொருளாதார ரீதியாகவும், தொழில் நுட்ப ரீதியாகவும், மற்றும் நிதிஉதவிகள் மூலமாகவும் உதவி வருகின்றது. ஒரு அறிக்கையின்படி, ஒவ்வொரு ஆண்டும் 6 பில்லியன் டாலர்களை அமெரிக்காவிடமிருந்து இஸ்ரேல் உதவியாகப் பெற்றுக் கொள்கின்றது. அதாவது, அமெரிக்க மக்களின் வரிப்பணத்திலிருந்து இஸ்ரேலிய யூதனின் தலை ஒன்றுக்கு 1500 டாலர் வீதம் வழங்கப்படுகின்றது. இந்த பரிசுப் பணம் மூலம் பாலஸ்தீனர்களின் நிலங்களை ஆக்கிரமிக்கவும், இன்னும் அவர்களை இடம் பெயர்ந்து செல்ல வைக்கவும் பயன்படுத்திக் கொள்ள அமெரிக்காவானது இஸ்ரேலுக்கு மானசீகமான முறையில் உதவுகின்றது. முஸ்லிம்களை ஒடுக்குவதற்கான நிதியின் மூலமாக துப்பாக்கிகளையும், டேங்குகளையும், ஹெலிகாப்டர்களையும், ஏவுகணைகளையும் கொள்முதல் செய்து கொள்வதோடு, சித்ரவதை முகாம்களை அமைத்தல், அதற்கான பயிற்சிகளை வழங்குவதல், உளவுத் துறை தகவல் பரிமாற்றம், இன்னும் நிதியுதவி ஆகியவற்றின் மூலமாகவும் அமெரிக்கா இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக் கொள்கைக்கு உதவி வருகின்றது. அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்கள் அமெரிக்க அரசியலில் கவனம் செலுத்துவதனூடாக இந்த நிலையை மாற்றியமைக்க முடியும். நிச்சயமாக, முஸ்லிம்கள் அரசியலுக்குள் அடி எடுத்து வைப்பதற்கு கடுமையாக எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டி வரும், ஆனால் போராடி நுழைவதன் மூலமாக இஸ்லாமிய எதிரிகளின் எதிர்ப்புகளை முடமாக்குவதுடன் அமெரிக்க அரசில் முஸ்லிம்கள் தங்களது சுய ஆதிக்கத்தைச் செலுத்த முடியும். முஸ்லிம்கள் உத்வேகத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல்வேறு பகுதிகளில் அவர்கள் எடுத்துக் கொண்ட நோக்கத்தில் வெற்றி பெற்றிருக்கின்றார்கள் என்பதைப் பல்வேறு சம்பவங்களினூடாக நிரூபிக்க முடியும். சாந்தா கிளாரா, சிஏ, பிரிட்ஜ்வீவ், மார்ட்டன் குரோவ், புருக்ளின், நியூயார்க் மற்றும் நியூஜெர்ஸி போன்ற இடங்களில் முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் உள்ளனர். இந்தப் பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் இஸ்லாத்திற்கு எதிரான அலையை நடுநிலைக்கும் அல்லது இஸ்லாமிய சார்பு நிலையாகவும் மாற்றி அமைத்திருக்கின்றார்கள். இத்தகைய அரசியல் ஈடுபாட்டிலிருந்து விலகிக் கொள்வதானது மெல்ல மெல்ல தற்கொலை செய்து கொள்வதற்கு ஒப்பானதாகும். அரசியலில் இருந்து முற்றிலும் விலகி இருந்ததன் காரணமாகவே ஸ்பெயின், போஸ்னியா, செசன்யா மற்றும் கொசோவோ மக்கள் மிகவும் எளிதான முறையில் படுகொலைகளுக்கும் உரிமைப்பறிப்புக்கும் ஆளானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்களின் அரசியல் பிரவேசத்திற்குப் பின்பு தான், குடியரசுக் கட்சியின் உறுப்பினரான டோம் கேம்பல் என்பவர் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்து, இஸ்ரேலுக்கான நிதியுதவியை நிறுத்த வேண்டும் என்று அதன் மூலம் கோரினார். இவரது தீர்மானத்திற்கு ஆதராவாக 12 ஓட்டுக்கள் விழுந்தன, அவர் தனது முயற்சியில் தோல்வி அடைந்திருந்தாலும், முஸ்லிம்களின் அரசியல் பிரவேசமானது இத்தகைய தீர்மானத்தைக் கொண்டு வர அவரைத் தூண்டியதே முஸ்லிம்களுக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகும். இத்தகைய முயற்சிகள் தொடருமானால், இந்தத் தீர்மானம் வெற்றி பெறும் நாள் வெகுதொலைவில் இல்லை.அமெரிக்காவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் வளர்ந்து கொண்டே செல்வதானது, யூதர்களையும், இந்துத்துவா சிந்தனை கொண்ட மக்களையும் அச்சம் கொள்ள வைத்துள்ளது. முஸ்லிம்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்வதானது, அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தங்களுக்கு மிகவும் நெருக்கடியை உண்டாக்கும் என்று அவர்கள் கருதத்தலைப்பட்டுள்ளார்கள். யூதர்களின் செல்வாக்கு என்பது பணத்தை விதைப்பதன் மூலமாகவும், அரசியல் தலையீடுகள், நேரங்களை இதற்காக செலவழித்தல் மற்றும் அரசியல்வாதிகளுக்கான திறமையானவர்களை இனங்காணுதல் ஆகியவற்றுடன் செயல்படுகின்றார்கள். அதாவது அமெரிக்க அரசியலில் அவர்கள் செலவிடும் ஒரு டாலரானது, அதன் மூலமாக இஸ்ரேலுக்கு ஓராயிரம் டாலர்களை வருமானமாகப் பெற்றுக் கொள்ள வழிவகுக்கின்றது. இத்தகைய வழிமுறைகள் மூலமாக பணத்தை மட்டுமல்ல, அரசியல்வாதியாகப் பரிணமிப்பதற்குண்டான வாய்ப்புக்களையும் கிடைக்கச் செய்கின்றது. இப்பொழுது, உள்ளூர் மற்றும் தேசிய மட்டத்தில் அமெரிக்க அரசிலும் இருந்து கொண்டு, மற்றும் அரசை இயக்கிக் கொண்டு, அதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்துவதனூடாக மிகச் சிறிய சிறுபான்மையினராக இருந்து கொண்டு, தங்களது சதவீதத்திற்கும் அதிகமாகவே அவர்கள் சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அமெரிக்க ஜனத்தொகையோடு யூதர்களை ஒப்பிடும் பொழுது, யூதர்கள் வெறும் இரண்டு சதவீதத்தினரேயாகும். அரசியலில் அவர்கள் காட்டிய அக்கறையின் காரணமாக, 1900 ல் உலகில் வெறுக்கப்பட்ட சமூகமாக இருந்த அவர்கள், 2000 ம் ஆண்டில் உலகின் வலிமை மிக்க சக்தியாக மாறியிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையாக, அவர்களது தங்களது திட்டத்தின் நோக்கத்தை 60 ஆண்டுகளுக்குள்ளாகவே அடைந்து கொண்டார்கள். முஸ்லிம்களின் வளர்ச்சி விகிதத்தை எவ்வாறு குறைப்பது என்பதற்குண்டான திட்டத்தை செயல்படுத்திடுவதற்காக அவர்களால் கடுமையாகப் போராட முடியும் என்று சொன்னால், முஸ்லிம்களின் அரசியல் பிரவேசத்தை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்ற திட்டத்தையும் போட முடியும். முஸ்லிம்கள் அரசியலில் பிரவேசிப்பதும், அதில் அவர்களை ஊக்குவிப்பதும் ஆபத்தானது என்ற வதந்தியை அவர்கள் ஏற்கனவே கிளப்பி விட்டுள்ளார்கள். இந்தக் குழுவினர் தங்களுக்குச் சாதகமாக மீடியா உலகத்தையும், பொழுது போக்கு சாதனங்களையும் பயன்படுத்தி, முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு மனப்பான்மையை மக்கள் மத்தியில் உருவாக்கி வருகின்றார்கள். இன்னும் முஸ்லிம்களில் உள்ள சில அமைப்புகள் முஸ்லிம்கள் அரசியலில் பிரவேசிப்பதனை எதிர்ப்பதனூடாக, இவர்கள் இஸ்லாமிய சக்திகளுக்கு உதவி வருகின்றார்கள்.கிறிஸ்தவ அடிப்படைவாதிகள் இஸ்லாத்தினை உலகத்தின் வலுமிக்க போட்டிச் சக்தியாகப் பார்ப்பதோடு, மற்ற மதங்களை விட அது மனிதர்களின் மனங்களையும் இதயங்களையும் கொள்ளை கொண்டு செல்லக் கூடியதாகவும் இருக்கின்றதே என்று அவர்கள் கருதுகின்றார்கள். இஸ்லாத்திற்குள் தங்களை இணைத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கையைக் கண்டு அவர்கள் மிரண்டு போகின்றார்கள். கிறிஸ்தவ அடிப்படைவாதிகளானவர்கள் அமெரிக்காவில் வாழக் கூடிய யூதர்களையும் விட அதிக வெறுப்புக்களை உமிழக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக அடிமட்ட வேலைகளையும், அதன் மீது பொய்களையும், களங்கத்தையும் சுமத்துவதன் மூலமாக இஸ்லாத்திற்கு எதிராக மக்களைத் திசை திருப்ப முனைப்போடு செயல்படுகின்றார்கள். மக்களின் மனங்களில் இஸ்லாத்திற்கு எதிரான துவேச விதைகளைப் பரப்புவதனூடாக, மக்களின் வெறுப்பை வளர்த்து அந்த வெறுப்பை அமெரிக்காவில் ஒரு போஸ்னியாவையும், ஜெர்மனியில் நடத்தப்பட்ட இனப் படுகொலைகளைப் போன்றதொரு இனப் படுகொலையை நடத்தி விட வேண்டும் என்றே அவர்கள் திட்டமிட்டு செயலாற்றுகின்றார்கள். இந்தத்திட்டத்தினூடாக மேற்கிலும், ஐரோப்பாவிலும் இஸ்லாத்தினை அகற்றுவதோடு, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கக் கூடிய நாடுகள் மீதும் போர்தொடுக்கவும் அவர்கள் திட்டமிடுகின்றார்கள். இதுவே இஸ்லாத்திற்கு எதிராக கிளிர்ந்தெழுந்து நிற்கக் கூடிய ஒரு அடிப்படைவாதியின் செயல் திட்டமாகும். இவர்கள், அகீதா என்றழைக்கக் கூடிய இஸ்லாமிய கொள்கையின் மீதும், அதன் நடைமுறைகள் மீதும், வரலாறு மற்றும் கலாச்சாரங்களின் மீதும் தாக்குதல் தொடுக்கின்றார்கள். இவர்கள் இஸ்லாமிய கலாச்சாரங்களை மாற்றியமைப்பதோடு, அதற்கு நேர்முரணான பார்வையைத்தான் வாசகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு வழங்குகின்றார்கள். இதன் மூலம் இஸ்லாத்தை அகோரமாகப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்கள். இதற்காக இவர்கள் கிறிஸ்தவ பிரச்சார அமைப்புகளான தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றைப் பயன்படுத்துவதோடு, புத்தகங்கள், கையேடுகள் மற்றும் துண்டுப் பிரச்சாரங்கள் வாயிலாகவும் பொதுமக்களிடம் இஸ்லாத்திற்கு எதிராhன கருத்துப் பரவலை ஏற்படுத்துகின்றார்கள். இன்னும் அதிகமாக, தங்களை பேரறிவாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு தேவாலயங்களில் உரையாற்றக் கூடியவர் கூட, இஸ்லாத்திற்கு எதிரான கட்டுக் கதைகளையும், பொய்களையும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யக் கூடியவராக இருக்கின்றார். இவ்வாறான இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான பிரச்சாரங்கள் செய்யப்படும் பொழுது, தன்னைச் சுற்றி நடப்பது என்னவென்றே அறியாமல் தூங்கிக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள், தங்களைச் சுற்றிலும் பிண்ணப்பட்டுக் கொண்டிருக்கும் சதி வலைகள் கழுத்தை நெறிக்கும் சமயத்தில், விழித்தெழுவதனால் ஏதேனும் பயன் உண்டாகி விடுமா? காலம் கடந்த ஞானத்தால் ஆவதென்ன? அமெரிக்காவில் ஒரு போஸ்னியாவையும், இந்தியாவில் ஒரு போஸ்னியாவையும் தான் நாம் காண முடியும். இன்னும் இந்த இஸ்லாம் அல்லாத மக்களைச் சென்று சந்தித்து, இஸ்லாத்தினை எடுத்துச் சொல்வதற்கு தடை சொல்லும் அமைப்புகளும் நம்மிடையே உள்ளன. இவை, மேற்கண்ட இஸ்லாத்தின் எதிரிகளது நோக்கத்திற்குத் துணை போவது போல உள்ளது. இன்னும் முஸ்லிம்களுக்குள்ளேயும் இஸ்லாத்தைப் பற்றியதொரு அச்சம் நிலவுகின்றது. தாங்களது பிள்ளைகள் தொழச் செல்ல ஆரம்பித்து விட்டாலே அச்சத்தால் நடுங்கக் கூடிய பெற்றோர்களும் நம்மில் இருக்கின்றார்கள்.

