தலைமையிடம் இருக்க வேண்டிய பண்புகள் / இருக்க கூடாத பண்புகள்
நெல்லிக்குப்பம் நர்கீஸ் அண்ணன்
நெல்லிக்குப்பம் நர்கீஸ் அண்ணன்
தலைமைத்துவத்;தை பற்றி கலாநிதி ஹிஷாம் அத்தாலிப் அவர்கள் "வலுக்கட்டாயமற்ற வழிவகைகளை கொண்டு செயலாற்றுவதற்காக ஒரு குழுவை தூண்டி திட்டமிடப்பட்ட திசையில் இட்டு செல்லும் நடவடிக்கையே தலைமைத்துவம்" என்று விவரிக்கிறார். மேலும் இஸ்லாமும் தலைமைத்துவத்திற்கும், கூட்டமைப்புக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பதை பின் வரும் ஹதீஸ்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
"முஸ்லிம்களின் கூட்டமைப்பையும் அவர்களது தலைவரையும் நீங்கள் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள்." (புகாரி, முஸ்லிம்)
"மூவர் ஒரு பிரயாணம் செய்தாலும் அதில் ஒருவரை தலைவராக நியமித்துக் கொள்ளுங்கள்" (புகாரி, முஸ்லிம்)
மேலும் இஸ்லாமிய உம்மத்தின் அடித்தளமே அதன் தலைமைத்துவத்தின் மீதே கட்டியெழுப்பட்டுள்ளது என்பதைத்தான் உமர் (ரலி) இப்படி இயம்பினாhர்;கள் "நிச்சயமாக கூட்டமைப்பு இன்றி இஸ்லாம் இல்லை தலைமைத்துவம் இன்றி கூட்டமைப்பு இல்லை." (ஸ{னன் அத்தாரமி)
தலைமைக்கு வேறெந்த மதமும் கொடுக்காத முக்கியத்துவத்தை கொடுக்கும் அதே வேளை அத்தலைமையிடம் இருக்க வேண்டிய பண்புகளை பற்றி குர்ஆனும் அதன் நடைமுறை விளக்கமான பெருமானார் (ஸல்) வாழ்வும் நமக்கு வழி காட்டுகின்றன.
அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அல் அஹ்ஜாப் -21)
தலைமைக்கு இருக்க வேண்டிய முக்கிய பண்புகள்
1. தக்வா - தலைவருக்கு இருக்க வேண்டிய மிக முக்கிய பண்பாக இஸ்லாம் தக்வாவை தான் கருதுகிறது. "மக்களை கண்காணிக்கும் தலைவரிடம் அவருடைய பொறுப்பில் உள்ள குடிமக்கள் குறித்து கேள்வி கேட்கப்படும்" (புகாரி முஸ்லிம்) எனும் நபி மொழிக்கு ஏற்ப இறைவனிடம் தன் பொறுப்பு குறித்து பதில் சொல்ல வேண்டும் என்ற அச்சம் உள்ளவராகவும் தன் செயல்களுக்குரிய கூலியை மக்களிடமிருந்து எதிர்பார்காமல் குர்ஆனின் (26:109,127,145,164,180) வசனங்கள் குறிப்பிடுவது போன்று இறைவனிடம் மட்டுமே எதிர்பார்க்க கூடிய தலைவர்களையே இஸ்லாம் எதிர்பார்கின்றது.
2. அறிவு - வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் இஸ்லாம் வழி எனும் அளவில் இஸ்லாத்தை பற்றிய முழுமையான ஞானமும், மாறி வரும் காலச்சூழலுக்கேற்ப இஸ்லாம் எதிர்கொள்ளும் நவீன பிரச்சினைகளுக்கு இஸ்லாத்தின் அடிப்படையில் தீர்வு சொல்ல வேண்டியவராய் இருத்தல் அவசியம். மேலும் இஸ்லாம் தவிர்த்த பிற ஜாஹிலிய்ய கொள்கைகளை பற்றியும் விரிவான அறிவு கொண்டவராய் இருத்தலின் அவசியத்தை பற்றி உமர் (ரலி) அவர்கள் குறிப்பிடுகையில் இஸ்லாமிய அறிவை மட்டுமே பெற்றிருந்து ஜாஹிலிய்யாவை அறியா ஒருவன் இஸ்லாத்தையே அழித்து விடுவானோ என அஞ்சுகிறேன் என்று குறிப்பிட்டார்கள்.
