Tuesday, November 20, 2012

அரச பயங்கரவாதத்திற்கு எதிராக திருப்பூரில் அணி திரள்வீர் - செப்டம்பர் 25


அரசாலும் , அரசு இயந்திரங்களாலும், சியோனிச, ஃபாசிச ஆதரவு ஊடகங்களாலும் இசுலாமியர்களும், மக்கள் போராளிகளும் தீவிராவாதிகளாக சித்தறிக்கப்பட்டு , பொய் வழக்குகள் போடப்பட்டு கைது செய்யப்படும் கொடுமைகள் அரங்கேறி வருகின்றன இத்தருனத்தில் அரசியல் கட்சிகள், மனித உரிமைப் போராளிகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஒரு பொது விவாதத்தையும், கருத்து பரப்புரையும் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில்  தற்சமயம் இருக்கிறார்கள்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் சரத்து 14 உறுதிப்படுத்துகிறது. இந்தியாவில் அரசியல் சட்டப்படி ஆட்சியதிகாரம் நடக்கிறதா என்றால் சனநாயகம் இங்கே கேலிக்குரிய வடிவில் அரங்கேறி வருவதைப் பார்க்கமுடியும். அதிலும் குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கு எதிரான போக்குகளில் அரசியல் சட்டத்தை எந்த அரசும் அரசு அதிகாரிகளும் மதிப்பதில்லை. இவர்கள் திட்டமிட்ட சதியின் அடிப்படையில் இசுலாமியர்களுக்கு எதிரான பொய் வழக்குகளை புனைவதிலும், சட்ட விரோத கைதுகளை மேற்கொள்வதிலும், தீவிரவாதிகளாகவும் , பயங்கரவாதிகளாகவும் சித்தறிப்பதிலேயுமே முனைப்பு காட்டுகிறார்கள்.

முஸ்லிம் அல்லாதவர்கள் தவறு செய்தால் அத்தவறுகளை அவனளவிலும், ஒரு முஸ்லிம் தவறு செய்துவிட்டால் இஸ்லாம் அவ்வாறு பயிற்சிவிக்கிறது போன்ற பிம்பத்தை உண்டாக்க "முஸ்லிம் தீவிரவாதிகள்", "இஸ்லாமிய அடிப்படைவாதிகள்" என்று இஸ்லாமிய சமூகத்தையும், மக்கள் போராளிகளையும் தீவிரவாதிகளாக சித்தறிக்கும் நாடகத்தை ஊடகங்கள் செய்தது போக இன்று அரசே அதன் எந்திரங்களை கொண்டு நடத்தி வருகிறது. இது இவர்களுக்கு கைவந்த கலை.

திரைப்படங்கள் என்று எடுத்துக்கொள்ளுங்கள் முஸ்லிமா.. எல்லா இடத்திலேயும் கலவரங்களைத் தூண்டுபவன், பாகிஸ்தானுக்கு உளவாளி, தீவிரவாதி என்று இரண்டரை மணிநேரத்தில் எப்படியெல்லாம் முஸ்லிம் சமுதாயத்தின் மேல்அவதூறான களங்கத்தைச் சுமத்திச் சென்றுவிடுகிறார்கள். இதையெல்லாம் கண்டிக்க மாற்று வழியைத் தேர்ந்தெடுத்திருக்கின்றோமா?

