Wednesday, October 15, 2008

பாத்திமாவை கடத்திய டூப்லிகேட் போலிஸ் மன்சூர்ஷா

பென்களே உஷார்...போலிஸ்...விசாரிக்கனும் என்று அழைத்தால் சென்று விடாதீர்கள்....

சென்னை, அக்.15-

சென்னை திருவொற்றி ïரை சேர்ந்தவர் பாத்திமா (வயது 20). இவர் தேனாம் பேட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்து வீடு திரும்பிய பாத்திமா திடீரென மாயமா னார். இது குறித்து அவரது தந்தை பூக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் சி.ஐ.டி. போலீஸ் என்று கூறி ஏமாற்றி எனது பெண்ணை வாலிபர் ஒருவர் கடத்தி உள்ளார். அவளை மீட்டு தாருங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனால் பரபரப்பான போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.

பூக்கடை துணை கமிஷனர் கருப்பசாமி, உதவி கமிஷனர் பாலச்சந்திரன் ஆகியோரது மேற்பார்வையில் இன்ஸ் பெக்டர் கோவிந்தராஜ், மாணவி பாத்திமாவை மீட்பதற்காக அதிரடி நட வடிக்கையில் இறங்கினார்.

மாணவியின் செல்போன் நம்பரை வைத்து துப்பு துலக்கும் முயற்சியில் போலீ சார் ஈடுபட்டனர். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. கோவளத்தில் பாத்திமா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் கோவளத்தில் உள்ள லாட்ஜ× களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு லாட்ஜில் பாத்திமா அறையில் அடைத்து சிறை வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பாத்திமாவை மீட்ட போலீசார் அவருடன் இருந்த வாலிபரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

பின்னர் இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்த போலீசார், பாத்தி மாவை அவரது பெற்றோ ரிடம் ஒப்படைத்தனர். அவரை கடத்தி சென்ற வாலிபரிடம் செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவரது பெயர் மன்சூர்ஷா அத்பல் (வயது 26) என்பது தெரிய வந்தது. இவரது தந்தை பெயர் நூருல்லா பாஷா. வாணியம்பாடியை அடுத்த முகிலம்பூரை சேர்ந்தவர். ராயப்பேட்டையில் வசித்து வரும் தனது அக்காள் வீட்டுக்கு மன்சூர் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.

இந்த நேரத்தில் தான் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே வைத்து பாத்திமாவை பார்த்துள்ளார். முதல் பார்வையிலேயே பாத்தி மாவை ஒருதலையாக காதலிக்க தொடங்கிய மன்சூர் திட்டம் போட்டே கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக மன்சூர் போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்கு மூலம் வருமாறு:-

பிளஸ்-2 வரை படித்துள்ள எனக்கு லேமினேசன் வேலைகள் நன்றாக தெரி யும். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு ரெயில்வே சி.ஐ.டி. போலீஸ் என்று ஒரு அடையாள அட்டையையும், அரசு வக்கீல் என்று இன்னொரு அடையாள அட்டையையும் தயாரித்தேன்.

வாணியம்பாடியில் இருந்து சென்னைக்கு ரெயிலில் வந்து செல்ல இது எனக்கு பெரிதும் உதவியது.

இந்நிலையில் தான் பாத்திமாவை சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே வைத்து ஒரு நாள் பார்த்தேன். அப்போது வாலிபர் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். பாத்திமாவின் தோழியும் அருகில் நின்றுகொண்டி ருந்தார்.

பாத்திமாவுடன் எனக்கு பழக்கம் இல்லாவிட்டாலும், அவர் வேறு ஒரு வாலிபருடன் பேசிக்கொண்டிருப்பதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

இதையடுத்து என்னிடம் இருந்த சி.ஐ.டி. போலீஸ் அடையாள அட்டையை காட்டி பாத்திமா வையும், அவருடன் பேசிக் கொண்டிருந்த வாலிபரை யும் மிரட்டினேன். என்னடா ஈவ்-டீசிங்கா செய்கிறாய் என்று கூறி அந்த வாலிபரை விரட்டி விட்டேன்.

பின்னர் பாத்திமாவிடம் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியில் வந்து காதல் செய்கிறாயா. உன்னை விசாரிக்க வேண்டியுள்ளது. என்னுடன் வா என்று கூறினேன். இதனால் பயந்து போன பாத்திமாவும், அவர் தோழியும் என்னுடன் ஆட்டோவில் ஏறினர்.

பின்னர் ராயப்பேட்டை வரை இருவரையும் அழைத்து சென்ற நான் பாரிமுனை பஸ் நிலையத்துக்கு ஆட்டோவை திருப்ப சொன்னேன். பாத்திமாவின் தோழியிடம் நீ இங்கே இறங்கிக் கொள். போலீஸ் நிலையம்வரை அழைத்துச் சென்று பாத்திமாவிடம் கையெழுத்து வாங்க வேண்டியுள்ளது என்று கூறி ஏமாற்றினேன். அவர் சரி என்று பூக்கடையில் இறங்கிக் கொண்டார்.

இதன் பிறகு பாத்திமாவை கோவளத்துக்கு பஸ்சில் அழைத்துச்சென்றேன். பஸ் சென்னையை தாண்டியதும் பாத்திமா அச்சத்துடன் எங்கே செல்கிறீர்கள் என்று கேட்டு லேசாக அழத் தொடங்கினாள்.

நீ காதலனுடன் ஊர் சுற்றுவதை உனது பெற் றோர், உறவினர் களிடம் சொல்லிவிடு வேன். பேசாமல் இரு என்று மிரட்டி கோவளத்தில் உள்ள லாட்ஜிக்கு அழைத்து சென்று அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்தேன்.

எப்படியோ, பாத்திமா மீது எனக்கு ஆசை ஏற் பட்டு விட்டது. இதனால் நீ என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் உன்மீது வழக்கு போட்டு உள்ளே தள்ளிவிடுவேன் என்று மிரட்டி திருமணத்துக்கு கட்டாயப் படுத்தினேன். மற்றபடி நான் பாத்திமாவை ஒன்றும் செய்ய வில்லை. என்னை நம்புங்கள்.

இவ்வாறு மன்சூர் வாக்கு மூலத்தில் கூறியிருப் பதாக போலீசார் தெரிவித்தனர்.

கைதான மன்சூர் மீது 419 ஐ.பி.சி. (ஆள்மாறாட்டம் செய்தல்) 366 ஐ.பி.சி. (கடத்தி கட்டாய திருமணத்திற்கு வற்புறுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரெயில்வே போலி அடையாள அட்டைகளும் ஐகோர்ட்டு வக்கீல் என்ற போலி அடையாள அட்டையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த போலி அடையாள அட்டைகளை பயன்படுத்தி மன்சூர், இது போன்ற பலரை மோசடி செய்து ஏமாற்றியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக் கிறார்கள். இது குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

நன்றி : மாலைமலர்

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template