Thursday, October 16, 2008

தீண்டாமைக் கொடுமை

முஸ்லிம்கள் பெரும்பாண்மையாக வாழும் திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா திருபாம்புரம் ஊராட்சியைச் சேர்ந்த கிராமம் கம்பூர் ஆகும். கம்பூர் கிராமத்தைச் சுற்றி வடக்குவேரி, திருபாம்புரம், வள்ளார் கோவில்பத்து ஆகிய கிராமங்களைச் சுற்றி முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் வாழ்ந்து வருகின் றனர். கம்பூர் கிராமம் வடக்குத் தெரு, பள்ளிவாசல் தெரு, மெயின் ரோடு, புதுமனைத் தெரு ஆகிய நான்கு தெருக்களில் மட்டும் சுமார் 150 முஸ்லிம் குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கம்பூர் பகுதியை இணைக்க பேரளம் - அன்னியூர் சாலையில் ரூ.69 லட்சத்தில் தார்சாலை போடப்பட்டது. அந்தந்த ஊர் பகுதியில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்தது. ஆனால் திரும்பாம்புரத்தைச் சேர்ந்த செல்வராஜ், ரவி, ராமு, பாண்டியன், கலியபெருமாள் ஆகியோர் முஸ்லிம் விரோதப் போக்கை கடைப்பிடித்துள்ளனர்.
கம்பூர் முஸ்லிம்கள் வாழும் பகுதி யாக உள்ளது. முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்கள். அவர்கள் நம் கிராமத்தை ஆக்கிரமித் தால் நமது கிராமமும் முஸ்லிம் கிராமமாக மாறிவிடும் என்ற விஷமத்தனமான பிரச்சாரத்தை செல்வராஜ் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு கிராமத்தைச் சுற்றிலும் பரப்பி, அதன்மூலம் குளிர்காய திட்டமிட்டனர்.
அதன் ஒரு பகுதியாக கம்பூர் என்று பெயரிடப்பட்ட மஞ்சள் நிற அறிவிப்புப் பலகையை செல்வராஜ் தலைமையிலான கும்பல் கடப்பாரை, உருட்டுக் கட்டை போன்ற ஆயுதங்களைக் கொண்டு நாசப்படுத்தியுள்ளது. பிறகு ``இதனை எந்த துலுக்கன் கேட்டாலும் வெட்டு’’ என்று கூறி அந்த அறிவிப்புப் பலகையை அங்கிருந்து அகற்றி ஊருக்குள் எடுத்துச் சென்றது.
பொறுமை காத்த முஸ்லிம் இளைஞர் களும் ஜமாஅத்தார்களும், கம்பூர் பெயர்ப் பலகை வைப்பதற்கு ஊராட்சி மன்றத் தலைவரிடம் அனுமதி பெற்று மீண்டும் பெயர்ப் பலகையை வைத்தனர். ஆனால் இரவோடு இரவாக அதுவும் பிடுங்கப் பட்டுள்ளது.
இதையடுத்து ஜமாஅத் தலைவர் சகாபுதீன், சம்பந்தப்பட்டவர்களிடம் ``ஏன் இப்படி செய்கிறீர்கள்?’’ என கேட்க, “வாயை மூடிக்கொண்டு போய்விடு. இல்லையென்றால் உன்னையும் உங்க ளது ஊரையும் தொலைத்து விடுவோம்’’ என்று மிரட்டியுள்ளனர். இச்செய்தியை அறிந்த ஜமாஅத்தார்களும், இளைஞர் கள் வெகுண்டெழுந்தனர். ஆனால் ஜமாஅத் பெரியவர்களின் ஆலோச னைக்கு இணங்க, அருகில் உள்ள சுரைக்காயூர், மாளிகை நத்தம், துலார், கருப்பூர், திருபாம்பூர் ஆகிய கிராமங் களைக் கூட்டி பேச்சுவார்த்தை நடை பெற்றது.
திருபாம்புரத்தைச் சேர்ந்த நாட்டாண்மை என்று அழைக்கப்படும் கிரா மத் தலைவர் கலியபெருமாள், கம்பூர் என்ற ஊரே இல்லாத நிலையில் பேச்சு வார்த்தை எதற்கு? என்று கூறி எழுந்து சென்றுவிட்டார். ஐந்து கிராம பஞ்சாயத் திற்கும் அவர் கட்டுப்படாததால் ஜமாஅத் சார்பில் பேரளம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வழக்கம்போல் காவல்துறை புகாரை கிடப்பில் போட்டது. இதையடுத்து நன்னிலம் டி.எஸ்.பி. நாராயணசாமியிடம் புகார் அளித்துள்ள னர். இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது திருபாம்புரம் பகுதி மக்களுக்கு ஆதர வாகப் பேசி அனுப்பி வைத்துள்ளார்.