இஸ்லாத்தின் எதிரிகளின் பிரச்சாரத்தை முடமாக்கி, பொதுமக்கள் மத்தியில் இஸ்லாத்திற்கு எதிராகத் திணிக்கப்பட்டுள்ள தவறான கருத்துக்களை களைவதனூடாக இஸ்லாத்திற்கு எதிரான சதிகளை முனை மழுங்கச் செய்ய முடியும். அல்லது இல்லாமலாக்க முடியும். இன்னும் இஸ்லாமிய சார்பு அங்கத்தினர்களை சமூகத்தில் உருவாக்க முடியும். இன்னும் முஸ்லிம்களுக்குள் இஸ்லாமிய அடிப்படைகள் பற்றியும், இஸ்லாமிய சட்டங்கள் பற்றியும் எடுத்துரைப்பதன் ஊடாக, அவர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் அச்சத்தையும் போக்கி, உண்மையான விசுவாசிகளாக அவர்களை உருவாக்க முடியும். இந்த இரண்டு பணிகளையும் ஒரு சேரக் கொண்டு செல்ல வேண்டும். ஒரு பணியை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு, இன்னொரு பணியை விட்டுவதானது, நம்முடைய செயல் வேகத்தை முடமாக்கும். இன்னும் நம்முடைய நோக்கத்தை அடைந்து கொள்ள அது நீண்ட கால அவகாசத்தை எடுத்துக் கொள்ளும். சிலவேளை, நமது நோக்கத்தை அடைந்து கொள்ள இயலாமலேயே செய்து விடும்.

எதிரிகளின் கனவுகள் : இஸ்லாத்தின் எதிரிகள் மாற்றத்திற்குள்ளாக்கப்பட்ட இஸ்லாமியத்தையே அவர்கள் காண விழைகின்றார்கள். அவையாவன :

இஸ்லாத்திலிருந்து ஜிஹாதை நீக்குவது

இஸ்லாத்தின் இன்னொரு அங்கமான அரசியலை அதிலிருந்து நீக்குவது

இஸ்லாமிய பொருளாதார அமைப்பை நீக்குவது

முஸ்லிம்களின் சமூக வாழ்வை மறுசீரமைப்பது

அழைப்புப் பணியை மாற்றுமதத்தவர்களுக்குக் கொண்டு செல்ல விடாமல் தடுப்பது

தீமைகளைத் தடுப்பதை தடை செய்வது

குர்ஆன் மற்றும் சுன்னாவின் வழிமுறையின் கீழ் வாழ்வதைத் தடை செய்வது

கல்வி மற்றும் தொழில்நுட்ப ரீதியாக முஸ்லிம்களை முடமாக்குவது

இராணுத் தொழில் நுட்ப உதவிகளை மறுப்பது

பூகோளமயமாக்கல்இஸ்லாத்திலிருந்து ஜிஹாதை நீக்குவது

எதிரிகளை அதிகம் நடுநடுங்க வைக்கக் கூடிய பகுதி எதுவென்றால், ஒரு முஸ்லிமின் இறப்பிற்குப் பிறகு 'ஷஹீத் - உயிர்த்தியாகி' என்ற அந்தஸ்தை இறைவனிடத்தில் பெற்றுத் தரக் கூடிய 'ஜிஹாத்' என்ற பகுதி தான். இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் எதனுடன் வேண்டுமானலும் அது சமரசம் செய்து கொள்ளத் தயாராக இருக்கின்ற வேளையில், இந்த ஜிஹாதுடன் சம்பந்தப்பட்ட 'கிதால்' என்ற பகுதியுடன் அது சமரசம் செய்து கொள்ளத் தயாராக இல்லை. இஸ்லாத்தை நிராகரிக்கக் கூடிய ஒருவனுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது எதுவென்றால், 'பெண்ணும், பொருளும்' தான். ஆனால், 'முஜாஹித்' என்றழைக்கப்படக் கூடிய அல்லாஹ்வின் பாதையில் தன்னுடைய உயிரைத் தத்தம் செய்யத் தயாராக இருப்பவனுக்கு இந்த இரண்டும் அற்பங்களாகும். முஸ்லிம்களே..! ஒரு நபிமொழியில் 'வஹ்ன்' – 'இந்த உலகத்தின் மீதான ஆசை' பற்றி இந்த சமுதாயத்தை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கின்றார்கள், இந்த 'வஹ்ன்' என்ற ஆசையுடன் இருப்பவர்கள் தான் இறைவனை நிராகரிக்கக் கூடிய மக்களாகவார்கள். மேலும், இந்த 'வஹ்ன்' என்ற உலக ஆசையுடன் ஒரு முஸ்லிம் பவனி வருவான் என்று சொன்னால், இஸ்லாத்தின் எதிரிக்கு அதனை விட இஸ்லாத்தை அழிப்பதற்குண்டான சாதகமான அம்சம் வேறு எதுவும் இருக்காது. 'ஜிஹாது' என்ற சொல்லைப் பயன்படுத்த முயலாத காதியாணிகள், தப்லீக் ஜமாஅத்தார்கள், சூபித்துவ வாதிகள் மற்றும் இவர்களைப் போன்றவர்களை இஸ்லாத்தின் எதிரிகள் வரவேற்கின்றார்கள். மேற்கண்ட அமைப்பினர் ஒன்று 'கிதால்' என்ற வார்த்தைப் பிரயோகத்தைப் பொறுத்தவரை அதனை எதிர்ப்பது அல்லது அதனைப் பற்றிப் பேசாமல் அமைதியாக இருந்து விடுவது ஆகிய இரண்டு கொள்கைகளின் மூலம் எதிரிகளுடைய சதித் திட்டங்களுக்குத் துணை போகக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். 'கிதால்' என்பது இஸ்லாத்தின் ஒரு அம்சம், ஆனால் அதனைப் பயன்படுத்துவதற்கென்று இடம், பொருள், ஏவல், நேரம் ஆகிய அனைத்தையும் சரி கண்ட பின் தான் அதனை ஒரு முஸ்லிம் பயன்படுத்த முடியும் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது. எல்லா நேரத்திலும் அல்லது எல்லா இடத்திலும் இஸ்லாத்தின் எதிரிகள் இருக்கின்றார்கள் என்றோ, நினைத்த மாத்திரத்திலெல்லாம் இதனைப் பயன்படுத்தி விட முடியும் என்றோ நினைக்கக் கூடாது. இதனைத் தவிர்ப்பதற்குண்டான அனைத்துச் சாத்தியக் கூறுகளும் அடைபட்டுப் போனதன் பின்னர், அதாவது சமாதானப் பேச்சுவார்த்தைகள் பயனற்றுப் போனதன் பின்னர், 'கிதால்' என்ற முடிவை மேற்கொள்வது தான் ஒரு முஸ்லிமிற்கு உகந்த செயலாகும். இன்னும் சொல்லப் போனால், முஸ்லிம்களுக்கு நேருகின்ற அனைத்துப் பிரச்னைகளுக்கு ஒருவன் இந்தக் 'கிதால்' என்ற பலப்பிரயோகத்தைப் பயன்படுத்துகின்றான் என்று சொன்னால், அவனும் எதிரிகளது கனவுகளை மெய்ப்பிக்கின்றான் அல்லது அவர்களது கனவுகள் நிறைவேற ஒத்துழைக்கின்றான் என்றே பொருளாகும். இதன் மூலம் இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்கின்ற சொல்லாட்சியான 'தீவிரவாதம்' என்ற பதத்திற்கு உதாரணத்தைத் தேடிக் கொடுத்தவன் போலாவான் என்பதையும் மனதிற் கொள்வது நல்லது.