3. உறுதி கொண்ட நெஞ்சம் - "அல்லாஹ்விற்கு மிக உவப்பான செயல்கள் யாதெனில் அதனை செய்பவர் தொடர்சியாக செய்வதே" (புகாரி, முஸ்லிம்) எனும் நபிமொழிக்கேற்ப எடுத்துக் கொண்ட காரியம் அல்லாஹ்வுக்கு உவப்பான ஒன்று எனில் அதை எத்துணை எதிர்ப்புகள் வந்தாலும் அதை முடிக்கக் கூடிய திறன் உடையவராக தலைமை இருத்தல் அவசியம். எத்தனை எதிர்ப்புகள் வந்த போதிலும் மனங்குன்றி விடாமல் நெஞ்சுரம் மிக்க தலைமை இஸ்லாமிய பார்வையில் மிக தேவையான ஒன்றாகும்.
4. நிலைமையை கணிக்கும் திறன் - தனது பலம், பலவீனத்தை பற்றி இஸ்லாமிய தலைமை தெரிந்து வைத்திருப்பதுடன் எதிரிகளை எடைபோடும் ஆற்றல் கொண்டவராய் இருக்க வேண்டும். பார்ப்பதற்கு வெளிப்படையாக சாதகமான சூழல் போன்று தெரியாவிட்டாலும் தொலைநோக்கு பார்வையுடன் நீண்ட கால இலட்சியத்தை கொண்டு செயல்பட வேண்டும். ஹீதைபியா உடன்படிக்கையின் போது பெருமானார் (ஸல்) அவர்கள் நடந்து கொண்ட முறை மிகச்சிறந்த உதாரணம்.
5. நீதி செலுத்துதல் - தலைவராக இருக்க கூடியவர்கள் எந்த சொந்தங்கள், இரத்த பந்தங்கள், செல்வாக்கு, அதிகாரத்துக்கும் பணியாமல் சரியான முறையில் நீதி வழங்க கூடியவர்களாக இருக்க வேண்டும். "மக்களில் ஒரு சாரார் மேலுள்ள வெறுப்பு அக்கிரம் செய்யும்படி உங்களை தூண்டாதிருக்கட்டும் நீங்கள் நீதி செலுத்துங்கள் அது தான் தக்வாவுக்கு மிக நெருங்கியது." (5:8)
6. திடவுறுதி, பொறுமை, வீரம் - இம்மூன்று பண்புகளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. இஸ்லாமிய பாதையானது அல்லாஹ்வின் பால் மக்களை அழைக்கக் கூடிய மிகப்பெரும் பனி ஆதலால் பல்வேறு குறுக்கீடுகள் வரும். இடைத்தடங்கல்;களையும், வாய்ப்புகள் நழுவிப் போவதையும் தீரத்துடன் பொறுத்து செயல்படக் கூடியவராகவும், தனக்கு ஏற்படக்கூடிய துன்பங்களை பொறுமையுடன் தாங்கிக் கொள்ளக் கூடியவராக தலைமை இருத்தல் அவசியம்.
7. இஸ்திகாமத் - சத்தியப் பாதையில் இருந்து தன்னை திருப்பி விட எவ்வளவோ உபாயங்களை மேற்கொண்ட போதும் இன்னல்களை கொடுத்த போதும் நிலைகுலையாமல் "அல்லாஹ்வின் மீது ஆணையாக, இம்மனிதர்கள் சூரியனை எனது ஒரு கையிலும் சந்திரனை மறுகையிலும் கொண்டு வந்து வைத்தாலும் கூட நான் இதனை கை விடமாட்டேன், அல்லாஹ் எனக்கு வெற்றியைத் தருவான் அல்லது நான் இதன் வழியில் செத்து மடிவேண்" என்று பெருமானார் (ஸல்) அவர்கள் நிலைகுலையாமல் சூளுரைத்தது போன்ற தன்மை உடையவராக தலைமை இருத்தல் அவசியம்.