பொது விநியோகக் கடை, முஸ்லிம் களுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள் திருபாம்புரம் பகுதியில் தான் அமைந்துள்ளது. ஆனால் திருபாம்புரத் தைச் சேர்ந்த செல்வராஜ் தலைமையில் கடந்த 5.9.08 அன்று முதல் முஸ்லிம் களுக்கு டீ கொடுக்கக்கூடாது, பொது விநியோக கடையில் பொருட்களை வழங்கக்கூடாது, விவசாய வேலை செய்ய கூலி ஆட்கள் செல்லக்கூடாது என்று ஊர் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
இதனால், முஸ்லிம்கள் திருப்பாம்புரத் தில் டீ குடிக்கச் சென்றால் டீ தர மறுத் துள்ளனர். டிராக்டர் உழுவதற்கு எடுத் துச் சென்றால் இரும்பு பைப்கள், உருட் டுக் கட்டைகளை சாலையில் போட்டு தடுத்துள்ளனர். வயல் வேலைகளுக்கு கூலி ஆட்கள் செல்லக் கூடாது என்று தடை விதித்துள்ளனர். மேலும் கம்பூர் பகுதி முஸ்லிம்களிடம் பேசினால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அடுக்கடுக்கான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இச்செயல் இந்திய இறையாண்மை சட்டத்தின்படி தங்களது வாழ்வாதார சூழல் மற்றும் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக கம்பூர் முஸ்லிம்கள் மனம் வெதும்புகின்றனர்.
இந்நிலையில் காவல்துறையிடம் திருபாம்புரத்தைச் சேர்ந்த செல்வராஜ், ராமு, ரவி, கலியபெருமாள், பாண்டியன் ஆகியோர் மீது கம்பூர் முஸ்லிம்கள் புகார் அளித்தனர். மேலும் தாசில்தாரிடமும் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து தாசில்தார் தலைமையில் இருதரப் பினரும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அமைதிப் பேச்சுவார்த்தை உடன்பாட்டிற்குப் பின்பும் அதே நிலை நீடித்தது. மாநிலத் துணைச் செயலாளர் பேரா.ஹாஜாகனி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகரை தொலைப்பேசி யில் தொடர்புகொண்டு கம்பூர் தீர்வு காண வலியுத்தினர். திருவாரூர் ஆர்.டி.ஓ. தலைமையில் கடந்த 22.09.08 மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது சமூக பகிஷ்கரிப்பு நடவடிக் கையைக் கைவிடுவது என்றும், விவசாய கூலி வேலைக்கு செல்வதை தடுத் தாலோ அல்லது கடைகளில் பொருட்கள் வழங் கப்படவில்லை என்று தெரிந் தாலோ சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காணாமல் போன கம்பூர் ஊர் பெயர்ப் பலகை சம்பந்தமாக காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக் கப்படும், இருதரப்பினரும் என்றும் அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு செய்தனர்.
ஆனால் இந்த நிலையிலும், எழுதப் படாத தீர்ப்பாக திருபாம்புரம் பகுதி மக்கள் கம்பூர் முஸ்லிம்கள் மீது தீண்டா மையைக் கடைப்பிடித்து வருகின்றனர்.கம்பூரை உள்ளடக்கிய குத்தாலம் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அன்பழகனிடம் முஸ்லிம் ஜமாஅத் பெரியவர்கள் முறையிட சென்றபோது, என்னிடம் ஏன் வருகிறீர்கள், தமுமுக காரனிடம் போங்கள் என்று தெரிந்து எடுத்தெரிந்து பேசியுள்ளார். ஏறிய ஏணியை எட்டி உதைக்கிறார் இவர்.தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து தங்களின் ஜீவாதார உரிமை களை வழங்க நடவடிக்கை எடுக்கும் என மௌனமாக காத்துக் கொண்டிருக் கின்றனர் கம்பூர் முஸ்லிம்கள்.

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template