இஸ்லாத்தின் இன்னொரு அங்கமான அரசியலை அதிலிருந்து நீக்குவது

இந்தத் தலைப்பைப் பொறுத்தவரை இதனை இரண்டு பாகங்களாகப் பிரிக்கலாம். ஒன்று இஸ்லாத்திலிருந்து அரசியலைப் பிரிப்பது, இது தான் மதச்சார்பற்ற அரசியலின் அடிப்படைத் திட்டமாகும். இரண்டாவது, முஸ்லிம்கள் அரசியலில் பங்கெடுத்து விடாமல், அவர்களை ஆர்வமிழக்கச் செய்தல். இதன் மூலம் அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவது அல்லது பெற்று விடாமல் செய்து விடுவதனூடாக, யூத மற்றும் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளின் கரங்களில் இருந்து கொண்டிருக்கும் ஆட்சி, அதிகாரத்தை இழக்காதிருப்பது. ஆயிரம் ஆண்டுகளாக கத்தோலிக்க கிறிஸ்தவம் கொடுமையான ஆட்சிதனை ஐரோப்பாவில் நடத்திக் காட்டியதன் விளைவாக, கத்தோலிக்க திருச்சபையிலிருந்து அரசியலைப் பிரித்தெடுத்தார்கள். அத்தகைய கத்தோலிக்க திருச்சபையைப் போலத்தான், இந்த மதச்சார்பற்ற அடிப்படைவாதிகள் இஸ்லாத்தினையும் ஊணக் கண் கொண்டு பார்க்கின்றார்கள். அவர்களது இந்த அறியாமைக்கு, சில முஸ்லிம்களும் ஒத்துழைக்கின்றார்கள் என்பது தான் வேதனை தரும் செய்தி.

அமெரிக்காவைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் அரசியல் களத்தில் இறங்குவதை இஸ்லாத்தின் எதிரிகள் விரும்பவில்லை, அதாவது இது ஒரு கௌவரப் பிரச்னையாக அவர்களுக்கு இருக்கின்ற அதேவேளையில், முஸ்லிம்கள் தங்களது அதிகாரத்தில் பங்கு போட வந்து விடுவார்கள் என்றும் அவர்கள் அச்சம் கொள்கின்றார்கள். காதியாணிகள், தப்லீக் ஜமாஅத்கள், சூபித்துவ வாதிகள், ஹிஸ்புத் தஹ்ரீர், தன்ஸீம்-ஏ-இஸ்லாமி இன்னும் இதுபோன்ற அமைப்புகளை இந்த இஸ்லாத்தின் எதிரிகள் வரவேற்கின்றார்கள், காரணம் இவர்கள் இஸ்லாத்தின் எதிரிகளது கொள்கைக்கு இணங்கிப் போவது, முஸ்லிம்கள் அரசியலில் பிரவேசிப்பதை இந்தக் குழுவினர் எதிர்ப்பதுமே காரணமாகும். இவர்கள் இஸ்லாத்தின் எதிரிகளது கனவுகளை நனவுகளாக்க ஒத்துழைக்கின்றார்கள். இன்றைய நிலையில் முஸ்லிம்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் இணங்கிச் செயல்படுவார்கள் என்று சொன்னால், சிறுகச் சிறுக யூத மற்றும் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளின் பிடியில் உள்ள அரசியல் ஆதிக்கத்தைத் தளர்வுறச் செய்து, முஸ்லிம்கள் அதிகாரமிக்கவர்களாக உள்நாட்டிலும் இன்னும் உலகளாவிய ரீதியிலும் திகழ முடியும். இஸ்லாத்தின் எதிரிகள் முஸ்லிம்களுக்கு எதிராகத் திகழ்வது என்பது குர்ஆன் மற்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் சுன்னாவின் ஒரு பகுதியாகத் தானே இருக்கின்றது என்று சொல்லாதீர்கள். முஸ்லிம்கள் அரசியலில் அங்கம் வகிக்காமல் தவிர்ந்து கொள்வது, எதிரிகளது களப்பணிகளுக்கான கதவுகளை அகலத் திறந்து வைத்து, எந்தவித எதிர்ப்புகளும் இல்லாமல் தங்களது சதிகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு வாய்ப்பளித்தது போலாகி விடும் என்பதே உண்மையாகும்.


இஸ்லாமிய பொருளாதார அமைப்பை நீக்குவது

இங்கேயும் இந்தத் தலைப்பை இரண்டு பாகங்களாகப் பிரிக்கலாம். ஒன்று இஸ்லாமிய மார்க்கத்தை விட்டும் இஸ்லாமியப் பொருளாதாரக் கோட்பாட்டை நீக்குவது, இந்த வகையில் இஸ்லாமியப் பொருளாதாரம் குறித்து இஸ்லாமிய வழிகாட்டுதல்களைப் புறக்கணிப்பது. இரண்டாவதாக, இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ள நிறுவனங்களைப் புறக்கணிப்பது.

இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கையானது இந்த சதிகாரர்களை கலவரமடையச் செய்துள்ளது. ஏனெனில், இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கையானது வெற்றிகரமானதொரு அமைப்பாக உருவெடுத்து விட்டால், அதுவே முதலாளித்துவத்தின் சடவாதக் கொள்கைக்கான சாவு மணியாக இருக்குமென்று அவர்கள் கருதுவதே காரணமாகும். முதலாளித்துவமானது பலவீனர்கள் மற்றும் அறியாமைக்கார மக்களைச் சுரண்டி வாழ்வதை ஊக்குவிப்பதே அதன் பெருமைமிகு கொள்கையாகும். இத்தகைய மனிதகுலத்திற்கு ஆபத்தான கொள்கையை மரணப்படுகுழிக்கு அனுப்பக் கூடிய செயல்திட்டம் இஸ்லாத்திடம் இருப்பதினால், இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கையைக் கண்டு இந்த சதிகாரர்கள் அஞ்சுகின்றார்கள்.

இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்குப் புறம்பான வட்டி என்பது முதலாளித்துவத்தின் முதுகெலும்பாக இருக்கின்றது. மக்களின் தேவையையும், அறியாமையையும் பயன்படுத்தி முதலாளித்துவம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. இதனை இஸ்லாம் 'ஹராம்' அதாவது தடுக்கப்பட்டது என்கின்றது. மேலும், போதைப் பொருள்கள் விற்பனை, பன்றியுடன் சம்பந்தப்பட்ட பொருள்கள், சூதாட்டம் மற்றும் விபச்சாரம் போன்றவற்றையும் இஸ்லாம் ஹராமாக – தடை செய்திருக்கின்றது. இஸ்லாமியப் பொருளாதாரமானது முதலாளித்துவம் என்னும் கோட்டை கட்டப்பட்டிருக்கும் அதன் அஸ்திவாரத்தையே தகர்த்து விடக் கூடியதாக இருக்கின்றது. இந்தக் கொள்கையைப் பற்றி மக்களுக்கு வழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதை விட்டு விட்டு, இது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நபிவழியில் அமைந்ததல்ல என்று கூறி, தப்லீக் மற்றும் சூபித்துவ வாதிகள் அமைதி காப்பதன் மூலம், இஸ்லாத்தின் எதிரிகளின் கனவுகள் நனவாகுவதற்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். இவர்களைப் போன்று இஸ்லாமியப் பொருளாதாரம் என்ற பகுதியை மறந்தவர்களாக மற்ற முஸ்லிம்கள் வாழ வேண்டும் அல்லது இது குறித்து எதனையும் பேசாமல் அமைதி காக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்றே இஸ்லாத்தின் எதிரிகள் விரும்புகின்றார்கள்.


