Saturday, July 05, 2008

பெற்றோர்களின் கவனத்திற்கு! - எம்.என்.பி. பொதுப்பிரசுரம்

பெற்றோர்களின் கவனத்திற்கு! - எம்.என்.பி. பொதுப்பிரசுரம்
தகவல்: எஸ்.கே.எஸ் (தாருத்திப்யான் நெட்வொர்க்)



பள்ளி, கல்லூரிகளில் பயிலும் முஸ்லிம் மாணவியரின் பெற்றோர் கவனத்திற்கென மனித நீதிப்பாசறை (எம்.என்.பி.) பொது பிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. உள்ளடக்கம் பின்வருமாறு:-

அன்பான பெற்றோர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில், பயிலும் நமது இஸ்லாமிய சகோதரிகளிடம் கனிவாகப்பேசி, காதல் வயப்படுத்தி காபிர்களாக ஆக்க வேண்டும். அவர்களின் வாழ்வை நாசமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கயவர் கூட்டங்கள் நீண்ட சதியின் அடிப்படையில் செயல்பட்டு வருவது தாங்கள் அறிந்த ஒன்றே. தற்பொழுது இந்த சதிவேலை பெருகி வருகின்றது என்பதனை ஒரு எச்சரிக்கையாக உங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

முஸ்லிம் சகோதரர்களே! நம் சகோதரிகளை நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், கயவர் கூட்டத்தின் சதியை முறியடிப்பதும், நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம் காலம் தாழ்தாமல் உடனே செய்ய வேண்டும்.

நமது சகோதரிகளைப் பாதுகாக்க சில வழிகள்:-

திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்:

இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும் (அல்குர்ஆன்: 24:37)


நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியருடம் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அத்தகய)வன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள். (அல்குர்ஆன் 33:32)


முன்னர் அஞ்ஞான் கால்தில் பெண்கள் திரிந்துக் கொண்டிருப்பதைப் போல் நீங்கள் திரியாதீர்கள் (அல்குர்ஆன் 33:33)


அந்நிய ஆண பழகுவதும் ஹராம் (இறைவனால் தடுக்கப்பட்டுள்ளது) என்பதனை கண்டிப்புடன் கூறி அனுப்புங்கள்.

வகுப்பறைகளில் சக மாணவர்களோடு பேசக்கூடாது என்பதை கண்டிப்புடன் கூறுங்கள்.

அந்நிய ஆண்களிடம் கண்டிப்புடன் இருக்கச் சொல்லுங்கள்.

வலிய வந்து பேசி (வீண்;களோடு வீணாக பேசுவதும், அவர்களோடு பாக வந்து பேசி) தெந்தரவு செய்யும் மாணவர்ள் பற்றி வகுப்பாசிரியரிடம் புகார் கூற சொல்லுங்கள். அதனையும் மீறி தொந்தரவு செய்யும் மாணவர்கள் இருந்தால் காவல்துறையிடம் புகார் கூறி தண்டனை பெற்று தாருங்கள்.

ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் தான் இந்த சதி வேலை அதிகமாக நடக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

பஸ் நிலையங்களில் அதிக நேரம் நிற்கக் கூடாது என்பதனை வலியுறுத்துங்கள்.

தனியாக செல்லும் மாணவிகளை கல்லூரிகளுக்கு முடிந்தவரை நாமே நமது சகோதரிகளை அழைத்துச் சென்று கல்லூரிகளில் விடுவது, திரும்ப அழைத்து வருவது மிகவும் நல்லது.

கயவர் கூட்டத்தின் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கு அதே பகுதியைச் சேர்ந்த சகோதரர்களை உதவிக்காக அழைத்துக் கொள்வது.

முதன்மையாக ஆண்ஃபெண் இருவருடைய உள்ளத்திலும், செயலிலும் - இறையச்சம்,

பர்தா முறையை கட்டாயம் உபயோகப்படுத்துதல்.

தொலைபேசி, மொபைல், பள்ளி, கல்லூரிகளில் வருகைப்பதிவு சரியாக உள்ளதா என்பதை கண்கானித்தல்.


இவண்.
ஜம்இய்யத்துன்னிஸா
(முஸ்லிம் பெண்கள் அமைப்பு) காயல்பட்டினம்,
தூத்துக்குடி மாவட்டம்.

1 மறுமொழிகள்:

said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்புள்ள சகோதரர் அவர்களுக்கு ஃபயாஸ் எழுதுவது....

நாம் இஸ்லாமிய சகோதரர்களை பற்றி எழுதாமல், இஸ்லாத்திற்கு எதிராக உள்ள காவிகளின் தோல்களையும், யூதர்களின் முகத்திரைகளையும் கிழிக்கலாம்.

இஸ்லாத்தை அவதூறாக கூறும் கூட்டம் நம்மிடையே வலம் வறுகிறது. அவர்களுக்கு தக்க பதில் அடி கொடுப்போம். (எ.க.)www.redislam.blogspot.com

இப்படிக்கு..
அன்பு சகோதரன்..
s.fayas ahamed
www.eastadirai.blogspot.com
www.adirai-iic.blogspot.com

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template