Saturday, August 02, 2008

குளச்சலில் 70நாட்கள் தஹ்வாப் பிரச்சாரம்

அன்பான சகோதர, சகோதரிகளுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.

01/08/2008 வெள்ளிக்கிழமை குளச்சல் முனீஃப் பள்ளியில் நடந்த ஜும்ஆப் பேருரையின் தொகுப்பை செவியுற இங்கே சொடுக்கவும்.

இன்ஷா அல்லாஹ் வரும் 17/10/2008 முதல் 26/10/2008 வரை (70 நாட்கள்) நன்மையை ஏவித் தீமையை விலக்கும் தொடர் தஹ்வாப் பிரச்சாரம் நடைபெற உள்ளது. இதில் தீவிரவாதம், வரதட்சணை மற்றும் சமூகக் கொடுமைகளுக்கெதிராக பொதுக் கூட்டங்கள், தெருப் பிரச்சாரங்கள், பிரசுரப் பிரச்சாரங்கள் மற்றும் வீடுவீடாகச் சென்று நேரடித் தஹ்வாப் பிரச்சாரங்களும் நடைபெற உள்ளது. வெற்றிபெறத் துஆச் செய்யுங்கள்.

அத்துடன் இந்தப் பிரச்சாரங்கள் முழுமையுடன் வெற்றிபெற உங்களால் இயன்ற நிதியுதவியும் செய்து உதவும்படி அன்பாய் கேட்டுக்கொள்கிறோம்.

பிரச்சாரங்களின் முழுவிபரம் அறிய இங்கே சொடுக்கவும்.

உங்களது நிதியுதவியை அனுப்பிவைக்க தொடர்பு கொள்ளவேண்டியது. சகோதரர் மாஹீன் - +91 93452 35598
( மஸ்ஜிதுல் முனீஃபின் தலைவர் - குளச்சல் )

காசோலைகள் அனுப்புவோர் கீழேக் குறிப்பிட்டுள்ள வங்கிக் கணக்கிற்கு அனுப்பிவைக்கலாம் இன்ஷா அல்லாஹ்.

Account Details to send your Donations:
வங்கி: Tamilnad Mercantile Bank Ltd., Colachel Branch, Joint Ac No#000174# Mr.S.Maheen Aboobakker or M.Mujeebu Rahman.

அல்லாஹ் தஆலா இந்த தஹ்வாப் பணிக்கு உதவும் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் ஈருலகிலும் அதற்குரிய நல்லருளை வாரி வழங்குவானாக! ஆமீன்."

மேலதிக விபரத்திற்கு: sathick@gmail.com -ல் தொடர்பு கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்.

1 மறுமொழிகள்:

Anonymous said...

திரு முகவைத்தமிழன்

ஆஸ்திரேலிய பெண்ணிடம் வரதட்சணைக் கொடுமை என்ற பெயரில் வெளியான வலைபூவுக்கு நீங்க அளித்த பதிலை படித்தேன்

நாடு முழுதும் பொய் டவுரி வழக்குகள் மலிந்து வருகின்றன. இது ஒரு கேன்ஸர் போல இந்திய குடும்பகளை அழித்து வருகிறது

சாதாரண கணவன் மனைவி பிணக்கை பெரிசு படுத்தி, அதை டவுரி என்று சொல்லி (டவுரி என்று சொல்லிவிட்டால் பெண் மீது பச்சாத்தாவமும் , போலீஸ் ஆதரவும் கிடைக்குது என்று) டவுரி என்று சொல்லி, பொய் கேஸ் போடும் பழக்கமும் அதை வைத்து பையனின் தாய் தந்தையரை அரெஸ்டு செய்வது விஷம் போல அதிகரித்து வருகிறது

இதை எதிர்த்து சில ஆண்டுகளாய் saveindian family என்ற எங்கள் அமைப்பு போராடி வருகிறது

இந்த வழக்கு மட்டுமல்ல இது போன்ற ஆயிரக்கணக்கான ஆண்களின் கண்ணீர் கதைகளை http://498a.blogspot.com/ சுட்டியிலும், என்னுடைய வலைப்பூ http://manithan.blogspot.com/
விலும் காணலாம்

இந்த அனியாயம் வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களை பெரிதும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது... (மனைவியை பிரிந்து வரும் போது ஏற்படும் சிக்கலக்ளை டவுரி என்று புனைந்து புகார் கொடுப்பதால்...)

இதை எதிர்த்து போரிடுவதாலாது வேரு வழியில்லை

அன்புடன்
விநாயக்

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template