முஸ்லிம்களின் சமூக வாழ்வை மறுசீரமைப்பது

முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதை நிறுத்திக் கொள்வது மற்றும் ஆண்களும் பெண்களும் கலந்து பழகும் முறையை ஊக்குவிப்பது, அதற்கான எதிர்ப்பைக் கைவிடுவது, இதனை முஸ்லிம்களிடமிருந்து இஸ்லாமிய எதிரிகள் எதிர்பார்க்கின்றார்கள். 'மேற்கத்திய கலாச்சார (குறிப்பாக லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப்) அமைப்புக்களில் தங்களை அமிழ்த்திக் கொண்டிருக்கும் முஸ்லிம்களைப் போல, முஸ்லிம்கள் மேற்கத்தியர்களைப் போல ஆடல் பாடல் கேளிக்கைகளில் ஆணும் பெண்ணும் ஈடுபட்டு, 'மேற்கத்திய முஸ்லிம்' ஆக மாற வேண்டும் என்று விரும்புகின்றார்கள். கல்வி கற்ற படித்த பண்பாடான முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வருகின்ற நிலையை அவர்கள் வெறுக்கின்றார்கள், இன்னும் இத்தகையவர்கள் மேற்கத்திய கலாச்சாரப் பின்னணியுடன் அமைக்கப்பட்டிருக்கும் கூட்டங்களில் கலந்து கொள்வதனின்றும் ஒதுங்கி இருக்கும் பெண்களையும் அவர்கள் வெறுக்கின்றார்கள். தங்களது இல்லங்களுக்கு அருகில் உள்ள குடும்பத்துப் பெண்கள் வெளியில் செல்லும் பொழுது, ஹிஜாப், புர்கா போன்ற எதுவுமில்லாமல் மேற்கத்திய கலாச்சாரப் பாணியில் ஆடை அணிந்து செல்வோரைத் தான் அவர்கள் விரும்புகின்றார்கள். இன்னொரு புறம், பெண்கள் கற்பதை விட்டும் இன்னும் அவர்களது அறிவு வளர்ச்சிக்கும் தடை போடக் கூடிய இயக்கத்தவர்களும் நம்மில் இருக்கின்றார்கள். இன்னும் சில இயக்கத்தவர்கள் பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்வதையும், அங்கு தங்களது சொந்த இயக்கத்தவர்களால் நடத்தப்படும் உரைகளையும் கூட கேட்டுப் பயன் பெற அனுமதி மறுக்கக் கூடியவர்களும் நம்மில் இருக்கின்றார்கள். இத்தகையவர்களது மூளை வளர்ச்சியானது ஐந்து அல்லது ஆறு வயதுக் குழந்தைகளின் மூளை வளர்ச்சியைப் போன்று தான் இருக்கும், இத்தகைய மூளை வளர்ச்சி குன்றியவர்களாகத்தான் இன்றைய முஸ்லிம் தாய்மார்கள் இருக்கின்றார்கள். ஒரு தாய் தான் ஒரு குழந்தையின் முதல் வகுப்பாசிரியர், இவர் தான் தான் பெற்ற அந்தக் குழந்தையின் ஆளுமையை சீராக்கி வளர்க்கக் கூடியவராக இருக்கின்றார். அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, அறியாமையில் உழல்கின்ற, வெறுப்பையும், இன்னும் கோபத்தையும் தன்னில் அடக்கி வைத்திருக்கின்ற இந்தத்தாய் சுயநலமிக்கவர்களாகத் தான் திகழ்வார்கள், இன்னும் தங்களது அன்றாட வாழ்க்கைத் தேவைக்காக தங்களது கடைசிக் காலம் வரை ஒருவரைச் சார்ந்தே அவர்கள் இருக்க வேண்டிய நிலையும் அவர்களுக்கு ஏற்பட்டு விடும் பொழுது, முழுக்க முழுக்க அவர்களது வாழ்க்கை தங்களது சுயநலன்களை அடைந்து கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கக் கூடியவர்களாகவும், எந்தவிதக் குறிக்கோளும் அற்றவர்களாகவும், இன்னும் தன்னைப் பற்றியோ அல்லது தனது குடும்பத்தைப் பற்றியோ அல்லது தன்னுடன் வாழ்ந்து வரும் சக மனிதர்கள் பற்றியோ அவர்கள் அக்கறை கொள்ள இயலாதவர்களாகவே மாறி விடுகின்றார்கள். இதற்கு மாற்றாக, கல்வி கற்ற ஒரு பெண், அதுவும் இஸ்லாமிய ரீதியில் குர்ஆனையும், சுன்னாவையும் கற்றுத் தேறியிருக்கின்ற பெண்ணானவள் சந்தோஷமான வாழ்க்கையை நடத்தக் கற்றுக் கொள்வதுடன், அவளிடம் சிறந்த தலைமைத்துவத்திற்கான திறமைகள் மலிந்து கிடப்பதையும், இன்னும் தங்களது குழந்தைகளை கல்வியாளர்களாக உருவாக்க வேண்டும் என்ற அக்கறையும், சந்தோஷமான மற்றும் தூர நோக்குச் சிந்தனை கொண்டவர்களாக தங்களது பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்ற சிந்தனையைச் சுமந்தவர்களாகவும் அவர்கள் இருப்பதைக் காண முடியும். ஆயிரம் ஆண்டுகளாக முஸ்லிம் தாய்மார்கள் கல்வி கற்க இயலாதவர்களாக, அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டவர்களாக, ஒடுக்கப்பட்டதன் காரணமாக இன்றைக்கு நாம் சுயநலமிக்க சமுதாய அங்கத்தினர்களையும், இஸ்லாம் என்றால் என்ன என்று அறியாத மக்களையும், தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருக்கக் கூடியவர்களையும், தூர நோக்கற்றவர்களையும், குறுகிய மனப்பான்மையுள்ளவர்களையும், கருத்துமுரண்பாடுகளுடன் காலந்தள்ளக் கூடியவர்களையும், உயர்பண்பு மற்றும் தலைமைத்துவத்திற்கான தகைமை அற்றவர்களையும் தான் இன்றைக்கு சமுதாயம் பெற்றிருக்கக் கூடிய சூழ்நிலையைப் பார்க்கின்றோம். அதன் பலனைத்தான் இன்றைய முஸ்லிம் உம்மத் அனுபவித்துக் கொண்டிருக்கின்றது. இஸ்லாமிய உலகமெங்கும் இத்தகைய முறையில் தொலைநோக்கற்ற, அறிவற்ற, அறியாமையில் உழன்று கொண்டிருக்கின்ற தாய்மார்களால் பெற்றெடுக்கப்பட்ட, தலைமைத்துவத்திற்கு எந்தத் தகுதியுமற்ற சுயநல ஆட்சியாளர்கள் நிறைந்த நாடுகளாக இன்றைய முஸ்லிம் நாடுகள் மலிந்து கிடப்பதையும், மேற்கின் அடிவருடிகளாக அவர்கள் மாறி இருப்பதையும் நாம் கண்டு வருகின்றோம். இத்தகைய நிலை தொடர வேண்டும் என்பதே சில முஸ்லிம் இயக்கத்தவர்களின் ஆசையாகவும், இஸ்லாத்தின் எதிரிகளது கரங்களில் ஆட்சியும், அதிகாரம் தங்கியிருப்பதே தங்களுக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியது போன்றும் அவர்கள் தங்களது பிரச்சாரப் பணிகளை அமைத்துக் கொண்டிருக்கக் கூடியவர்களாக இருக்கும் நிலையையும் நாம் காண்கின்றோம். இத்தகைய இஸ்லாமிய இயக்கத்தவர்கள் உலகின் எந்த நாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்றாலும் இவர்களுக்கு உடனே விசா போன்ற அனுமதிகள் உடனடியாகக் கிடைத்து விடுகின்றன. அதேநேரத்தில் குர்ஆனையும், சுன்னாவையும் வலுவாது பின்பற்ற வேண்டும் என்று துடிக்கின்ற முஸ்லிம்கள் 'தீவிரவாதிகள்' பட்டியலில் சேர்க்கப்பட்டு பிற நாடுகளுக்குச் செல்வதற்கான அனுமதி மறுக்கப்படுவதுடன், அவர்கள் சிறையிலடைக்கப்பட்டு தீவிரவாதிகளாக சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதையும் காண்கின்றோம்.