இன்று நம் நாட்டில் மட்டுமல்ல, உலகளாவிய நாடுகளில் நடக்கும் வன்செயல்கள், அராஜகங்கள், தீவிரவாத செயல்கள், மனித நேயத்திற்கு முரணான செயல்கள் இவை அனைத்தையும் உன்னிப்பாகக் கவனியுங்கள். முஸ்லிம்கள் மட்டும்தான் அச்செயல்களில் ஈடுபடுகிறார்களா? இல்லையே! ஜாதி, மத வேறுபாடின்றி அனைத்து இன, மத மக்களிலும் இப்படியொரு அராஜாக - மிருகவெறி கொண்ட கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. இஸ்லாமிய மார்க்கத்தை அறிந்த, ஒரு உண்மை முஸ்லிம் இப்படிப்பட்ட அராஜக செயல்களில் ஒரு போதும் ஈடுபடமாட்டார். தற்கொலை செய்து கொண்டு தன்னை மீளா நரகில் கொண்டு சேர்க்க ஒரு போதும் முற்படமாட்டார். தீமையை தீமையைக் கொண்டு தடுக்க முடியும் என்று அல்குர்ஆன் சொல்லவில்லை. தீமைகளை நன்மைகளைக் கொண்டே முறியடியுங்கள் என்றே குர்ஆன் போதிக்கிறது.

ஒரு நாட்டின் இறையாண்மை நிலைநாட்டப்பட வேண்டும் என்றால், அந்த நாட்டின் அரசு, அரசு அதிகாரிகள், நீதித்துறை, ஊடகங்கள் இந்த நான்கும் நீதியாகவும் நேர்மையாகவும் நடுநிலையோடும் செயல்பட வேண்டும். இந்த நான்கும் நிலைகுழைந்தால் நாட்டில் கற்பழிப்பு, திருட்டு, கொள்ளை, கொலை, வன்முறை, தீவிரவாதம் என அனைத்து அராஜகங்களும், பஞ்சமா பாவங்களும் தலைதூக்கும் என்பதில் ஐயமில்லை. இன்று இந்த நான்கு தூண்களும் லஞ்சத்திற்கும், ஊழலுக்கும் அடிமையாகிக் கிடக்கின்றன.

இல்லாததைத் திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தால் அதை இருப்பதாக மக்கள் நம்பி விடுவார்கள். இஸ்லாம் ஒரு தீவிரவாத மதம், முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் என திரும்பத் திரும்ப எதிரிகள் செய்தி ஊடகங்கள் வழியாக மக்கள் முன் வைக்கிறார்கள். துரதிஷ்டம், இதை எதிர்த்து தக்கப் பதிலடி கொடுப்பதற்கு சொல்லிக் கொள்கிற மாதிரி பிரபல்யமான மீடியா என்று முஸ்லிம்களிடம் எதுவுமில்லை. யானைப்பசிக்கு சோளப்பொறி மாதிரி அங்கொன்று, இங்கொன்றாக பத்திரிகை மீடியா, அதுவும் முஸ்லிம்களுக்குள்ளேயே தான் செய்தி ஊடுருகிறதே தவிர, மீடியா வழியாக இஸ்லாத்தின் மீது எதிரிகள் விதைக்கும் விஷக் கருத்துக்குத் தக்க பதிலாக, இஸ்லாத்தைப் பற்றிய அவதூறைத் துடைக்கும் நோக்கில் முஸ்லிம் அல்லாத மக்களுக்கு செய்திகளைச் சேர்க்கும் பரந்த, வலுவான மீடியா என்பது இல்லை. இஸ்லாத்தை படித்தவர்கள் மீடியாவுக்கு வருவதில்லை. இஸ்லாத்தைப்பற்றி வாய்வழியாக பிறருக்கு சொன்னால் போதும் என்கின்ற மனநிலையில் பெரும்பான்மையினர் ஒதுங்கிவிடுகின்றனர். இன்னும் இயக்கங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒற்றுமையின்றி போராடிக்கொண்டிருக்கின்றன அதனால் நமது வீறியத்தை அரசுக்கு புறிய வைக்க இயலவில்லை.இதனால் அரசு நமது சமூகத்தை தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும், அந்நிய நாட்டு உளவாளிகளாகவும் சித்தறித்து பொய் வழக்குகளை போட்டு அரசியலமைப்பு சாசனத்திற்குஎதிரகா கைதுகளை மேற்கொண்டு நமது சமூகத்தை இழிவு படுத்தி வருகிறது. இது ஒரு திட்டமிடட சதி என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