8. பொது அறிவு திறன் - இஸ்லாமிய தலைமையானது எப்படி பெருமானார் (ஸல்) அவர்கள் தன் தோழர்களின் பலம், பலவீனத்தை புரிந்து அவரவர் இயல்புக்கேற்ற வகையில் வேலையைக் கொடுத்தார்களோ அது போல் தனக்கு கீழ் உள்ள தொண்டர்களை புரிந்து கொண்டு, வேலையை பகிர்ந்து கொடுக்க வேண்டும். தமது எண்ணங்களையம், திட்;டங்களையும், கொள்கைகளையும் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு "சொல்வதை தெளிவாக நேரடியாக சொல்லுங்கள்" எனும் இறைவாக்கியத்திற்கேற்ப தெளிவாக சொல்லக் கூடியவராய் இருத்தல் வேண்டும்.
"முஹம்மத் (ஸல்) அவர்களின் பேச்சு தெளிவான வார்த்தைகளாகவே காணப்பட்டது. அதனை கேட்ட அனைவரும் எளிதில் விளங்கிக் கொண்டனர்" (அபூதாவூத்)
"நான் சுருக்கமாக, ஆனால் அதிக விளக்கமுள்ள வார்த்தைகளை பேசச்கூடியவனாக அனுப்பப்பட்டுள்ளேன்." (புகாரி)
9. சேவை மனப்பான்மை - "சமூகத்தின் தலைவர் மக்களின் சேவகராவார்" (அத் தாரமி) எனும் நபி மொழிக்கேற்ப சேவை மனப்பான்மை கொண்டவராய் தலைவர் திகழ்தல் வேண்டும்.
10. ஷீரா - தன்னிச்சையாக முடிவெடுக்காமல் இறையச்சமும் ஞானமும் நிரம்பிய மார்க்க அறிஞர்களை கலந்து ஆலோசித்து முடிவெடுக்க கூடியவராக தலைவர் இருத்தல் வேண்டும். "இறை நம்பிக்கையாளர்கள் ஒவ்வோர் காரியத்தையும் தங்களுக்குள் கலந்தாலோசிப்பார்கள்" (ஷீரா 38) சகல காரியங்களிலும் அவர்களிடம் கலந்தாலோசிப்பீராக (ஆல இம்ரான்- 159)
தலைமையிடம் இருக்க கூடாத பண்புகள்
1. பதவிக்கு ஆசைப்படல் - "பதவிக்காக ஆசைப்படாதீர்கள் நீங்கள் அதைக் கேட்டு பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப் படுவீர்கள். நீங்கள் கேட்காமலேயே அப்பதவி உங்களுக்கு கிடைத்தால் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி கிடைக்கும்." (புகாரி) என்ற நபி மொழிப்படி பதவிக்கு ஆசைப்படுபவரை தலைவராக்க மாட்டோம் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியது போன்று பதவிக்கு அலைபவராக தலைமை இருக்கக் கூடாது.
2. குடும்ப சொத்தாக கருதுதல் - ரசூல் (ஸல்) அவர்கள் கூறியது போன்று பதவியை ஒரு அமானிதமாக கருதி பொறுப்புடன் தன் கீழுள்ளவர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்ய வேண்டுமே தவிர குடும்ப சொத்தாக பொறுப்பை கருதக் கூடாது. "முஸ்லிம்களின் கூட்டு விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரி அவர்களிடம் மோசடித்தனமாக நடந்து கொள்வானாயின் அவன் மீது அல்லாஹ் சுவனத்தை ஹராமாக்குகிறான்" (புகாரி)
3. தன்னை முன்னிலைப்படுத்துதல், புகழாசை - புகழ் பெறவேண்டும் என்பதற்காக செருக்குடன் பிறரை புறக்கனித்து தன்னை முன்னிலைப்படுத்துபவராக தலைமை இருக்கக் கூடாது "அணுவளவு கர்வம் உள்ளவர் சுவனத்தில் நுழைய மாட்டார்". (முஸ்லிம்)
4. பலவீனமானவர் - அபூதர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் பொறுப்புகளை கேட்ட போது முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் "அபூதர்ரே நிச்சயமாக நீர் பலவீனமானவர் அப்பொறுப்போ மிகப் பளுவான அமானிதமாகும். அதனை உரிய முறையில் நிறைவேற்றாதவருக்கு மறுமையில் அதுவே சாபமாகவும் இழிவாகவும் மாறிவிடும்" (முஸ்லிம்) எனும் நபிமொழிக்கேற்ப அப்பொறுப்புக்கேற்ற உடல் உள தகுதியுள்ளவர்களே அப்பொறுப்பை ஏற்க வேண்டும்.