அழைப்புப் பணியை மாற்றுமதத்தவர்களுக்குக் கொண்டு செல்ல விடாமல் தடுப்பது

அழைப்புப் பணி என்பது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் உள்ள கடமையாக இருக்கின்றது, இஸ்லாத்தின் பரவலுக்கு இது துணை செய்கின்றது. இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாமியப் பிரச்சாரப் பணிகளை வெறுக்கக் கூடியவர்களாக, இஸ்லாத்தின் பரவலானது தங்களது சமூகத்தில் பாதிப்புக்களை ஏற்படுத்தி தங்களது நோக்கங்களையும், ஆசைகளையும் சிதறடித்து விடக் கூடியதாக அமைந்து விடும் என்று அவர்கள் கருதுகின்றார்கள். தப்லீக் மற்றும் சூபித்துவவாதிகள் மாற்றுமதத்தவர்களுக்கு இஸ்லாத்தினை எடுத்துச் சொல்வதில் முனைப்புக் காட்டுவதில்லையாதலால், இஸ்லாத்தின் எதிரிகள் இத்தகையவர்களை விரும்புகின்றார்கள். அழைப்புப் பணியில் ஈடுபடாமல் இருப்பது அல்லது அவ்வாறு செயல்படுவதை எதிர்ப்பது இதனூடாக, இத்தகையவர்கள் எதிரிகளின் கனவுகளுக்கு வலுச் சேர்க்கக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். ஹிஸ்புத் தஹ்ரீர் போன்ற அமைப்புகள் இதில் மாறுபட்ட நோக்கத்துடன் 'கிலாபத் - இஸ்லாமிய ஆட்சியே தீர்வு' என்ற சுலோகத்தை முன் வைக்கக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். இவர்களிடம் இதற்கான சரியான திட்டமிடல்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை, இன்னும் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கக் கூடிய நாடுகளில் இவர்களது திட்டங்கள் என்ன என்பதே தெரியவில்லை. முஸ்லிம்கள் மிகவும் சிறுபான்மையினராக வசிக்கக் கூடிய நாடுகளில் இவர்கள் இஸ்லாமிய கிலாபத்தை அமைக்கப் போகின்றோம் என்று அறைகூவல் விடுவதை நாம் காண முடிகின்றது. மக்களை கவர்ந்திழுக்கக் கூடிய உரைகளின் மூலம் மேற்கில் இஸ்லாமிய ஆட்சியை, அதாவது கிலாபத்தே தீர்வு என்ற கொள்கை முழக்கத்தை அவர்கள் உரத்துக் கூறுகின்றார்கள். இவர்களின் இந்தத் திட்டத்தை முஸ்லிம்கள் அதிகம் வசிக்கக் கூடிய நாடுகளில் சென்று செயல்படுத்தி, அவற்றில் ஏதாவது ஒன்றிரண்டு நாட்டையாவது இஸ்லாமிய ஆட்சியின் பால் கொண்டு வருவதற்கு அவர்கள் முயற்சி செய்வது நல்லது. மேற்கில் இஸ்லாமிய மறுமலர்ச்சியைக் கொண்டு வர வேண்டும் என்று விரும்புகின்றவர்களின் திட்டத்தில் இத்தகையவர்கள் தங்களால் இயன்ற அளவு பிரச்னைகளையும், தடைகளையும் ஏற்படுத்தி விடுகின்றார்கள்.


தீமைகளைத் தடுப்பதை தடை செய்வது

இஸ்லாம் ஒவ்வொரு முஸ்லிமையும் நன்மையை ஏவி, தீமையைத் தடுக்குமாறு பணிக்கின்றது. தீமையைத் தடுப்பது என்றால், தீங்கு விழைவிக்கக் கூடிய அனைத்து வகையான செயல்களிலிருந்தும் மக்களை தவிர்ந்து வாழும்படிச் செய்தல் என்பதாகும். ஜனநாயகச் சட்டங்களின்படி, தீமைகள் என்பவை எவை எவை என்பதை அதன் சட்டங்கள் தான் வரையறுக்க வேண்டும். அதன்படி இறைச்சட்டங்கள் எதனையெல்லாம் தீமைகள் என்று அறிவுறுத்தியிருக்கின்றனவோ அவையெல்லாம் இந்தச் சட்டங்களின்படி தீமைகள் என்று கருத வேண்டிய அவசியமில்லை. உதாரணமாக, மது அருந்துவது, சூதாடுவது, விபச்சாரம், ஓரினச் சேர்க்கை ஆகிய அனைத்தும் இந்த ஜனநாயகச் சட்டங்களின்படி வாழ்க்கையில் அனுமதிக்கப்பட்டவைகளாகவும், தீமைகள் என்று இந்தச் சட்டங்களின்படி முத்திரை குத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இந்த வகையில், இஸ்லாத்தில் ஊடுறுவியுள்ள சில அமைப்புகள், மேற்கத்தியர்களின் இந்த செயல்களுக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்களாக செயலாற்றி வருவதோடு, அதனைக் குறித்து மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தாமல் அமைதியாகவே இருந்து விடுகின்றனர். இதன்மூலம் இவர்கள் இஸ்லாத்தின் எதிரிகளது கனவுகளை நனவுகளாக்குகின்றனர். ஜனநாயக் கலாச்சாரங்களின்படி, அதன் சட்டத்தால் தீமைகள் என்று வரையறுக்கப்படாத மேற்கண்ட தீமைகள் யாவும், நாகரீகமானவைகளாகவும், மனிதனை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கக் கூடிய உல்லாசத் தேவைகளாகவும் கருதப்படுகின்றன. ஆடையின்றி உலா வருவதும், அம்மணமாகத் தெரிவதும் நவீன கலாச்சாரத் தேவைகளாகவும், ஓரினச் சேர்க்கை மாற்று வழி வாழ்க்கை முறையாகவும், விபச்சாரம் என்பது ஆணின் உல்லாச வாழ்க்கையின் அடிப்படைத் தேவையாகவும், இன்னும் ஏராளமான தீமைகள் இன்று உல்லாச வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளாக இந்த ஜனநாயக் சட்டங்களால் அங்கீகரிக்கப்பட்டு, அவை பாதுகாக்கப்பட்டும் வருகின்றன.

ஆனால் இஸ்லாம் தடை செய்திருக்கின்ற சமூகத் தீமைகளைப் பற்றி பிரச்சாரம் செய்யும் அமைப்புகள் சிலவே இன்றைக்கு இஸ்லாமிய சமூகத்தில் உள்ளன. அவை கடுமையான கட்டுப்பாடுகளுக்குள் இயங்க வேண்டிய நிர்ப்பந்த நிலையிலும் உள்ளன. அதேவேளையில், இத்தகைய சமூகத் தீமைகளைக் கண்டு கொள்ளாத முஸ்லிம் அமைப்புகளும் நம்மில் உள்ளன. மனித இனத்தை அழிவுக்குள்ளாக்கும் சமூகத் தீமைகளைக் கண்டு கொள்ளாத அமைப்புகளைப் போலத் தான் ஏனைய இஸ்லாமிய அமைப்புகளும் இருக்க வேண்டும் என்று, டேனியல் பைப்ஸ் மற்றும் ஸாம் ஹண்டிங்டன் போன்ற மேலைத்தேய அறிஞர்கள் விரும்புகின்றார்கள்.


குர்ஆன் மற்றும் சுன்னாவின் வழிமுறையின் கீழ் வாழ்வதைத் தடை செய்வது

குர்ஆன் மற்றும் சுன்னாவைக் கற்றறிந்து அதன்படி வாழ வேண்டும் என்று நினைக்கின்ற முஸ்லிம்கள் தான் ஆபத்தானவர்கள், இவர்கள் தான் முஸ்லிம் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கின்ற இஸ்லாத்திற்கு முராணனவற்றை களைவதற்கான பணிகளைச் செய்கின்றவர்களாக இருக்கின்றார்கள், என்றதொரு மனநிலை மேற்கத்தியவாதிகளிடம் காணப்படுகின்றது. குர்ஆன் மற்றும் சுன்னாவைப் பின்பற்றுகின்றவர்கள் தான் மேற்கின் சாபத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடியவர்களாக, இன்னும் 'வஹ்ஹாபிகள்' என்று நாமகரணம் சூட்டப்பட்டு அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள் என்று அழைக்கப்படுகின்றவர்களாக, இத்தகையவர்கள் தான் அழித்தொழிக்கப்பட வேண்டியவர்கள் என்று மேற்கத்தியவாதிகளால் அடையாளமிடப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். இன்னும் இஸ்லாத்திற்குள்ளேயே பல பிரிவுகளாகச் செயல்படக் கூடியவர்களாலும், இவர்கள்.. அதாவது இந்த வஹ்ஹாபிகள் அழித்தொழிக்கப்பட வேண்டியவர்களே என்றும், அது தங்களது தலையாய பணி என்ற குறிக்கோளைக் கொண்டவர்களாக இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிராகவே களமிறங்கக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். இதில் சூபித்துவக் கொள்கையைப் பின்பற்றக் கூடியவர்கள், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற்றுக் கொள்வதை நோக்கமாகக் கொள்வதை விட, 'வஹ்ஹாபிகளை' அழித்தொழிப்பதே தங்களது தலையாய பணியாகக் கொள்வதன் மூலம் இஸ்லாமிய எதிரிகளுக்குத் தான் இவர்கள் உதவிக் கொண்டிருக்கின்றார்கள். 'வஹ்ஹாபிஸம்' என்றதொரு நாமகரணத்தை முஸ்லிம்களுக்குச் சூட்டியவர்களே பிரிட்டிஷ்காரர்கள் தான். 1820 ல் இந்தியாவில் பிரிட்டிஷாருக்கு எதிராகத் தோன்றிய 'ஷஹீத்'களின் இயக்கமொன்றுக்கு எதிராக பிரிட்டிஷார் முஸ்லிம் பொதுமக்கள் மத்தியில் விதைத்து விட்ட வெறுப்பின் விதை தான் இந்த வஹ்ஹாபிகள் என்ற நாமகரணமாகும். இதன் மூலம் இந்த ஷஹீத் இயக்கத்தவர்களின் மூலமாக ஏற்பட்ட எதிர்ப்புணர்வை அவர்கள் மட்டுப்படுத்தியதோடு, தங்களது நோக்கத்தில் வெற்றியும் அடைந்து கொண்டார்கள் பிரிட்டிஷ்காரர்கள். மனித குலத்தை குர்ஆன் மற்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாழ்வியல் நெறிமுறைகளின் அடிப்படையில் அழைக்கும் இந்தக் கூட்டத்தினரைப் பார்த்து, உலகமெங்கும் உள்ள இஸ்லாத்தின் எதிரிகள் கவலையடைந்துள்ளார்கள். உண்மையான இஸ்லாமிய மறுமலர்ச்சி என்பது குர்ஆன் மற்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மட்டுமே ஏற்பட முடியும். குர்ஆனை விளங்கி செயல்படாத வரைக்கும், வெறுமனே அதனது வார்த்தைகளை ஓதுவதானது, மனிதனை முடமானவனாகவே ஆக்கி வைக்கும். மேற்கு எதிர்பார்க்கும் முடமான சமூகத்தை, குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் அருகில் கூட சென்று விடாததொரு கூட்டத்தை இஸ்லாத்திற்குள்ளேயே இருக்கக் கூடிய சில அமைப்புகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன. முஸ்லிம்கள் கண்ணை மூடிக் கொண்டு ஏதாவதொரு தலைவரைப் பின்பற்றி வாழ வேண்டும், அத்தகைய தலைவர் மக்களை குர்ஆனின் பாலும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்வியல் நெறிமுறைகளின் பாலும் அழைக்காத, குருட்டத்தனமாக தன்னை மட்டுமே தனது சீடர்கள் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவராகவுமே இருக்க வேண்டும் என்றே மேற்கு விரும்புகின்றது. இந்த இயக்கத்தவர்களுக்கு குர்ஆனில் இருந்தும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்விலிருந்து ஆதாரங்களைக் கேட்பது தடை செய்யப்பட்டதாகவே இருந்து வருகின்றது. குர்ஆன் மற்றும் சுன்னாவைக் கற்றுத் தேர்ந்தவர்களை விட, இவர்களைக் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றுபவர்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது மிக எளிதானது. ஆட்டு மந்தை போலத் தங்களது குருமார்களைப் பின்தொடரக் கூடியவர்களாக இருப்பவர்கள், தங்களது குருமார்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்களே ஒழிய, குர்ஆன் என்ன சொல்கின்றது? இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்கள் என்ன? என்று சரியானதையும், வழிகேடானதையும் பிரித்தறியத் தெரியாதவர்களாக அவர்கள் இருப்பதே இதன் முக்கியக் காரணமாகும்.