இப்படியிருக்கையில் இன்னும் நாம் உறங்கி கொண்டிருந்தால் நம் சமூகத்தை இந்த அழிவு பாதையிலிருந்து பாதுகாப்பது மிகவும் கஷ்டமாகவே இருக்கும். ஆகவே நாம் இதிலிருந்து விரைவில் விழித்துக்கொண்டு விழிப்புணர்வுடன் செயல்படக்கூடிய மிகக் கட்டாய காலகட்டத்தில் இருக்கிறோம்.இதற்கு முன்னோட்டமாக உணர்ச்சியும், உற்சாகமும், சிந்திக்கும் திறனும் மிக்க ஆற்றல் மிக்க இளைஞர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள "இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்" தமிழகமெங்கும் இசுலாமிய இயக்கத் தலைவர்களையும், சமூக ஆர்வளர்களையும், சிந்தனையாளர்களையுமு் திரட்டி பல கருத்தரங்குகளையும், மாநாடுகளையும் நடத்தியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக இஸ்லாமிய சமூகத்தையும், மக்கள் போராளிகளையும் தீவிரவாதிகளாக சித்தறிக்கும் அரச நாடகத்தையும், நமது மக்களுக்கு எதிராக தொடரும் கைதுகள், பொய் வழக்கு கொடுமைகளையும் கண்டித்து இந்த அரச பயங்கரவாதத்திற்கு எதிராக தொடர் பிரச்சார இயக்கத்தினை தொடங்கி உள்ளது. இதன முதல் கட்டமாக வரும் 25.11.2012 அன்று திருப்பூர், காங்கேயம் சாலை, வெங்கடேஸ்வரா நகரில் அமைந்துள்ள H.M.S மஹாலில்முதல் அரங்க கூட்டத்தை நடத்துகிறது. இதில் சமுதாயத்தலைவர்களும், ஆன்றோர்களும், சான்றோர்களும், சமூக அக்கறையாளர்களும், வழக்கறிஞர்களும் மனித நேயம் மிக்கவர்களும், மனித உரிமைகளை காக்க போராடுபவர்களுமாக கண்ணியவான்கள் கலந்து உரிமைக்குரல் எழுப்ப உள்ளார்கள்.

வரும் நவம்பர் 25 அன்று திருப்பூர் மாநாகரில் கூடும் அரங்க கூட்டத்தில் நம் தமிழ் சமூக அமைப்புகளின் தலைவர்கள், மனித அரிமை ஆர்வளர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்க உள்ளார்கள் இச்சமூக சங்கமிப்பில் நீங்களும் ஒரு அங்கமாய் நின்று இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராய குரல் கொடுங்கள், ஜாதி , மத வேறுபாடின்றி உங்களை அழைக்கிறோம், அனைத்து தரப்பு மக்களுக்கான உரிமைப்போர் இது, நமது சக தோழர்களின் அடிப்படை வாழ்வாதாரம் கேட்டு நடக்கும் போராட்டம் இது, சமூக விடியலுக்கான அழைப்பு இது. வாருங்கள் தோழர்களே, தோழ் சேர்ப்போம் மறுக்கப்படும் உரிமைகளை வென்றெடுப்போம்!!வாருங்கள் அநீதிக்கெதிரான இந்த களமாடலில் பங்கெடுங்கள் !! பதிவு செய்யுங்கள் உங்களை வரலாற்றின் பக்கங்களில் நீதிக்காக போராடியோர் என்று!!

ஏனெனில், எந்த ஒரு சமுதாயமும் தன் உள்ளத்திலுள்ள(போக்குகளை) மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை மாற்றிவிடுவதில்லை.குர்ஆன் (8:53)


இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்
தொடர்பு : 9488159091 - 94866415860 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template