5. சொல் வேறு, செயல் வேறு "ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாத காரியங்களை ஏன் ஏவுகின்றீர்கள்" (அஸ்ஸப் 2) எனும் இறைவாக்கிற்கேற்ப தலைவர்கள் தேவையற்ற வாக்குறுதிகளை வழங்கக் கூடாது. தங்களால் சாத்தியமானதை மட்டும் சொல்ல வேண்டும்.
6. ஆடம்பர வாழ்க்கை - தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் தம் உறுப்பினர்களுக்கு முன் மாதிரியாக தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டுமே தவிர ஆடம்பர வாழ்க்கையில் திளைக்கக் கூடாது. சாம்ராஜ்யங்களிலிருந்து சிறு அமைப்புகள் வரையிலான வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். "அன்றி அவர்கள் செலவு செய்தால் அளவை கடந்து விட மாட்டார்கள் உலோபித்தனமும் செய்ய மாட்டார்கள் இதற்கு மத்திய தரத்தில் இருப்பார்கள்" (புர்கான் 67)
7. கோழைத்தனம் - பிரச்சினைகள் ஏற்படும் போதும் தம் கீழுள்ளவர்களை தவிக்க விட்டுவிட்டு ஒளிந்து கொள்ளக் கூடியவராக தலைவர் இருக்கக் கூடாது மேலும் (8:60) ல் அல்லாஹ் சொல்கிறபடி தானும் எத்தியாகத்திற்கும் தயாராவதோடு தன் சமூகத்;தையும் தயார்படுத்த கூடியவராய் இருத்தல் வேண்டும்.
8. பொறாமை - பொறாமை தலைவரிடத்தில் இருக்க கூடாத பண்பாகும். ஏனென்றால்; அது தான் பிற தீய குணங்களான கோள் சொல்லுதல், குற்றங்களை துருவி ஆராய்தல், புறம் அனைத்திற்கும் முக்கிய காரணமாய் உள்ளது. அதனால் தான் பெருமானார் (ஸல்) அவர்கள் "உங்களை நீங்கள் பொறாமையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள், ஏனெனில் நெருப்பு விறகை தின்பது போல் பொறாமை நற்செயல்களை அழித்து விடுகிறது" (அபூதாவூத்) என பகர்ந்தார்கள்.
மேற்கூறப்பட்டவை அடிப்படையில் ஒரு தலைமை அமையும் போது நிச்சயம் அது இஸ்லாத்தை மலரச் செய்யும் ஓர் உன்னத தலைமையாய் மிளிரும். எனவே எத்தலைமையும் அடிப்படையாக
1. அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடிபணிதல், முழுவதும் அவனை சார்ந்திருத்தல்.
2. பொறுப்பை செவ்வனே நிறைவேற்ற தேவையான உள, உடல், அறிவு, ஆற்றல்கள், வலிமை.
3. கலந்தாலோசனை மூலம் முடிவெடுத்து செயல்படுதல்.
போன்ற தன்மைகளை அவசியம் பெற்றிருக்க வேண்டும். அத்தலைமை மஹல்லா போன்ற சிறிய பொறுப்பாயிருந்தாலும் ஆட்சி தலைமை போன்ற பெரும் பொறுப்பாயிருந்தாலும் சரியே.
நன்றி : தமிழ் இஸ்லாம்
0 மறுமொழிகள்:
Post a Comment