இவ்வாறு இஸ்லாமிய சமுதாயத்தை குருட்டு நம்பிக்கை கொண்ட சமுதாயமாக மாற்றி வைத்திருப்பதும் கூட ஒரு வழியில், இஸ்லாமிய எதிரிகள் இஸ்லாத்திற்கு எதிரான சதிகளை நிறைவேற்றுவதற்குண்டான பணிகளை இலகுபடுத்தி விடுகின்றது எனலாம்.

முஸ்லிம் மிகுதியாக வாழக் கூடிய நாடுகளில், இத்தகைய வழிமுறைகளைப் பயன்படுத்தி முஸ்லிம்களைப் பல்வேறு பிரிவுகளுக்குள் அடக்கி, ஒவ்வொரு பிரிவாரும் தத்தமது தலைவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடியவர்களாக இருக்கின்ற அதேவேளையில், ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்திற்கு அந்தக் கருத்து உகந்ததாக இருக்குமா என்று சிந்திக்கத் திராணியற்ற சமுதாயத்தினராக முஸ்லிம் சமுதாயத்தினை மாற்றி அமைத்திருக்கின்ற சூழ்நிலைகளையும் நாம் பார்க்கின்றோம். இதுவும் ஒரு வகையில் இஸ்லாத்தின் எதிரிகளின் கனவுகளை சாத்தியமாக்கக் கூடியனவாக உள்ளன.

1970 ல் இஸ்ரேலிய அரசு ஒரு சட்டத்தை நிறைவேற்றியது அதன் மூலம், முஸ்லிம்கள் அதிகமாக வாழும் அரபு நாட்டினை, தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ அவர்கள் இணைந்தாலும், இஸ்ரேலின் பலத்தை விடக் குறைந்த அல்லது பலவீனமான நாடாகவே அவர்களை வைத்திருக்க வேண்டும் என்று அவர்கள் கொள்கை முடிவை எடுத்தார்கள். இந்தக் கருத்தை அமெரிக்க அரசின் ஜனநாயகக் கட்சி ஏற்றுக் கொண்டதோடு, இதே சட்டத்தை சில மாற்று வார்த்தைகளின் மூலம் மாற்றியமைத்து குடியரசுக் கட்சியும் ஏற்றுக் கொண்டது. இதன் மூலம் அமெரிக்க அரசியல் இஸ்லாமிய எதிரிகளுடன் கைகோர்த்துக் கொண்டு, தங்களது கபட நாடகத்தை முஸ்லிம்கள் மீது திணித்து, முஸ்லிம்களை முடமாக்கப்பட்டவர்களாகவே வைத்திருக்க வேண்டும் என்ற பொதுக் கொள்கையின்பால் ஒருமித்துச் செயல்படக் கூடியவர்களாக அவர்களது திட்டங்கள் அமைந்திருப்பதைக் காண முடிகின்றது.


கல்வி மற்றும் தொழில்நுட்ப ரீதியாக முஸ்லிம்களை முடமாக்குவது

முஸ்லிம்கள் கல்வி கற்றவர்களாக அல்லது தொழில்நுட்ப ரீதியில் வளர்ச்சியடைந்தவர்களாக மாறி விடக் கூடாது என்பதிலும், இன்னும் இப்பொழுது உள்ள நிலையே நமக்குப் போதுமானது என்ற மனநிலை கொண்டவர்களாகவே அவர்கள் இருக்க வேண்டும் என்றே இஸ்லாமிய எதிரிகள் விரும்புகின்றார்கள். ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மற்றும் சிறப்புத் தகைமை ஆகிய அனைத்தும் இஸ்லாம் அல்லாதார்களிடம் தான் இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றார்கள். மேற்கு அல்லது முஸ்லிம் அல்லாதார்கள் உற்பத்தி செய்கின்ற பொருட்களை உபயோகிக்கக் கூடிய நுகர்வோர்களாகவே முஸ்லிம்கள் இருக்க வேண்டும் என்றே அவர்கள் விரும்புகின்றார்கள். முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் அமர்ந்து கொண்டு தங்களால் உற்பத்தி செய்த பொருட்களை அனுபவித்துக் கொண்டு, தங்களது பொருட்களைப் பற்றிப் பிரச்சாரம் செய்யக் கூடியவர்களாகவும் இன்னும் நுகர்பொருள் மோகத்தை மக்களிடையே பரப்பக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என்றே மேற்கு விரும்புகின்றது. இத்தகையவர்களைத் தான் மேற்கும் விரும்புகின்றது.

இன்னும் தங்களால் விற்பனைக்குத் தயார் செய்யப்பட்ட பொருட்களை இறக்கிமதி செய்யக் கூடியவர்களாகவும், தங்கள் நாடுகளில் கிடைக்கக் கூடிய கச்சாப் பொருட்களை மேற்குக்கு ஏற்றுமதி செய்யக் கூடியவர்களாகவும் முஸ்லிம் நாடுகள் இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றார்கள். இதன் மூலம் எப்பொழுதுமே நவீன சாதனங்களுக்காக தங்களையே சார்ந்திருக்கக் கூடியவர்களாகவே இருக்க வேண்டுமே தவிர வளர்ச்சியடைந்த நாடுகளாக மாறி விடக் கூடாது என்றும் விரும்புகின்றார்கள். முஸ்லிம்கள் எப்பொழுதுமே கல்வி அறிவில், தொழில் துறைகளில், விஞ்ஞான வளர்ச்சியில் மற்றும் தொழிற் பொருட்களின் உற்பத்தியிலும் இன்னும் இவற்றில் கனரக சாதனங்களாக இருந்தாலும் சரி அல்லது நுகர்பொருட்களாக இருந்தாலும் சரி அனைத்திலும் முஸ்லிம்கள் பின்தங்கி இருக்க வேண்டும் என்றே மேற்கு விரும்புகின்றது. சற்று சில வருடங்களுக்கு முன்னாள், அதாவது 1973 ல் சௌதி அரேபியாவின் அன்றைய மன்னர் பைஸல் அவர்கள் அமெரிக்காவிற்கு பெட்ரோலை விற்க மறுத்ததை அடுத்து, அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஹென்றி கிஸ்ஸிங்கர் கூறிய வார்த்தைகள் கவனிக்கத்தக்கது. அவர் கூறினார் : ''நீங்கள் எங்களுக்கு பெட்ரோலை விற்கவில்லை என்று சொன்னால், நாங்கள் உங்களுக்கு கோதுமையை விற்க மாட்டோம், பசியெடுத்தால் பெட்ரோலைக் குடித்துக் கொள்ளுங்கள் என்றார்''. அமெரிக்க அரசானது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கக் கூடிய நாடுகளை எப்பொழுதுமே ஒருவித அச்சத்தின் பிடியில் சூழ இருக்குமாறே பார்த்துக் கொள்கின்றது. அமெரிக்க அரசியலில் முஸ்லிம்கள் கவனம் செலுத்தாத வரைக்கும், அமெரிக்க அரசின் இத்தகைய செயல் திட்டங்களை மாற்றுவது என்பது இயலாத காரியமாகும். அமெரிக்க அரசியல் அதிகாரத்தில் கோலோச்சுவதன் மூலம் ஏற்படுத்துகின்ற தாக்கங்கள், மாற்றத்தை ஏற்படுத்தவல்லது. இதன் பின் முஸ்லிம்கள் தங்களது தேவைகளுக்காக பிச்சை எடுக்க வேண்டிய அவசியமில்லை, எப்பொழுது இஸ்லாத்தின் எதிரிகளை அதிகார ஆட்சி பீடத்திலிருந்து அகற்றுகின்றோமோ அப்பொழுதிலிருந்து கேட்டுப் பெறுவது என்ற நிலைமாறி, ஒரு உத்தரவின் மூலம் அதனைப் பெற்றுக் கொள்ளும் நிலை உருவாகும். இத்தகைய மாற்றத்தை முஸ்லிம்களால் கொண்டு வர முடியும், கொண்டு வர வேண்டியது அவசியமுமாகும். ஒன்றை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும், அமெரிக்க அரசியலில் ஆதிக்கம் செலுத்துவது என்பது மலர்ப் படுக்கையில் படுத்துக் கொண்டு நடத்தும் நாடகமுமல்ல, மலர்ப் படுக்கையில் சொகுசாகப் படுத்துக் கிடப்பதற்காக ஆற்றக் கூடிய பணியுமல்ல.


இராணுவத் தொழில் நுட்ப உதவிகளை மறுப்பது

முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்டுள்ள நாடுகளின் காவல்துறையினர் சில கைத்தடிகளையும், காலங்கடந்த சில துப்பாக்கிகளையும் வைத்துக் கொண்டு தங்களது சக குடிமக்களை ஆடுகளை மேய்ப்பது போல மேய்த்துக் கொண்டும், தங்களது சுயநலன்கள் பாதிக்கப்படும் பொழுது இந்த காவல் மற்றும் இராணுவத்துறையினர் இந்த மக்களை அடக்கி ஒடுக்கி அல்லது கொலை கூட செய்து தங்களுக்குச் சேவகம் செய்ய வேண்டும் என்றே மேற்கு விரும்புகின்றது. சுருங்கச் சொன்னால், இந்த முஸ்லிம் நாடுகள் கைத்தடிகளை வைத்திருக்கின்றார்களா அல்லது துப்பாக்கிகளை வைத்திருக்கின்றார்களா என்பதல்ல பிரச்னை, தங்களது சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கும் பொம்மைகளாக முஸ்லிம் ஆட்சியாளர்கள் இருக்கின்றார்களா என்பதே முக்கியம். இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு, பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே நடக்கும் பேச்சுவார்த்தைகளில் அவர்கள் எந்தளவு உள்நோக்கத்துடன் செயல்படுகின்றார்கள் என்பதிலிருந்து விளங்கும். பாலஸ்தீன அதிகார சபைக்கு சில அதிகாரங்களையும் அத்துடன் சில துப்பாக்கிகளையும் கொடுத்து, பாலஸ்தீனர்களே தங்களது சொந்த மக்களின் இஸ்ரேலுக்கு எதிரான எழுச்சியை கட்டுப்படுத்தி வைத்திருக்கச் செய்யும் மேற்கின் தந்திரத்தைக் கூறலாம். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கக் கூடிய நாடுகள் தங்களது எதிரிகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவதை மேற்கு விரும்புவதில்லை. உதாரணமாக, ஈராக் தனது எதிரிக்கு எதிராக சிறந்த படை ஒன்றைத் தயார் செய்த பொழுது, அந்த ஈராக்கின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இன்றைக்கு அந்த நாட்டை கற்காலத்திற்கு நிகராக மேற்கு மாற்றி வைத்திருக்கின்றது. இதனைப் போலவே, பாகிஸ்தான் மீதும் ஒரு ஆக்கிரமிப்பு யுத்தத்தை நடத்துவதற்கு மேற்குடன் இஸ்ரேலும் கூட்டிணைந்து கொண்டு, இந்தியாவை அதற்காக தயார் செய்து வருகின்றன. இந்தியாவும் இஸ்ரேலும் கூட்டிணைந்து கொண்டு அணுஆயுத தொழில்நுட்பத்தை வளர்த்தெடுத்துக் கொள்ள முனையும் அதேநேரத்தில், இதே போன்றதொரு தொழில் நுட்பத்தைப் பெற்றுக் கொள்ள பாகிஸ்தனுக்கும், ஈரானுக்கும் அனுமதி மறுக்கப்படுகின்றது. இந்தியா, இஸ்ரேல் மற்றும் சீனா ஆகிய நாடுகள் தங்களது நாட்டில் ஏவுகணைகளையும், விமானங்களையும் தயாரிக்கும் பொழுது ஏற்படாத தடை, பாகிஸ்தானும், ஈரானும் தயாரிக்கும் பொழுது மட்டும் தடை பிறப்பிக்கப்படுகின்றது. அமெரிக்க அரசியலில் முஸ்லிம்கள் நுழைவதை எதிர்ப்பவர்கள் மேலும் மேலும் முஸ்லிம் நாடுகளை பலவீனமாக வைத்திருக்கவே அவர்களது விருப்பங்கள் உதவும், இன்னும் முஸ்லிம் நாடுகள் மீது மேற்கும், இஸ்ரேலும், ரஷ்யாவும், சீனாவும், இந்தியாவும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கவுமே உதவும். எனவே, அரசியலிலும் முஸ்லிம்கள் கவனம் செலுத்துவனூடகவே இந்த நிலையை மாற்றியமைக்க முடியும். இதற்கான தொலைநோக்குத் திட்டம் முஸ்லிம்களிடம் இருக்க வேண்டியது அவசியமாகும். அரசியலுடன், சரியான திட்டமிடுதலுடன் கூடிய இஸ்லாமியப் பிரச்சாரப் பணிகளும் இணைந்து செயல்படுமானால், அமெரிக்க அதிகாரத்தில் முஸ்லிம்கள் கோலோச்சக் கூடிய நாட்கள் வெகு தொலைவில் இல்லை.


உலகமயமாக்கல்

இந்த பூகோளமயமாக்கலின் அடிப்படையே இஸ்லாமிய கலாச்சாரத்தினை நிர்மூலமாக்கி, அதற்குப் மாற்றாக மேற்கத்தியக் கலாச்சாரத்தைப் புகுத்துதல். இதன் மூலம் புகழேனியின் உச்சியில் இருந்து கொண்டு உலகத்தின் அதிகாரத்தைத் தங்களது கைகளில் வைத்திருந்த பொன்னான நாட்களை முஸ்லிம்கள் மீண்டும் அடைந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றார்கள். எனவே, உலகமயமாக்கலின் ஒருபகுதியாக மேற்கானது மனித வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்த விரும்புகின்றது, குறிப்பாக கலாச்சரத்தில் ஆதிக்கம் செலுத்த அது அதிக கவனம் செலுத்துகின்றது. சில இயக்கங்கள் மேற்கின் இந்தத் திட்டங்களை உணர்ந்து கொண்டு, ஐரோப்பிய ஆதிக்கத்தின் மூலமாக முஸ்லிம்களிடம் ஏற்பட்ட தவறான போக்குகளைக் களைவதற்கு முயற்சிகளை மேற்கொண்டன, ஆனால் மேற்கண்ட அரபுநாடுகள் ஐரோப்பிய நாடுகளின் காலனி தேசங்களாக மாற்றம் பெற்றதன் பின்பு, இத்தகைய இயக்க நடவடிக்கைகள் ஒடுக்கப்பட்டன அல்லது செயலிழக்கச் செய்யப்பட்டன. முஸ்லிம்களிடம் கலாச்சார மாற்றத்தை ஏற்படுத்துவற்கான ஆயுதமாக இந்த உலகமயமாக்கள் என்ற திட்டத்தைக் கொண்டு வந்துள்ளன. முஸ்லிம்களிடம் இதனைத் தடுத்துக் கொள்வதற்கான சரியான செயல்திட்டம் ஒன்றை வரையறை செய்து கொள்ளாத வரைக்கும், மேற்கின் இத்தகைய தீய நோக்கங்களைத் தடுத்துக் கொள்ள முஸ்லிம்கள் சக்தி பெற மாட்டார்கள். அமெரிக்க அரசியலில் முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்துவதை விரும்பாத முஸ்லிம்கள், மேற்கின் இத்ததைகய தீய நோக்கங்களை எத்தகைய எதிர்ப்பும் இல்லாமல் அமுல்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடியவர்களாக இருப்பார்கள் என்பதே நிதர்சனமாகும். தங்களது அறியாமையின் காரணமாக மறைமுகமாக மேற்கிற்கு இந்த முஸ்லிம்கள் உதவிக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களின் உதவி முஸ்லிம்களுக்கா? அல்லது இஸ்லாமிய எதிரிகளுக்கா? தீர்மானித்துக் கொள்ளுவது உங்களது பொறுப்பு.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் இரண்டு நபர்களால் உருவாக்கப்பட்ட அமெரிக்க வெளியுறவுத் துறையின் திட்டங்கள் தான் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஐஸ்நோவர் காலத்தில், ஜான் ஃபோஸ்டர் டுல்லஸ் என்ற உள்துறைச் செயலாளர் வரைந்த அமெரிக்க அரசின் கொள்கைத் திட்டங்கள் முதலாளித்துவத்தை மையமாகக் கொண்டு வரையப்பட்டன. அது கம்யூனிஸம் மற்றும் இஸ்லாத்திற்கு எதிரானதாக அமைந்திருந்தது. அப்பொழுது கம்யூனிஸத்தை வீழ்த்துவதற்கு இஸ்லாமிய இயக்கங்களுடன் இணைந்து பணியாற்றலாமே என்று இவரிடம் ஆலோசனை கூறிய பொழுது, அந்த ஆலோசனையை ஏற்க மறுத்ததோடல்லாமல், 'கம்யூனிஸம் என்பது மேற்கின் உடன்பிறந்த சகோதரி, ஆனால் இஸ்லாமோ மேற்கின் நேரடி எதிரி' என்று கூறினார். நிக்ஸன் காலத்தில், ஹென்றி கிஸ்ஸிங்கர் என்ற ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவில் குடியேறிய யூதரான இவர், உள்துறைச் செயலாளர் என்ற பதவியை அடைந்து கொண்டார். கிஸ்ஸிங்கருடைய கொள்கையானது ஸியோனிஸத்தையும் மற்றும் இஸ்ரேலையும் மையமாகக் கொண்டது. எனவே, இயற்கையாகவே இவரது கொள்கை இஸ்லாமிய எதிர்ப்பு, முஸ்லிம் எதிர்ப்பு மற்றும் அரபு எதிர்ப்பு ஆகியவற்றை அடிப்படையாகவும், இதன் காரணமாகவே அரபுக்களை எப்பொழுதுமே பலவீனமானவர்களாகவே வைத்திருக்கச் செய்வதற்கான சட்ட வரையறையை நிறைவேற்றக் காரணமாக அமைந்ததுடன், அமெரிக்க அரசியலிலும் இதே கருத்தை மையமாக அமைக்க முடிந்தது. உலக வரைபடத்தை பல்வேறு ஆதிக்கப் பகுதிகளாகப் பிரித்து, அவற்றினை ஆதிக்கம் செலுத்தும் அதிகார தலைமைப்பீடமாக அமெரிக்காவை அமைத்துக் கொள்வதே அவரது கொள்கையாக இருந்தது. அதன்படி மத்திய கிழக்கில் மொரோக்கோ முதல் ஈரான் வரையுள்ள ஆதிக்கப்பகுதிகளை கண்காணித்துக் கொள்ளும் பொறுப்பு இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டுள்ளது. தெற்காசிய நாடுகளை கண்காணித்துக் கொள்ளும் பொறுப்பிற்கு இந்தியாவும், தூர கிழக்கினை கண்காணிக்கும் பொறுப்பிற்கு ஜப்பானும் தேர்வு செய்யப்பட்டது. தென்னாப்பிரிக்கா (முன்பு வெள்ளைஇனவேற்றுமை கொண்ட அரசாகவும், இஸ்ரேலின் கூட்டு நாடாகவும் திகழ்ந்தது) ஸஹாரா சார்புப் பகுதிகளைக் கண்காணிக்கும் பொறுப்பிற்கும் தேர்வு செய்யப்பட்டது. மேற்கண்ட கொள்கையை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் 2000 ம் ஆண்டில் முழுமையான பின்பற்றத் தொடங்கின. இதில் டுல்லஸ் என்ற திட்டத்தின் அடிப்படையில் பாகிஸ்தானை உடைத்து அதனை இரண்டு நாடுகளாக உருவாக்கவும் கிஸ்ஸிங்கர் திட்டமிட்டார். அவ்வாறு இரண்டாக உடைக்கப்பட்ட பாகிஸ்தானை மேலும் நான்காக உடைப்பதற்கான திட்டத்தையும் எதிர்வரக் கூடிய அமெரிக்க அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டியதற்கான திட்டத்தையும் கிஸ்ஸிங்கர் திட்டமிட்டிருந்தார். எனவே, முஸ்லிம்கள் அதிகாரப் புள்ளியை நோக்கி நகர்ந்து, இத்தகைய முஸ்லிம்களுக்கு எதிரான திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இன்றைய உலகமயமாக்கல் கொள்கையும் கூட கிஸ்ஸிங்கரின் திட்;டத்தின்படி அமைந்த, அதன் தொடர்ச்சியான நடவடிக்கைகளாகும். எனவே, முஸ்லிம்கள் அரசியலில் ஆதிக்கம் செலுத்துவதனூடாக இத்தகைய கொடுமையான திட்டங்களைத் தடுத்து நிறுத்த முடியும். அதனை மாற்றியமைக்கவும் முடியும். இன்ஷா அல்லாஹ்.

எனவே, என்னருமைச் சகோதரர்களே..! ஆன்மீகப் பகுதியை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இன்றைய உலக நடைமுறைகளில் இருந்தும், இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் பின்னப்பட்டுக் கொண்டிருக்கின்ற சதிவலைகளைப் பற்றிய ஞானமே இல்லாமல், அதனைப் பற்றிய எச்சரிக்கையே இல்லாமல் வாழ்வது, ஒருவகையில் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கு எதிரான சதிகளுக்கு உதவக் கூடியதாகவே அமையும். எனவே, இன்றைக்கு முஸ்லிம்களுக்கு இடையே பணியாற்றி வருகின்ற பல்வேறு அமைப்புகள், இயக்கங்கள் மற்றும் கட்சிகள் தங்களது கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேற்கின் சதிகளுக்கு எதிராக எவ்வாறு களமிறங்குவது என்றும், அவர்களின் சதிகளைத் தடுத்து நிறுத்துவதற்கு எவ்வாறு ஒன்றிணைந்து செயல்படுவது என்பது குறித்தும் கலந்தாலோசனையில் ஈடுபட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும். இன்றைக்கு நம்மிடையே உள்ள பல இயக்கங்கள் மேற்கத்திய காலனித்துவ நாட்களுக்கு முன்பாக உருவாக்கப்பட்டவை. அந்த கால கட்டத்தில் முஸ்லிம்கள் இன்றிருக்கும் பிரச்னைகளைப் போன்றதொரு பிரச்னைகளை எதிர்நோக்கவில்லை. ஷரீஅத் என்ற அடிப்படையில் இன்றிருக்கும் இந்தப் பிரச்னையை அணுகுவதைக் காட்டிலும், கருத்தொற்றுமையின் அடிப்படையில் (இஜ்மா) இந்தப் பிரச்னைக்கான தீர்வைக் காண வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம். அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நீதியைப் பெற்றுத் தரப் பாடுபடுவோம். அந்த நீதியை குர்ஆன் மற்றும் சுன்னாவின் வழிகாட்டுதலின்படி அமைத்துக் கொள்வோம். மீண்டும் இந்த உலகத்தை இஸ்லாத்தின் வழிகாட்டலின்படி நடத்திச் செல்வோம்.

ஏனெனில், இஸ்லாமியச் சட்டங்களின் மூலம் மட்டுமே பாரபட்சமில்லாத, அடக்குமுறை, ஒடுக்குமுறை இல்லாத சுதந்திரமான ஆட்சியை வழங்க முடியும். அத்தகைய தகுதி, இஸ்லாத்திற்கு மட்டுமே உரித்தானது. அவ்வாறு வழிகாட்டியுமிருக்கின்றது. வரலாறு அதனைத் தன்னில் பதிவு செய்தும் வைத்திருக்கின்றது.

(குறிப்பு : உலகமயமாக்கள் பற்றி விரிவாக அறிந்து கொள்ள Dr. S.M.KURESHI அவர்கள் எழுதிய "WESTERN FUNDAMENTALISM IN ACTION" என்ற புத்தகத்தைப் பார்வையிடவும்).

இந்தக் கட்டுரை எம். அமீர் அலி அவர்கள் எழுதிய Dream of Anti-Islam Forces என்ற கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டதாகும்.

www.tamilislam.com

5 மறுமொழிகள்:

said...

முஸ்லிம் சமுதாயம் விழிப்புணர்வு பெறவேண்டிய அவசியம் குறித்து எழுதப்பட்ட மிகவும் அருமையான கட்டுரை. இவ்வளவு அற்புதமான ஆக்கத்தை இது வரை இணையத்தில் கண்டதே இல்லை. அமீர் அலி அவர்களின் கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது என்று மட்டும் போட்டிருக்கிறீர்கள். கட்டுரையாளரை வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும். இவ்வளவு அற்புதமான கட்டுரையைப் பதித்து விட்டு எழுதியவரை அறிமுகம் செய்யாதது ஏமாற்றத்தைத் தருகிறது

said...

//முஸ்லிம் சமுதாயம் விழிப்புணர்வு பெறவேண்டிய அவசியம்//

said...

அருமையான கட்டுரை.

said...

”மீண்டும் இந்த உலகத்தை இஸ்லாத்தின் வழிகாட்டலின்படி நடத்திச் செல்வோம்”

இதுதான் பிரச்சினையின் வேர்.
இன்றைய உலகில் ஒரு மதத்தினை
சேர்ந்தவர்கள் தங்கள் மத அடிப்படையில் உலகை வழி நடத்த
விரும்புவது அவர்களுக்கு எதிராகவே
முடியும்.எனவே இஸ்லாமிய
மக்களின் எதிரிகள் இஸ்லாத்தின்
வழிகாட்டலில் உலகை நடத்தி
செல்ல விரும்புவர்கள்.இந்த
முட்டாள்தனமான கனவுகள்
ஜிகாத் என்ற போர்வையில்
படுகொலைகளை செய்ய
தூண்டுகின்றன.கத்தோலிக்க கிறித்துவம் பிற சமயங்களை அங்கீகரித்து uரையாடுகிறது.பைபிளின் அடிப்படையில் கிறித்துவர்கள்
உலகை வழி நடத்த வேண்டும்
என்று போப் கூறவில்லை.
ஒட்டமான் பேரரசு போன்ற
ஒன்றை இன்று நிறுவ முடியாது,
ஒற்றை மதம் உலகை ஆள
முடியாது. இதைப் புரிந்து
கொள்ளாவிட்டால் முட்டி,
மோதி, போராடி வீழ்ச்சியுற
வேண்டியிருக்கும்.

said...

இக்கட்டுரையை எமது 'தமிழ் இஸ்லாம் அரங்கத்தில் நன்றியுடன் இணைத்திருக்கிறேன்.
www.masdooka.wordpress.com
அன்புடன் மஸ்தூக்கா

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template